Monday, January 28, 2013

சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லா பிரகடனம்



காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடத்திய தன்னுடைய ஆய்வுக் கூட் டத்தில் (Chintan Shivr)  நாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களை மனதில் கொண்டு பலமாக குரலெழுப்பியிருக்கிறது. அக்கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள விரிவான தீர்மானமானது கிட்டத்தட்ட ஒரு தேர்தல் அறிக்கை போன்றே காணப்படுகிறது. ஜெய்ப்பூர் பிரகடனம் என்று அழைக்கப்பட்ட அது, ‘‘கட்சி 2013லும் 2014லும் நடைபெறவிருக்கும் தேர்தல் களங்களைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது’’ என்று மிகத் தெளிவாகவே கூறியுள்ளது. ‘‘காங்கிரஸ் கட்சியானது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒரு மைப்பாட்டுக்கும், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றிற்கு அளித் துள்ள பங்களிப்புகளின்’’ காரணமாகவே இன் றைய இந்தியா இந்த அளவிற்கு வளர்ந் திருக்கிறது என்று அப்பிரகடனத்தின் முன் னுரையில் தம்பட்டம் அடித்துக்கொண்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியானது அப் பிரகடனத்தில், ‘‘நாட்டின் பொருளாதாரத்தை, வரலாற்றில் மிகவும் முக்கியமான கால கட்டத்தில், மிகவும் சரியான திசைவழியில் செலுத்திக்கொண்டிருப்பதாகவும்’’ கூறி யிருக்கிறது.
இந்தியாவின் மேன்மைக்குத் தாங் கள்தான் காரணம் என்று அது தம்பட்டம் அடித்துக்கொண்டபோதிலும், அக்கட்சியின் சொல்லுக்கும் செயலுக்கும் எந்தச் சம்பந்த மும் இல்லை என்பதற்கு இத்தீர்மானமே மிகச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். காங்கிரஸ் கட்சியின் பிரகடனத்தை கீழ்க்கண்ட முறை யில் தொகுத்துக் கூறிவிடலாம்: அதாவது, நாடும் நாட்டு மக்களும் காங்கிரஸ் கட்சி என்ன சொல்லியிருக்கிறதோ அதனைச் செய்திட வேண்டுமே யொழிய அது செயல் பட்டுக் கொண்டிருப்பதுபோல் அல்ல. உதாரணமாக, ‘‘கட்சி பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்க மீளவும் உறுதிபூண்டுள் ளது’’ என்று காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிர கடனத்தில் குறிப்பிட்டிருக்கிறது. உண்மை யில் காங்கிரஸ் கட்சி நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் பின்பற்றத் தொடங்கியபின் அதற்கு நேரெதிராகவே நடந்துகொண்டிருக்கிறது என்பதே நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற அனுபவமாகும். நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ) வளர்ச்சி விகிதம் உயர்ந்திருக்கிறது உண்மை தான். அதேசமயத்தில் இரு இந்தியர்களுக்கும் இடையிலான ஏற்றத்த0hழ்வும் அதிகரித்திரு றது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு சொத்துக்களை வைத்திருக்கிற, ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகவுள்ளவர்களின் - அமெரிக்க டாலர் பில்லியனர்களின் - எண்ணிக்கையை 52 ஆக உயர்த்தி இருக்கிற அதே சமயத்தில், நாட் டில் தங்கள் ஜீவனத்திற்காக நாள்தோறும் கடு மையாகப் போராடிக் கொண்டிருக்கிற, நாளொன்றுக்கு 20 ரூபாய்கூட செலவழிக்க முடியாத 80 கோடி மக்களின் அவல நிலை மையும் தொடர்கிறது.

‘‘இந்திய தேசிய காங்கிரஸ் அனைத்து மட்டங்களிலும் அதிலும் குறிப்பாக உயர் அதி காரபீடங்களிலும் அரசியல் மட்டத்திலும் நிலவும் ஊழலை ஒழிப்பதற்கான போராட்டத்தில் முன்னணியில் தற்போது இருந்து வருவது தொடரும்’’ என்று காங்கிரஸ் கட்சி தன் னுடைய பிரகடனத்தில் பீற்றிக்கொண்டிருக் கிறது. மக்களை ஏமாற்றுவதற்கு ஓர் அளவே இல்லையா? காங்கிரஸ் கட்சியின் தலைமை யிலான ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் இப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறை களில் அடைக்கப்பட்டிருப்பது தொடர்கிறது. இவர்களின் ஆட்சியின் கீழ் நடைபெற்ற மெகா ஊழல்கள் பலவற்றை மத்தியத் தணிக்கை மற்றும் கணக்குத்துறைத் தலைவர் (சிஏஜி) ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருப்பது தொடர்கிறது. இவர்கள் கடைப்பிடித்து வரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் முன்னெப்போதும் இல்லாதவிதத்தில் மெகா ஊழல்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்புவாசல்கள் பலவற்றைத் திறந்து விட்டிருக்கிறது. ‘‘நாட்டின் மனிதவள வளர்ச்சிக்கு குறிப் பாக சிசு மரணம், கர்ப்பிணிப் பெண்களைக் காப்பாற்றுதல், குடிதண்ணீர் வசதி, அடிப்படை சுகாதார நலம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வீட்டு வசதி ஆகிய அனைத்து அம்சங்கள் குறித்தும் கவனம் செலுத்தக்கூடிய விதத்தில் அரசியல் உறுதியைக் கொண்டிருக்கிறது’’ என்று இதேபோன்று மற்றொரு சரடையும் காங்கிரஸ் கட்சி அவிழ்த்துவிட்டிருக்கிறது. அது மேலும் ‘‘2020க்குள் நாட்டில் பசியையும் ஊட்டச்சத்தின்மையையும் அறவே அகற்றி விடுவோம்’’ என்றும் உறுதி அளித்திருக் கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில் இந்தியா ஐக்கிய நாடு கள் மனிதவள வரிசைப் பட்டியலில் தொடர்ச் சியாக சரிந்துகொண்டு வந்திருக்கிறது. பிர தமரே சென்ற ஆண்டு இந்தியாவில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் வாடி வதங் கிக் கொண்டிருப்பது ‘‘தேசிய அவமானம்’’ என்று புலம்பியதைப் பார்த்தோம். \

இத்தகைய ‘‘தேசிய அவமானம்’’ எந்த அளவிற்குக் கடுமையாகி இருக்கிறது என்பதைச் சற்றே ஆராய்வோம். பசி-பஞ்சம்-பட்டினி குறித்த உலக வங்கியின் அளவீடுகள் முழுமையானது என்று சொல்வதற்கில்லை. அது ஒருசில அளவீடுகளின் மூலம் கணிக் கப்படுபவைதான். குறிப்பாக குழந்தைகள் எடை குறைவாக இருத்தல், குழந்தை இறப்பு விகிதம் மற்றும் சத்துணவு குறைவாக மக்கள் இருத்தலின் விகிதாச்சாரம் ஆகிய மூன்று கார ணிகளை அடிப்படையாகக் கொண்டுதான் அது கணக்கிடப்படுகிறது. அந்தக் கணக் கின்படி 2012இல் ஐ.நா. ஸ்தாபனம் மதிப்பிட்ட உலகப் பட்டினி அட்டவணையில், மொத்தம் மதிப்பிடப்பட்ட 79 நாடுகளில் இந்தியா 65 ஆவது இடத்தில் இருக்கிறது. நம்மைவிட பாகிஸ்தானும், நேபாளமும் மேம்பட்ட நிலை யில் இருக்கின்றன. உலக வங்கியின் ஆய் வில் மிகவும் மோசமான அம்சம் என்ன தெரி யுமா? ‘‘குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி வாடு வது தொடர்பான புள்ளி விவரங்களின்படி, 2005-10ஆம் ஆண்டுகளில், எடைகுறை வாக உள்ள குழந்தைகள் அதிகம் உள்ள 129 நாடுகளில் இந்தியா கடைசியில் இரண்டா வது இடத்தைப் பெற்றுள்ளது.
நமக்கும் கீழ் டிமோர்-லெஸ்டே (Timor Teste) (உலக வரை படத்தில் கண்டுபிடிக்க முயலுங்கள்) என்ற நாடுதான் இருக்கிறது. இந்தியாவின் 2012 உலகப் பட்டினி குறியீட்டு எண் 22.9 ஆகும். 1996 உலகப் பட்டினி குறியீட்டு எண்ணில் 22.6 ஆக இருந்ததைவிட இது அதிகம். ஆட்சி யாளர்கள் மிகவும் படாடோபமாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நவீன தாராளமயச் சீர் திருத்தக் கொள்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி இருபதாண்டு காலம் கழித்து மக் களின் நிலை இதுதான். இதேபோன்று ‘‘அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி, தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான போதனை, அரசுப் பள்ளி களின் தரம் உயர்த்தப்படும். அவை விரிவாக் கப்பட்டு மேம்படுத்தப்படும் ’’ என்றும் காங் கிரஸ் கட்சியால் உறுதிமொழிகள் அள்ளிவீசப் பட்டிருக்கின்றன. கல்வி உரிமையை அடிப் படை உரிமையாக்கி அரசியலமைப்புச் சட் டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் இது இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. அதே சமயத்தில் கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதையும் வணிகமயமாக்குவதையும் சட்டப்பூர்வமானதாக மாற்றக்கூடிய வகை யில், புதிய சட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் சுமார் ஐந்தில் நான்கு பங்கு திறமைமிகு மனித ஆற்றல் தனியார் நிறுவனங்களிலிருந்து வரு கிறது. அமெரிக்காவில் இது நான்கில் ஒரு பங்கு மட்டுமே. அரசு நிறுவனங்களுக்கு இது வரை அளித்து வந்த நிதி ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைப்பதும், ஊழியர்களின் எண் ணிக்கையைச் சுருக்குவதும் தொடர்கின்ற அதே சமயத்தில், தனியார் மற்றும் வணிக ரீதியான கல்வி நிறுவனங்களை ஆட்சியாளர்கள் விரிவாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆயினும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிரகடனத்தில், ‘‘நாங்கள் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை ஒவ்வோராண்டும் உருவாக்கு வோம்’’ என்றும் ‘‘இவ்வேலைகளை எடுத்துக்கொள்ளக் கூடிய அளவிற்கு இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்போம்’’ என்றும் உறுதிமொழிகளை அள்ளி வீசியிருக்கிறது. பொருளாதாhரக் கொள்கையைப் பொறுத்த வரையில், இந்திய விவசாயிகள் வளமாக இருப்பதாகவும், அவர்களுக்கு நியாயமான மற் றும் அவர்களுக்கு இலாபகரமான வகையில் குறைந்தபட்ச ஆதாரவிலை அளித்து வருவ தாகவும் கூறியிருக்கிறது. ஆனால், விவசாயி களின் உற்பத்திச் செலவினம், ஆட்சியாளர் கள் அளித்துவரும் குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித் திருக்கிறது. விவசாய உற்பத்திச் செலவினம் கட்டுப்படியாகாத நிலைக்குச் சென்றதை அடுத்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருக்கக்கூடிய நிலையில்தான் இவ்வாறு காங்கிரஸ் கட்சி கூறியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிரகடனத் தில் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர் திருத்தக் கொள்கைகளை நியாயப்படுத்தி இருப்பது மட்டுமல்ல, உண்மையில் நாட்டு மக்களுக்கு ‘‘வளமான’’ வாழ்க்கையை அளித்திருப்பதாகத் தன்னைத்தானே பாராட் டிக் கொண்டும் இருக்கிறது. உதாரணமாக, அது சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கும் முடிவை முற்றிலும் சரியான ஒன்று என்று கூறி யிருக்கிறது. பிரகடனத்தின் உச்சக்கட்டம் என்பது வரவிருக்கும் தேர்தல்களின்போது மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக அது தேர்ந்தெடுத் திருக்கக்கூடிய மூன்று முழக்கங்கள்தான். ‘‘உங்கள் பணம் உங்கள் கையில்’’ என்று கூறும் பணப்பட்டுவாடாத் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நிலங் களைக் கையகப்படுத்தும்போது அவர்களுக்கு அளித்திடும் இழப்பீடு மற்றும் மறுவாழ்வு தொடர்பாகக் கொண்டுவந்துள்ள புதிய சட்டம் ஆகியவையே அந்த மூன்று முழக்கங்களு மாகும்.பணப்பட்டுவாடாத் திட்டம் மாபெரும் மோசடித் திட்டம் மட்டுமல்ல, அது தொடர் பாக நாடாளுமன்றத்தில் சட்டம் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அது சட்டவிரோதமான ஒன்று. நாடாளுமன்றத் தின் முன் நிலுவையில் உள்ள உணவுப் பாது காப்புச் சட்டமுன்வடிவும் உணவு தானியங் கள் நாட்டு மக்கள்அனைவருக்கும் கிடைப் பதை உத்தரவாதம் செய்யக்கூடிய விதத்தில் இல்லை. நாட்டில் உள்ள அனைத்துக் குடும் பங்களுக்கும், வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைவருக்குமான பொது விநியோக முறையின் மூலம் கிலோ 2 ரூபாய்க்கு மிகைப்படாத விதத்தில் மாதந் தோறும் 35 கிலோ உணவு தானியங்களை அளிக்காதவரை நாட்டில் அர்த்தமுள்ள உணவுப் பாதுகாப்பை அளிக்க முடியாது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு இம்மூன்று உத்திகளையும் அறிவித்துள்ளது. ஆயினும், நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத் தங்கள் மூலமாக உயர் வளர்ச்சி விகிதங்களை எட்டுவதற்கான முயற்சிகளும், அதே சமயத்தில் ‘‘ஏற்றத் தாழ்வைக் குறைப்பதற்காக வேலைகளுடன் உள்ளார்ந்த வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல் லப்படுவதும் பொருத்தமற்றவைகளாகும். ‘‘ஒளிரும் இந்தியர்’’களுக்கான நடவடிக்கை களைத் தீவிரப்படுத்துவது என்பது ‘‘அல் லலுறும் இந்தியர்’’களின் வாழ்வை நேரடி யாகப் பாதிக்கும் அம்சங்களாகும். முதலாளித் துவத்தின் குணம் அதுதான். 

ஆட்சியாளர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு மூலதனத்தின் உச்சபட்ச லாபத்திற்காக நாட்டின் பொருளா தாரத்தையும் வளங்களையும் அனுமதிக்கும் நடவடிக்கைகளானவை, மக்கள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்தி, இரு இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவாக்கிடவே வழிவகுத்திடும்.இத்தகையத் திசைவழியில் செல்ல வேண்டும் என்பதற்காகக் காங்கிரஸ் கட்சி, தன்னுடைய ஜெய்ப்பூர் பிரகடனத்தில் அமெ ரிக்காவினால் தலைமை தாங்கப்படும் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகத் தன்னுடைய சுயேச்சையான அயல்துறைக் கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளது. ‘‘இந்தியாவின் அயல்துறைக் கொள்கை பண்டித நேருவால் பறைசாற்றப்பட்ட அணிசேராக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் அதே சமயத்தில், தற்போது வேகமாக மாறிவரும் உலக நிலைமைகளுக்கேற்ப நாடுகளுக்கு இடையிலான உறவுகளையும் பின்பற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது’’ என்று காங்கிரஸ் கட்சி கூறி யிருக்கிறது. இவ்வாறு கூறி இதுவரை இருந்துவந்த அணிசேராக் கொள்கையி லிருந்து நழுவிச் செல்ல முன்வந்திருக்கிறது. 

‘‘நாம் நம்முடைய அண்டைநாடுகளில் நடை பெறும் நிகழ்ச்சிப்போக்குகள் குறித்து கவலை கொண்டபோதிலும், ‘‘தெற்காசியாவில் இந்தியாவின் தலைமைப்பாத்திரத்திற்கு ஓய்வு கொடுக்க வேண்டியது இன்றையத் தேவை.’’ என்று காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிரகடனத்தில் கூறியிருக்கிறது. இதற்கு என்ன பொருள் என்பது விளக்கப்பட வில்லை. இவற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் அந்நிய மூலதனத்திற்கு மேலும் அதிகமான அளவில் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதும் அதனைத் தொடர்ந்து நம் சுயேச்சையான அயல்துறைக் கொள்கை மீதும் கடும் நிர்ப்பந்தங்கள் ஏற்பட இருக்கின்றன என்பதும் தெளிவாகி இருக் கிறது. இவ்விரு முக்கியமான கொள்கை களைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி யிலிருந்து பாஜகவானது பெரிய அளவில் வித்தியாசப்படவில்லை. நாட்டையும் நாட்டு மக்களையும் வளப் படுத்தக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள் கையே இன்றைய தேவையாகும். வரவிருக்கும் தேர்தல்கள் அத்தகையதொரு இடது - ஜன நாயகக் கொள்கை மாற்றை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: