Sunday, November 21, 2010

ஐ.மு.கூ. அரசின் வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல்கள்; பாஜக அரசின் கனிமக்கொள்ளையால் நாட்டின் வளங்கள் சூறை ஊழலை எதிர்த்து பிரச்சாரம் பிரகாஷ்

புதுதில்லி, நவ. 21-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வரலாறு காணாத ஊழல்களை அம்பலப்படுத்தவும், கர்நாடக பாஜக அரசின் கனிமக்கொள் ளையையும், அனைத்துவிதமான ஊழல் களின் மையமாக எடியூரப்பா அரசே செயல்பட்டிருப்பதை அம்பலப்படுத்தவும் நாடு முழுவதும் டிசம்பர் 5 முதல் 11ம் தேதி வரை மாபெரும் பிரச்சார இயக்கத்தில் ஈடுபடுமாறு கட்சியின் அனைத்துக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அழைப்பு விடுத் துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் நவம்பர் 19 - 21 தேதிகளில் புதுதில்லியில் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவுகளை விளக்கி ஞாயிறு மாலை கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பிரகாஷ் காரத் கூறிய தாவது:-

மத்திய குழு கூட்டத்தில் விவாதிக்கப் பட்ட பிரச்சனைகளில் மிகவும் முக்கிய மானது நாட்டையே உலுக்கியுள்ள வரலாறு காணாத ஊழல்களாகும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொறுத்த வரை, மார்க்சிஸ்ட் கட்சி 2008 பிப்ரவரியி லேயே பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. சீத்தாராம் யெச்சூரி, 2008 பிப்ரவரி யிலேயே ஒரு கடிதம் பிரதமருக்கு இது தொடர்பாக எழுதியிருக்கிறார். அப்போ திருந்து இப்பிரச்சனையைத் தொடர்ந்து நாங்கள் எழுப்பி வந்திருக்கிறோம். இப் போது மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை வெளிவந்த பிறகு, மார்க்சிஸ்ட் கட்சி கூறிய அனைத் தும் அதில் உறுதி செய்யப்பட்டபிறகு, அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

ஆனால் பிரச்சனை இத்துடன் நின்று விடவில்லை. 2ஜி ஊழலில் ஓர் அமைச் சரோ அல்லது ஓர் அமைச்சகம் மட்டுமோ சம்பந்தப்படவில்லை. நடைபெற்றிருக்கிற நிகழ்வுகளிலிருந்து, பிரதமர், நிதி அமைச் சகம், சட்ட அமைச்சகம் அனைத்திற்கும் இது தொடர்பாக தெரிந்திருக்கிறது என்பது தெளிவாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, நாட்டின் பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - கார்ப்பரேட் நிறுவனங் கள் ஆகியவற்றிற்கு இடையே மிகப்பெரும் கூட்டு இருந்திருப்பதையே இது தெளி வாகக் காட்டுகிறது. உச்சநீதிமன்றம் பல் வேறு கோணங்களில் இதனை ஆராய்ந்து வருகிறது. எனவேதான், 2ஜி ஊழல் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியு றுத்துகிறோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண் டும். அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது எப்படி என்பதை அவர் விளக்க வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசாங் கம், கூட்டு நாடாளுமன்றக் குழு அமைத் திட தயாராயில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழ லுக்குக் காரணமான அமைச்சர் மட்டு மல்ல, அதற்கு உடந்தையாக இருந்த அதி காரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தின் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும்.

ஐமுகூ அரசாங்கமானது இதில் சம்பந் தப்பட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை மன்னித்து விட தயாராயிருக்கிறது என்பது அமைச்சர் கபில் சிபல் கூற்றுக்களி லிருந்து தெரிய வருகிறது. டிராய் நிறுவன மானது, இழப்பு ஏற்பட காரணமாக இருந்த கம்பெனிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிற அதே சம யத்தில் அமைச்சர் அது தேவையில்லை என்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி களில் நடைபெற்றுள்ள ஊழல். இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே இது தொடர்பாக மத்தியக் குற்றப் புலனாய்வுக் குழுவும் மற்றும் இருக்கின்ற புலனாய்வு அமைப்புகளும் நேரடியாக விசாரணை செய்திட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு மட் டத்திலும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

பாஜக விதிவிலக்கு அல்ல

ஊழல் தொடர்பாக நாம் பேசும்போது, கர்நாடகாவில் நடைபெற்றுள்ள ஊழல் களை நாம் விட்டுவிட முடியாது. ஊழலில் கர்நாடக மாநில அரசும், பாஜகவும் ஒரு ‘ரிக்கார்ட்’ ஏற்படுத்திவிட்டன. அரசாங் கமே கனிமக்கொள்ளை மாஃபியாவாக மாறியிருக்கிறது. மாநில அரசாங்கமே சட்டவிரோதமான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறது. பாஜக தலைமை ஏன் இதுகுறித்து ஒன்றுமே சொல்ல வில்லை என்பது புரியவில்லை.

ஊழல் புரிவதில் காங்கிரசுக்கும் பாஜக விற்கும் வித்தியாசம் இல்லை என்பதையே கர்நாடக ஊழல்கள் காட்டுகின்றன.

எனவேதான் நாட்டில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களைத் திரட்டி விரிவான வகையில் பிரச்சாரங் களை மேற்கொள்வது என்று தீர்மானித் திருக்கிறோம். டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நாடு முழுவதும் கட்சிக் கிளைகள் ஊழலுக்கு எதிராக, ஐ.மு.கூட்டணி அர சின் மிகப்பெரும் ஊழல்களை அம்பலப் படுத்தி, கர்நாடக பாஜக அரசின் கனிம ஊழல்களை அம்பலப்படுத்தி கூட்டங் கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், தர் ணாக்கள் என்ற வகையில் பிரச் சாரங்களை மேற்கொள்ளும்.

இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.

No comments: