Showing posts with label maoists-mamta-media. Show all posts
Showing posts with label maoists-mamta-media. Show all posts

Saturday, October 24, 2009

மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது விதிவிலக்கான ஒன்றுதான் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பேட்டி




புதுதில்லி, அக். 24-

மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கையை ஏற்று, 26 பழங்குடியினப் பெண்கள் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பது விதிவிலக்கான ஒன்றுதான் என்றும், மாவோயிஸ்ட்டு களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ள கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மேற்கு வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா சனிக்கிழமையன்ற மதியம் வங்க பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘நேற்றையதினம் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்தேன். மேற்கு வங்க மாநிலத்திலும், மற்றும் நாடு தழுவிய அளவிலும் இருந்து வரும் மாவோயிஸ்ட்டுகள் பிரச்சனை தொடர்பாக மிக விரிவான அளவில் விவாதங்களை நடத்தினோம். மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்டுகளின் கிரிமினல் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் அனைத்துவிதமான உதவிகளையும் நல்கும் என்று அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் குறித்து ஒருசிலவற்றைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில், அதிலும் குறிப்பாக ஜார்கண்ட் மாநில எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் இயங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர்களின் நடவடிக்கைளை மேற்கு வங்கத்தில் முற்றிலுமாக ஒழித்திட நாங்கள் முயற்சித்துக் கொண்டு வருகிறோம். இந்த நடவடிக்கைகளில் சமீபத்தில் சில பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மூன்றுமாதங்களுக்கு முன்பு மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்தவர்களும், மாநிலக் காவல்துறையினரும் சேர்ந்து மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டுக் கொண்டிருந்த பகுதிகளில் சோதனைகள் மேற்கொண்டு, அவர்களின் செயல்பாட்டை வெகுவாகக் குறைத்துவிட்டோம். அவர்களின் முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்களைக் கைது செய்திருக்கிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, ஒரு சில தினங்களுக்கு முன் கேந்திரமான பகுதியில் இல்லாத ஒரு காவல்நிலையத்திற்குள் புகுந்து மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்த இரு காவல்துறையினரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, நிலையத்திற்குப் பொறுப்பு வகித்த காவல் அதிகாரியைக் கடத்திச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் கொள்ளையடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பக்கத்திலிருந்த வங்கி ஒன்றிலிருந்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட காவல்துறை அதிகாரியை ஒப்படைத்திட, சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்து வரும் பழங்குடியினப் பெண்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மாவோயிஸ்ட்டுகள் முன்வைத்தனர். மாவோயிஸ்ட்டுகளின் நிபந்தனைகள் கடுமையானவைகளாக இருந்திருந்தால் நம்மால் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது.

மாவோயிஸ்ட்டுகள் தங்கள் கேடயங்களாகப் பயன்படுத்தி வந்த அப்பாவி பழங்குடியினப் பெண்களை விடுதலை செய்யுமாறு கோரியிருக்கிறார்கள். சில கிளர்ச்சிப் போராட்டங்களில் பங்கேற்றதற்காகத்தான் அப்பெண்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். எனவே காவல்துறை அதிகாரியை மாவோயிஸ்ட்டுகள் விடுவிப்பதற்கு அவர்கள் கோரிய இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம். பழங்குடியினப் பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பழங்குடியினப் பெண்கள் மீதான வழக்குகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. அவர்கள் பிணையில்தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது விதிவிலக்கான ஒன்றுதான். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். மாவோயிஸ்ட்டுகளை மேற்கு வங்க மாநிலத்திலிருந்தும், நாட்டிலிருந்துமே ஒழித்திடும்வரை இந்த நடவடிக்கைகள் தொடரும். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் உறுதியாக இருக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளைப் பற்றி எவ்விதமான மாயையையும் எங்களுக்குக் கிடையாது. அவர்கள் தனிநபர் கொலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆயுதங்களைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள், வங்கிகளைக் கூட கொள்ளையடிக்கிறார்கள். இவ்வாறு அனைத்துவிதமான கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே எவ்வித மாயையும் இன்றி இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

மாவோயிஸ்ட்டுகள் மேற்கு வங்க மாநிலத்திலிருந்தும், நாட்டிலிருந்தும் ஒழிக்கப்படும் வரை எங்கள் நடவடிக்கைகள் தொடரும். இதற்கு மத்திய அரசும் முழு அளவில் ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்திருக்கிறது.

இவ்வாறு புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

காவல்துறை அதிகாரியின் விடுதலைக்காக, மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கையை ஏற்றிருப்பதானது, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மத்தியில் மனச்சோர்வை அளித்திருப்பதாகக்கூறப்படுகிறதே என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, மனிதாபிமான அடிப்படையில் இது நடைபெற்றிருக்கிறதென்றும், கட்சிஊழியர்கள் முழுமையாக இதனைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் புத்ததேவ் கூறினார்.

இவ்வாறு கைதிகள் பரிமாற்றம் மாவோயிஸ்ட்டுகளுக்கு தைரியத்தை அளித்திடாதா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, சரியான கேள்வி என்று ஒப்புக்கொண்ட புத்ததேவ், இதுதொடர்பாக நாங்கள் ஆழமாக விவாதித்தோம் என்றும், இதுபோன்று முன்னெப்போதும் நடந்திராத ஒன்றுதான் என்றும், இத்தகைய நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாதவாறு மிகவும் எச்சரிக்கையாக இருப்போம் என்றும் கூறினார்.

மாவோயிஸ்ட்டுகளிடம் அரசு சரணடைந்து விட்டதாக எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ‘இல்லை’, ‘நிச்சயமாக இல்லை’ என்று கூறிய புத்ததேவ், மாவோயிஸ்ட்டுகள் அறைகூவலுக்கிணங்க நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற பழங்குடியினப் பெண்களைத்தான் இப்போது விடுவித்திருப்பதாகவும், இவர்களும் பிணையில்தான் விடுவிக்கப் பட்டிருக்கிறார்களேயொழிய இவர்கள் மீதான வழக்குகள் விலக்கிக் கொள்ளப் படவில்லை, அவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடரும் என்றும் எனவே இதனை எப்படி சரணாகதி என்று கூறமுடியும் என்றும் புத்ததேவ் கூறினார்.

‘சரணாகதி’ இல்லை என்றால் ‘அரசு சற்றே இறங்கி வந்திருக்கிறது’ என்று எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு செய்தியாளர் வினா தொடுத்தபோது, அதனையும் மறுத்திட்ட புத்ததேவ், பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் அனைவரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பழங்குடிப் பெண்கள் என்றும், இந்தப் பெண்களில் எவர் ஒருவருக்கும் நக்சலைட் தொடர்பு இருந்ததாகப் பதிவேடு (ரிகார்ட்) எதுவும் கிடையாது என்றும், இவர்கள் எந்தவிதக் கொடூரமான குற்றத்தையும் புரிந்து சிறையில் அடைக்கப்படவில்லை என்றும், சாதாரண குற்றங்களின்கீழ்தான் இவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார்கள் என்றும், எனவே இவர்கள் இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் புத்ததேவ் தெளிவாக்கினார்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஜார்கண்ட் மாநில அரசும், மேற்கு வங்க மாநில அரசும் இணைந்து செயல்படுத்திடுமா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, இது தொடர்பாக நானும் மத்திய உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுதான் இருப்பதாகவும், ஆனால் ஜார்கண்டில் தேர்தல் நடைபெறவிருப்பதால் இப்போதைக்கு அது மிகவும் சிரமம் என்றும் புத்ததேவ் கூறினார்.

லால்காரில் தற்போதைய நிலைமை என்ன என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, கடைத்தெருக்கள், சந்தைகள், அரசு அலுவலகங்கள் முதலானவை நம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள்தான் இன்னமும் பிரச்சனை இருப்பதாகவும் புத்ததேவ் கூறினார்.
...

Monday, June 29, 2009

மாவோயிஸ்டுகள்-மம்தாக்கள்-ஊடகங்கள் -- கி. வரதராசன்

மேற்கு வங்கத்தில் லால்கார் வன் முறையையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராக, விஷமப் பிரச் சாரம் பல வகைகளிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. மத்தியில் அமைச்ச ராக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி, நடைபெறும் நிகழ்ச்சிகள் மார்க்சிஸ்ட்டு களும், மாவோயிஸ்ட்டுகளும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று கூறி, இந்த நூற்றாண்டின் பெரிய நகைச்சுவையை கூறியுள்ளார். ஒரு வன்முறை இயக்கம் ஆயுதங் களின் மூலமும், மிரட்டல்கள் மூலமும் சில பகுதிகளை கையில் வைத்துக் கொண்டு, இது ‘விடுதலை அடைந்த பகுதி’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் அமைச்சராக இருப்பவர், மக்களின் வாழ்வைப் பற்றி, ஒன்றுபட்ட இந்திய நாட்டைப் பற்றி, எந்தக் கவலையும் கொள்ளாமல் ‘இது வெறும் நாடகம்’ என்று தெரிவிப்பது, எந்த அளவிற்கு மோசமான, கீழ்த்தரமான அரசியல் நிலைக்கும் இவர்கள் தயார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

“மாவோயிஸ்ட்டுகள், இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு, மார்க்சிஸ்ட்டுகள் ஆட்சி யில் கடந்த முப்பதாண்டுகளில் செய்யப் பட்ட தவறுகளே காரணம், அவர்களின் ஆட்சியில் மக்கள் நலன்கள் பாதுகாக்கப் படவில்லை, நிர்வாகம் ஆட்சி செய்வ தற்குப் பதிலாக, மார்க்சிஸ்ட்டுகளே நேரடியாக ஆண்டார்கள், அந்தக் கட்சிக் காரர்கள் பெரும் பணக்காரர்களாகி விட் டார்கள், இதனால் மக்களிடமிருந்து தனி மைப்பட்டு, பிடிமானத்தை இழந்தார்கள், இதனைப் பயன்படுத்தி அந்தப் பகுதி யின் அதிகாரத்தை மாவோயிஸ்ட்டுகள் எடுத்துக் கொண்டார்கள்” இவ்வாறு ‘தினமணி’ நாளேடு இரு நாட்களாக எழு தும் தலையங்கத்தில் தீர்ப்பளித்திருக் கிறது.

முதலாவதாக, அந்தப் பகுதி மக்க ளுக்கு கடந்த முப்பதாண்டுகளில் எதுவும் செய்யப்படவில்லையா என்பதைப் பார்ப்போம். 1977இல் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி ஆட் சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடனேயே, கிராமப்புறங்களில் அதுகாறும் ஜோட்கார் எனப்படும் நிலப்பிரபுக்களின் முழுமை யான கட்டுப்பாட்டிலிருந்த கிராம மக்க ளை, அவர்களின் பிடியிலிருந்து மார்க் சிஸ்ட்டுகள் விடுவித்தார்கள். மேற்கு வங்க மாநில அர சின் நிலம் மற்றும் நிலச்சீர்திருத்தத்துறை சார்பாக வெளி யிடப்பட்டுள்ள அறிக்கை களின்படி, 2002-03 ஆம் ஆண்டுவரை ஜார்க்ரம், பின்புல் மற்றும் சல்போனி ஆகிய ஒன் றியங்களில் (இப் பகுதிகள்தான் மாவோ யிஸ்ட்டுகளின் செல்வாக்கில் தற்போது இருந்தன) சுமார் 40 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் பழங்குடி யினருக்கு மறுவிநியோ கம் செய்யப்பட்டி ருப்பதாகத் தெரிவித் துள்ளது. இந்தப் பகுதியில் 75 சதவீத மக் கள் நில விநியோகத்தால் பலன் பெற்ற வர்கள். பழங்குடியினரைப் பொறுத்த வரையில் 70 சத வீதத்திற்கும் மேல் நிலம் பெற்றவர்கள். 90 சதவீதத்திற்கும் மேல் குடியிருக்க வீட்டு மனை பெற்றவர்கள்.

இவ்வாறு கூறுவதன்மூலம், உழுவ தற்கு நிலமும், குடியிருக்க மனையும் பெற்று விட்டால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்பதல்ல நமது வாதம். ஆனால், தமிழகம் உட்பட இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி இல்லாத எந்தப் பகுதியிலும் பழங்குடியினர் உழுவதற்கு நிலமும், குடியிருக்க மனையும் பெற்றதாக வரலாறில்லை என்பதைத் ‘தினமணி’ வகையறாக்கள் மறந்துவிடக் கூடாது.

அதேபோல் அரசு நிர்வாகத்தின் அதி காரத்தை மார்க்சிஸ்ட்டுகள் எடுத்துக் கொண்டார்கள் என்பதும் உண்மையல்ல. மாறாக, நில விநியோகத்தின் தொடர்ச்சி யாக, பஞ்சாயத்துக்களுக்குக் கூடுதல் அதிகாரம் கொடுத்து, பஞ்சாயத்துக்களை நிலப் பிரபுக்களின் கைகளிலிருந்து ஏழை மக் களின் கைகளுக்கு மாற்றியது, மேற்கு வங்க மாநில அரசு. இந்தியாவில் இடது சாரிகள் சார்பில் ஆட்சி இல்லாத எந்த மாநிலத்திலும், பஞ்சாயத்துக்கள் என்பது வசதிபடைத்தவர்கள் கையிலே தான் இருக்கிறது என்பதும், ‘ஆட்சிகள் மாற லாம், காட்சிகள் மாறாது’ என்ற அடிப் படையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பஞ்சாயத்துக்களைப் பொறுத்தவரையில், அது வசதி படைத்த வர்கள் கையிலேதான் இருக்கிறது என்பதும், நாடறிந்த உண்மை. இந்தப் பின்னணியில்தான், ‘ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன’ என் கிற கிராமத்துச் சொலவடை உருவாகி, இன்றளவும் இந்தியாவில் பெரும்பகுதி யில் அது இன்னமும் உயிரோடு உலவி வருவதை அறிய முடியும்.

மார்க்சிஸ்ட்டுகள் தனிமைப்பட்டு விட்டார்கள் என்பதும் உண்மையல்ல. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ், மம்தா பானர் ஜியோடு சந்தர்ப்பவாதக் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு, நந்திகிராமத்தைப் பயன்படுத்தி மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தியம் மற்றும் பெருமுதலாளிகள் உள்ளிட்டு அனை வரும் ஒன்றுபட்டு எடுத்த முயற்சிகளின் விளைவாகத்தான் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளிடமிருந்து பல தொகுதி களை அவர்கள் கைப்பற்றினார்கள். 1970 இலிருந்து இதுவரை எந்தத் தேர்தலிலும் சந்திக்காத பின்னடைவை இடது முன் னணி இத்தேர்தலில் அடைந்தபோதி லும்கூட, பழங்குடியினருக்கு ஒதுக்கப் பட்ட அனைத்து மக்களவைத் தொகுதி களிலும் மார்க்சிஸ்ட் கட்சி பெரும்பான்மை வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக் கிறது. லால்கார் பகுதி இடம்பெறும் ஜார்க்ரம் மக் களவைத் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் 2 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1977 இலிருந்து இதுவரை இங்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் வெற்றிபெற்று வருகிறது. 2006இல் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலிலும் இப்பகுதியில் மொத் தம் உள்ள ஏழு தொகுதிகளில் 6 தொகுதி களில் மார்க்சிஸ்ட்டுகள் வென்றுள்ளனர். ஆகவே மக்களிடமிருந்து மார்க்சிஸ்ட்டு கள் தனிமைப்பட்டுவிட்டதாகக் கூறுவ தில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

மாநிலத்தில் மற்ற இடங்களில் இடது முன்னணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்த போதிலும், பழங்குடியினர் அதிகமாக உள்ள இடங்களில் இடது முன்னணியே தொடர்ந்து வலுவாக இருப்பதும், அங் குள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இடது முன்னணி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதும் திரிணாமுல் காங் கிரஸ் - மாவோயிஸ்ட் கூட்டணிக்கு ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது. மார்க் சிஸ்ட்டுகள் வெற்றி பெற்ற இடங்களில் கலவரத்தை துவக்குவது, அதன் மூலம் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, மார்க்சிஸ்ட்டுகளுக்கு ஆதரவை அளித்துவரும் பழங்குடியினர் வாழும் பகுதிகளைக் கலவரப் பூமியாக மாற்று வது என்ற இழிநோக்கத்தோடுதான் மாவோயிஸ்ட்டுகள், இதனைத் துவக்கி யிருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரசும் இதற்கு உடந்தையாக இருந்து வருகிறது. மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள போலீஸ் சித்ரவ தைகளுக்கு எதிரான மக்கள் குழு (பிஎஸ் பிஜேசி)வின் தலைவராக மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்தவர்தான் இருந்துவரு கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஜார் கண்ட் கட்சி ஆதரவோடு மாவோயிஸ்ட் டுகள் நடத்தி வந்த பிஎஸ்பிஜேசி இயக் கத்திற்கு எதிராக, பத்தாயிரம் பழங்குடி யினரைத் திரட்டி, இந்தப் பகுதியில் மாபெ ரும் கண்டனப் பேரணியை பாரத் ஜகத் மாஜி மார்வா என்னும் பழங்குடியினர் அமைப்பு சென்ற ஆண்டு டிசம்பர் 9 அன்று நடத்தியது. இவ்வாறு பேரணி நடைபெற்ற அடுத்த இரு நாட்களுக்குள் இதன் தலைவரான சுதிர் மண்டல் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப் பட்டார்.தேர்தல் பிரச்சாரத்தின்போதும், தேர்தலுக்குப் பிறகும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் 57 பேர் மாவோயிஸ்ட்டு களால் கொலை செய்யப் பட்டிருக்கிறார் கள். இவர்களில் பெரும் பகுதியினர் பழங் குடியினர் மற்றும் வெகுஜன அமைப்பு களின் முக்கிய தலைவர் களாவார்கள்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட் டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒவ் வொருவரும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாவோயிஸ்ட்டுகளுக்குக் கப்பம் கட்ட வேண்டுமாம். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இதைப்போல் இரு மடங்கு கப்பம் கட்ட வேண்டுமாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பகுதிகளில் பணிபுரிந்து வந்த டாக்டர், நர்ஸ், ஆசிரியர் மற்றும் பல அரசு ஊழியர்கள் மாவோ யிஸ்ட்டுகளால் கொலை செய்யப்பட்டுள் ளதால் இப்பகுதிகளில் அரசு நிர்வாக எந் திரமே முடக்கப்பட்டது. அதன் விளைவாக பல்வேறு நலத்திட்டங்கள் அமலாவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஒருசில கிராமங்களில் மம்தா பானர்ஜி வகையறாக்களின் ஆதரவுடன் நடைபெற்று வந்த இந்த அக்கிரமங்கள், சாதாரண மக்களைப் பெரும் அச்சத்திற்கு உள் ளாக்கியுள்ளது என்றாலும், ஒட்டுமொத் தத்தில் இந்தப் பகுதியில் இவர்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியவில் லை என்பதுதான் நடந்து முடிந்த நாடாளு மன்ற மக்களவைத் தேர்தலில் இடது முன்னணி இங்கே மாபெரும் வெற்றி பெற்றிருப்பதும், தற்போது மத்திய-மாநில அரசுகளின் பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கையையொட்டி, மாவோ யிஸ்ட்டுகள் ஓடி ஒளிந்துள்ள நிகழ்வு களும் காட்டும் உண்மைகளாகும்.

இவ்வாறு மாவோயிஸ்ட்டுகளின் பிடி யிலிருந்து மீட்கப்பட்டுள்ள அப்பாவி மக்கள் இப்போது மிகுந்த மகிழ்ச் சியுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும் பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டு மல்ல, இவர்களின் வாழ்க்கையை புனர மைக்கக் கூடிய வகையில் சிறப்பு சலு கைகளையும் மாநில அரசு அறிவித்து அமல்படுத்தத் துவங்கியுள்ளது.

சமீபத்திய தேர்தல் முடிவுகளைப் பரி சீலித்த மேற்குவங்க இடது முன்னணி, நிலச் சீர்திருத்தம், பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் போன்றவற்றில் பெரும் முன் னேற்றத்தை செய்திருந்தாலும், ஏழை மக்களில் கணிசமான பகுதியினருக்கு இன்னமும் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட வேண்டியிருக்கிறது என்பதையும், ஒரு சில நல்ல திட்டங்கள் முறையாகப் போய்ச் சேரவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டு இவற்றைச் சரிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் வேண்டும் என்று தீர்மானித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, இன்னொரு தேவையற்ற பிரச்சனையையும் லால்கார் சம்பவங் களையொட்டி கிளப்புகிறார்கள். மாவோ யிஸ்ட்டுகளை ஒடுக்குவதற்கு மார்க் சிஸ்ட்டுகளுக்கு அக்கறையில்லை. ஆகவே, அவர்களுக்குத் தடை விதிப் பதை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு பிரச்சாரத்தை ‘தினமணி’, ‘முர சொலி’ போன்ற நாளேடுகள் கூறிவரு கின்றன. இவர்களுக்கு சில உண்மைகள் தெரியாது என்று நம்பலாம். மாவோயிஸ்ட் அமைப்பு, இதுவரை மேற்கு வங்கத்தில் மட் டும்தான் தடைசெய்யப்பட வில்லை. ஏற் கனவே ஒரிசா, சத்தீஸ்கார், ஜார் கண்ட், ஆந்திரா, தமிழ்நாடு போன்று பல மாநிலங் களில் தடை விதிக்கப்பட்டு பல ஆண்டு களாகி விட்டன.

நக்சலைட் இயக்கம் முதன்முத லாகத் தோன்றியதே மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராகத்தான் என்பது மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஏராள மானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மையையும் மறந்து, ‘தின மணி’ நாளேடு, இடதுசாரிகள் ஆரம்பத் தில் நக்சலைட் இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர் என்று தன் தலையங்கத்தில் எழுதியிருக்கிறது. பொய் சொல்வதற்கு அளவே கிடையாதா?

மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் தடை இருந்தும், அங்கெல்லாம் மாவோ யிஸ்ட்டுகள் ஒடுக்கப்படவில்லை என் பது மட்டுமல்ல, ஜார்கண்ட் மாநிலத்தைப் பின்னணியாகக் கொண்டுதான் லால் கார் பகுதியில் இவர்கள் தாக்குதல்களை நடத்தி வந்தார்கள், கலவரங்களைச் செய்தார்கள் என்பதும், மம்தா பானர்ஜி வகையறாக்கள் கொடுத்த ஆதரவால் தான் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையி லான அரசாங்கத்திற்கு எதிராக வன் முறைகளைத் தூண்டி வருகிறார்கள் என் பதும்தான் உண்மை.

இதனால்தான் சில நூறு ஊழியர் களை மார்க்சிஸ்ட்டுகள் இழக்க வேண்டி வந்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட்டு கள் போராடி வருகிறார்கள். மாவோயிஸ்ட் டுகளுக்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சிதான் அதிகமான அள வில் ஊழியர்களை இழந்திருக்கிறது. ஆகவே மாவோயிஸ்ட் டுகளை எதிர்க் கின்ற நடவடிக்கையில் எவ்விதத் தயக்கத்திற்கும் இடமில்லை. மாறாக வெறும் தடை மட்டும் பிரச் சனையைத் தீர்த்துவிடாது, சாதாரண மக்களை வென்றெடுக்கக்கூடிய நட வடிக்கைகள், இவர்களுடைய தவறான நோக்கத்தை அம்பலப்படுத்தும் அர சியல் நடவடிக்கைகள் இணைக்கப் பட்டு இத்தகைய வன்முறையாளர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலையா கும். இந்த நிலை சரியானது என்பதையே இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலுள்ள அனுபவங்களும் காட்டுகின்றன.

1968ல் உருவான நக்சலைட் இயக்கத் திடமிருந்து மார்க்சிஸ்ட் கட்சி இன்று வரை பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து, அவற்றை முறியடித்து, மேற்கு வங்க மாநி லத்தில் மாபெரும் மக்கள் இயக்கங் களைக் கட்டி, வளர்ந்திருக்கிறது. மக்கள் இயக்கங்களினால் புடம்போட்டு வளர்ந் துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்போது மம்தா உள்ளிட்ட சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மாவோயிஸ்ட்டுகளு டன் இணைந்துள்ள நயவஞ்சகத்தையும் சந்தித்து, இப்போது நடைபெற்று வரும் போராட்டத்திலும் வெல்லும் என்பது திண்ணம்.