Wednesday, August 19, 2020

தமிழ்ச் சுருக்கெழுத்து - முதுநிலை - 2009 பிப்ரவரி

 

பிப்ரவரி 2009

மாண்புமிகு தலைவர் அவர்களே,

     நம்முடைய மேதகு ஆளுநர் அவர்கள் சட்டமன்றப் பேரவைக்கு உவந்தளித்த பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா/னம் இங்கே முன் மொழியப்பட்டிருக்கிறது. அதனை வழிமொழிந்து என்னுடைய ஒரு சில கருத்துக்களை இந்த அவையின்முன் வைக்க விரும்புகிறேன். இந்த உரை // வரவிருக்கிற நிதிநிலை அறிக்கைக்கு அச்சாரமாக விளங்குகின்றது என்று நான் சொன்னால் அது மிகையாகாது என்றே கருதுகின்றேன்.

    உள்ளாட்சிகளுக்கு ///திக அதிகாரங்களை வெகு விரைவிலே கொடுக்கவிருக்கும் அறிவிப்பு இனிப்பான செய்தியாகும். சிறு தொழில்களுக்கு என்றே தனியாகக் கொள்கைத் திட்டம் (1)குக்கப்படவிருப்பதைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். நடுநிலைப் பள்ளிகளுக்குக் கணினிகள் வழங்கப்படவுள்ளதும் வரவேற்கத்தக்க/து.

    எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் நடவடிக்கைகள் அமைந்தாலும், தனிப்பட்ட வியாபாரிகள் தங்களுடைய விளம்ப//ரப் பலகைகளில் ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார்கள் என்பதைப் பெரும்பாலான இடங்களில் பார்க்கின்றோம். தமிழை முக்கியப்படுத்தும் விதமாக /// எழுதச் சொல்லி, அப்படி எழுதாதவர்களுடைய விளம்பரப் பலகையை அகற்றுவதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்ற என்னுடை(2) வேண்டுகோளை வைத்திட நான் விரும்புகிறேன்.

     தற்போது கொசுத் தொல்லை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கின்றது. எந்தவிதப் பாகு/பாடு மின்றி எல்லோரையும் சமமாகப் பாவித்து கொசுக்கள் கடிக்கின்றன. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட சுகாதாரக் கேட்டி//னை உருவாக்காமல் தடுக்கும் வகையில் சரியான மருந்தைக் கண்டுபிடித்து மாநாகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத் தெளிக்க வேண்டு///மென்றும், மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

    வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடு பெற்றவர்(3)ளுக்கு முழு வட்டியையும் தள்ளுபடி செய்து உத்தவிட்டால்தான் பத்திரம் பெற இயலும். பல ஆண்டுகளாக உள்ள இப்பிரச்சனைக்குத் தீர்வு காண /டவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வேண்டி விரும்பிக் கொள்கிறேன்.

    மகளிர் ஆணையத்திற்கு அதிகாரம் தரக் கூடிய வகையில் சட்டம் இயற்//றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மின்சார உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்மூலம் தொழி///ல்களை மேம்படுத்தி வேலைவாய்ப்பினைப் பெருமளவில் அளிப்பதற்கான நல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதற்காக இந்த அரசுக்(4)கு நன்றி சொல்ல விரும்புகிறேன். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில்கள் உருவாக்கப்படும் என்ற செய்தி வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய / ஒன்றாகும். அவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நகரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டுமென்பது என்னுடைய கோ//ரிக்கையாகும். கிராமப் புறத்திலேயே இருந்து, மகளிர் குழுக்களுக்கு சிறப்பு அனுமதி கொடுத்து, அவற்றை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் /// கூற விரும்புகிறேன். மொத்தத்தில் இந்த உரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் உரை என்பதால், இதை வரவேற்று உரையை நிறைவு செய்கிறேன். (5)


    புதுக்கோட்டை, மன்னர் சாலையில் அமைந்துள்ள, சங்கரன் சகோதரர்கள் நிறுவனம், கன்னியாகுமரி நேசமணி தெருவில் இருக்கும் ராஜா கூட்டமைப்பிற்கு / எழுதும் கடிதம்.

அன்புடையீர்,

    தங்களது அக்டோபர் மாதம் பன்னிரெண்டாம் நாளிட்ட கடிதமும், அத்துடன் தாங்கள் இணைத்து அனுப்பிய முப்பதாயிரம் // ரூபாய்க்கான கேட்பு வரைவோலையும் கிடைக்கப் பெற்றது. மிக்க நன்றி. தாங்கள் அனுப்பியுள்ள தொகை, தங்களுக்கு அளிக்கப்பட்ட தள்ளுபடித் தொகையைக் /// கழித்த பிறகு வரும் மீதித் தொகை என்பது தெரிகிறது. அந்தத் தொகைக்கு மட்டுமே தாங்கள் கேட்பு வரைவோலையை அனுப்பியுள்ளீர்கள். தங்களுக்கு ஏற்கன(6)வே வழங்கப்பட்ட பொருட்களுக்கான பட்டியல்களில் இன்னும் ஐந்திற்குத் தாங்கள் பணம் அனுப்பாமல் இருப்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொ/ண்டு வர விரும்புகிறோம். நிலுவைத் தொகையை உடனே அனுப்பி வைக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

    தங்களிடமிருந்து தொகை வந்த பிறகுதான் மேற்கொண்டு // தங்களுக்குப் பொருட்களை வழங்க இயலும். ஏனெனில் மொத்த விற்பனையாளர்களுக்கு நாங்கள் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது என்பதைத் தெரி///வித்து, தங்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

    தங்களின் ஆதரவு என்றென்றும் தொடரவேண்டுமென விரும்புகிறோம்.

                                      தங்கள் நம்பிக்கையுள்ள, (7)

No comments: