Showing posts with label . முதுநிலை. Show all posts
Showing posts with label . முதுநிலை. Show all posts

Friday, August 21, 2020

தமிழ்ச் சுருக்கெழுத்து முதுநிலை 2000 ஜனவரி

 

ஜனவரி 2000

அன்பார்ந்த பத்திரிக்கையாளர்களே,

    இந்த னிய மாலை வேளையில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அழகான வீடுகளை எழி/ல் கொஞ்சும் கடற்கரைப் பகுதியில் கட்டியுள்ள உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மானியம் //ற்றும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அளித்த கடன் உதவி ஆகியவற்றுடன் இணைந்த உங்களின் கடுமையான உழைப்பே இந்த இனிய இல்லங்கள் ///ருவாக உறுதுணை புரிந்துள்ளன என்பதில் ஐயமில்லை.

    இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பத்திரிக்கைத் துறை பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது. (1)க்களாட்சி முறையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளைச் சுட்டிக் காட்டும் பெரிய பொறுப்பு இத்துறைக்கு உண்டு./ சட்ட மன்றம், நீதி மன்றம், ஆட்சி மன்றம் ஆகிய மூன்றும் சனநாயகத்தின் அங்கங்கள் எனப்படும். அவைகள் திறமையுடன் செயல்பட துணை நிற்கும் // நான்காவது அங்கமாக விளங்குவது பத்திரிக்கைத் துறை என்று குறிப்பிடுவது பொருத்தமுடையதாக உள்ளது என்றே கருதுகிறேன்.

    பேச்சுரிமை, எழுத்///துரிமை, சமக நீதி உரிமைகள் பற்றிய விவரங்களை எடுத்துக் கூறவும், அவற்றை அடைய அணுகவேண்டிய வாயில்கள் குறித்தும் பாரபட்சமற்ற முறையில் (2) வழி காட்டுவது உங்களின் தலையாய கடமை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கிற கஷ்ட நஷ்டங்களை உள்ள/து உள்ளபடி எடுத்துரைப்பதும், தவறுகளைச் சுட்டிக்காட்டி  கண்டிப்பதும் நாளேடுகளின் தார்மீகப் பண்பு என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். செய்//திகள் வெளியிடும் தன்மையில் உண்மையையும் விமர்சனங்களைத் தெரிவிக்கும் முறையில் பொறுப்புணர்வையும் காட்டுவது மிகவும் அவசியமானதாகும். இவ்வா///று தூய்மையோடும். சுதந்திரத்தோடும் பணியாற்றிவரும் செய்தித் தாள்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கின்றனர். ஒவ்வொரு பத்திரிக்கையும், (3) தான் வகுத்துக் கொண்ட கொள்கைக்கேற்ற கண்ணோட்டத்தில் அரசின் கொள்கை அல்லது செயல்பாட்டை விமர்சனம் செய்யலாம். ஆனால், உண்மையான வகையில் செய்/திகளை அளிக்க வேண்டியது இனறியமையாததாகும்.

   சனநாயகத்தின் முறையான செயல்பாட்டிற்கு உறுதுணையாக அமையும் ஒரு உயிரோட்டமுள்ள பத்திரிக்கை//த் துறையே நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல இயலும். பத்திரிக்கைத் தொழில் என்பது ஒரு வித்தியாசமான தொழில் ஆகும். அதன் திறன்களை ///ரு குறிப்பிட்ட அளவுதான் கற்க முடியும். அதற்குமேல், அனுபவம் மூலமே அறிய இயலும். தமிழகப் பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பெரும் பாரம்பரி(4)யம் உண்டு. புகழ்பெற்ற தலைவர்கள் இந்தத் தொழிலில் பணியாற்றி உள்ளனர். பத்திரிக்கை தர்மத்தின் உயரிய தரக்கோட்பாடுகளை அவர்கள் பின்/பற்றி, மக்களின் சமூக உணர்வுகளை சீர்செய்து, தேவையற்ற கிளர்ச்சிகளையும், போராட்டங்களையும் தவிர்க்கப் பாடுபட்டனர். அவர்களின் வழியைப் // பின்பற்றி, சமுதாயத்தில் வளமான சனநாயக மரபுகளை உண்டாக்க உதவிகரமாகச் செயல்படவேண்டும். உங்களின் விமர்சனங்கள் உண்மையின் ///டிப்படையில் அமைந்த ஆக்கபூர்வமான விமர்சனங்களாக அனைவரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் எனக் கூறி, என உரையை நிறைவு செய்கிறேன்.(5)


     சென்னை தங்கமணி தேயிலை விற்பனை நிலைய அலுவலர், நீலகிரியிலுள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக மேலாண்மை இயக்குநருக்கு எழுதும் கடிதம்.

அன்புடையீர்,

    தங்கள் 6.6.1998 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. எங்கள் நிறுவனம் கடந்த பத்தாண்டு காலமாக தேயிலைத் தூள் வியாபாரத்//தில் ஈடுபட்டுள்ளது. ஏழு தனியார் நிறுவனங்களுடைய சென்னை மாவட்ட முகவராகச் செயல்பட்டு வருகிறோம். தேயிலைத் தூள் விற்பதில் நீண்டகால அனு///பவம் உள்ள எங்கள் நிறுவனத்தை தங்களின் சென்னை மாவட்ட முகவராக நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். ஆண்டொன்றுக்கு எங்களால் பத்(6)தாயிரம் டன் தேயிலைத் தூள் விற்பனை செய்ய இயலும். தங்களால் அனுப்பிவைக்கப்படும் சரக்குகளுக்கு முப்பது நாட்களுக்குள் பணம் செலுத்திவிடு/வோம் என்று உறுதியளிக்கிறோம்.

  தங்களின் சரக்கு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவிடும் வகையில் பரீட்சார்ந்த அடிப்//படையில் விற்பதற்காக ஒரு டன் தேயிலைத் தூள் உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான காசோலை இணைக்கப்பட்டுள்ளது. தங்க///ள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் எங்களுடைய நிறுவனம் கடமைப்பட்டதாக இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

             தங்கள் நம்பிக்கையுள்ள,(7)