Sunday, June 28, 2020

தமிழ்ச் சுருக்கெழுத்து - முதுநிலை - ஆகஸ்ட் 2012


                       ஆகஸ்ட் 2012

துணைத் தலைவர் அவர்களே,
     எனக்கு முன்பு பேசிய மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இந்த அறிக்கை மீது தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். /ந்த அறிக்கையைப் படித்தவர்கள், இது தமிழ்நாட்டிலுள்ள வறட்சி நிலைமையைப் போதுமான அளவு குறிப்பிடுவதாக இல்லை என்பதை உணருவார்கள். இப்போ//து ஏற்பட்டிருக்கிற நிலைமை மனக்குறைவு என்பதால் மட்டும் ஏற்பட்டது அல்ல ன்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். பல காரணங்களால் வறட்சி /// நிலைமை அதிகரித்திருக்கிறது. சென்ற ஆண்டு பெய்த மழை அளவைவிட இந்த ஆண்டு குறைந்துவிட்டது.
     முன்பு ஒரு முறை இப்படிப் பஞ்சம் வந்த போது மாநில(1)க் கதர் வாரியத்தின் மூலம் ஏற்பாடு செய்து, இரண்டு கோடி ரூபாயை மும்பையில் உள்ள கதர் ஆணைக் குழுவிடமிருந்து பெற்று வந்து ஏராளமான வேலை வாய்ப்/பை ஏற்படுத்தினார்கள் என்பதை நான் நினைவுபடுத்துகிறேன். ஆகவே பஞ்சக் காலத்தில் உள்ளூர் ஆசாரிகள், தச்சர்கள், கொல்லர்கள் செய்யக் கூடிய //ருவிகளைக் கொடுத்து அதன் மூலம் நூல் உற்பத்தி செய்து, துணி உற்பத்தி செய்தால், பொது மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும், பஞ்சத்தையும் சமாளிக்/// முடியும். அந்த வழியிலே கதர் வாரியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கதர் ஆணைக் குழுவினருக்கு இந்த மாதிரியான அறிக்கையைக் கொடுத்தால் பயன் (2) இருக்காது. உண்மை நிலைமை என்ன என்று எடுத்துக்காட்டி ஒரு அறிக்கையைத் தயாரித்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்போது உதவி கிடைக்கலாம். /
    இப்போது செலவழித்திருப்பது போதாது. ஆகவே இன்னும் அதிகமான பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்று எல்லா உறுப்பினர்களும் சொன்னார்கள். செலவ//ழிப்பது என்பது நம்முடைய அரசின் கடமை, பொது மக்களுக்கும் இதைச் செய்வதில் கடமை இருக்கிறது என்று உணர்த்த வேண்டும். வறட்சி, பஞ்சம் போ///ன்ற காலங்களில் குற்றங்கள் அதிகமாக வளரும். சாப்பிட ஒன்றும் வழி இல்லாவிட்டால், திருட்டு போன்ற குற்றங்கள் ஏற்படும். இவற்றைச் சமாளிக்க (3) பொது மக்களுடைய கடமைகளைப் பற்றி அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அரசினுடைய முக்கியமான கடமை நிதியைக் கொடுப்பது. ஒவ்வொரு வட்டத்திற்/கும் எவ்வளவு ஒதுக்குகிறார்கள் என்ற விபரம் பொது மக்களுக்குத் தெரிந்தால், அதைச் சரியாகச் செலவழிக்கிறார்களா என்று பார்க்கும் உணர்வு //வர்களுக்கு வரும். ஆகவே பொது மக்களுக்குத் தெரிகிற மாதிரி, ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இவ்வளவு ஒதுக்கப் பட்டிருக்கிறது என்று அறிவிக்க /// வேண்டும். அப்படி செய்தால் பொது மக்களும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். கிராமங்களில் உள்ள சில வசதி (4)டைத்தவர்கள் அரசு அளிக்கின்ற பணத்தை ஒப்பந்தம் மூலம் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற குறை சொல்லப்பட்டது. அவர்களுக்கு இரக்கச் சி/த்தம் உண்டாகக் கூடிய அளவிற்று ஏற்பாடு செய்ய வேண்டும். வறட்சி நிலைமையைச் சமாளிக்க, பொது மக்களுடைய ஆதரவு வேண்டும் என்ற நிலைமையை உண்டா//க்க வேண்டும். பொது மக்களுக்கும் இந்தச் சமூகத்திற்கும் இதில் பொறுப்பு உண்டு. அவ்வப்போது வசதி குறைந்தவர்களுக்கு உதவ வேண்டுமென்ற உண///ர்ச்சியை நாம் உண்டு பண்ண வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி நல்ல உணர்வுகளை வளர்க்கும் சூழ்நிலையை நாம் உண்டு பண்ண வேண்டும். (5)

    மும்பை, ராமானுஜம் கூட்டமைப்பு, கொல்கத்தா, முருகன் கூட்டமைப்புக்கு எழுதும் கடிதம்.
அன்புடையீர்,
     தங்களுடைய சரக்குத் தேவைக்கான உத்தரவை நி/றைவேற்றுவதற்குக் கால நீட்டிப்பு கேட்பதற்கு நாங்கள் வருந்துகிறோம்.
    எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் எங்க//ள் தொழில் சிறிது காலம் முடக்கப்பட்டது. எனினும், வேலை மறுபடி துவங்கப்பட்டிருப்பது தங்களுக்குத் தெரியும். எங்கள் ஒப்பந்த வேலைகளை முடி///ப்பதற்கு நாங்கள் தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். இருந்த போதிலும், ஒப்பந்தப்படி ஆகஸ்ட் ஒன்றாம் நாளுக்குள் தாங்கள் கோரியுள்ள சரக்கு(6)களை அனுப்பி வைக்க இயலும் என்று தோன்றவில்லை. தற்போதுள்ள நிலைமைப்படி, செப்டம்பர் ஒன்றாம் நாளுக்குள் நிச்சயமாக தாங்கள் கேட்டுள்ள சரக்கு/களை அனுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். இந்த ஏற்பாடு தங்களுடைய இசைவைப் பெறும் என்று நம்புகிறோம். சரக்குகளை அனுப்புவதை விரைவு//படுத்த நாங்கள் முழு முயற்சி செய்து வருகிறோம்.
    எங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்களால் இந்தக் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது /// என்பதை உணர்ந்து, நாங்கள் கோரியுள்ள கால நீட்டிப்பை தாங்கள் அன்புடன் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
                                        தங்கள் நம்பிக்கையுள்ள, (7)
                    



No comments: