Tuesday, June 23, 2020

தமிழ்ச் சுருக்கெழுத்து - முதுநிலை - 2011 ஆகஸ்ட்



2011 ஆகஸ்ட்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
நிதி நிலை அறிக்கையின் மீதான பொது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு, வாய்ப்பினைப் பெற்றதில் நா/ன் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அண்மையில் மக்களவைத் தேர்தல் நாம் அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு தேர்//தலின் போதும் இந்திய மக்கள் தங்களுடைய அரசியல் முதிர்ச்சியை அவ்வப்போது நிரூபித்து வந்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் இ///ந்த முறையும் மத்தியில் ஒரு நிலையான அரசாங்கம் அமைவதற்கு தங்களுடைய அரசியல் கடமையைச் சரிவரச் செய்துள்ளார்கள் என்பதை நான் (1) இங்கே இந்தச் சந்தர்ப்பத்தில் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
அடுத்தபடியாக, விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாமல் நேர்மையான முறையி/ல், மக்களவைத் தேர்தலை, நடத்தியதில், இந்தியத் தேர்தல் ஆணையம் நம் எல்லோருடைய பாராட்டுகளையும், நன்மதிப்பையும் பெற்றிருக்கிறது என்பதில்,//நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம்.
மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள், இந்த அரசு ஏழைகளின் அரசாக, விவசாயிகளின் அரசாக இருக்கும் என்றும்,/// அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், தெரிவித்து இருக்கிறார்கள். இது உள்ளப(2)டியே, வரவேற்கத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், தென்மாவட்டங்களில் புதியதாக, தொழில்கள் உருவாக்கப்படவில்லை என்ற ஏக்கமும் எ/திர்பார்ப்பும், மக்களிடம் பெரிதும் இருந்து வருகிறது என்பதை நாம் நன்கு அறிவோம். எனவே, இந்தக் குறையைப் போக்குவதற்கான வழிவகைகளை அரசாங்//கம் விரைந்து காண வேண்டுமென்று இந்த நேரத்தில் நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நம்முடைய மாநிலத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய /// மின்சார உற்பத்தி நிலையங்களை அமைக்க இருப்பதாக, அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனை எல்லோராலும், வாழ்த்தி வரவேற்கப்படும் அறி(3)விப்பாகவே கருதலாம். அந்த வகையில் மின்சார உற்பத்தியில், கடந்த சில ஆண்டுகளில், தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது/ என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இருப்பினும், மின்சாரத்தின் தேவை, நாளுக்கு நாள் பெருகிவருவதை, என்னால் குறிப்பிடாமல் இ//ருக்க முடியாது.  இதனைக் கருத்தில் கொண்டு, சூரிய ஒளியிலிருந்து, மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு, மேலும் பல திட்டங்களை, உருவாக்க வேண்டியது அ///வசியம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தொழில்களில் உயர்ந்தது, உழவுத் தொழில் என்பதை, நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த(4)த் தொழில்தான் மக்களுக்குத் தேவையான உணவு தானியங்களை அள்ளித்தருகிறது. மேலும் மற்ற தொழில்களுக்குப் பயன்படும் மூலப் பொருள்களையும் வாரி / வழங்குகிறது. ஆயினும், தற்போது விவசாயம் இலாபம் தரும் தொழிலாக இல்லாமல் இருப்பதால், தலைமுறை தலைமுறையாய், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த // மக்கள் மற்ற தொழில்களை நாடி,  நகர்ப்புறங்களுக்குச் செல்லும் செய்திகள் கவலை அளிப்பதாகவே உள்ளது. எனவே, சோதனைகளைச் சாதனைகளாக மாற்று///ம் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏழை விவசாயிகளின் வாழ்வு மலர, தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். (5)


மதுரை, அழகிரி கூட்டமைப்பின் உரிமையாளர், கும்பகோணம் இராமநாதன் கூட்டமைப்புக்கு, எழுதிய கடிதம்.
அன்புடையீர், வணக்கம். கடந்த சில ஆண்/டுகளில், தமிழ் நாட்டில் வண்ண மீன்கள் வளர்ப்புத் தொழில் இரண்டு மடங்காக வளர்ந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எ//ங்களுடைய நிறுவனத்தில் உற்பத்தியாகும் மீன்கள், நம்முடைய நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும், அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தத் தொழிலி///ல், வருமானம் மிக மிக அதிகம் என்றால் அது மிகையாகாது. இருப்பினும் இந்தத் தொழில், நம்முடைய மாநிலத்தில் வளராமல் இருப்பதாக தங்கள் கடிதத்(6)தில் எழுதி இருக்கிறீர்கள்.
இதற்குக் காரணம், வண்ண மீன்கள் வளர்ப்புத் தொழில் குறித்து, மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இல்லாமல்/ இருப்பதுதான் என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
குறையாகத் தெரிவிக்கப்படும் விஷயங்கள், சில இருந்தாலும், வீட்டில் இருந்தபடியே, // தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு, நிச்சயமாக இது வளமான வாழ்க்கையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. மிகக் குறைந்த முதலீட்டில், மிகச் சிறி///ய இடத்தில் மீன்களை வளர்க்கலாம்.
எங்களுடைய இந்த விளக்கம் தங்களுக்கு மன நிறைவை அளிக்கும் என்று, நம்புகிறோம்.

தங்கள் நம்பிக்கையுள்ள, (7)

No comments: