நாடாளுமன்ற மாநிலங்களவையில் லோக்பால் சட்டமுன்வடிவு இறுதியாக நிறை
வேற்றப்படுவதற்கு முன்பாக அதன் மீது நடைபெற்ற விவாதத்தின்போது மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோக்பால் புல னாய்வின் வரையறைக்குள், தனியார் நிறு வனங்கள் அதிலும் குறிப்பாக
பொது – தனியார் - ஒத்துழைப்பு என்னும் பெயரில் மேற் கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்தும்
பொதுச் சொத்துக்களை அல்லது அரசு மற்றும் பொதுத் துறை நிதி நிறுவனங்களிடமிருந்து
நிதிபெறும் ஏற்பாடுகளைக் கொண்டுவரக்கூடிய விதத்தில் துல்லியமான திருத்தங்களைக்
கொண்டு வந்தோம். அந்தத் திருத்தம் தொடர்பாக வாக் கெடுப்பு நடந்தபோது இடதுசாரிக்
கட்சி உறுப் பினர்கள் 11 பேர் அவையில் இருந்தபோதிலும், இதற்கு 19 வாக்குகள் கிடைத்தன. இதன் பொருள் இடதுசாரி அல்லாத வேறுசில மாநிலங்
களவை உறுப்பினர்களும் இதனை வரவேற்றி ருக்கிறார்கள் என்பதாகும். ஆயினும் இந்தத்
திருத்தம் பெருவாரியான வாக்கு வித்தியாசத் தில் தோற்கடிக்கப்பட்டது. ஏனெனில் தனி
யார் கம்பெனிகள் மீதான சோதனைகள் எதை யும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட் டணியோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்
கூட்டணியோ விரும்பவில்லை.
அவை பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவதை அல்லது நம்பிக்கை
மோசடி செய்வதை அல்லது அரசு கருவூலத் திற்கு நியாயமாக வரவேண்டிய வருவாயைத் தானே
எடுத்துக்கொள்வதை, சோதனைக்கு உட்படுத்தும் எதையும், இவ்விரு கூட்டணி களும் விரும்பவில்லை. இந்தச் சூழ்நிலையில், தில்லி உயர்நீதி மன்றம் சமீபத்திய
தீர்ப்பு ஒன்றின்மூலம் தனி யார் டெலிகாம் கம்பெனிகளை மத்தியத் தணிக் கைத்துறைத்
தலைவரின் (சிஏஜி)தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற வரையறைக் குள்
கொண்டுவந்திருப்பது உண்மையில், முக்கியத்துவம் பெறுகிறது. இத்தீர்ப்பு உச்சநீதி மன்றம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீடு
தொடர்பான ஊழல் வழக்கில் அளித் திட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தத்
தீர்ப்பில் தனியார் நிறுவனங்கள் பொதுச் சொத்துக்களைப் பயன்படுத்துவதை முறைப்
படுத்த வேண்டியது அவசியம் என்று கூறியி ருக்கிறது. நீதிபதிகள் நந்திராஜோக் மற்றும்
வி.கே.ராவ் ஆகியோரடங்கிய தில்லி உயர்நீதி மன்றத்தின் அமர்வாயம் தங்கள்
தீர்ப்புக்கு லத்தீன் மொழியில் நீதித்துறை சார்பாக வழங் கப்பட்டுள்ள மூதுரைகளின்
ஒன்றான `பொதுச் சொத்துக்கள்
மக்களின் சொத்து’ என்ற அடிப் படையில் இத்தீர்ப்பை அளித்திருக்கிறது. அதாவது, மக்களுக்குச் சொந்தமான, நாட்டின் இயற்கை வளங்கள் உரியமுறையில்
அரசால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், இவ் வாறு பொது வளங்கள் தனியாரிடம் மாற்றப் படும்போது முறையாகப்
பயன்படுத்தப்படு கிறதா என்பதை உத்தரவாதம் செய்வது அர சின் கடமை என்பதும் இதன்
பொருளாகும். இவ்வாறு, அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தங்கள் வருவாயிலிருந்து ஒரு
பங்கினை அளிப்பது தொடர்பாக ஐந்து தனியார் டெலிகாம் கம்பெனி களின் வருவாய் குறித்து
மத்தியத் தணிக் கைத்துறைத் தலைவர் (சிஏஜி) தணிக்கை செய்திட வேண்டும் என்று தில்லி
உயர்நீதி மன்றம் கட்டளையிட்டிருக்கிறது.
தனியார் டெலிகாம் கம்பெனிகள் அளித்திடும் தொகை கள் சரிதானா என்பது
குறித்து சிஏஜி தணிக் கை ஆராய்ந்திடும். இது முற்றிலும் சட்டரீதியானதேயாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன் றத்தில் வாதிட்டதுபோல, பொது வளங்களைப் பயன்படுத்தும் தனியார்
நிறுவனங்களைத் தணிக்கை செய்வதற்கான சிஏஜி-இன் அதி காரம், தனியார் நிறுவனத்தின் செயல்பாட்டில்
தலையிடுவதாகவோ அல்லது அரசியலமைப் புச் சட்டத்தின் 149ஆவது பிரிவை மீறுவ தாகவோ (இச்சட்டப்பிரிவு தனியார் நிறுவனங் களை
சிஏஜி தணிக்கை செய்வதைத் தடை செய்கிறது) பார்க்கவேண்டியது தேவையில் லை. ஏனெனில்
தனியார் டெலிகாம் நிறு வனங்கள் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டண மாக 1க்கும் 8க்கும் இடையிலான சதவீத அள விற்கு தொகையை அளித்து வருகிறது. இது தவிர
ஆண்டு உரிமக் கட்டணமும் அளித்து வருகிறது. தனியார் டெலிகாம் கம்பெனிகளிட மிருந்து
அவை சம்பாதித்த தொகைகளில் அர சுக்கு அளிக்க வேண்டிய தொகையை நியாய மாக வழங்கி
இருக்கின்றனவா என்பது உத்தர வாதப்படுத்தப்பட வேண்டியது அவசிய மாகும். இதனை சிஏஜி
தணிக்கை அரசுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்திடும். இந்தப் பின்னணியில்தான்
தில்லி உயர் நீதிமன்றம் நாட்டிலுள்ள “பெரிய நிறுவனங் கள்’’ எப்படியெல்லாம் ஏமாற்றி சூழ்ச்சி செய் கின்றன என்று மிகவும்
வருத்தத்துடன் குறிப் பிட்டிருக்கிறது. பொதுவாக இவ்வாறு தணிக்கை செய்யப் படுவதை
அனைவரும் வரவேற்றிட வேண்டும். இதில் ஆட்சேபணை செய்வதற்கு எதுவுமேஇல்லை.
எனினும், டெலிகாம் கம் பெனிகள் சிஏஜி தணிக்கை செய்வதற்கு எதி ராக
ஆட்சேபணைகளைத் தாக்கல் செய்திருக் கின்றன. இவற்றை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
ஊடகங்களில் வந்துள்ள செய்தி களின்படி, `ஃபிக்கி’ அமைப்பின் தலைவர், “தனியார் கம்பெனிகளின் வரவு-செலவுக் கணக்குகளைப் பார்வையிடுவதற்கு
சிஏஜிக்கு இடமில்லை’’ என்று கூறியிருக்கிறார். நாட்டின் தலைநகரில் மின் விநியோகத் தை
மேற்கொண்டிருக்கும் தனியார் கம்பெனி களும் சிஏஜி-யால் தணிக்கைக்கு உட்படுத் தப்பட
வேண்டும் என்று தில்லி அரசாங்கம் சமீபத்தில் முடிவெடுத்தபோது இதேபோன் றே
ஆட்சேபணைகள் தெரிவித்திருக்கின் றன. தில்லியில் உள்ள மக்கள் தொகையில் 75 சதவீதத்தினருக்கு மின்சார விநியோகத்தை
செய்து கொண்டிருக்கும் பிஎஸ்இஎஸ் ராஜ தானி மற்றும் பிஎஸ்இஎஸ் ஜமுனா என்னும்
நிறுவனங்களில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட் ரக்சர் 51 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக் கிறது. மீதம் உள்ளவர்களுக்கு
மின்சாரத்தை அளித்துவரும் டாட்டா பவர் தில்லி டிஸ்ட்ரிப் யூசன் லிமிடெட்
நிறுவனத்தில் டாட்டா பவர் 51 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கிறது.
மீதம் உள்ள 49 சதவீதப் பங்குகளை தில்லி அரசாங்கம் வைத்துள்ளது. இந்நிறுவனங்கள்
அனைத்தும் சிஏஜி-யின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண் டும் என்று கோரி 2011 பிப்ரவரியில் மனு ஒன்று தாக்கல்
செய்யப்பட்டபோதே துவங்கிவிட்டது. மேலும் இந்நிறுவனங்கள் செய்திடும் மோசடி கள்
குறித்து மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரணை செய்திட வேண்டும் என்ற
கோரிக்கையும் அப்போதே எழுப்பப்பட்டது. 2012 மார்ச்சில் அப்போதிருந்த தில்லி அரசாங் கம் பிஎஸ்இஎஸ் குழுமத்தின்
கம்பெனிகளை சிஏஜி தணிக்கை செய்திட ஏற்பளிப்பு அளித் தது. தற்போதைய தில்லி
அரசாங்கம் மூன்று நிறுவனங்களிலுமே சிஏஜி தணிக்கை செய் யப்பட வேண்டும் என்று
கட்டளையிட்டிருக் கிறது. 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வரும் ஜனவரி 22 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தில்
இறுதியாக வாதங்கள் நடைபெறவிருக்கிறது.இம்மூன்று கம்பெனிகளிலுமே 49 சத வீதப் பங்குகள் தில்லி
அரசாங்கத்திற்குச் சொந்தம் என்பதால், அதாவது அரசாங்கத்தின் நிதி இதில் இருக்கிறது என்பதால், இவை சிஏஜியால் தணிக்கை செய்யப்பட
வேண்டும் என்பது மிகவும் பொருத்தமானதேயாகும். ஆயி னும், இதற்கு வலுவான முறையில் எதிர்ப்பு
கிளம்பியிருக்கிறது.
இன்னும் சரியாகச் சொல்லப்போனால், இந்திய கார்ப்பரேட்டு களின் சில ஊதுகுழல்கள், “இவ்வாறு தனி யார் நிறுவனங்களை சிஏஜி
தணிக்கை செய் யும் பட்சத்தில் நாட்டில் பொதுவாக பொருளா தாரம் மந்த நிலையில் உள்ள
இன்றைய பின் னணியில் பொருளாதாரம் மேலும் பின்னோக் கிச் செல்லும்’’ என்று மிரட்டியிருக்கின்றன. இவையெல்லாம்
காட்டுவதென்ன? நாட் டில் ஏற்கனவே, நியாயமற்ற முறையில் பல் வேறு வழிகளிலும்
கொள்ளை லாபம் ஈட்டு வதை அனுமதித்திடும் ‘சலுகைசார் முத லாளித்துவம்’எக்காரணம் கொண்டும் முறைப் படுத்தப்படக்கூடாது மற்றும் தணிக்கைக்கு
உட்படுத்தப்படக்கூடாது என்பதையே இவையெல்லாம் வலியுறுத்துகின்றன. 2008ல் உலக நிதி மந்தம் ஏற்பட்டதைத்
தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து கார்ப்பரேட் ஆட்டோ மொபைல் ஜாம்பவான்கள் அவர்களுடைய
தனி விமானங்களில் அமெரிக்க ஜனாதிபதி யிடம் பறந்து சென்று தங்களுக்கு நிவாரணம்
அளிக்குமாறு வேண்டினார்கள் என்று ஊட கங்களில் வந்ததை நினைவுகூர்க. அதே போன்று
இன்றைய தினம், இந்தியாவில், பொதுத்துறை வங்கிகளிலிருந்து பல லட்சம்
கோடி ரூபாய் தொகைகளைக் கடனாகப் பெற்ற கார்ப்பரேட்டுகள் அவற்றைத் திருப்பித் தராது
இருக்கிறார்கள். இதற்கு அரசு வைத்துள்ள மதிப்பிற்குரிய சொற்றொடர் “செயல்படா சொத் துக்கள்’’ என்பதாகும். ஆயினும் இவ்வாறு கட னைத்
திருப்பித்தராமல் ஏமாற்றும் கார்ப்ப ரேட்டுகள் தங்கள் சொந்த விமானங்களில் உலகம்
முழுதும் பறந்து கொண்டுதான் இருக் கிறார்கள். நாட்டின் பொதுச் சொத்துக்களைத் தனி
யார் கொள்ளையடித்துச் செல்வதை அனு மதிக்கும் ’சலுகைசார் முதலாளித்துவத்தை’ இன்னும் எத்தனை காலத்திற்கு நாடு ஊட்டி வளர்க்கப் போகிறது? பொதுச் சொத்துக்கள் நாட்டு மக்களின்
வாழ்க்கைத்தரத்தை மேம் படுத்துவதற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டுமேயொழிய, தனியார் கொள்ளை யடிக்க அனுமதித்திடக்
கூடாது.
அந்த அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
நாட்டின் நலனையும் நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு அத்தகையதொரு
திருத்தத்தை நாடாளுமன் றத்தில் கொண்டு வந்தது. ஆயினும் காங் கிரசும் பாஜகவும்
இணைந்து நின்று அத னைத் தோற்கடித்துவிட்டது. இப்போது ஏற்பட் டுள்ள குறிப்பிடத்தக்க
வளர்ச்சிப் போக்குகள், எதிர்காலத்தில் ’சலுகைசார் முதலாளித்து வத்திற்கு’ சாவுமணி அடித்திடும் என்று நம்பு வோமாக.
- தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment