தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முடிவுகள்
குறித்து கருத்துக் கணிப்பு வெளியிடுவதைத் தடை செய்வது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின்
கருத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் கோரியிருப்பது குறித்து மிகப் பெரிய அளவில் பெருங்கூச்சல்
எழுந் துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும், ஊடகங்களில் சில பிரிவினரும் இவ்வாறு தேர்தல் ஆணையம் கோரியிருப்பதை, பேச்சுசுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் மீதுமானமட்டு மீறிய
தாக்குதல் என்று கூறியிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் இது தொடர்பாக
சில விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.முதலாவதாக, இதுபோன்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் கருத்தைக்கோருவது
முதல் முறை அல்ல. பத்தாண்டுகளுக்கு முன்பு, அரசியல் கட்சிகளுடன் இதுபோன்று கருத்துக்களைக் கேட்டறிந்த பின்புதான்
தேர்தல் ஆணையம், தேர்தல் நாளன்று
வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் கருத்து கேட்டு வெளியிடுவதற்கு (நஒவை யீடிடடள) தேர்தல்
நடைமுறைகள் தொடங்கி அது முடியும் வரை வெளியிடக் கூடாதுஎன்று தடை விதிக்கப்பட்டது.
ஏனெனில் தேர்தல்கள் பல கட்டங்களாக
நடைபெற்றுக்கொண்டிருக்கையில், அந்த
சமயத்தில்இவ்வாறு ஒரு பகுதியில் வாக்களித்தவர்களி டம் கருத்து கேட்டு வெளியிடுவது என்பது, அது சரியானதாகவும் இருக்கலாம் அல்லது சரியற்றதாகவும் இருக்கலாம், அடுத்தடுத்து வாக்களிக்க இருக்கிற வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கை
செலுத்திடும் என்ப தால் அவ்வாறு தடை விதிக்கப்பட்டது. அப்போதும்கூட, தேர்தல் கணிப்பு குறித்த பிரச்சனை எழுந்தது. ஆயினும் அப்போது
இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இரண்டாவதாக, மக்களுக்கு அவர்கள் தகவல் பெறும் உரிமையை மறுப்பதாக இப்போது
பாஜக இவ்வாறு கூச்சல் போடுவதுஉண்மையில் விசித்திரமாக இருக்கிறது.கருத்துக் கணிப்பு
என்பது தகவல் தரும்விஷயம் கிடையாது.
அந்தப் பெயரே குறிப்பிடுவதுபோல
அது கருத்துக்கள் (opinions)தான். இவ்வாறு கருத்துக்கள்
கூறுவதே வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். வரையறைகளின்படியே
கூட, கருத்துக் கணிப்புகள் என்பவை நடுநிலையான தகவல்களும் அல்ல, அல்லது, பாரபட்சமற்ற முறையில் அளிக்கப்படும்
செய்திகளும் கிடையாது. மேலும், 2004 பொதுத் தேர்த லுக்குப் பின்பு
இதேபோன்றதொரு நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் நடத்தியபோது, பாஜக இப்போது கூறுவதற்கு நேர் எதிரான கருத்துக்களை அப்போது கூறியது.
அதாவது
தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான பின்னர் கருத்துக் கணிப்பு வெளி யிடுவதற்குத்
தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட
பொது ஆவணத்தில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: “தேர்தலுக்கான தேதி மற்றும் தேர்தல்
பணிகள் முடிவுறும் வரையிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின்பு
தேர்தல்கள் குறித்துக் கருத்துக் கணிப்பு மேற்கொள்வதோ அவற்றை வெளியிடுவதோ அனுமதிக்கப்படக்
கூடாது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமனதான கருத்தாக
இருந்தது.’’(முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்தங்கள்:
தேர்தல் ஆணையத்தின் ஆவணம், ஜூலை 2004).
எனவே, பாஜக 2004ஆம் ஆண்டு, வாக் காளர்களைக் கவர்வதற்காக தேர்தலுக்கு
முன்பு மோசடியான கருத்துக் கணிப்புகள் மூலம் நடவடிக்கைகளில் இறங்கியதும், ஆயி னும் அது தோல்வியடைந்ததால், அத்தகைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடக்கூடாது எனத்
தடை விதிக்கக் கோரியதும் தெள்ளத்தெளிவான ஒன்று. கருத்துக் கணிப்புகள் என்பவை பாரபட்சமற்றமுறையில்
கருத்துக்களைத் தருவதற்குப் பதிலாக, ஒரு சில கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தின்
உத்திகளாக உபயோகப்படுத்தப்படுகிறது என்கிற எதார்த்தத்தை இது காட்டிக்கொடுத்தது. மூன்றாவதாக, மேற்கத்திய நாடுகளின் ஜனநாயகம் இத்தகைய முறையை அனு மதிக்கும்போது, ஏன் அத்தகைய உரிமையை இந்திய மக்களுக்கு மறுக்க வேண்டும் என்று
சில ஊடகங்கள் விவாதக்கின்றன. இதுவும் சரியான கூற்று அல்ல. பல மேற்கத்திய ஜனநாயக நாடுகளில்
தேர்தல் நாளுக்கு முன்பு தங்கள் கருத்துக்களை பிரதிபலித்தல் என்னும் முறை அல்லது மவுனமாக
இருத்தல் என்னும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஸ்பெயினில் இவ்வாறு மவுனமாக இருக்கும்
தினத்தை, “பிரதிபலித்தல்’’ என்று அழைக்கிறார்கள்.
இத்தாலியில்
இத்தகைய தடை உத்தரவு பதினைந்து நாட்களுக்கு நீடிக்கிறது. நியூசிலாந்து நாட்டில் தேர்தல்
நாளன்று சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேற்கத்திய ஜனநாயக நாடும்
வாக்களிக்கும் நாளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குப் பிரச்சாரம் செய்வதற்குத்
தடை விதித்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இன்றைய
வரையில், தேர்தல் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பிரச்சாரம்
செய்வது முடித்துக் கொள்ளப்படுகிறது. தேர்தல் சம்பந்தமான நடத்தை விதி தேர் தல் நாளுக்கு
40 நாட்களுக்கு முன்பு தொடங்கிவிடுகிறது. இந்தக் காலத்தில் அரசாங்கங்கள் வாக்காளர்களை
வரம்புமீறிய முறையில் ஈர்க்கும் விதத்தில் எவ்வித சலுகையையும் அறிவிக்கக் கூடாது. அதே
போன்று வாக்காளர்களிடம் முறையற்ற முறையில் செல்வாக்கு செலுத்தும் விதத்தில் வெறித்தனமான
பிரச்சாரத்திலும் எந்தக் கட்சியும் ஈடுபடக் கூடாது. எனவே, தடை கள் விதிப்பது என்பது ஒன்றும் புதிதல்ல.
இவை, வாக்காளர்களை, தவறான மற்றும் கட்சிகளின் மிகைப்படுத்தப்பட்ட
பிரச் சாரத்திலிருந்து பாதுகாத்திட உதவின. நான்காவதாக, கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்று எந்தவொரு
சுதந்திரமாக இருந்தாலும் அதற்கான உரிமை முற்றிலும் சுயேச்சையானதாக இருந்திட வேண்டும்.
அந்த உரிமைக்காக ஏதேனும் விலை கொடுக்க வேண்டியிருக்கிறதெனில், பின் அது ஒரு சுதந்திரம் என்று கூறுவதற்கில்லை. இன்றைய இந்தியாவில்
‘காசு கொடுத்து செய்தி’ வெளியிடுவது என்னும் நோய் பல்கிப் பெருகியுள்ள நிலையில், பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் சுதந்திரம் என்னும் உரிமைகள்
மிகப்பெரிய அளவில் சிதைக்கப்பட்டு பாரபட்சமற்ற முறையில் உண்மை செய்திகளை மக்களுக்குத்
தெரிவிப்பது என்பது அநேகமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வித பழிபாவத்திற்கும் அஞ்சாது
கொள்ளை லாபம் ஈட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளவர்களின் பலிபீடத்தின் முன்
பாரபட்சமற்ற முறையில் உண்மை செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற செயல்
சில சமயங்களில் பெரிய அளவிற்கு பலிகொடுக்கப் பட்டுவிடுகிறது.
இத்தகைய
நிலைமைகளில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் வாக்காளர்களிடம் தவறான முறையில் செல்வாக்கு
செலுத்தக்கூடிய விதத்தில் கருத்துத் திணிப்பை ஏற்படுத்தும் வேலைகளும் மிகப்பெரிய அளவிற்கு
நடக்கின்றன. எனவே, இன்றைய இந்தியாவின் பின்னணியில்
ஒரு குறிப்பிட்ட சுதந்திரத்தின் மீது ‘போதுமான அளவிற்குத் தடைகள் விதிக்க
வேண்டியது’ குறித்து மிகவும் ஆழமானமுறையில்
பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய சூழ்நிலையில், கருத்துக் கணிப்பை முற்றிலுமாகத் தடை செய்யக் கூடாது என்று சொல்கிற
அதே சமயத்தில், அத்தகைய கருத்துக் கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு, அதாவது தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் நாள்கள் முடியும் வரை, வெளியிடக் கூடாது என்று கூறுவது சாலச் சிறந்ததாக இருக்கும்.
ஆயினும், இந்தக் கால கட்டம் குறித்து, தேர்தல்
ஆணையம், அனைவரிடமும் ஆழமான முறையில் கலந்தாலோசனைகள் மற்றும் விவாதங்கள்
மேற்கொண்டபின் வரையறை செய்து, அறிவித்திட வேண்டும்.இறுதியாக, கடந்த காலங்களில் அநேகமாக ஒவ்வொரு தேர்தலின்போதும் வெளியாகி
இருந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தையுமே வாக்காளர்கள் தவறு என்ற மெய்ப்பித்துள்ளார்கள்
என்கிற உண்மையா னது, இவ்வாறு வெளியிடப்படும் கருத்துக்
கணிப்புகள் எல்லாமே எந்த அளவிற்கு அறிவியல்பூர்வமற்றது, எந்த அளவிற்கு மிகவும்குறுகிய அடித்தளத்தைக் கொண்டது என்பதைத்
தெள்ளத் தெளிவாக்கியுள்ளன. இவ்வாறு இந்தியாவில் கருத்துக் கணிப்பு வெளியிடும் முறை
உருவான சமயத்தில் இது குறித்து ஈடிணையற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லெக்ஷ்மணன் ஒரு கார்ட்டூன்
வரைந்திருந்தார். தேர்தலில் மின்னணு எந்திரங்கள் (EVMs) பயன்படுத்தாத காலம் அது. அந்தக்
கார்ட்டூனில், ஒரு கணவர் மிகவும் சோகத்துடன் தன் மனைவியிடம் தன் வாக்குச்சீட்டைத்
தவறான பெட்டியில் போட்டுவிட்ட தாக வருத்தத்துடன் கூறுவார்.
மனைவியின்
முகத்தில் கோபம் கொப்பளிப்பதைப் பார்த்ததும், அவர், “கவலைப் படாதே, இந்தத் தவறை நான் சரி செய்துவிட்டேன், வெளியில் வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் கருத்து கேட்பவர்களிடம்
(exit poll) மாற்றிச் சொல்லி சரிப்படுத்திவிட்டேன்’’ என்பார். இந்தியாவில் தாங்கள் யாருக்கு
வாக்களித்தோம் என்று கேட்பவர்களிடம் வாக்காளர்கள் அநேகமாக இப்படித்தான் கருத்து கூறுகிறார்கள்.
தமிழில்:
ச.வீரமணி
No comments:
Post a Comment