மாற்றுக் கொள்கைத்
திசைவழிக் கான மக்கள் போராட்டங்களை தீவிரப் படுத்த வேண்டும் என்று ஜூலை 1 அன்று இடதுசாரிக்
கட்சிகளின் சார்பில் தில்லி யில் நடைபெற்ற தேசிய அரசியல் சிறப்பு மாநாடு
விடுத்துள்ள எழுச்சிமிகு அறை கூவல் இதைவிட மிகவும் பொருத்தமான நேரத்தில்
வந்திருக்க முடியாது. ஈராண்டு களுக்கு முன்பு, நவீன தாராளமயப் பொரு ளாதார சீர்திருத்தங்களை
மிகவும் உற் சாகத்துடன் உயர்த்திப் பிடித்தத் தலைவர் கள் அனைவரும்
சீர்திருத்தங்களை இந் தியாவில் பின்பற்றத் தொடங்கி இருப தாண்டு காலம்
நிறைவேறிவிட்டது என் றும் இது நாட்டின் பொருளாதாரத்தை மிக வேகமாக முன்னேற்றிக்
கொண்டிருப்ப தாகவும் மிகவும் குதூகலத்துடன் கொண் டாடினார்கள். மேலும் அவர்கள்
நாட்டின் பொருளாதார நிலைமை, நம் நாட்டை ஜி-20 நாடுகளுடன் இணைத்துப்பார்க்கக் கூடிய அளவிற்கு முன்னேறிவிட்டதாக வும், அதன் காரணமாக
இந்தியப் பிரதமர் உலகின் பணக்கார நாடுகளின் தலைவர் களுடன் சமமாக உட்கார்ந்த
அளவளாவக் கூடிய அளவிற்கு உயர்ந்துவிட்டார் என் றும் கூடமிகவும் உற்சாகத்துடன் கூறி
னார்கள்.
ஆட்சியாளர்கள்
பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டில் இருவித இந்தியர்களுக்கும் (ஒளிரும்
இந்தியர்களுக்கும் அல்லல் பட்டு அவதியுறும் இந்தியர்களுக்கும்) இடையிலான இடைவெளியை
மேலும் விரிவாக்கக்கூடிய விதத்தில் இட்டுச் செல்கிறது. நாம், இவ்வாறு நாட்டு
மக்களின் மத்தியில் சமத்துவமின்மை அதிகரிப்பது என்பது நாட்டில் பெரும் பான்மை
மக்களின் வாங்கும் சக்தியை தொடர்ந்து சுருங்கச்செய்துவிடும் என்றும் எச்சரித்து
வந்துள்ளோம். இவ்வாறு வாங்கும் சக்தி குறைவது என்பது, மக்க ளின்
உள்நாட்டுத் தேவைகளையும் சுருங் கச் செய்து, அதன் விளைவாக நாட்டின் எதிர்கால வளர்ச்சியையும்
முடக்கிவிடும் என்றும் எச்சரித்திருந்தோம். ஆட்சியாளர் கள் நவீன தாராளமயப்
பொருளாதார சீர் திருத்தங்களை அமல்படுத்தத் துவங்கி இருபதாண்டு காலமாகிவிட்டதைக்
கொண்டாடத் துவங்கி ஈராண்டுகள் முடிந்துவிட்டன. துரதிர்ஷ்டவசமாக நாம் கூறிய
எச்சரிக்கைகள் அனைத்தும் இவ்விரு ஆண்டுகளில் உண்மையாகி விட்டன. உலக அளவில் ஏற்பட்ட
சமீபத் திய பொருளாதார மந்த நிலைமை சமீப ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளா
தாரத்தையும் மிகவும் மோசமான முறை யில் பாதித்துள்ளது என்பதை அரசாங்கம்
ஒப்புக்கொண்டிருக்கிறது. உற்பத்தித் துறையிலும் இதர தொழில்துறைகளிலும் உற்பத்தி
சுருங்கிப்போனதன் விளைவாக, வேலைவாய்ப்புகளும் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுவிட்டது. இது, ஏற்கனவே நாளும்
உயரும் விலைவாசி உயர்வாலும், மானியங்கள் வெட்டாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள
பெரும்பான்மையான நாட்டு மக்களை மேலும் துன்பத்தில் தள்ளியுள்ளன.
மக்களின் இத்தகைய
பரிதாபகரமான நிலைமைகள் குறித்தோ, அவர்களைத் துன்ப துயரங்களிலிருந்து எப்படிக் காப் பாற்றுவது
என்பது குறித்தோ கொஞ்சம் கூட கவலைப்படாமல், அதற்கு மாறாக ஐமுகூட்டணி-2 அரசாங்கமானது, பொருளாதார
மந்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ள வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு
கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்க நடவடிக்கைகளை எடுத்திருக் கிறது. ஊடகங்களில்
வந்துள்ள தகவல் களின்படி, அரசின் அதிகாரிகள் அளித் துள்ள பேட்டிகளின் அடிப்படையில், இது தொடர்பாக
எண்ணற்ற சலுகைகள் அளிக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஜூலை 1 அன்று நிதித்துறை
அமைச்சகத் தின் முன் முயற்சியில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் கூட்டம்
நடைபெற்றுள் ளது. இக்கூட்டத்தில் அந்நிய நேரடி முத லீடு சம்பந்தமாக மேலும் பல்வேறு
விதி களைத் தளர்த்திட முடிவெடுத்திருக் கிறார்கள். அந்நிய நிதி நிறுவனங்கள் இந்
தியாவிற்கு முதலீடு செய்வதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் அளித்திட அரசாங்கம்
வழிசெய்து தந் திருக்கிறது. இது தொடர்பாக நிதி அமைச் சர் ப.சிதம்பரம், பல்வேறு வங்கி
முதலீட் டாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர் களுடன் ரகசிய கூட்டம் நடத்தி இருக்
கிறார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் இவை
அனைத்தையும் செய்துவிட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக மூத்த
அதிகாரி ஒருவர் எகனாமிக் டைம்ஸ் நாளேட்டிற்குத் தெரிவித்திருக் கிறார்.இதில்
இரண்டு விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. முதலாவதாக, அரசாங்கம் மிக அதிக அளவில் அந்நிய
மூலதனத் தை நாட்டிற்குள் இறக்க மிகவும் ஆர்வத் துடன் இருக்கிறது. அதற்காக அவர்
களுக்கு மேலும் சலுகைகளை வாரி வழங்கவும் தயாராக இருக்கிறது.
வேறு
வார்த்தைகளில் சொல்வதானால், பொரு ளாதார மந்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களின்
வாழ்வைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, ஆட்சியாளர்கள் மூலதனத்தை - அந்நிய மற்றும்
உள்நாட்டு கார்ப்பரேட்டுகளைக் - காப்பாற்றிடவே துடியாய் துடிக்கிறது. அதற்காக
அவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கவும் தயாராயுள்ளது. அதன் மூலம் அவர்கள் மேலும்
கொள்ளை லாபம் ஈட்ட அதிக அளவில் வாய்ப்புகள் திறந்து விடப்பட இருக்கின்றன. இரண்டாவதாக, நாடாளுமன்றம்
கூடுவதற்கு முன்னாலேயே, மக்களைப் பாதிக்கும் இத்தகைய மோசமான முடிவு களை, அரசுத்தரப்பில் நிர்வாக முடிவு களாகவே
எடுத்திட அவர்கள் அவசரப் படுவதும், அதன் மூலம் நாடாளுமன்றத் திற்குப்
பதில்சொல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்று அவை கருதுவதும் நன்கு தெரிகிறது. நாட்டின்
நலன், நாட்டு மக்களின்
நலன், நம் பொருளாதாரத்தின்
அடிப்படைகளைப் பாதுகாத்திட வேண்டு மானால், இவ்வாறு அரசாங்கம் நாடாளு மன்றத்திற்கு - அதாவது
மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களுக்குப் பதில் சொல்லாமல்
தப்பித் துச் செல்ல அனுமதித்திட முடியாது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஊஹனு-உரசசநவே
யஉஉடிரவே னநகiஉவை) (பிரதானமாக
இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையே யுள்ள வித்தியாசம்) அச்சம் தரத் தக்க அள
விற்கு அதிகரித்திருப்பதுதான் அரசாங்கம் இந்த அளவிற்கு கிலி அடைந்திருப் பதற்கு
முக்கிய காரணமாகும். இதன் காரணமாக, இந்தியாவின் நடப்பு 260 பில்லியன் ரிசர்வ் இருப்பு, அடுத்த ஆறு மாத இறக்குமதிகளை சமாளிக்கப் போதுமானது. இதே
தொகை 2008இல் சுமார் 15 மாத அளவிற்கு
போதுமானதாக இருந்தது. நவீன தாராளமய சீர்திருத்தங் களை 1990களில் அப்போது
நிதியமைச்ச ராக இருந்த மன்மோகன் சிங் அறிமுகப் படுத்திய சமயத்தில் இருந்த மோசமான
நிலைமைகளையே இவை நமக்கு நினைவு படுத்துகின்றன.‘‘நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இந்த அளவிற்கு
மிக அதிகமான அளவில் அதிகரித்திருப்பதானது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நமக்கு மிகவும் சவா
லான ஒன்றாகவே இருக்கும்’’ என்று பிர தமர் 12ஆவது ஐந்தாண்டுத் திட்டத்திற் கான ஆவணத்தில் எழுதியுள்ள முன் னுரையில்
கூறியிருக்கிறார். ‘‘நீண்ட கால அளவில் மூலதனம் பாய்வதை உத்தர வாதப் படுத்துவதன் மூலமாக, (இதற்கு அந்நிய
நேரடி முதலீடு அவசியமானதாக இருக்கலாம்) இதனைச் சரி செய்திட வேண்டும்’’ என்று மேலும் அவர்
கூறி யிருக்கிறார்.
‘‘இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு, போதுமான அள விற்கு
வலிமையாக இருந்த போதிலும் கூட, அவற்றை ‘‘நிதிப் பற்றாக்குறை நீட்டிப்பதைச் சரிசெய்வதற்காக எடுத்துக்
கொள்ள முடியாது” என்றும் அவர் கூறி யிருக்கிறார். இவற்றிலிருந்து நமக்குத் தெளிவாகத் தெரிவது
என்ன? மக்கள் மீது
மேலும் சொல்லொண்ணா அளவிற்கு சுமைகள் ஏற்றப்படவிருக்கிறது என்பதேயாகும். ‘‘கசப்பானவைகளாக
இருந்தாலும் அவசியமான சில கொள்கை முடிவுகளை எடுத்துத்தான் ஆகவேண்டும்’’ என்று பிரதமர்
கூறியிருப்பதன் பொருள் இதுவே யாகும். ‘‘நம்முடைய ஜனநாயக அமைப் பிற்கு இது ஒரு
சவாலாகும். இத்தகைய நிலைமைகளின்போது கசப்பானவைகள் என்றாலும் அவசியமான கொள்கை
முடிவுகளை எடுத்து அமல்படுத்திட வேண்டியதும், அதற்குப் போதுமான அள விற்கு கருத்தொற்றுமையைப்
பெறுவது என்பதும் தீவிரமான போட்டி அரசியல் உள்ள ஒரு ஜனநாயக நாட்டில் நாம் மெய்ப்
பிக்க வேண்டியிருக்கிறது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் மற்றும் அறி வார்ந்த
தலைமை இதனைப் பற்றிக் கொள்ள முன்வரவேண்டும். இது ஒரு தேசிய அளவிலான சவால்.’’ என்று பிரதமர்
கூறுகிறார். இதற்காகத்தான் பிரதமர் பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி
முதலீட்டை அனுமதித்ததோடு மட்டுமல் லாமல், ராணுவ உற்பத்தித் துறையிலும் அந்நிய நேரடி
முதலீட்டைத் திறந்துவிட இருப்பதையும் குறிப்பாகக் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.
பொருளாதார விவ
காரங்களுக்கான துறைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின்
அடிப்படையில் ஜூலை 3ஆம் வாரத்தில் இதுதொடர்பாக முடிவுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக நிதி அமைச்சர்
கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பத்தாண்டு களில் எப்போதும் இல்லாத
அளவிற்கு,
2012-13ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி விகிதம் ஐந்து விழுக்காட்டிற்குக் கீழே தாழ்ந்துபோயுள்ள
நிலையில் என்ன செய்வது என்பது குறித்து நிதி அமைச்சர் பொருளாதார நிபுணர்களையும், சந்தைப்
பேர்வழிகளையும் சந்தித்து ஆலோசனை கள் நடத்தி இருக்கிறார். வேறு வார்த்தை களில்
சொல்வதானால்,
ஐ.மு.கூட்டணி2 அரசாங்கமானது
மூழ்கிக் கொண் டிருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தப் போகிறோம் என்ற பெயரில்
மேலும் அலை அலையாக நவீன தாராள மய சீர்திருத்தங்களைக் கட்டவிழ்த்து விடத் தயாராகிக்
கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. இதன் பாதிப்பு கள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்
பதை நாம் நன்கறிவோம். அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம்
ஈட்டுவதற்காக மேலும் புதிய வாய்ப்பு வாசல்களை அவர்களுக்குத் திறந்துவிடும் அதே
சமயத்தில், இத்த கைய
சீர்திருத்தங்கள் மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்படுத்தும் என்பதும், ஏற்கனவே மிகவும்
மோசமான முறை யில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்கள் மேலும் மிக மோசமான முறையில் வறு
மைக்குழிக்குள் தள்ளப்படுவார்கள் என் பதும் நிச்சயம். எனவேதான் இவர்களின் மோசமான
கொள்கைத் திசைவழி மாற்றியமைக்கப் பட வேண்டும் என்று கூறுகிறோம். இவர் களின்
கொள்கைக்கு மாற்று என்பது, நம் நாட்டிற்குத் தேவையான சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளைக்
கட்டி எழுப்பக்கூடிய விதத்தில் பொது முதலீடுகளில் மிக உயர்ந்த அளவிற்கு நாட்டின்
வள ஆதாரங்களைப் பயன் படுத்துவதிலேயே அடங்கி இருக்கிறது.
கடந்த
மூன்றாண்டுகளில் ஒவ்வோராண் டும் ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள் வீதம்
கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கி யிருப்பதற்குப் பதிலாக, (உண்மை யில்
இத்தொகை நம் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பட்ஜெட் பற்றாக் குறையை விட
அதிகமானதாகும்) இத்தகைய நியாயமான வரி வருவாய்கள் வசூலிக்கப்பட்டு, பொது முதலீடுகளில்
பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இத்தகையத் திசை வழியில் ஆட்சியாளர் கள்
சென்றிருப்பார்களேயானால், நிச்சயமாக கணிசமான அளவிற்குக் கூடுதல் வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கும், அதன் மூலம், நம் நாட் டின்
உள்நாட்டுத் தேவைகளும் விரிவாகி, ஓர் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச் சிக்கும் இட்டுச்
சென்றிருக்கும்.இத்தகைய மாற்றுக் கொள்கைக்கான திசைவழியைத்தான் இடதுசாரிக் கட்சி
களின் அரசியல் சிறப்பு மாநாடு மக்கள் மத்தியில் முன்வைத்திருக்கிறது. இடது சாரிக்
கட்சிகள், மக்களுக்குத் தேவை
யான இத்தகைய மாற்றுக் கொள்கை களை - நாட்டின் பொருளாதாரத்திற்கும், நாட்டு மக்களின்
வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் மிகவும் தேவை யான இத்தகைய மாற்றுக் கொள்கை
களைச் சுற்றி,
அணிதிரளுமாறு
காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஜனநாயக மற் றும் மதச்சார்பற்ற கட்சிகளைக் கேட்டுக் கொள்கிறது. அத்தகையதோர்
அரசியல் மாற்று என்பது மாற்றுக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் மட்டுமே
சாத்தியமாகும். இதல்லாமல் ஆளை மாற்றுவதன் மூலமோ அல்லது அரசாங் கத்தை மாற்றுவதன்
மூலமோ சாத்திய மல்ல. எனவே, இப்போதைய தேவை என்னவெனில், வரவிருக்கும் 2014 பொதுத்தேர்தலில் இத்தகைய மாற்றுக் கொள்கைகள்
அடிப்படையில் ஓர் அரசி யல் மாற்றை உருவாக்குவதற்குப் போது மான நிர்ப்பந்தத்தை
அளிக்கக்கூடிய விதத்தில், மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திடுவோம்.
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment