Sunday, October 14, 2012

சாவேஸ் வெற்றி



ஹியூகோ சாவேஸ் வெனிசுலாக் குடியரசின் அதிபராக நான்காவது முறை யாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இத் தேர் தலில், சாவேஸ் 55.11 விழுக்காடு வாக் குகளைப் பெற்று, அவரை எதிர்த்து நின்ற ஹென்ரிக் கேப்ரிலஸ் பெற்ற வாக்கு களைக் காட்டிலும் 11 விழுக்காடு அதிகம் பெற்று, வாகை சூடியுள்ளார். தேர்தலில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இது இதுவரை மக்கள் வாக்களித்த அளவை விட அதிக மாகும். சாவேஸ் முதன்முறையாக 1998 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், மூன் றாவது முறையாக அவர் வெற்றி பெற்றிருக் கிறார். இதன் பதவிக்காலம் 2019 வரை ஆறு ஆண்டு காலத்திற்கு நீடிக்கும். தற்போது நடந்த தேர்தலானது குறிப்பாக வெனிசுலா வின் எதிர்காலத்திற்கும், ஒட்டுமொத்த மாக லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர் காலத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன் றாகும். 1999இல் அதிபர் சாவேஸ் தன் னுடைய புரட்சிகரமான திட்டங்களை அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்தே, அவருக்கு எதிரான போராட்டங்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டன
. இவருக்கு எதிராக பழைய ஆளும் வர்க்கங்களும், முதலாளித்துவ மேட்டுக்குடியினரும் ஒரு பக்கமும், சாவேஸ் மற்றும் இடதுசாரி-சோசலிஸ்ட் சக்திகள் மறுபக்கமுமாக இப்போராட்டம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. வெனிசுலா ஓர் எண்ணெய் வளம் நிறைந்த நாடாகும். உலகின் எண்ணெய் இருப்பில் மிக அதிக அளவில் உள்ள நாடாகும். சவுதி அரேபியா இரண்டாவது நாடுதான். நாட்டில் உள்ள எண்ணெய் இருப்பின் மீது அரசின் கட்டுப்பாட்டை சாவேஸ் நிறுவியிருப்பதுடன், நாட்டின் செல்வத்தை மறுவிநியோகம் செய்திட நடவடிக்கைகள் மேற்கொண்டார். எண் ணெய் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அவர், எழுத்தறிவு, கல்வி, சுகா தாரம், வீட்டு வசதி போன்ற சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டார். இது நாட்டின் வறுமை நிலையைக் கணிச மான அளவிற்குக் குறைத்தது.19ஆம் நூற்றாண்டில் சைமன் பொலி வார் என்பவரால் தொடங்கப்பெற்ற பொலி வாரியன் புரட்சியின் இறுதி இலக்கு சோச லிசமே என்று 2006இல் சாவேஸ் பிர கடனம் செய்தார். வெனிசுலா முதலாளித் துவ அமைப்புமுறையைக் கொண்டிருந் தது. சாவேஸ் ஆட்சிக்கு வந்தபின் நாட்டி லிருந்த கேந்திரமான தொழில்கள் மற்றும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களைத் தேசியமயமாக்கினார். அந்நிய நிறுவனங்க ளால் வசப்படுத்தப்பட்டிருந்த பெரிய அள விலான எஸ்டேட் நிலங்கள் அவர்களிட மிருந்து பறிமுதல் செய்யப்பட்டன; நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. ‘‘கிராம கவுன்சில்கள்’’ என்று அழைக் கப்படும் உள்ளூர் சுயாட்சி அமைப்புகள் மூலமாக அனைத்து மக்களின் ஜனநாயக அரசியல் பங்கேற்பு நிறுவப்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேற்கொள்வதில் வெனிசுலா முன்னணிப் பாத்திரம் வகித் தது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி இயக்கம் முன்னேற வெனிசுலா ஓர் உந்துசக்தியாக இயங்கியது. பொலி வியாவும், ஈக்வடாரும் இதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்தன.
கியூபா, வெனி சுலா ஆகிய நாடுகளுக்கிடையே மிகவும் நெருக்கமான முறையில் ஏற்பட்ட சகோ தரத்துவ உறவுகளும் ஒத்துழைப்பும் இத் தகைய முற்போக்கான மாற்றங்களுக்கு முக்கிய அடித்தளங்களாக விளங்கின. இவை அனைத்தும், அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கும், உள்நாட்டிலிருந்த மேட் டுக் குடியினருக்கும் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தின. சாவேஸ் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்திட எண்ணற்ற முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆயினும், சாவேஸ் மேற்கொண்ட புரட்சிகரமான நடவடிக் கைகளின் உன்னதமான அம்சங்கள் ஜன நாயக அமைப்பை மேலும் விசால மானதாகவும் ஆழமானதாகவும் மாற்றின. 2002இல் ராணுவ சதி முறியடிக்கப்பட் டதைப்போலவே இப்போது ஏகாதிபத்திய சக்திகளின் பிற்போக்குத்தனமான அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் திரளின் ஜனநாயக உறுதியின் கீழ் நொறுங் கித் தரைமட்டமாகின.2012 அக்டோபர் தேர்தல் மிகுந்த முக் கியத்துவம் வாய்ந்தது. சாவேஸுக்கு எதி ராக வலதுசாரி எதிர்க்கட்சிகள் அனைத் தும் ஒன்றுசேர்ந்து ஜனநாயக ஒற்றுமை யின் வட்டமேசை (ஆருனு-சுடிரனேவயடெந டிக னுநஅடிஉசயவiஉ ருnவைல) என்ற அமைப்பை உரு வாக்கி, கேப்ரிலஸ் என்ற ஒரேயொருவரை மட்டும் எதிர்த்து நிற்க வைத்தனர். வலது சாரி பிற்போக்குவாதிகளின் ஏகப் பிரதி நிதியாக கேப்ரிலஸ் இருந்தபோதிலும், மக் கள் மத்தியில் தன்னை ஒரு மிதவாதி யாகக் காட்டிக்கொள்ளவே முயற்சித்தார். ஆயினும், அவர் வெற்றிபெறுவார் என்று சொன்னால், அதன் பொருள், தற்சமயம் சாவேஸ் தலைமையில் பொலிவாரியன் புரட்சிகர நடவடிக்கைகள் மூலமாகப் பெற்ற ஆதாயங்கள் அனைத்தும் மீண்டும் தங்கள் கையைவிட்டுப் போய்விடும் என் பதை மக்கள் உணர்ந்தார்கள். வெனிசுலா வின் எண்ணெய் வளம் மீண்டும் பன் னாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கும், மேற்கத்திய வல்லரசுகளின் நலன்களுக் கும் சேவை செய்வதற்குத் திருப்பிவிடப் படும் என்பதில் எவ்விதச் சந்தேகமு மில்லை.
எனவே, எதிர்க்கட்சிகள் அனைத்துவிதமான முறையிலும் தங்கள் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. சாவே ஸுக்கு எதிராகவும் அவர் வெற்றிபெற வாய்ப்புகள் இல்லை என்பது போலவும் துஷ்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டன. ஆயினும் அவர்களின் பொய்ப்பிரச் சாரங்களைத் தவிடுபொடியாக்கிவிட்டு, சாவேஸும் இடதுசாரிகளும் வெற்றி வாகை சூடியுள்ளனர். வெனிசுலா மக் களின் தீர்ப்பு, சாவேஸ் மேற்கொண்ட பொலிவாரியன் புரட்சிகர நடவடிக் கைகள் தொடர வேண்டும் என்பதே யாகும். தேர்தல் தொடர்பாகக் கட்ட விழ்த்துவிடப்பட்ட அனைத்துப் பொய்ப் பிரச்சாரங்களும் சாவேஸால் மிகவும் இலாவகமாய்க் கையாளப்பட்டு முறியடிக் கப்பட்டன. உண்மையில், தேர்தல் நடை முறை மிகவும் விரிவான அளவில் பாராட் டப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக் கிறது. தென் அமெரிக்க நாடுகளின் ஒன் றியத்தின் தேர்தல் குழுவின் தலைவர் தேர்தல்கள் நடைபெற்ற விதத்தைக் கூர்ந்து கவனித்து ஆராய்ந்தபின் கூறி யிருப்பதாவது: ‘‘வெனிசுலா ஜனநாயக நடைமுறை என்றால் என்ன என்பதை மிகவும் போற்றத்தக்கவிதத்தில் வெளிப் படுத்தி இருக்கிறது. உலகிற்கு ஒரு சரி யான படிப்பினையைக் கற்றுத் தந்திருக் கிறது. இது மிகவும் முக்கியமானதாகும்.’’அதிபர் சாவேஸ்,வெனிசுலா நாட்டை ஒரு முற்போக்கான சமுதாயமாக மாற்றும் பணியில் முன்னிலும் வேகமாக இப்போது முன்னேறிச் செல்ல முடியும். அதிகரித்து வரும் குற்றங்கள், பணவீக்கம், போதை மருந்து கடத்தல் போன்று மிக ஆழமான பிரச்சனைகள் பலவற்றை அவர் சமா ளித்து முறியடிக்க வேண்டியிருக்கிறது. நவீன தாராளமயம் மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிராக தென் அமெரிக்க நாடுகள் தங்களுக்குள் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்படுவதற்கு சாவேஸ் மேற்கொண்ட முயற்சிகள் இவ் வெற்றியின் மூலம் மேலும் உறுதிப்படும்.
வெனிசுலாவின் வெற்றி ஏகாதிபத்திய நாடுகளின் உலக அளவிலான எண் ணெய் அரசியலுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கும் உதவிடும்.மிகவும் பிரகாசமான வெற்றியை அளித்திருக்கும் வெனிசுலா மக்களே, உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்.
தமிழில்: ச.வீரமணி


No comments: