Sunday, April 29, 2012
பி.சுந்தரய்யா பிறந்தநாள் நூற்றாண்டு - நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவர்: -பிரகாஷ் காரத்
Monday, April 23, 2012
கார்ப்பரேட் ஊடகங்களின் கட்டுக்கதைகள் - a commentator
Thursday, April 19, 2012
சவால்களைச் சந்தித்திட சபதம்
Friday, April 13, 2012
Monday, April 9, 2012
Sunday, April 8, 2012
நவீன தாராளமயம்: வறுமையின் தத்துவம்
‘‘ஏகாதிபத்திய உலகமயத்தை உயர்த்திப் பிடிக்கக்கூடிய நவீன தாராளமயப் பொருளா தாரச் சீர்திருத்தக் கொள்கைகள், சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலமாக கொள்ளை லாபத்தினைக் கோரிடும், தேசிய அளவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி - பெரும்பான் மையான உழைக்கும் மக்களுக்கு - சொல் லொண்ணாத் துன்பத்தினைக் கொண்டு வரும்,’’ என்று நாம் அடிக்கடி சொல்லி வந்த வற்றைத் தற்போது மக்கள் நாள்தோறும் எதிர்கொள்ளும் தங்கள் உண் மையான அனுபவத்திலிருந்து உணரத் தலைப்பட்டு விட்டார்கள். வறுமையின் கொடூரமான தன்மைகள் மேலும் மேலும் அதிகரித் திருப்பது இவற்றின் நேரடி விளைவு களாகும்.
நாட்டில் வறுமையின் நிலை குறித்துத் தற்போது நடைபெற்று வரும் விவாதம், இந்தி யாவில் தற்போதைய பொருளாதாரச் சீர்திருத் தங்களே இத்தகையதொரு ‘வறுமையின் தத்துவத்திற்கு’ வழிகாட்டியாக அமைந்திருக் கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்தி இருக்கிறது.
நம் நாட்டின் வளங்கள் சூறையாடப்படு வது பல வழிகளில் நடைபெற்றாலும், இரு முக்கிய வழிகளில் அவை மிக மோசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நம் நாட்டு மக்களின் மத்தியில் பொருளாதார சமத்துவ மின்மையை மேலும் மேலும் விரிவாக்குவது தொடர்கிறது. ‘‘அவதிப்படும் இந்தியர்’’களின் மீது மேற்கொள்ளப்படும் கொடூரமான சுரண் டல் மூலமாக ‘‘ஒளிரும் இந்தியர்கள்’’ பிர காசிப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இரண்டாவதாக, இவ்வாறு அடிக்கப்படும் கொள்ளை தொடர்ந்து வெளியாகிக் கொண் டிருக்கும் மெகா லஞ்ச ஊழல்களின் மூலம் நாட்டின் வளங்கள் எவ்வாறெல்லாம் தனியா ரால் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன என்பதும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டி ருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இவ்வாறு கொள்ளையடிப்பதை நியாயப் படுத்த வேண்டும் என்றால், அதற்கு ஜன நாயக முலாம் பூசியாக வேண்டும். இதற்காகத் தான் நாட்டில் வறுமை குறைந்துவிட்டதாக கதை கட்டிவிட முன்வந்திருக்கிறார்கள். இதற்காகத்தான் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற புள்ளிவிவர மோசடிகளில் ஆட்சியாளர்கள் இறங்கியிருக் கிறார்கள்.
அதன் ஒரு பகுதியாகத்தான், 2012 மார்ச் 19 அன்று மீண்டும் ஒருமுறை இத்தகைய முயற்சி நடந்திருக்கிறது. திட்டக் கமிஷன் அன்றையதினம் வெளியிட்டுள்ள வறுமை மதிப்பீடுகள் தொடர்பான அறிக்கையில், 2004-05க்கும் 2009-10க்கும் இடையேயான காலத்தில் நாட்டில் வறுமை 7.3 விழுக்காடு அளவிற்கு ஒட்டுமொத்தமாக குறைந்துவிட்ட தாம். 2009-10இல் நாள்தோறும் ஒவ்வொரு நபருக்கும் ஆகும் நுகர்வுச் செலவு நகர்ப் புறங் களில் 28 ரூபாயாகவும், கிராமப் பகுதி களில் 22 ரூபாயாகவும் இருப்பதை அடிப்படையாக வைத்து திட்டக் கமிஷன் இந்த முடிவுக்கு வந்திருக்கிறதாம்.
இத்தகைய இராட்சசத்தனமான மோசடி வேலைகளில் சிறிது காலமாகவே ஆட்சியா ளர்கள் இறங்கியிருக்கிறார்கள். 2011 மே மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றில் ஆஜரான திட்டக் கமிஷன், நகர்ப்புறங்களில் 20 ரூபாயும், கிராமப்புறங் களில் 15 ரூபாயும் நாள்தோறும் செலவிடும் நபர் வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்ப வராகக் கருதிடப் போதுமானது என்று குறிப் பிட்டிருந்தது. திட்டக்கமிஷனின் கணக்கின் படி, நகர்ப்புறங்களில் மாத வருமானம் 578 ரூபாய் பெறுபவர் ஏழையாகக் கருதப்பட மாட் டார். இதில் வேடிக்கை என்னவெனில் இந்த 578 ரூபாயில் அவர் வாடகை மற்றும் பயணச் செலவுக்காக செலவிடும் 31 ரூபாய், கல்விக் காகச் செலவிடும் 18 ரூபாய், மருந்துகளுக் காகச் செலவிடும் 25 ரூபாய் மற்றும் காய் கறிகளுக்காகச் செலவிடும் 36.5 ரூபாயும் அடக்கம். பகுத்தறிவு உள்ள எவனாவது இப் படிக் கூறுவானா? ஆனால் நம் திட்டக் கமி ஷன் இவ்வாறுதான் கூறுகிறது.
இதுதொடர்பாக மக்கள் மத்தியிலிருந்து கடும் விமர்சனம் வந்தபின்னர், தன் பைத் தியக்காரத்தனமான கூற்றை அரசாங்கம் சற்றே திருத்திக் கொண்டது. திட்டக் கமி ஷனின் துணைத் தலைவரும், ஊரக வளர்ச் சித்துறை அமைச்சரும் கலந்து பேசி 2011 செப்டம்பரின் பிற்பகுதியில் ஒரு சரியான மதிப்பீட்டிற்கு வந்திருக்கிறார்களாம். அதன் படி, கிராமப்புற இந்தியாவில் நாளொன்றுக்கு 26 ரூபாயும், நகர்ப்புற இந்தியாவில் 32 ரூபாயும் சம்பாதிப்பவர் நம் நாட்டில் ஏழை கிடையா தாம். வறுமை மதிப்பீடுகள் இனி வருங்காலங் களில் புதியக் கோட்பாட்டின் (நேற அநவாடினடிடடிபல) அடிப்படையில் அமைந்திடும் என்று அர சாங்கம் அறிவித்திருக்கிறது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமைத் துயர்தணிப்பு அமைச்ச கங்களுடன் இணைந்து, வறுமைக் கோட்டுக் குக் கீழ் உள்ள மக்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளுமாம்.
வெளிவந்திருக்கிற தகவல்களின்படி, மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ள இந்தப் புதியக் கோட்பாடு என்ன கூறுகிறது தெரியுமா? சம்பாதிக்கும் உறுப்பினர்கள் ஐந்து பேர் உள்ள ஒரு குடும் பத்தின் ஆண்டு வருமானம் 27 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம் என்றால், அவர்கள் தானாகவே வறுமைக்கோட்டுக்குக் கீழான பட்டியலிலிருந்து விலக்கப்பட்டு விடுவார் கள். அதாவது, ஒவ்வொரு குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 447 ரூபாய் எனில், அதுவே அவர்களை ஏழைகளாகக் கருதாமல் இருப்ப தற்குப் போதுமானது என்ற அடிப்படையில் இந்தக் கணக்கீடு செய்யப் பட்டிருக்கிறது. திட்டக் கமிஷனின் வரையறையை இது எதி ரொலிப்பது மட்டுமல்ல, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அதைவிட மோசமான தாகும்.
மிகவும் நகைக்கத்தக்க இத்தகைய குறைந்தபட்ச சம்பாதிக்கும் அளவினை இப் போது திட்டக் கமிஷன் மேலும் குறைத்திருக் கிறது. இத்தகைய கபடத்தனமான முயற்சி கேலித்தனமானது மட்டுமல்ல, கயமைத்தன மானதுமாகும். ஒருவர் உயிர்வாழ வேண்டு மானால் நாள்தோறும் அவர் குறைந்தபட்சம் 2400 கலோரிகள் உட்கொள்ள வேண்டும் என்று இதே திட்டக் கமிஷன்தான் வரை யறை செய்திருக்கிறது. 2010இல், இதற்குக் குறைந்தது 44 ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டது. இன்றைய தினம், நிச் சயம் இதைவிடக் கூடுதலாகத்தான் இருக் கும். சரியாகச் சொல்வதென்றால் அரசாங் கத்தால் கணக்கிட்டிருப்பதைப்போல இரு மடங்கு இருந்திடும்.
திட்டக் கமிஷன், அதற்கேயுரிய பகுத்தாய் வின் (?) அடிப்படையில், 2004-05இல் 37.2 விழுக்காடாக இருந்த வறுமை விகிதாச்சாரம், 2009-10இல் 29.8 விழுக்காடாக வீழ்ச்சி யடைந்திருக்கிறது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் (சூயவiடியேட ஹனஎளைடிசல ஊடிரnஉடை) 46 விழுக்காடு விகிதாச்சாரம் என்று பரிந்துரைத் திருக்கிறது.
மறைந்த அர்ஜூன் சென்குப்தா, நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 77 விழுக் காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என்று மதிப்பிட்டிருப்பதோடு, மேற்கண்ட மதிப் பீடுகளை ஒப்பிடுகையில், இவை இரண் டுமே மிகவும் மோசமானவைகள் என்பது புலப்படும். அர்ஜூன் சென் குப்தா மதிப்பீ டானது சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் எடுக் கப்பட்டதாகும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கக்கூடிய இன்றைய சூழலில் நிலைமை, நிச்சயமாக, மேலும் மோசமாகத் தான் இருக்கும்.
நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கைத்தரமும் மிக மோசமாகிக் கொண் டிருப்பதுதான் மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயமாகும். ‘‘பட்டினி கிடப்போரின் குடியரசு’’ என்னும் உத்சா பட்நாயக்கின் கட்டுரை, நம் மக்களின் துரதிர்ஷ்டவசமான எதார்த்த நிலையை விவரிக்கிறது. 2012 மார்ச் 25, ‘தி இந்து’, நாளேட்டில் பி.சாய்நாத் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில், 1972க்கும் 1991க்கும் இடைப் பட்ட ஆண்டுகளில், சராசரியாக ஒருவர் உட் கொள்ளும் தானியங்கள் மற்றும் பயிர்களின் அளவு நாளொன்றுக்கு 434 கிராமிலிருந்து 480 கிராம்களாக உயர்ந்திருக்கிறது என்றும், ஆனால் 1992க்கும் 2010க்கும் இடையே இது 440 கிராமாக வீழ்ந்துவிட்டது என்றும் குறிப் பிட்டிருந்தார். இதற்குக் காரணம் மக்கள் தொகைப் பெருக்கம் என்று சிலரால் கூறப் படுகிறது. ஆனால், 1981க்கும் 1991க்கும் இடையே மக்கள் தொகை வளர்ச்சி 2.16 விழுக்காடு வீதத்தில் இருந்த அதே சமயத் தில், உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி 3.13 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது என்ப தோடு ஒப்பிடும்போது இந்த வாதம் தகர்க்கப் பட்டு விடுகிறது. ஆயினும், நாட்டில் பொருளா தாரச் சீர்திருத்தங்கள் கடைப்பிடிக்கப்படத் தொடங்கிய பின்னர், உணவு தானிய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. 1991க்கும் 2001க்கும் இடையே, மக்கள் தொகை வளர்ச்சி 1.95 ஆக இருந்த அதே சமயத்தில், உணவு தானிய உற் பத்தி 1.1 விழுக்காடாகும். 2001க்கும் 2011க்கும் இடையே மக்கள்தொகை வளர்ச்சி 1.65ஆக இருந்த அதே சமயத்தில், உணவு தானிய உற்பத்தி 1.03 விழுக்காடு மட்டுமே.
எனவே, நாட்டில் வறுமை அதிகரித் திருக்கிறது என்பது மட்டுமல்ல, அது மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறது. இத்தகைய மோசமான நிலைமை யிலிருந்து மீள ஒரே வழி, சாமானிய மக் களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் சிறந்ததோர் வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுக்கக்கூடிய விதத்தில் தேவையான மானியங்களையும் அவர்களுக்கு அளிப்ப தாகும். ஆனால், ஆட்சியாளர்கள், வீங்கிக் கொண்டிருக்கிற நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்யப் போகிறோம் என்று சொல்லி, சாமா னியர்களுக்கு அளித்து வந்த மானியங்களை வெட்டிக் குறைத்திட முடிவு செய்திருக்கி றார்கள். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் துள்ள பட்ஜெட் ஆவணங்களின்படி நிதிப் பற்றாக்குறை (களைஉயட னநகiஉவை), 5.9 விழுக்காடு அல்லது சுமார் 5.22 லட்சம் கோடி ரூபாய்களாகும். இதே ஆண்டில், ஆட்சி யாளர்கள் கார்ப்பரேட்டுகளுக்கும், பணக்காரர் களுக்கும் அளித்திட்ட வரிச் சலுகைகள் சுமார் 5.28 லட்சம் கோடி ரூபாய்களாகும். சென்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நியாய மான இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருந் தாலேயே ஆட்சியாளர்களால் கூறப்படும் இந்த நிதிப் பற்றாக்குறை வந்திருக்காது. மாறாக, உபரியாக பணம் கிடைத்திருக்கும்.
நவீன தாராளமயத்தின் தத்துவம் - அதா வது வறுமையின் தத்துவம் - என்பது பணக் காரர்களுக்கு அளித்திடும் சலுகைகளைக் கைவிடுவதன் மூலம் பற்றாக்குறையின் சுமைகளைக் குறைத்திட வேண்டும் என்று கூறவில்லை. பணக்காரர்களுக்கு அளிக்கப் படுவது அவர்களது அகராதியின்படி அவர் களின் வளர்ச்சிக்கான ‘‘ஊக்கத் தொகை’’ களாகும். இத்தகைய பற்றாக்குறை ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் மானியங் களைக் கைவிடுவதன் மூலமே சரி செய் யப்பட வேண்டும் என்பதே இவர்கள் குறிக் கோள். ஏழைகளுக்கு அளிக்கப்படும் மானியங்கள் தான் இவர்களது அகராதியின்படி பொருளா தாரத்தின் மீதான ‘‘சுமைகளாகும்’’.
எனவேதான், இந்த பட்ஜெட்டில், எரி பொருள் மானியம் மேலும் 25 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது, உர மானியம் 6 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக் கிறது. இதேபோன்று மேலும் பல மானியங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மை யான மானியங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களைச் சென்றடைய வேண் டும் என்ற இலக்கோடு நிர்ணயிக்கப்பட்ட தால், இவ்வாறு மானியங்களைக் குறைப்பதை யும் அமல்படுத்த வேண்டுமென்றால் வறு மைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண் ணிக்கையையும் அவர்கள் குறைத்தாக வேண்டும். அதற்காகத்தான் திட்டக் கமிஷன் மக்களை ஏமாற்றக்கூடிய விதத்தில் இத் தகைய மோசடியான சதி வேலைகளில் இறங்கி இருக்கிறது.
புருதோன் எழுதிய ‘வறுமையின் தத்து வம்’ என்ற நூலைக் கடுமையாக விமர்சனம் செய்து, காரல் மார்க்ஸ் எழுதிய ‘‘தத்துவத் தின் வறுமை’’ என்னும் நூலில்தான், அவர் ‘‘இன்றைய உலக நிலைமை குறித்துப் பல் வேறு விதங்களில் வியாக்கியானம் செய்தால் மட்டும் போதாது, அதனை எப்படி மாற்றப் போகிறோம் என்பதேயாகும்’’ என்று எழுதி, ‘‘வர்க்கப் பகைமைகள் நிறைந்த ஒவ்வொரு சமூகத்திலும் ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான நிபந்தனையாகும். எனவே, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு விடுதலை காண்பதென்பது அத்தியாவசியமான முறையில் புதியதோர் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே சாத் தியம்.’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சுரண்டப்படும் வர்க்கங்கள் அனைத்தும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரள்வது என்பதே அதன் அரசியல் வலுவாகும். மனிதனை மனிதன் சுரண்டாத தொரு சமூகத்தை உருவாக்கிட இது மிகவும் அவசியமான நிபந்தனையாகும்.
துல்லியமான இந்திய நிலைமைகளின் கீழ் இவ்வாறு நாம் நம் ஸ்தாபனத்தை வலுப் படுத்தும் பிரச்சனையையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந் திய மாநாட்டின் கவனத்திற்குக் கொண்டு வந் திருக்கிறோம். கட்சி, இந்தியாவில் சோசலிச சமுதாயத்தை அமைப்பதற்கான ஒரு முன் னோடியாக, மக்கள் ஜனநாயகப் புரட்சி என்னும் குறிக்கோளை வெற்றிகரமாக எய் திட, சரியான உத்திகளை வகுப்பதே மாநாட்டு நிகழ்ச்சி நிரலின் கருவாக அமைந்திருக் கிறது. இந்தக் குறிக்கோளை எய்திட நம் ஸ்தாபனத்தை வலுப்படுத்தி, நாம் இவ்வாறு எதிர்கொண்டுள்ள சவால்களை முறியடித்து முன்னேறிடுவோம்.
நாட்டின் நலன்களையும் நாட்டு மக் களின் நலன்களையும் பாதுகாத்திடுவதற் கான வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்குத் தேவையான ஸ்தாபன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, சரியான உத்திகளை வகுப்பதற்கான பொறுப்பை, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு, நமக்குப் பணித்திருக்கிறது.
தமிழில்: ச.வீரமணி
Sunday, April 1, 2012
அற்பத்தனமான நடவடிக்கைகள் - ‘தி டெலிகிராப்’ தலையங்கம்:
அதிகாரம் என்பது வெறித்தனமான போதையை அளிக்கக்கூடிய ஒன்று. வெற்றிக் களிப்பில் மிதக்கும்போது அரசியல் தலைவர்கள் அடிக்கடி அவசியமற்ற நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். மேற்குவங்க முதல மைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் அபரிமிதமான செல்வாக்கை செலுத்துகிறார். இது அவரை மிகவும் பணிவுள்ளவராகவும், ஜனநாயக நடைமுறைகளுக்கு மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்பவராகவும் ஆக்கி இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதிகார போதையும், மக்கள் ஆதரவும் ஜனநாயகத்தின் இதயமாக விளங்கும். வாதம் மற்றும் கருத்து வேறுபாடுகளை அவமதிக்கும் போக்கை அவரிடம் ஏற்படுத்தி இருக் கிறது. அரசின் நூலகங்களும் அரசு ஆதரவுடன் இயங்கும் நூலகங்களும் அரசால் அங்கீகரிக்கப்படும் செய்தித் தாள்களை மட்டுமே வாங்க வேண் டும் என்று தாக்கீது அனுப்பியிருப் பதற்கு என்ன காரணம் என்பதை எவராலும் விளக்க முடியவில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் 13 செய்தித்தாள்கள் (இவற்றில் பெரும்பாலானவை மிகவும் சிறிய மற்றும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட முடியாத செய்தித்தாள்களாகும்) மட்டுமே காணப்படுகின்றன. ஆனந்த பசார் பத்திரிகா, டெலிகிராப் உட்பட மேற்கு வங்கத்தில் அதிகமாக விற்ப னையாகும் நாளிதழ்கள் அந்தப் பட்டியலில் இல்லை. சிறிய செய்தித்தாள்களைப் பாதுகாத்திடவும் மேம்படுத்திடவும் அரசாங்கம் விழைகிறது என்கிற அரசு அதிகாரிகளின் வாதம் மேற் படி பட்டியலில் அதிக விற்பனை யாகும் செய்தித்தாள்களும் இடம் பெற்றிருப்பதிலிருந்து அடிபட்டுப் போகிறது. அந்தப் பட்டியலைப் பரிசீ லிக்கும்போது, முதலமைச்சரின் கொள்கைகளை விமர்சிக்கும் செய்தித்தாள்கள் மட்டும் ஒதுக்கப் பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டிருப் பதை அறியமுடிகிறது. இது மிகவும் ஆழமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறும் கூற்றுக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய வைகளாகும். சுயசிந்தனையை ஊக்குவிக்கும் வகையிலேயே முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்று ஓர் அதிகாரி கூறினார். அடுத்து அவர், சில அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்திடும் செய்தித்தாள்களை ஆதரிக்கத் தேவையில்லை என்று அரசாங்கம் கருதுவதாக அவர் சொன்னார். முதலமைச்சர் மேலும் ஒருபடி சென்று, எதிர்காலத்தில் எந்த செய்தித்தாளை வாங்கிப் படிக்க வேண்டும் என்று கூட சொல்ல இருப்பதாகக் கூறியிருக்கி றார். இத்தகைய அறிக்கைகள் குறித்து அஞ்சவேண்டியதில்லை, மாறாக சிரித்து ஒதுக்கப்பட வேண்டியவையாக கருதப்பட வேண்டியவைகளே. அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் வாசகர்கள் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயத்தையே கட்டுப்படுத்திட ஓர் ஆழமான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. முதலமைச் சரின் கடுங்கோபத்திற்கு ஆளானவர்களுக்கு கடுந்துன்பம் வந்து சேரும் என்று அரசாங்கம் செய்தித்தாள்களை எச்சரித்துள்ளது.
ஆனால் மேற்கு வங்கத்திலிருந்து வெளிவரும் இவ்வாறான சுதந்திர மான பத்திரிகைகள் அளித்திட்ட விளம்பரங்கள் மூலமாகத்தான் மம்தா பானர்ஜி இந்த அளவிற்குப் புகழடைந்தார் என்பதை அவர் மிகவும் சவுகரியமாக மறந்துவிட்டார். ஜனநாயகத்தில், பத்திரிகைகள் என்பவை எந்த அளவிற்கு ஒருவருக்கு/ஒரு விஷயத்திற்கு எதிராக இருக்கிறதோ அதே அளவிற்கு ஒருவருக்கு/ஒரு விஷயத் திற்கு ஆதரவாகவும் இருந்திடும்.
அரசாங்கத்திடமிருந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் வருமோ என்ற அச்சத்திற்கு இடம் தராது கருத்துக் களை வெளியிடும் உரிமை ஜனநாய கத்தின் மிக முக்கிய அங்கமாகும். செல்வி மம்தா பானர்ஜி ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் என்ற முறையில் விமர்சனத்தினை எதிர்கொள்ள மறுக்கும் தொட்டாற்சிணுங்கியாக இருக்கக் கூடாது. ஊடகங்கள் சொல்லும் கடும் விமர்சனங்களை யெல்லாம் பற்றி அவர் கவலைப்படாது மேற்கு வங்கத்தின் நன்மைக்காக அவர் தம் பணியைத் தொடர்ந்திட வேண்டும். ஊடகங்களின் பணி என்பது அவை தங்களுடைய சொந்தக் கருத்துக்களை முன்வைப்பது. முதலமைச்சரின் பணி என்பது நிர்வாகம் செய்வது. எவ்வித மன சஞ்சலத்திற்கும் ஆளா காமல் முறையாக நிர்வாகம் செய்திட கற்றுக்கொள்ள வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)
Subscribe to:
Posts (Atom)