Saturday, June 21, 2008

இந்திய - ஈரான் குழாய்வழி எரிவாயுத் திட்டம் உறுதிப்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திடுக

ந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வளர்த்திட அத்தியாவசியத் தேவை என்று அதற்கு ஆதரவாகக் குரல் எழுப் புபவர்கள் உரக்கக் கூப்பாடு போடு கிறார்கள். இது தொடர்பாக இது நாட் டிற்கு எந்த அளவிற்கு கேடு பயக்கும் என்று நாம் பல்வேறு வாதங்களை எடுத்து வைத்த போதிலும், அதைப்பற்றி அவர் கள் கவலைப்படுவதில்லை. நம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து உண்மை யிலேயே அவர்கள் அக்கறை கொள்பவர் களாக இருந்தால், இந்தியா - ஈரான் குழாய் வழி எரிவாயுத் திட்டம் குறித்து ஏன் அவர்கள் வாயே திறப்பதில்லை? இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப் பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கும் அதே சமயத்தில், நம் நாட்டின் எரிசக்தித் தேவைகளை மேம்படுத்திட, சிக்கனமா னதும் அதே சமயத்தில் மிக முக்கியமா னதுமான இந்திய - ஈரான் குழாய்வழி எரிவாயுத் திட்டத்தைக் கெட்டிப்படுத்தி, நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அரசு தயக்கம் காட்டு வதை எவரும் கவனிக்காமல் இருந்து விட முடியாது. 123 ஒப்பந்தம் அமெரிக் காவின் ஹைடு சட்டத்துடன் மிகவும் ஆழமான முறையில் இணைக்கப்பட்டி ருக்கிறது. மேற்படி ஹைடு சட்டம்தான் இந்தியாவை. ஈரானுக்கு எதிராக நிலை பாடு மேற்கொள்ள நிர்ப்பந்திக்கிறது. அதுமட்டுமல்ல.
மேற்படி ஹைடு சட்ட மானது, இந்தியா, அமெரிக்காவின் கொள்கைகளுக்கு ‘‘முழுவதும் ஒத்துப் போகக்கூடிய விதத்தில்’’ தன்னுடைய அயல்துறைக் கொள்கையை அமைத் துக்கொள்ள வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறது. இந்தச் சூழ்நிலைகளில், ஐமுகூ அரசாங்கம், அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து போகாது என்பதும், தைரியமாக அதனை எதிர்த்து நிற்கிறது என்பதும் உண்மையானால், வரும் ஜூலை 29 - 30 தேதிகளில் அயல்துறை அமைச்சர், இந்தியா - ஈரான் கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்ப தற்காக டெஹ்ரானுக்கு மேற்கொள்ள விருக்கும் பயணத்தை மேற்படி இந்திய-ஈரான் குழாய் வழி எரிவாயுத் திட்டத்தை வலியுறுத்தி அதனை நிறைவேற்றுவ தற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத் திடப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஈரான் அதிபர் சென்ற ஏப்ரலில் இந்தியா வந்திருந்தபோது, குழாய் வழித் திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கு 45 நாட்கள் காலக்கெடு நிர்ணயித்திருந் தார். இந்த 7.4 பில்லியன் டாலர் மதிப்பி லான குழாய்வழி எரிவாயு திட்டம் சம்பந் தமாக பாகிஸ்தானும் ஈரானும் தங்களுக் குள்ளிருந்த கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக்கொண்டுவிட்டன. இந் தியாவிற்கு ஈரான் அளித்த காலக்கெடு முடிவடைந்துவிட்டது. இந்தக் கால கட்டத்தில் இந்தியா, ஈரானுடன் 2700 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குழாய் வழித் திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக எவ்விதப் பேச்சுவார்த்தை யும் மேற்கொள்ளவில்லை. இடையில் பாகிஸ்தான் வழியாக குழாய் வருவ தால், பாகிஸ்தானுக்கு இந்தியா அளிக்க வேண்டிய கடந்துவரும் ‘பாதைக் கட்ட ணம்’ (transit fee) குறித்தும் இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மற் றுமொரு நெருடலான பிரச்சனை இருக் கிறது.
ஈரான், எரிவாயுவை இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வரு கிறது. ஆனால் ஈரான், அதனை ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் ஒப் படைப்பதாகக் கூறிக்கொண்டிருக்கி றது. இப்பிரச்சனைகள் அனைத்தும் இரு நாடுகளுமோ அல்லது மூன்று நாடு களுமோ உட்கார்ந்து பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளாகும். ஆயினும், 2007 ஆகஸ்ட்டிலேயே இந்தியா, பாதைக் கட்டணம் தொடர் பாக பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காமல் தன்னை விலக்கிக் கொண்டுவிட்டது. இந்தியா இது தொடர்பாக தருவதாகக் கூறிய தொகையைப் போல் சுமார் மூன்று மடங்குக்கும் அதிகமாக பாகிஸ்தான் கேட்டது. இத்திட்டம் தொடர்பாக மூன்று நாட்டு எண்ணெய்த் துறை அமைச்சர்க ளும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்திருந்தபோதிலும், இது வரை அதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப் பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெற்ற விவாதங்களில், ஐ.மு.கூட்டணி அரசாங்க மானது, ‘‘இந்தியாவின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையை நீர்த்துப் போக அனுமதிக்காது’’ என்று கூறிவந்தது. அதேபோன்று மற்ற நாடுகளுடன் இந் தியா எப்படி உறவுகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், அமெரிக் காவின் நிர்ப்பந்தங்களுக்கு இந்தியா அடிபணிந்திடாது என்றும் கூறியது. இந் தியாவும் ஈரானும் பல நூறு ஆண்டுகால மாகவும், தற்போது நவீன காலத்திலும் கூட சுமுகமான உறவுகளைக் கடைப் பிடித்து வந்திருக்கின்றன.
ஈரானிலிருந்து குழாய் வழியாக எரிசக்தி கொண்டு வரும் திட்டமானது, நம் நாட்டின் எரி சக்திப் பாதுகாப்பிற்கு மிகச் சிறந்த வழி என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ள நிலையில், அரசு இதனைத் தொடர மறுப்பதோ அல்லது இதனை நிறைவேற்றத் தயக்கம் காட்டுவதோ அரசு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் செய்கிறதோ என் கிற ஐயத்தை இயற்கையாகவே ஏற் படுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தி யம், ஈரானைக் குறிவைத்திருக்கிறது என்பதையும், இராக்கிற்கு எதிராக இழி நடவடிக்கைகளில் இறங்கியதைப்போல ஈரானிலும் பொருளாதாரத் தடையை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக் கிறது என்பதையும் அனைவரும் அறி வார்கள். இவ்வாறு அமெரிக்க ஏகாதி பத்தியம் மேற்கொள்ளும் மேலாதிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தி யா ஒருபோதும் துணைபோய்விடக் கூடாது.
இத்தகைய சூழ்நிலையில், இந்தியா வின் அயல்துறை அமைச்சரின் டெஹ் ரான் பயணமானது இப்பிரச்சனையை உடனடியாக எடுத்துக்கொண்டு, ஈரானு டன் உள்ள பிரச்சனைகள் அனைத்தை யும் பேசித் தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும். அதேசமயத்தில் பாகிஸ்தா னுடன் பாதைக் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு, அதிலும் ஒரு தீர்வினை எட்டிட வேண் டும். மிகவும் சிக்கனமான முறையில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திட இது மிகவும் அவசிய மாகும்.

(தமிழில்: ச. வீரமணி)

1 comment:

Sindhan R said...

வணக்கம் தோலா - உங்கள் வலைப் பக்கத்தை சந்திப்பு வலை பக்கத்தில் இருக்கும் சுட்டியின் மூலமாக அறிந்தேன் - தோழரே - நாங்கள் இந்திய இடதுசாரி சிந்தனயாலர்களுக்கான ஒரு பொதுவான வலை பக்கத்தை உர்யுவாக்கும் முயற்சியில் இருக்கிறோம் - நீங்களும் எங்களோடு இணைந்து எழுத முடியுமா?

தொடர்புக்கு - newindiamovement@gmail.com

வலைப்பக்கம் - newindiamovement.blogspot.com
- newindia-tamil.blogspot.com