பாஜக மற்றும் மோடி அரசாங்கத்தின்ஆறு மாத
கால ஆட்சியானது, கார்ப்பரேட்டுகளின் நலன்கள் மற்றும்
இந்துத்துவா சக்திகளின்
தாக்குதல்கள் ஆகிய
இரண்டையுமே பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இத்தகைய
தாக்குதல்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்த்து
நின்று முறியடித்தாக வேண்டும். இதற்கு ஓர் ஒருங்கிணைந்த போராட்டம் தேவைப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி மோடி அரசாங்கத் தின் ஆறு மாதங்கள் குறித்து, “முடக்குவளைவில் திரும்பிவிட்ட அரசாங் கம்’’என்னும் பெயரில் ஒரு சிறுபிர சுரத்தை
வெளியிட்டிருக்கிறது.
சாராம்சத்தில்
பல்வேறு கொள்கைப் பிரச்ச னைகளில் பாஜக அரசாங்கத்தின் நிலை பாடு தலைகீழாக மாறிவிட்டது என்று அந்தப்
பிரசுரத்தில் கூறப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி
வரிசையில் இருந்தபோது,
பாஜகவானது ஐமுகூ
அரசாங்கத்தின்
கொள்கைகள் பலவற்றை
எதிர்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது, அரசாங்கத்திற்கு
வந்த கடந்த ஆறு மாதங்களில் தன்னை முற்றிலுமாக மாற்றியமைத்துக் கொண்டு, முந்தையஅரசாங்கம் பின்பற்றிய அதே கொள்கை
களைப் பின்பற்றத் தீர்மானித்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டில் ஏராளமான உண்மைகள்
இருக்கின்றன. அடிப்படையாக,
பாஜகவும் எங்களைப் போன்ற ஒரு கட்சிதான் என்று
காங்கிரஸ் கூறிக்கொண்டிருக்கிறது. கடந்த
ஆறு மாத ஆட்சிக் காலத்தில் மோடி அரசாங்கமும் ஐமுகூ அரசாங்கம் பின்பற்றிய அதே பொருளாதாரக்
கொள்கைகளைத்தான் பின்பற்றியது என்பதைக் காட்டி இருக்கிறது. இதற்கு ஏராளமான எடுத்துக்
காட்டுகள் இருக்கின்றன. முந்தைய ஐமுகூ
அரசாங்கம் செய்ததுபோலவே,
பாஜக அரசாங்கமும்
இன்சூரன்ஸ் துறையில் 49
சதவீதம் அந்நிய நேரடி
முதலீட் டுக்கு உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம்
செய்தது போலவே பொதுத் துறை
நிறுவனங்களை
மிகப்பெரிய அள வில் தனியாருக்குத் தாரை வார்க்க பாஜக தீர்மானித்திருக்கிறது.
டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக
இருந்துவந்த
கட்டுப்பாட்டை
முந்தைய அரசாங்கம் ஒரு பகுதி நீக்கி இருந்தது. இப்போதைய பாஜக அரசாங்கமும் டீசல் விலை நிர்ணயம்
தொடர்பான கட்டுப்பாட்டை நீக்கி இருக்கிறது.
ரயில் கட்டணத்தை உயர்த்தஐமுகூ அரசாங்கம் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. பாஜக அரசாங்
கம் உயர்த்திவிட்டது. ஐமுகூ அரசாங்கம்
கொண்டுவந்த ஆதார் திட்டத்தையும்,
நேரடி ரொக்கத்
திட்டத்தையும்
பாஜக அர சாங்கம்
பின்பற்றத் தொடங்கிவிட்டது.பட்டியலுக்கு முடிவே இல்லை. இவற்றில் சில சமாச்சாரங்களில்
எதிர்க்கட்சி வரிசையிலிருந்தபோது பாஜக எதிர்த்
தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடனேயே, அதே கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கி விட்டது. காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒரே
வர்க்க நலன்களைத்தான்
பிரதிநிதித்துவப்படுத்துகின்றன
என்கிற அடிப்படை உண்மையை இது அடிக் கோடிட்டுக்
காட்டுகிறது. பெரு முதலாளிகளைத் துதிபாடி அண்டிப் பிழைக்கும் குணத்திலும் ஒற்றுமை காணப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை,
அவர்களுக்கு மிகவும்
பிரியமான முதலாளியாக முகேஷ்அம்பானி இருந்தார்.
இவரைக் குஷிப் படுத்த வேண்டும் என்பதற்காகவும், இவரது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதி செய்து கொடுக்க
வேண்டும் என்பதற்காகவுமே பெட் ரோலியத் துறை அமைச்சர்
இருமுறை மாற்றப்பட்டார்.
நரேந்திர மோடியைப்
பொறுத்தவரை, அவருக்கு மிகவும் பிரியமானவர் கவுதம்
அதானி. அவரது சொத்துக்கள் கடந்த ஆறு மாதங்களில்
பல்கிப்பெருகிவிட்டன. அதானியின் கம்பெனிகளில் ஒன்று, பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ஒரு பில்லியன்
டாலர் (சுமார் 6,200
கோடி ரூபாய்) கடன் பெற அரசின்ஒப்புதலைப்
பெற்றிருக்கிறது. தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஒன்றி லிருந்து அதிகத் தொகைக்குக் கடன்
பெறும் கம்பெனி இதுதான். எனவே,
சலுகைசார்
முதலாளித்துவத்தை (உசடிலே உயயீவையடளைஅ) ஊட்டி வளர்ப்பதைப் பொறுத்த வரை காங்கிரசுக்கும்
பாஜகவிற்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது.
காங்கிரஸ் கட்சிக்காவது சில கட்டுப்பாடுகள் இருந்தன.
ஏனெனில் அதன்தலைமையிலான ஐமுகூ அரசாங்கத் திற்கு
மக்களவையில் பெரும்பான்மை
இல்லாமலிருந்தது.
வெளியிலிருந்து சில கட்சிகள் ஆதரிக்க வேண்டிய நிலை யிலேயே அது இருந்தது. எனவே, அது உந்தித்தள்ள முயன்ற சில கொள்கைகளை
அதனால் தான்
விரும்பியவண்ணம்
நிறைவேற்ற முடியவில்லை. ஆனால்,
பாஜக மக்களவையில்
வலுவான நிலையில் பெரும்பான்மையைப்
பெற்றிருக்கிறது. எனவே அதே கொள்கைகளை மிகுந்தஉற்சாகத்துடன்
இதனால் எடுத்துக் கொள்ள முடியும். எனவே
மோடி அரசாங்கத்தின் ஆதரவுடன் வலது சாரித்
தாக்குதலை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ரயில்வே யில் முதன்முறையாக அந்நிய நேரடிமுதலீடு, தனியார் வர்த்தக நலன் களுக்காக நிலக்கரிச்
சுரங்கங்களைத் திறந்து விடுவதற்காக நிலக்கரி
ஒதுக்கீடு அவசரச் சட்டம்,
நிலம்
கையகப்படுத்துதல் சட்டத்தை
நீர்த்துப்போகச்
செய்தல் முதலானவை அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
அதே சமயத்தில், தொழிலாளர்களுக்கு இருந்து வந்த கொஞ்ச
நஞ்ச பாதுகாப்புகளையும்
பறிக்கும்
விதத்திலும், கார்ப்பரேட் நலன்களை முன்னெடுத்துச்
செல்லும் விதத்திலும் தொழிலாளர்நலச் சட்டங்கள்
மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.
“நல்லகாலம் பிறக்குது’’ என்பதனை கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் வர்த்தகநிறுவனங்களுக்கும் உத்தரவாதப்
படுத்தும் வண்ணம் மோடி அரசாங்கம் ஏழைகளைக்
கசக்கிப் பிழியும் வேலை களில் இறங்கி இருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்
பயனாளர்களை வெட்டிச் சுருக்குதல்,
அச்சட்டத்தின் கீழ்
இருந்த வேலை உரிமையையே நீக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதிலிருந்து இவற்றை நன்கு
பார்க்க முடியும்.அயல்துறைக் கொள்கையைப்
பொறுத்தவரை, கடந்த ஆறு மாதங்களில் பிரதமர் மோடி
எண்ணற்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.
இவற்றில், அவருடைய
பார்வையில், ஜப்பான் மற்றும் ஆஸ் திரேலியா பயணங்கள்
மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தவைகளாகும். வலதுசாரி மனோபாவம் கொண்ட இவ்விருநாட்டு
பிரதமர்களும்
மோடியுடன் அரசியல்
உறவினைப் பகிர்ந்து
கொள்ள
முன்வந்திருப்பது
தற்செயலான ஒன்று அல்ல. ஜப்பான் சென்றிருந்த
சமயத்தில் மோடியும் ஜப்பான் பிரதமர் சின்சோ
அபெயும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ளவும், ராணுவ
உறவு களைப் புதிதாக ஏற்படுத்திக்கொள்ளவும்
தீர்மானித்திருக்கிறார்கள்.
இதில், `மலபார்’ பயிற்சிகள் போன்று இந்திய - அமெரிக்கக்
கடற்படை பயிற்சிகளில்
ஜப்பான் பங்கேற்பும்
இருந்திடும். இந்தியாவும் ஜப்பானும் “2+2’’ முறையில் இருநாடுகளின் அயல்துறை மற்றும் ராணுவ
அமைச்சர்கள் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்திக்
கொள்வதற்காக ஒவ்வோராண்டும் சந்திப்பது என்றும் தீர்மானித்திருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில், மோடியும் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட்டும் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கட்டமைப்பு
ஒப்பந்தம் ஒன்றில்
கையெழுத்திட்டிருக்கின்றனர்.
இந்த ஒப்பந்தத்தின்கீழ்,
இரு நாடுகளும் ஒவ்வோராண்டும் உச்சி மாநாடுகளை
நடத்திடும், ராணுவ அமைச்சர்களின் முறையான கூட்டங்கள் அமைந்திடும் மற்றும் இரு
நாடுகளும் கடற்படைப் பயிற்சிகளையும் முறையாக
மேற்கொள்ளும்.
ஆஸ்திரேலிய செய்தித் தாள், தி ஏஜ் இதுதொடர்பாக எழுதியிருப்பதில், “இந்த பாதுகாப்பு ஒத்துழைப் புக்
கட்டமைப்பு
ஒப்பந்தம், கிட்டத் தட்ட இந்தியா, ஜப்பானுடன் செய்து கொண்டுள்ள ராணுவக் கூட்டணிக்கு இணையானது மற்றும் ஆழமானது, இம்மூன்று நாடுகளும் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்
கொண்டிருக்கின்றன’’
என்று குறிப்பிட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு
ஜனவரியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு
வரக்கூடிய சமயத்தில்,
இந்தியா - அமெரிக்கா
பாதுகாப்பு
கட்டமைப்பு ஒப்பந்தம்
புதுப்பிக்கப்படக்கூடிய சூழ லில்,
முன்பு உருவாகி இருந்ததைப்போல அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா
மற்றும் இந்தியா ஆகிய
நான்கு நாடு களுக்கான
கூட்டணி அமைய இருக்கிறது.
இதிலும்கூட பாஜக அரசாங்க மானது ஐமுகூ அரசாங்கம்
நடைமுறைப் படுத்திய அயல்துறைக் கொள்கையின் சில
அம்சங்களைத்தான் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறாக மோடி அரசாங்கம் பொருளாதார மற்றும் அயல்துறைக்
கொள்கை களில் ஐமுகூ அரசாங்கத்தின் கொள்கைகளை
முன்னெடுத்துச் செல்லக்கூடிய அதே சமயத்தில், ஒரு
விஷயத்தில்
தன்னுடைய சொந்த
வித்தியாசமான அணுகு முறையைக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்/இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை
முன்னெடுத்துச் செல்வதே அது. கடந்த ஆறு
மாதங்களில், மோடி அரசாங்கம் ஆர்எஸ்எஸ்-உடன் அர
சாங்கத்தின் அணுகுமுறையை
இரண்டற இணைப்பதில்
தீர்மானகரமானமுறையில் செயல்பட்டதைக் காண முடிந்தது. பொருளாதாரம், கல்வி, சித்தாந்தம், பாதுகாப்பு, சேவை மற்றும் மக்கள் என்னும் ஆறு குழுக்களை ஆர்எஸ்எஸ் அமைத்திருக்
கிறது. ஆர்எஸ்எஸ்சின் இந்தஆறு குழுக்களும்
பாஜக அரசாங்கத் தின் தங்கள் குழுக்களுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் ஏற்கனவே இரண்டறக் கலந்து
செயல்படத் துவங்கிவிட்டன,
தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அரசாங்கத்தின்
கொள்கைகளை வடிவமைக்கும் செயல்களில் இறங்கி
விட்டன.
கல்வி அமைப்புகளைப் பொறுத்தவரையில், கல்விக் கொள்கைகள், ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கான
நிறுவனங்களில்
இந்துத்துவவாதிகளை
அல்லது குறைந்தபட்சம் அதற்கு ஆதர வாக இருப்பவர்களை நியமிக்கும் வேலைகள் மிக வேகமாக
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதர இந்திய மொழிகளைக்
காவு கொடுத்து சமஸ் கிருதத்தை உந்தித்தள்ளுவதற்கான முயற்சி, அறிவியல், கலாச்சாரம்
மற்றும் சமூகத்தில் இந்துப் பழமைவாத உலகக் கண்ணோட்டத்தை
மேம்படுத்துவதற்கான முயற்சிகள் துரிதகதியில் நடந்து கொண்டிருக்கின்றன. கிரிராஜ் கிஷோர்
மற்றும் நிரஞ்சன் ஜோதி போன்ற மிகவும் வெறிபிடித்த
மதவெறி சிந்தனைகளை உள்ளடக்கி யவர்களைக் கொண்டு அமைச்சரவை நிரப்பப் பட்டிருக்கிறது.
பிரதமரே ஓர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருப்பதனால், ஆர்எஸ்எஸ் இயக்கம் தன்னுடைய இந்துத்துவா
திட்டத்தை அமல்படுத்திட ஆதிக்க நிலைபாட்டை
எடுத்திருக்கிறது.கீழ்மட்டத்திலும்,
இந்துத்துவா
அமைப்புகள் பசுவதை,
“லவ் ஜிகாத்’’ மற்றும் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்து
வந்தவர்கள் ஆகிய பிரச்சனைகளை சிறுபான்மை யினருக்கு
எதிராக பகைமையை உரு வாக்கும் விதத்திலும், மதவெறிப்
பதற்ற நிலைமையை அதிகரிக்கக்கூடிய விதத்திலும்
முழுமையாகப் பயன்படுத்திக்
கொண்டிருக்கின்றன.
தலைநகர் தில்லி யிலேயே பவானா,
திரிலோக்புரி மற்றும் கிழக்கு தில்லியில் ஒரு தேவாலயத்தை
எரித்தல் போன்ற மதப் பதற்ற நிலைமை கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாஜக மற்றும் மோடி அரசாங்கத் தின் ஆறு
மாத கால ஆட்சியானது, கார்ப்பரேட்டுகளின் நலன்கள்
மற்றும்இந்துத்துவா சக்திகளின் தாக்குதல்
கள் ஆகிய இரண்டையுமே பிரதிநிதித்துவப் படுத்தி வருகிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இத்தகைய
தாக்குதல்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்த்து
நின்று முறியடித்தாக வேண்டும். இதற்குஓர் ஒருங்கிணைந்த போராட்டம் தேவைப் படுகிறது.மோடி அரசாங்கத்தின்
நவீனதாராளமயக் கொள்கைகளுக்கு எதி ரான போராட்டம், ஆர்எஸ்எஸ்-இந்துத்துவா மதவெறி
சித்தாந்தம் மற்றும் அதன்
செயல்பாடுகளுக்கு
எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். தங்கள்மீது ஏவப்பட்டுள்ள சுமைகளைத் தடுத்து
நிறுத்திட, உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவின ரின் ஒன்றுபட்ட போராட்டங்களும்
வெகுஜன இயக்கங்களும் வர்க்க மற்றும்வெகுஜன
அமைப்புகளால் வளர்த்தெடுக் கப்பட வேண்டும். இடதுசாரி சக்திகள் வலதுசாரிகளின் தாக்குதலை ஒன்று
பட்டுநின்று முறியடித்திட
வேண்டும்.
இது மதச்சார்பற்ற ஜ னநாயக சக்திகள்
மிகவும் விரிவானமுறையில் அணிதிரள்வதற்கு வழிவகுக்கும். - தமிழில்: ச. வீரமணி
No comments:
Post a Comment