Sunday, October 26, 2014

தேர்தல் முடிவு காட்டுவது என்ன? - பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்



சமீபத்தில் மாநில சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து, பாஜக ஹரியானாவில் தன் சொந்த பலத்துடனும், மகாராஷ்டிராவில் அதன் தலைமையில் கூட் டணி ஆட்சியும் அமைய இருக்கின்றன. மகா ராஷ்டிராவில் 15 ஆண்டு கால காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிக் கூட்டணி அரசாங்கத்தை அடுத்தும், ஹரியானாவில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து இருந்து வந்த காங்கிரஸ் அரசாங்கத்தை அடுத்தும் இவ்வாறு ஆட்சிகள் அமைகின்றன. போட்டியிட்ட கட்சிகள் மிகப்பெரிய அளவிற்கு மோசடியில் ஈடுபட்டதாக புகார் வராது நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற்ற பின்னணியில் மக்களின் தீர்ப்பு இவ்வாறு வந்திருக்கிறது.
நம்மைப் போன்றதொரு ஜனநாயக நாட்டில் மக்களின் தீர்ப்பே இறுதியானதாகும். காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங் கிரசும் தனித்தனியாக இத்தேர்தலைச் சந்தித் தன. கடந்த 15 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது எழுந் துள்ள கோபம் தங்கள் பக்கம் திரும்பாது என்று தேசியவாத காங்கிரஸ் கருதியதுபோலத் தெரிகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர், காங்கிரஸ் கட்சி 18 சதவீத வாக்குகள் பெற்று42 இடங்களையும், தேசியவாதக் காங் கிரஸ் 17 சதவீத வாக்குகளைப் பெற்று 41 இடங்களையும் பெற்றிருக்கின்றன. ஹரியானாவில் பாஜக மொத்தம் உள்ள 90 இடங்களில் 47 இடங் களில் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது.பாஜக தற்போது, பல கட்சிகள் தனித் தனியே போட்டிபோடக்கூடிய சமயங்களில், மூன்றாவது அல்லது மக்களின் குறைந்த சதவீத ஆதரவு பெற்றநிலையிலும், சொந்தமாகவே பெரும்பான்மையைப் பெறக்கூடிய கலையில் பூரணத்துவம் பெற்றுவிட்டது போலத் தோன்று கிறது. நாடாளுமன்ற தேர்தலின்போது, மக்க ளின் 31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று கணிசமான அளவிற்குப் பெரும்பான்மையைப் பெற்றது.
இப்போது ஹரியானாவில், வாக்க ளித்தவர்களில் 33 சதவீதம் பேர்களின் வாக்கினைப் பெற்று பெரும்பான்மையை வென்றி ருக்கிறது. மகாராஷ்டிராவில், 29 சதவீத வாக்கு களை மட்டுமே பெற்று 123 இடங்களில் வென்றிருக்கிறது. தேசியவாத காங்கிரசும், காங்கிர சும் 2004 மற்றும் 2009களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது முறையே 40 மற்றும் 37 சதவீத வாக்குகளைப் பெற்றன. இந்தத் தடவை, தனித்தனியே போட்டியிட்டு, ஒட்டுமொத்தத்தில் 35 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. எனிலும் அவற்றின் இடங்கள் 144 இலிருந்து 83ஆகக் குறைந்திருக்கிறது. ஆனால் பாஜகவிற்கு 46 இலிருந்து 123ஆக அதிகரித்திருக்கிறது.’’போட்டியிடுபவர்களில் அதிக அளவிற்கு வாக்குகளைப் பெற்றவரே வென் றவர் என்கிற இத்தேர்தல் முறையில் உள்ளஒழுங்கின்மையே இத்தகைய முடிவுகளுக் குக் காரணமாகும்.
நம்முடைய தேர்தல் முறையில் விகிதாச்சார முறையை நோக்கி ஒரு தீவிரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகும். இதற்கு ஆரம்பத்தில், மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பலவற்றில் இன்றையதினம் கடைப்பிடிக்கப்படு வதைப்போல, ஒரு பகுதி விகிதாச்சார முறையை கொண்டுவரலாம். மாநில சட்டமன்றங் களின் தேர்தல் முடிவுகள், நம்முடைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை வலுப்படுத்திட வும், அதனை ஓர் உண்மையான ஜனநாயகமாக - அதாவது மக்களிடமிருந்து பெரும்பான்மை வாக்கு பெற்றவர்களின் ஆட்சி அமையக்கூடிய விதத்தில் மாற்றி அமைத்திடவும், இத்தகைய சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டியது அவசரம் என்பதை மீண்டும் ஒருமுறை அடிக் கோடிட்டுக் கொள்ள வேண்டும். மாறாக தற் போது மத்தியிலும், பல மாநிலங்களிலும் மக்க ளிடம் குறைவான ஆதரவினைப் பெற்ற பல கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆட்சி செய்யக்கூடிய நிலை இருக்கிறது. ஜனநாயகத்தை உருக்குலைத்திடும் இத்தகையப் போக்கு உடனடி யாக சரிசெய்யப்பட வேண்டியது இன்றைய தேவையாகும்.
இத்தகைய சூழ்நிலையில், `மோடி அலை’, `மோடி சுனாமியாக மாறிவிட்டது என்று பாஜக தலைவர்கள் கூறுவதெல்லாம் வெற்று முழக்கமே என்பது தெளிவாகும். மேலும், இத்தகைய `சுனாமிதாக்கினால் அது நம் சமூக நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப் பாட்டுக்கும் எந்த அளவிற்கு நாசத்தை ஏற்படுத்தும் என்பதை அறிபவர்கள் உண்மை யிலேயே நடுக்கம் கொள்கிறார்கள்.மேலும், மக்களவைத் தேர்தலுக்குப் பின் னர் இப்போது பாஜக பெற்றுள்ள வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதையே, தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களவைத் தேர்தல்நடைபெற்ற சமயத்தில் பாஜகவும் சிவ சேனைக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டிபோட்ட சமயத்தில் 288 சட்டமன்றத் தொகுதிகளில் 245 தொகுதிளைக் கைப் பற்றி இருந்தன. இப்போது பாஜக 123 இடங்களிலும், சிவ சேனைக் கட்சி 63 இடங்களி லும் மொத்தத்தில் 186 இடங்களில் வென்றிருக்கின்றன.
அவை கூட்டணியாகப் போட்டியிட் டிருந்தால் அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கக்கூடும் என்ற வாதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் கூட, இவ்வீழ்ச்சி கணிசமானதேயாகும்.’ 2014 அக்டோபர் 20 தி இந்து நாளேட்டில் கூறியுள்ளபடி, “தேர்தல் முடிவுகளிலிருந்து பாஜக அபரிமிதமான வெற்றியைப் பெற்று விட்டதாகச் சொல்வதற்கில்லை. மோடி மிகவும் பிரம்மாண்டமாக பேரணி நடத்திய தொகுதிகளில்கூட, அதனால் வெற்றி வாகை யை சூட முடியவில்லை. மோடி பேரணி நடத்திய, பிரம்மாபுரி தொகுதியை, காங்கிரஸ் கட்சியானது பாஜகவிடமிருந்து 14 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியோ தேசியவாதக் காங்கிரஸ் கட்சியோ தலா பத்து வாக்குகளுக்கு மேல் பெறாதுஎன்று மோடி ஜோதிடம் கூறிய துல்ஜாபூர்தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.’’ தேசியவாதக் காங்கிரஸ் கட்சிபெற்றிருந்த கல்வான் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 67 ஆயிரத்து 795 வாக்குகள்பெற்று கைப்பற்றியிருக்கிறது.
இத்தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வெறும் 25 ஆயிரத்து 457 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். நாட்டில் பாஜகவிற்கு செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறப்படும் அதே சமயத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்கட்சி ஆட்சி அமைத்திட வேறெதாவது கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைமை யிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் கடந்த பத்தாண்டு காலமாக முக்கியமான அமைச்சகங்களுக்குப் பொறுப்பு வகித்த, பதவி சுகம் அனுபவித்து வந்த, தேசியவாதக் காங்கிரஸ் தற்போது பாஜகவிற்கு வெளியிலிருந்து `தகுதியற்ற’ (நிபந்தனையற்ற என்று சொல்ல முடியாது) ஆதரவு அளிப்ப தாகக் கூறியிருக்கிறது. பாஜகவுடன் நீண்டகாலமாக கூட்டணி வைத்திருந்ததும், `இந்துத்துவாகொள்கையில் பாஜகவைவிட வெறித் தனமாக இருந்ததுமான சிவசேனைக் கட்சி,ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மீண் டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
இவர்கள் பேரத்தின் முழு உண்மையும் வெளியே வரும்வரை இவர்களின் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுமானால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இத்தகைய சூழ்நிலைமைகளில்தான், கூட்டணி சகாப்தம் முடிந்துவிட்டது என்றுபாஜக தலைவர்களின் பேச்சுகள் கேலிக் குரியனவாக இருக்கின்றன. மக்களவைத் தேர்தல் முடிந்தவுடனேயே மோடி, இதே போன்று கூட்டணி அரசாங்கங்கள் முடிந்து விட்டன என்று கூறியதை நினைவுகூர்க. இவர்களின் ஆட்சிக்கு ஒரு வலுவான எதிர்ப்பினை அளிக்கக்கூடிய விதத்தில் கூட்டணிகள் அமையவேண்டிய தருணம் இது. பாஜக, தன் சொந்த பலத்தை நிலைநிறுத்துவதற்காக மட்டரகமான `குதிரை பேரத்தில்ஈடுபடாவிட்டால், இன்றைய தினம் அது மகாராஷ் டிராவில் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்ப முடியாது.
நம் நாட்டில் பல்வேறு மதத்தினரும் சுமுகமாக வாழ்ந்து வரக்கூடிய சமூக ஒழுங் கிற்கு `மோடி சுனாமிபேரழிவினை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கான ஒரு குறிப்பு, மீண்டும் ஒருமுறை அவர்களின் மூளையாகச் செயல்படும் ஆர்எஸ்எஸ்-சிடமிருந்து வந்திருக்கிறது. சமீபத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் தேசியக் கவுன்சில் கூட்டத்தின் இறுதியில், அதன் செய்தித் தொடர்பாளர், “இந்துசமூகம் மீண்டும் காதல் ஜிகாத்’’ என்னும்அவமானகரமான’’ நிலையினை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது,’’ என்று மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் அயோத்தியில் ராமர் கோவில்கட்டுவது தொடர்பாக, அவர், “கோவில் கட்டு வதற்குள்ள அனைத்துத் தடைகளையும் அர சாங்கம் நீக்கிடும்,’’ என்றும் கூறியிருக்கிறார். வகுப்புவாதம் தொடர்பாக கூறப்பட்ட புகார்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிய அவர், “அது உண்மையாயின், ஆர்எஸ்எஸ் தன் தளத்தை இந்த அளவிற்கு விரிவாக்கி இருக்க முடியாது,’’ (தி இந்து, அக்டோபர் 21, 2014) என்று கூறியிருக்கிறார்.உண்மை என்னவெனில், “ஆர்எஸ் எஸ், நாட்டில் மதவெறித் தீயை விசிறி விடுவதன் மூலம் தன் தளத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கிறது,’’ என்பதேயாகும். இவ்வாறு மதவெறித் தீயை தீவிரப் படுத்துவதன் மூலம் பெரும் பான்மை இந்து வாக்குகளை ஒருமுகப்படுத்துவதற்கான - `வாக்குவங்கி அரசியலின்மட்டரகமான வடிவத்தை நடைமுறைப்படுத்தி, தேர்தல் ஆதாயங்களை அறுவடை செய்திட, தன் அரசியல் அங்கமான பாஜகவைப் பயன்படுத்திக்கொள்வதை உத்தரவாதம் செய்துகொண்டிருக்கிறது.
இத்தகைய இவர்களின் சூழ்ச்சிகளை எதிர்த்துத் தனிமைப்படுத் தாவிடில், நம் சமூகத்தின் ஒற்றுமையும், சமூக,கலாச்சார, மத, மொழி வேற்றுமைகள் இருப்பினும் அவற்றிற்கிடையே உயர்ந்தோங்கி யிருந்த வளமான ஒற்றுமையும், நல்லிணக்க உணர்வும் அபாயகரமான முறையில் அச்சுறுத் தலுக்கு உள்ளாகும். எனவே, நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்கள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலை ஒன்றுபட்டு நின்று முறியடித்திட நாட்டு மக்கள் அணி திரள வேண்டும்.
அக்டோபர் 21, 2014-
தமிழில்: ச.வீரமணி


No comments: