Sunday, October 19, 2014

மோடி அரசாங்கத்தின் நச்சுக் கலவை





பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்

மக்கள் மீது ஒரு பக்கம் மிகப்பெரிய அளவில் சுமைகளை ஏற்றிக்கொண்டே இருத்தல், மறுபக்கத்தில் மதவெறி யைக் கூர்மைப்படுத்துதல் ஆகிய இரண் டையும் மோடி தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின்கீழ் உக்கிரப் படுத்தப்படுவது தொடர்கிறது.மத்திய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மொத்த விலைவாசிக் குறியீட்டெண் திடீரென்று வீழ்ச்சி அடைந் திருப்பதைப்பற்றி அதிகமாகவே அளக்கப்பட்டு வருகிறது. மேற்படி செய்திக்குறிப்பானது, மாதாந்திர மொத்தவிலைவாசிக் குறியீட்டெண் ணின்அடிப்படையில் பணவீக்கத்தின் ஆண்டு விகிதம், சென்ற மாதம் இது 3.74 சதவீதமாகவும். சென்ற ஆண்டு இது 7.05 சதவீதமாகவும் இருந்ததுடன் ஒப்பிட்டு, 2014 செப்டம்பரில் 2.38 சதவீதமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சாமானியனைப் பொறுத்தவரை மிகவும் எளிமையான உண்மை என்னவெனில் அவனுடைய அன்றாட வாழ்க்கைப் பெரிதும் சார்ந்திருப்பது நுகர்வோர் விலைவாசிக் குறியீட் டெண்ணைத்தான் இது எப் போதுமே மொத்த விலைவாசிக் குறியீட்டெண் ணைவிட அதிகமாகவே இருந்து வருகிறது. சந்தைக்கு வழக்க மாகச் சென்று கொண்டிருக்கும் ஒருவர்அனைத்து அத்தியாவசியப் பொருள் களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து, சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தின்மீது அதிக சுமைகளை ஏற்றியிருப்பதை அனுபவரீதியாக அறிந்திருப் பார்.மேலும், பணவீக்க விகிதத்தின் கருத் தாக்கம் புரிந்துகொள்ளப்பட வேண்டும். பணவீக்க விகிதம் வீழ்ச்சி அடைவது என்பதனால் விலைவாசியும் வீழ்ச்சி அடைந் தன என்று பொருளல்ல. அதன்பொருள் விலைவாசி உயர்வின் விகிதம் முன் பிருந்ததைவிடக் குறைந்திருக்கிறது என்பதேயாகும். ஆயினும் விலைவாசிகள் உயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியக் கார்ப்பரேட்டுகளால் உற் சாகப்படுத்தப்படும் அமைச்சர்களும், அரசின் செய்தித் தொடர்பாளர்களும் பொரு ளாதாரத்தின் இந்த அரிச்சுவடியையே கண்டுகொள்ளாமல் நழுவிக் கொள்வது போன்றே தோன்றுகிறது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து, அதன் காரணமாக இந்தியாவிற்கு இறக்குமதி செல வினம் குறைந்து பெரிய அளவில் சுமைகுறைக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் தான் இந்தப் புள்ளிவிவரங்கள் வந்திருக்கின்றன. இவ்வாறு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் குறைந்திருப் பதற்குக் காரணம் என்ன? உக்ரேன் நாட்டில் முற்றுகைக்குள்ளாகி இருக்கும் சாமானிய மக்களைப் பாதுகாப்பதற்காகத் தலையிடுவதிலிருந்து ரஷ்யா விலகிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நிர்ப்பந்தங்களை ஏற்படுத்திடவே, உலகில்மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான ரஷ்யாவுக்கு, நெருக்கடி கொடுப்பதற் காகவே இவ்வாறு எண்ணெய் விலை வீழ்த்தப்பட்டிருப்பதாக பலரால் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.

ரஷ்யாவை சார்ந்திருப்பதிலிருந்து உக்ரேனைப் பிரித்திட வேண்டும் என்பதே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் விருப்பம். அத னை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இணைத்துக் கொண்டு, அந்நாட்டின் அளப்பரிய இயற்கை வளங்களைத் தடுமாறிக் கொண்டிருக்கும் தங்கள் பொரு ளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவை விரும்புகின்றன. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கூர்மையாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, அது நம் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையிலும் வீழ்ச்சி ஏற்படுவதற்கு இட்டுச் சென்றது. இது இந்தியப் பொருளாதாரத்திலும் அதன் உலகஅளவிலான தொடர்புகளிலும் மிகப்பெரிய அளவில் நிர்ப்பந்தங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், இந்த ஆண்டுசெப்டம்பரில், வர்த்தகப் பற்றாக்குறை 14.2 பில்லியன் டாலர் அளவில் 18 மாதஉயரத்திற்கு கடுமையாக உயர்ந்திருக் கிறது.

தங்கம் இறக்குமதியைப் பெருமள வில் மேற்கொண்டதே இதற்குக் காரண மாகும். செப்டம்பர் மாதத்தில் மட்டுமே, முந்தைய மாதம் 682.5 மில்லியன் டால ராக இருந்ததுடன் ஒப்பிடுகையில் 3.8பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு வர்த்தகப் பற்றாக்குறையால் முற்றுகைக்குள்ளான ஐமுகூ-2 அரசாங் கம், அதிலிருந்து விடுபடுவதற்காக தங்கம் இறக்குமதி செய்வதற்குக் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது என்பதை நினைவுகூர்ந்திட வேண்டும். இது இந்திய கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாப வேட்கைக்கு ஊறு விளைவித்தது. அவர்கள் தங்களுடைய அபரிமிதமான உபரியை ரியல் எஸ்டேட், தங்கத் தைக் குவித்தல், அந்நியச் செலாவணியில் தங்கள் சேமிப்பை மாற்றுதல் போன்ற ஊகநடவடிக்கைகளில் முதலீடு செய்துகொண்டிருந்தார்கள். அதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத் துக் கொண்டும் இருந்தார்கள். எனவே,இப்போது மோடி அரசாங்கம் மேற் கொண்டிருக்கும் நடவடிக்கை நிச்சயமாக இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு சாதக மான ஒன்றேயாகும்.
ஏனெனில் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக அபரிமிதமான அளவில் நிதி உதவி செய்த அவர்களைக் குஷிப்படுத்த வேண்டிய நிலையில் இந்த அரசு இருப்பதால், தங்க இறக்குமதிக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்தி இருப்பதுபோல் தோன்றுகிறது.இவை அனைத்துமே நம் பொருளாதார அடிப்படைகளுக்குத் தீங்கிழைக்கும் என்பதில் ஐயமில்லை. மோடி பிரதமரான பின்னர், சற்றே நிமிர்ந்து வந்து கொண்டிருந்த பொருளாதாரத்தின் நான்கு துறைகள்மீளவும் வீழ்ச்சியடையத் தொடங்கி யுள்ளன. மக்கள் மத்தியில் தாங்கள் வாங்க விரும்பும் நுகர்வுப் பொருள்களை வாங்கு வதற்கான வருமானம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.
மக்களின் வருமானத்தின் பெரும்பகுதி கடுமையாக அதிகரித்துள்ள அத்தியாவசியப் பொருள் களின் விலை உயர்வுகளால் கபளீகரம் செய்யப்பட்டுவிடுகின்றன.

இப்போது பண்டிகைக் காலமாக இருக்கக்கூடிய சூழலில் பெரும்பான்மை மக்களின் உண் மையான வாழ்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதையே காட்டுகிறது. நுகர்வுச் செலவினங்களில் வீழ்ச்சியும் நுகர்வுப் பொருள்களின் விற்பனை யில் சரிவும் ஏற்பட்டிருப்பது இயற்கையாகவே முதலீடுகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்திடும். ஏனெனில், மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்க வில்லையெனில், பொருள்களை வாங்குவதற்கான சக்தியை அவர்களால் அதி கரித்திட முடியாது. மாறாக, அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக் கையில் இது மேலும் குறைந்திடும்.மேலும், சர்வதேச சந்தையில் எண் ணெய் விலைகள் குறைந்திருப்பதானது, உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட் களின் விலைகளிலும் வீழ்ச்சிக்கு இட்டுச்செல்ல வேண்டியிருக்கும்.
நம் நாட்டில் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதற் கான செலவினம் மிகவும் குறைவாக இருந்தபோதிலும், (நம்முடைய இறக்கு மதியில் 90 சதவீதம் இதுதான்) டீசலின் விலை குறைக்கப்படாமல் இருக்கிறது. இதன் மூலம் இந்திய மக்கள் மீது சுமை கள் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மழை போதுமான அள விற்கு இல்லாததால், டீசலின் விலை உயர்வால், விவசாயிகள் ஏற்கனவே அவதிக் குள்ளாகி இருக்கின்றனர்.

இது சரி செய்யப்படும் என்று ஆட்சியாளர்கள் உறுதிமொழி அளித்திருக்கின்றனர். பெட்ரோல் விலை வீழ்ச்சியும் சர்வதேச விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவேயாகும். இதன்மூலம் பெட்ரோலியப் பொருட்களை விற்பனைசெய்திடும் சில்லரை வியாபாரிகள் தொடர்ந்து கொள்ளை லாபம் அறு வடை செய்திட அனுமதிக்கப்பட்டு வரு கிறார்கள். மோடி தேர்தலில் நின்றபோது அவரது பிரச்சாரத்திற்குத் தாராளமாக நிதி உதவி அளித்தவர்களுக்குத் `திருப்பிஅளிக்க வேண்டிய தருணம்’ வந்திருப் பதாகவே இதற்குப் பொருளாகும். அவதிப்படும் மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் அளிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, நம் நாட்டிற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்புவதற்கான பொது முதலீடுகளை அதிகரித்து அதன்மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதேயாகும்.

மாறாக, மோடி அரசாங்கம் தனியார் மயத்தை நோக்கியே வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு இவர்கள் பொதுத்துறையைத் தனியார்மயத்திற்குத் தாரை வார்ப்பதன் மூலம் இருக்கும் வேலைவாய்ப்புகள் கூட பறிபோவதற்கு இட்டுச் செல்லும்.மேலும், மோடி, செங்கோட்டையில் ஆற்றிய தன் முதல் சுதந்திரதின உரையில், “இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட் டது’’ என்பதை நம்முடைய `மேற்கோள் வாசகமாகக்’ கொள்ளப்படும் என்றும்அதன்மூலம் இந்தியாவை தொழில் துறையின் மையமாக மாற்றுவோம் என் றும் பிரகடனம் செய்தார். இப்போது அதேபிரதமர் அமெரிக்காவில் உரையாற்று கையில் “இந்தியாவில் உற்பத்தி செய் யுங்கள்’’என்று திரும்பத் திரும்பப் பேசிஇருக்கிறார். முன்பு பேசியது, உள்நாட்டுத் தொழில்துறையை வலுப்படுத்து வதற்கான பிரச்சாரமாக இருந்தது. இப் போது அமெரிக்காவில் பேசி இருப்பது, அந்நிய முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு, வெளிப் படையாகவே அழைப்பு விடுக்கப்பட் டிருக்கிறது.

அவர்களின் பிரதான குறிக்கோள் எப்போதுமே கொள்ளை லாபம்ஈட்டுவதுதான். இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பது அல்ல. இவ்வாறு, இந்தியா, நம்முடைய சந்தைகளையும், வளங்களை யும், மலிவானமுறையில் உழைப்புச்சக்தியையும் கொள்ளை லாபம்ஈட்டுவதற்காக அந்நிய முதலீட்டாளர் களுக்குத் திறந்துவிட்டு பொருளா தாரத்தை மேலும் தாராளமயமாக்க ஆட்சியாளர்கள் தயாராகிக் கொண் டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நிச்சயமாக இது நாட்டு மக்களுக்கு மேலும் சுமைகளைக் கொண்டுவரும்.இவ்வாறு ஒருபக்கம் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும் அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ்-ம் அதன் பல் வேறு கொடுக்குகளும் மதவெறித் தீயை விசிறிவிடுவதற்காக தங்கள் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளன. அதன்மூலம் தேர்தல் ஆதாயங்களை அறுவடை செய்ய முயன்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் பெரும்பான்மை இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் மிகவும் மட்டரகமான வாக்கு வங்கி அரசியலை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் தலைவர் தேசிய அளவில் விஜயதசமி அன்று ஆற்றிய தொலைக்காட்சி ஒளிபரப்பு இதனை உறுதிப் படுத்துகிறது. அவர் விஜயதசமி அன்று ஆற்றிய உரையில், “மிகவும் ஆழமான விதத்தில் ஜிஹாதி நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன’’ என்ணுறும், குறிப்பாக கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மற்றும் மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்றமாநிலங்களில் “ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் சட்டவிரோதமாகக் குடியேறி வருவதாகவும்’’ எச்சரித்து, மக்களை “தங்களு டைய தேசிய இந்து அடையாளத்தின் பெருமையை’’த் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முழுமையாக அறிவியலற்ற முறையிலும், இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுது வதன் மூலமும் மதவெறித் தீயை விசிறிவிடும் இத்தகைய முயற்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர் மேலும் நம் நாட்டின் மாபெரும் நாகரிக முன்னேற் றங்களை மறுதலிக்கக்கூடிய விதத்தில் “இந்துத்துவா’’வை உயர்த்திப்பிடித்து உரைநிகழ்த்தி இருக்கிறார்.
‘ஜிஹாத் காதல்’ என்கிற சொற் றொடர், மதவெறித் தீயை மேலும் பன்மடங்கு விசிறிவிடுவதற்காக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங் களால் ‘புனையப்பட்ட ஒன்று’ என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மீரட்டில்,வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக வும், கட்டாயமாக மதமாற்றம் செய்யப் பட்டதாகவும் கூறப்பட்ட பெண், இவ்வாறுஅவர் கூற வேண்டும் என்று மிரட்டப் பட்டதாகவும், இதற்கு மீரட்டில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் அப்பெண்ணின் குடும்பத்திற்கு பணம் கொடுத்ததாகவும் தெரிய வந்திருக்கிறது. இப்போது காவல்துறையினர் அப்பெண் ணின் பெற்றோர் மீது வழக்கு தொடுத் திருக்கின்றனர். (டைம்ஸ் ஆப் இந்தியா, அக்டோபர் 15, 2014).

அதேபோன்று, தி இந்தியன் எக்ஸ் பிரஸ் (அக்டோபர் 11, 2014) நாளேடு, விசுவ இந்து பரிசத் தலைவர் சுதர்சன், மீரட் பிராந்தியத்தில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 100-150 பேர் ‘ஜிஹாத் காதல்’-க்குப் பலியாகி இருக்கிறார்கள் என்று கூறியதாகவும், அவர்களில் ஏதாவது ஒருவர் குறித்த விவரங்களைத் தாருங்கள் என்று கேட்டபோது, மீரட் டின் கிராமப்பகுதியில் மாவானா என்னுமிடத்தில் ஒரு வழக்கைக் குறிப்பிட்ட தாகவும், பின்னர் அதிலிருந்தும் பின்வாங்கிக் கொண்டார் என்றும் குறிப்பிட் டிருக்கிறது.

சுதர்சன் கூறிய பெண், மீண்டும் முஸ்லிம் இளைஞருடன் சென்றுவிட்டதாக, சுதர்சனம் ஒப்புக்கொண் டிருக்கிறார்.இவ்வாறு இவர்களின் அரக்கத் தனமான நிகழ்ச்சிநிரல் மிகவும் தெளி வானது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை தங்களுடைய வெறி பிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற வேண்டும், அதன் மூலம் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்கள் அடைந்திட வேண்டும் என்பதே இவர்களது குறிக்கோள். அதற்காகத்தான் மக்களின் மீது பொருளா தார ரீதியாக சுமைகளை ஏற்றிக் கொண்டிருக் கும் அதே சமயத்தில் இவ்வாறு மத வெறித் தீயையும் விசிறிவிட்டுக் கொண் டிருக்கிறார்கள்.

(அக்டோபர் 15, 2014)

- தமிழில்: ச.வீரமணி


No comments: