பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
மோடி அரசாங்கம் இந்தியா வந்துள்ள அமெரிக்க அயல்துறை அமைச்சர் ஜான்
கெர்ரிக்கு வரவேற்புப் பரிசு அளிக்கக் கூடிய விதத்தில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய
நேரடி முதலீட்டின் உச்சவரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்திட இருக்கிறது. இன்சூரன்ஸ் சட்டங்களில் இதற்கான
சட்டத் திருத் தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளு மன்ற பட்ஜெட் அமர்வில்
சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. ஐமுகூ-1 அரசாங்கக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்திய - அமெரிக்க வர்த்தகர்
அமைப்பில் இதற்கான கோரிக்கை திரும்பத்திரும்ப எழுப்பப்பட்டு வந்தது.
இதனை நிறைவேற்றும் விதத்தில்தான் மோடி அரசு இந்நடவடிக்கையை இப்போது
எடுத்திருக்கிறது. நிதித்துறையில் தாராளமய சீர்திருத் தங்களை மேற்கொள்ள வேண்டும்
என் பது நவீன தாராளமயக் கொள்கையின் மிக முக்கியமான அம்சமாகும். இதற்கு அந்நிய நிதி
மூலதனம் நம் நாட்டிற்குள் வருவதற்கு இருந்து வரும் கட்டுப்பாடுகளை நீக்குதல், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளைத்
தனியாருக்குத் தாரை வார்த்தல், இத்துறைகளில் அந்நிய நிதி மூலதனம் முதலீடு செய்யப்படுதல் முதலானவை
அவசியமாகும். இன்சூரன்ஸ் துறையைப் பொறுத்தவரையில்,
1999ல் வாஜ்பாய் அரசாங்கம் இருந்த காலத்தில்
இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, இன்சூரன்ஸ் துறையில் தனியார்
நுழைந்திடவும் அந்நியநேரடி முதலீட்டில் 26 சதவீதம் அனு மதிக்கப்பட்டது. அப்போதிருந்தே அந்நிய நேரடி
முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த்திட நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டு வந்தது.
இடதுசாரிக் கட்சிகள் இம்முயற்சிகளுக்கு எதிராக இருந்தன. ஐமுகூ-1 அரசாங்கம் அவ்வாறு செய்யவிடாது தடுத்து
நிறுத்தின. இடதுசாரிகள் ஐமுகூ அரசை ஆதரிப்பதை விலக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம்
இந்தச்சட்டமுன்வடிவை 2008ல் மாநிலங்கள வையில் அறிமுகப் படுத்தியது. ஆயினும், ஐமுகூ-2
அரசு காலத்திலும் அதனை நிறைவேற்றுவதில்
அது தோல்வி கண்டது. நிதித்துறை சார்ந்த நிலைக் குழு 2011ல் இச்சட்டமுன்வடிவினை ஆய்வு செய்து
உச்ச வரம்பினை உயர்த்த வேண்டிய தேவையில்லை என்று பரிந்துரைத்தது. அந்த
நிலைக்குழுவிற்கு பாஜக தலைவர் யஷ்வந்த் சின்காதான் தலைவராக இருந்தார். இப்போது, அந்நிய நேரடி முதலீட்டுக் கான
உச்சவரம்பை 49 சதவீதமாக
உயர்த்துவதற்கான சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மோடி அரசாங்கம்
நடவடிக்கை எடுத்திருக்கிறது.
சர்வதேச நிதி மூலதனத்தை தாஜா செய்வதில் அதற்கிருக்கும் ஆர்வமும், நவீனதாராளமயக் கொள்கைகளைப் பின்பற்று
வதில் அதற்கிருக்கும் பிடிவாதமும் இதில்நன்கு வெளிப்படுகிறது. நாடாளுமன்றத் தில்
இச்சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படும்போது, முன்பு எப்படியாவது இதனைநிறைவேற்றிட வேண்டும் என்று
துடித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியும்அதனை ஆதரிப்பதில் எவ் விதத் தயக்கமும்
காட்டாது. இக்கொள்கைகளைப் பொறுத்த வரையில் இவ்விரு கட்சிகளுக் கும் இடையே எவ்வித
வித்தியாசமும் கிடையாது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் இவை.இன்சூரன்ஸ்
துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு இவை முன்வைக்கும் வாதங்கள் இவற்றால்
காலங்காலமாகச் சொல்லப்படுபவைகளே.
இவற்றின் விரிவாக்கத்திற்காக அதிக மூலதனத்தை இது கொண்டு வருமாம், மக்கள் மத்தியில் இன்சூரன்ஸ்
செய்யப்படுவதை இது அதிகரித்திடுமாம், அதிக வேலை வாய்ப்பு களையும் இது உருவாக்கிடுமாம். இவ்வாதங்களை மிக
எளிதாக மறுதலித் திட முடியும். இந்தத் துறையைப் பொறுத்த வரை உள்நாட்டு
மூலதனத்திற்குப் பஞ்சமே இல்லை. அதேபோல் அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இதுநாள்
வரையிலான ஸ்திரத்தன்மையற்ற செயல்பாடும், தங்களின் கொள்ளை லாபக் குறிக்கோளை மறைத்து மக்க ளிடம் கொண்டுசென்ற
தந்திரமான நடைமுறைகளும் மக்கள் மத்தியில் எவ்வித மான நம்பிக்கையையும் ஏற்படுத்திட
வில்லை. 2008ல் ஏற்பட்ட உலகப்
பொருளா தார நெருக்கடி அமெரிக்காவின் நிதித்துறையின் அவலட்சணங்களையும்
மக்கள்எப்படியெல்லாம் மோசடிக்கு உள்ளாக்கப் பட்டார்கள் என்பதையும் உலகுக்கு நன்கு
அம்பலப்படுத்திவிட்டது. அமெரிக்காவின் மிகப்பெரும் காப்பீட்டு நிறுவன மான ஏஐஜி
அநேகமாக மூழ்கியே போய் விட்டது.
அமெரிக்க அரசாங்கம்தான் மிகப்பெரிய அளவில் நிதி உதவி செய்து அதனைத்
தூக்கி நிறுத்தி இருக்கிறது. இத்தகைய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள
மறுப்பதுடன், எவ்விதக்
கட்டுப்பாடுமின்றி செயல்பட்டு உடைந்து சின்னாபின்னமாகிப் போயுள்ள இதேவிதமான
நிதித்துறை அமைப்பை இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் மற்றும் நிதித்துறை
நிறுவனங்களுக்கும் இறக்குமதி செய்திட இந்த அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பலவிதமான மோசடிகளிலும் தில்லுமுல்லுகளிலும்
ஈடுபட்டதன் பின்னணியில்தான் 1956இல் இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப் பட்டது. அந்தக்
காலத்தில் நடந்தவற்றையெல்லாம் சற்றே திரும்பிப் பார்த்திடுவோம். லாபம் ஒன்றையே
குறிக் கோளாகக் கொண்ட அந்நிய நிறுவனங்கள் நம் நாட்டிற்குள் நுழைவதன் மூலம் நம்
நாட்டு மக்களின் சேமிப்புகளும், நலன் களும் அபாயத்திற்குள்ளாகும் என்பதில் எவ்வித ஐயத்திற்கும்
இடமில்லை.
தற்சமயம், எல்ஐசி எனப்படும் ஆயுள்இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன்
போட்டிபோட்டு, ஆயுள் இன்சூரன்ஸின்
சந்தைப் பங்கில் 74 சதவீதத்தினைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. எல் ஐசி அரசாங்கத்திற்கு
மிகப்பெரிய தொகையினை ஈவுத்தொகையாக அளித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத் தின்
நேரடி கட்டுப்பாட்டில் பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதுமான அளவிற்கு முதலீடும்
செய்து கொண்டிருக்கிறது. இன்சூரன்ஸ் துறையையும்,
பென்ஷன் நிதியத்தினையும் தனியாருக்குத்
தாரை வார்ப்பது மற்றும் அவற்றை சந்தையின் ஏற்ற இறக்கத்திற்குத் தள்ளிவிடுவது
என்பதன் பொருள் அரசாங்கத்தின் வளர்ச் சித் திட்டங்கள் மற்றும் மக்களின் சமூக நலத்
திட்டங்களைக் காவு கொடுத்து அவற்றை பெரும் நிதிமுதலைகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு
வழியேற்படுத்தித் தருவது மற்றும் கார்ப்பரேட் நலன்களுக்கு சேவகம் செய்வது
என்பதேயாகும்.
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை
உயர்த்துவது என்று சொல்கிறபோது, பென்ஷன் துறையிலும் அந்நிய நேரடிமுதலீட்டின் உச்சவரம்பை உயர்த்தப்
போகிறார்கள் என்றே அர்த்தமாகும். ஏனெனில் பென்ஷன் துறையும் இன்சூரன்ஸ் துறையுடன்
இணைக்கப் பட்ட ஒன்று. வங்கித்துறை, தனியாருக்குத் திறந்து விடப்பட்டிருப்பதுடன் இதுவும்
சேர்த்துபார்க்கப்பட வேண்டும். வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டபின் முதன்முதலாக
தொழில் நிறுவனங்களும் தனியார் வங்கிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டிருக்கின் றன.
வங்கித்துறையில் அந்நிய நேரடிமுதலீடு 26 சதவீதம். ஆயினும் வங்கிச் சட்டத்தின்படி வாக்களிப்பதற்கான உச்சவரம்பு
10 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்த்தப்பட்டு
சட்டத்திருத்தம் சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்டுவிட் டது.
இதன் மூலம் இப்போது அயல்நாட்டு வங்கிகள் இந்தியாவில் உள்ள தனியார்
வங்கிகளை மிக எளிதாக கபளீகரம் செய்திட முடியும். இந்த பட்ஜெட்டில்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகளையும் பெருமளவில் தனியாருக்குத்
தாரைவார்த்திட உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. நிதித்துறை தாராளமயத்திற்கு எதிரான
போராட்டம், (அந்நிய மூலதனத்திற்கு
இன்சூரன்ஸ் துறையைத் திறந்துவிடுதலை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும்)
நவீன தாராளமய ஆட்சிக்கெதிரான போராட்டத் தின் முக்கியமானதொரு பகுதியாகும்.
இக்கொள்கைகள் நாட்டு மக்களின்நலன்களுக்கும், நாட்டின் இறையாண் மைக்கும் எதிரானவைகளாகும்.
இது இன்சூரன்ஸ் துறையில் பணி யாற்றும் ஊழியர்களின் போராட்டமாக
மட்டும் பார்க்கப்படக்கூடாது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கமும்
இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் இப்போராட்டத்தினைத் தங்களு டையதாக எடுத்துக்
கொள்ள வேண்டும். இன்சூரன்ஸ் சட்டத்தில் கொண்டுவர இருக்கிற சட்டத்திருத்தத்திற்கு
எதிராக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளி யிலேயும், ஒரு வலுவான போராட்டத்தை நடத்திட வேண்டும். - தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment