Wednesday, March 13, 2013

இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் - மனித உரிமை மீறல்கள் - விசாரணை வேண்டும்!





ஜி.ராமகிருஷ்ணன்மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

இலங்கை தமிழ்மக்களின் துன்ப-துயரங்கள் முடிவில்லாத தொடர்கதை யாக தொடர்வது வேதனையளிப்பதாக உள்ளது. இலங்கை விடுதலை பெற்ற பிறகு தொடர்ச்சியாக வந்த அரசுகள் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகள்தான் அங்கு இனரீதியான பிரச்சனை எழுவ தற்குக் காரணமாக அமைந்தது. இதன் காரணமாக சொந்த நாட்டிற்குள்ளேயே இரண்டாம்தர குடிமக்களாக தமிழ் மக் கள் உணரத்தலைப்பட்டனர். அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்துடன் பெரும்பான்மை மக்களை மட்டும் திருப்திபடுத்தக்கூடிய, இலங்கை அர சின் நியாயமற்ற அந்த அணுகுமுறை இப்போதும் மாறவில்லை என்பதுமட்டு மல்ல, தீவிரமடைந்துள்ளது என்பது தான் உண்மை.இலங்கையின் பூர்வகுடிகளான தமிழ்மக்கள் அனைத்து நிலைகளிலும் சமமாக நடத்தப்பட வேண்டும்.
அவர் களது சமூக, பொருளாதார, பண் பாட்டு, வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்பின் முரணின்றி தொடர்ச்சியாக வலியுறுத்திவந்துள் ளது. இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்ச னைக்கு அரசியல்ரீதியான தீர்வு காணப்படவேண்டும் என்பது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்து வரும் தொடர்ச்சியான நிலைபாடாகும்.இந்தப் பின்னணியில் இலங்கை யில் நீடித்துவந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன பின்னும் கூட இறுதிக்கட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட கடுமையான, சகிக்கமுடியாத மனித உரிமை மீறல் களில் ஈடுபட்டவர்களை தண்டிப்ப திலோ, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவர்களது சொந்த வாழ் விடத்தில் மீள்குடியமர்த்தி நிவாரணம் வழங்குவதிலோ, மெய்யான அர்த்தப் பூர்வமான அதிகாரப்பரவல் மூலம் இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காண்பதிலோ ராஜபக்சே அரசுக்கு கொஞ்சம்கூட அக் கறையில்லை என்பது மீண்டும் மீண் டும் மெய்ப்பிக்கப்பட்டுவருகிறது.அண்டைநாடு என்ற முறையிலும், சார்க் கூட்டமைப்பில் அங்கம் என்ற முறையிலும் இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சனைகள் தமிழகத்திலும் இயல்பான முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற முறையிலும் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனை யில் ராஜீய ரீதியாக இந்தியா தலை யிட்டு தீர்வுக்கு உதவ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச் சியாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசின் அணுகுமுறையும் திருப்தியளிப்பதாக இல்லை.
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் விவாதத்திற்கு வந்துள்ள நிலையிலும், எல்டிடிஇ தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான புதிய ஆதா ரங்கள் வெளிவந்துள்ள நிலையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சனை மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது.நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலையை தெளிவாக எடுத்துவைத்தது.இறுதிக்கட்ட போரின்போது இலங் கை ராணுவம் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிந்துள்ளது. சொந்த மக்களுக்கு எதி ராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மிக வும் பயங்கரமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியதோடு, தமிழ் மக்களை திட்டமிட்டு கொன்று குவித்திட காரண மாக இருந்தவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிப்பதில் கால தாமதம் செய்வது சகித்துக்கொள்ள முடியாதது என்றும் எடுத்துரைத்தனர்.ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை செயல்படுத்த இலங்கை தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், அதை தட்டிக்கேட்க ஐக்கிய முற்போக் குக்கூட்டணி அரசு தயங்குவது ஏன் என கேள்வியெழுப்பியதோடு, இந்தப் பிரச்சனையில் இந்திய அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையையும் கேள் விக்குறியாக உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை கவுன்சில் அமர்வில் இலங் கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது தமிழ்மக்களுக்கு எதி ராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள், அட் டூழியங்கள் குறித்து நியாயமான, உயர்மட்ட, நம்பகத்தன்மை கொண்ட, சுயேட்சையான விசாரணையை இந் தியா கோரவேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.இறுதிக்கட்ட போரின்போது தமிழ் மக்களுக்கு ஏராளமான கொடுமைகள் இழைக்கப்பட்டது குறித்து பொதுவாக தகவல்கள் வெளியானாலும் அடுத்த டுத்து வரும் தகவல்கள் இதயத்தை பதறவைப்பதாக உள்ளது. 40ஆயிரத் திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக் கள் போரின்போது கொல்லப்பட்டதாக ஐ.நா.நியமித்த குழுவின் அறிக்கையே கூறுகிறது. உண்மையில் இந்த எண் ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.வெற்றி என்ற ஒற்றை இலக்கை மட்டுமே வைத்துக்கொண்டு இலங்கை ராணுவம் சர்வதேச ரீதியிலான அனைத்து நியதிகளையும், நியாயங் களையும் அப்பட்டமாக மீறியுள்ளது என்பது வெளிப்படை. உயிருக்குப் பயந்து காட்டுக்குள் பதுங்கியி ருந்த தமிழ்மக்கள் மீது காற்றில் உள்ள ---- 

ஆக்சிஜனை உறிஞ்சும் வேதியியல் குண்டுகளை வீசி மக்கள் மூச்சுத்திணறி இறந்து போகும்படி செய்யப்பட்டிருக் கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.போர் நிறுத்தப்பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங் களுக்குச் சென்ற மக்கள் மீது கூட கொத்துக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மருத்துவம னைகள், செஞ்சிலுவைச் சங் கம் போன்ற மனித முகாம் கள் மீதும் வெறித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள் ளது. இந்த தாக்குதலால் படுகாயமடைந்து உயி ருக்குப் போராடிய மக்க ளுக்கு மருத்துவ உதவிகூட மறுக்கப்பட்டுள்ளது. மருத் துவமனைகளில் அனுமதிக் கப்பட்டு ரத்தம் சிந்திக்கொண் டிருந்த சிலரின் ரத்தத்தைப் பிடித்து மீண்டும் அவர்க ளுக்கு ஏற்றுமளவிற்கு நிலை மை கொடூரமாக இருந்துள் ளது.விடுதலைப்புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டு பிடித் துச் செல்லப்பட்ட ஏராளமான இளைஞர்களின் கதி என்ன வென்று இன்றுவரை தெரிய வில்லை.
தமிழ்ப் பெண்கள் ஏராளமானோர் பாலியல் பலாத்காரத்திற்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.ஏராளமானோர் கை,கால்களை இழந்து, மன நிலை பாதிக்கப்பட்டு உயிரை மட்டும் கையில்பிடித்தபடி வாழ்ந்து வருகின்றனர். முள் வேலி முகாம்களில் அடைக் கப்பட்டிருந்தவர்களில் பெரும் பகுதியினர் வெளியேற்றப் பட்டுவிட்டதாக இலங்கை அரசு கூறிக்கொண்ட போதும், அவர்களது சொந்த வாழ் விடங்களில் அவர்கள் மரி யாதையோடு குடியமர்த்தப் பட்டார்கள் என்று கூறமுடி யாது. போரின் போது காணா மல்போன அல்லது ராணு வத்தினரால் பிடித்துச்செல் லப்பட்ட தங்களது உறவினர் களின் கதி என்ன என்ற அழு குரல்கள் இன்னமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.எல்டிடிஇ தலைவர் பிரபா கரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட புகைப்படத்தை சேனல்-4 என்ற தொலைக் காட்சி நிறுவனம் அண்மை யில் வெளியிட்டது. இதைப் பார்க்கும் மனித நேயம் கொண்ட யாரும் பதறாமல் இருக்கமாட்டார்கள். இலங் கை அரசின் ஒப்புதல் இல் லாமல் இப்படியொரு படு கொலை நடந்திருக்க வாய்ப் பில்லை. ஆனால் இந்தப் புகைப்படம் போலியானது என்று கூறுவதன் மூலம் தனது போலித்தனத்தின் அடர்த்தியை இலங்கை அரசு வெளிப்படுத்திக் கொண்டுள் ளது.
இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட போர் படிப்பி ணைகள் மற்றும் நல்லிணக் கக் குழுவின் பரிந்துரைக ளில் 99 சதவீதத்தை நிறை வேற்றிவிட்டதாக இலங்கை அரசின் அமைச்சர் கூறுகி றார். ஆனால் இது உண்மை யில்லை என்பதுதான் உண்மை. ஐ.நா.நியமித்த குழுவின் பரிந்துரைகளும் நிறைவேற் றப்படவில்லை.போர் முடிந்தபிறகு அதி காரப்பரவல் மூலம் இலங் கைத் தமிழர்களுக்கு உரிமை கள் வழங்கப்படும் என்றும் 13வது அரசியல் சாசன திருத்தம் மட்டுமல்ல, அதற்கு மேலாகவும் உரிமைகள் தரு வோம் என்று ராஜபக்சே கூறி னார். ஆனால் சமீபத்தில் திரிகோணமலையில் பேசும் போது, இலங்கைத் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பரவல் தரமுடியாது என்றும், ராணுவத்தை தமிழ்மக்கள் வாழும் பகுதியிலிருந்து விலக் கிக்கொள்ளமுடியாது என் றும் ஆணவமாகக் கூறியுள் ளார். அதிகாரப்பரவல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசு நடத்தும் பேச்சு வார்த்தை வெறும் இழுத் தடிப்பு உத்தியாகவே உள் ளது.தமிழ்மக்கள் பாரம்பரிய மாக வசித்த பகுதிகளில் ராணுவத்தை நிரந்தரமாக நிறுத்திவைப்பதும் பெரும் பான்மை சிங்கள மக்களை குடியமர்த்துவதும் வேகவேக மாக நடந்துவருகின்றன. புராதன பெருமை மிக்க ஊர் களின் தமிழ்ப் பெயர்கள் கூட சிங்களமயமாக்கப்படுகிறது. தமிழ் மக்கள் தங்களது வழி பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்குக் கூட ராணுவத்தின் அனுமதி பெறவேண்டிய அவல நிலை நீடிக்கிறது.இந்தப் பின்னணியில் வடக்கு-கிழக்கு மாகாணங் களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும். தமிழ் மக்களும் தமிழ் மொழி யும் பண்பாடும் அனைத்து நிலைகளிலும் சமமாக நடத் தப்படவேண்டும் என்று மீண் டும் மீண்டும் வலியுறுத்து வது அவசியமாகிறது. இதற் கான அழுத்தத்தை இலங் கை அரசுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவம் நிகழ்த் திய மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேட்சையான, உயர்மட்ட, நம்பகத்தன்மை யுள்ள விசாரணை நடத்த இலங்கை அரசை ஒத்துக் கொள்ள வைக்க ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்தியா கோர வேண்டும்.
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் கடந்த முறை இலங்கைக்கு எதிராக தீர்மா னம் கொண்டுவரப்பட்ட போது இந்திய அரசு தீர்மா னத்தை ஆதரித்தது. இப் போது அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர் மானத்தை ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வந் துள்ளது. இந்தத் தீர்மானமே இலங்கைத் தமிழ்மக்களின் அனைத்து துன்ப-துயரங் களுக்கும் தீர்வு கண்டுவிடும் என்ற மாயத்தோற்றம் ஏற் படுத்தப்படுகிறது.அமெரிக்காவைப் பொறுத்த வரை இலங்கைத் தமிழ் மக் களுக்கு ஆதரவாக இந்தத் தீர்மானத்தை கொண்டுவர வில்லை. மாறாக மூன்றாம் உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு ஏகாதிபத்திய நலனை நிலை நிறுத்த வேண்டும் என்ற அத னுடைய அப்பட்டமான சுய நலமும் இதில் கலந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.இராக், ஆப்கானிஸ் தான், சிரியா போன்ற நாடு களில் அமெரிக்கா அப்பட்ட மான ஆக்கிரமிப்பு நோக்கு டன் தலையிடுகிறது. அந் நாட்டு மக்களின் மனித உரி மைகளை காலில் போட்டு மிதிக்கிறது. அதே நேரத்தில் மனித உரிமை மீறல் என் பதை பிற நாடுகளுக்கு எதி ரான மிரட்டல் ஆயுதமாகவே அமெரிக்கா தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளது. உண்மையில் உலகளவில் அதிகமான போர்க்குற்றங் களில் ஈடுபடுவதிலும், மனித உரிமைளை மீறுவதிலும் முத லிடத்தில் இருப்பது அமெரிக் காவே ஆகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண் டும்.1980களில் இலங்கை யில் நடந்த கொடூரமான படுகொலைகளை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண் டித்தது. ஆயுத மோதலால் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்று வலி யுறுத்தியது. இதைத்தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதோடு இறுதிக்கட்ட போர் முடிந்த நிலையில் போரினால் பாதிக் கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து சென் னையில் சிறப்புக்கருத்தரங்கு ஒன்றை மார்க்சிஸ்ட்கம்யூ னிஸ்ட் கட்சி நடத்தியது. இதில் கட்சியின் அகில இந் திய பொதுச் செயலாளர் பிர காஷ் காரத் மற்றும் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் தில் லியிலும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.இலங்கை கடற்படையின ரால் இந்திய மீனவர்கள் சுட் டுக்கொல்லப்படுவதைக் கண் டித்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முன்பு கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந் தப்பிரச்சனைக்காக தொடர்ந்து கட்சி போராடி வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம் களில் தங்க வைக்கப்பட் டுள்ள மக்களின் பிரச்சனை களுக்காகவும் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.பல பத்தாண்டுகளாக குறிப் பாக இறுதிக்கட்ட போரின் போது, இலங்கைத் தமிழ் மக் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டும். அவர்கள் இனி யாவது நிம்மதியாக வாழ வேண்டும். அதற்குரிய அதி காரப்பரவல் அடிப்படையி லான அரசியல் தீர்வு வேண் டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து வந்துள்ளது. அதற் கான போராட்டம் தொய் வின்றி தொடரும்.


No comments: