Sunday, November 11, 2012

‘அவர் கடவுளின் சொந்தக்காரர்’ பிரகாஷ் காரத்




தோழர் சமர் முகர்ஜி நவம்பர் 7 அன்று நூறு வயதைத் தொட்டுள்ளார்.  சமர்தா என அன்புடன் அழைக்கப் படும் அந்தத் தலைவரின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் நானும் பங்கேற்றேன். கொல்கத்தாவில் தில்குஷா தெருவில் வெகுகாலம் கட்சிக் கம்யூனாக விளங்கிய அவரது இல்லத்திற்கு வெளியில் பாராட்டு விழாக் கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இன்றையதினம் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் கட்சி உறுப் பினர்களில் சமர்முகர்ஜியே மிகவும் வயதானவர். ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி நடைபெறுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அதே நவம்பர் 7 அன்று அவர் பிறந்தார்.  20ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளும் அவரது வாழ்வில் குறுக்கிட்டன.  வர லாற்றுச் சிறப்புமிக்க காலத்தில் அவற் றில் சில முக்கியநிகழ்வுகள் இப் போதும் நம்முன் பிரதிபலிக்கின்றன. அவர், தன்னுடைய 15வது  வயதில் ஓர் இளம் மாணவனாக இருக்கும்பொழு தே விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு, 1928இல் நடைபெற்ற ‘‘சைமன் கமிஷனே திரும்பிப்போ’’ இயக்கத்திலும் பங்கேற்றார்.

1930இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத் திலும் கலந்து கொண்டு அதே ஆண்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.  1938 இல் ஹவுரா மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவ ரானார்.1940ல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். இவ்வாறு கம்யூ னிஸ்ட் இயக்கத்தில் அவரது கடின மான, ஆனால் குறிப்பிடத்தக்க பங்க ளிப்பு தொடங்கியது. ஹவுரா மாவட்டத் தில் விவசாயிகள் இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் அவர் ஏற்படுத்தினார். 1943இல் பம்பாயில் நடைபெற்ற முதல் கட்சிக் காங்கிரசில் பிரதிநிதியாகக் கலந்துகொண்டவர் களில்  இன்று உயிருடன் இருப்பவர் அவர் ஒருவர் மட்டுமே. நாடு சுதந்திரம் அடைந்து வங்கம் இரண்டாகப் பிரிக்கப் பட்டபின், கிழக்கு வங்கத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த லட்சக்கணக்கான மக்களின் பிரச்ச னைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அகதிகள் இயக்கத்தைக் கட்டியதில் தோழர் சமர் முகர்ஜி மிகக் குறிப்பிடத்தக்க அளவிற்குச் செயல் பட்டார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 1961ல் வங்காள மாநில செயற் குழு உறுப்பினரானார். அதன் பின்னர் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டத்தில் அவர் மிக முக்கியப் பங்காற்றினார். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. சமர் முகர்ஜி கட்சியின் மத்தியக் குழுவிற்கு 1966இல் தேர்வு செய்யப்பட்டார். அவர் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் 1982இலிருந்து 1998வரை பணியாற்றினார். தோழர் சமர் முகர்ஜியின் மற்று மொரு முக்கிய பரிணாமம், அவர் 1971ல் நாடாளுமன்ற மக்களவைக்கு முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தொடங்கியது. அவர் மக்களவை உறுப்பினராக 1984 வரை தொடர்ந்து பணியாற்றினார். பின்னர் 1993 வரை இருமுறை மாநிலங்களவை உறுப்பின ராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஏ.கே. கோபாலன் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த சமயத்தில் அவர் துணைத் தலைவராக இருந்தார். பின்னர், 1977இலிருந்து 1984வரை மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்குழுவின் தலைவராக வும் செயல்பட்டார். ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்றவாதி என்ற முறையில் அவர் தொழிற்சங்க இயக்கப் பிரச்ச னைகளையும், மக்கள் பிரச்சனை களையும் மிகவும் திறமையுடன் நாடா ளுமன்றப் பணிகளுடன் இணைத் திட்டார். சிஐடியுவின் வளர்ச்சியிலும் சமர் முகர்ஜி முக்கியப் பங்களிப்பினைச் செய்தார். சிஐடியுவின் பொருளாள ராகவும் பின்னர் பொதுச் செயலாள ராகவும் இருந்தார். 1974ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களில் அவரும் ஒருவர். கட்சி அமைப்பாளராக, தொழிற் சங்கத் தலைவராக, நாடாளுமன்ற வாதியாக கட்சி தன்னிடம் ஒப்படைத்த அனைத்துப் பொறுப்புக்களையும் சமர் முகர்ஜி மிகவும் அர்ப்பணிப்பு உணர் வுடனும், உன்னிப்பான  கவனத்துட னும்  ஆற்றினார்.  சமர்தா மிகவும் புடம்போட்டு எடுக் கப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட்டாவார். மிக மிக எளிமையாக வாழ்ந்து கொண்டி ருக்கிறார். அவர் நாடாளுமன்றத் தலை வராகச் செயல்பட்ட சமயத்திலும் கூட, கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத் தில் அவருக்கு அளிக்கப்பட்ட சிறிய அறையிலேயே  (முதலில் அது 4, அசோகா ரோடில் இருந்தது, பின்னர் விண்ட்சார் பிளேசுக்கு மாறியது) எப் போதும் தங்கி  இருந்தார்.

கட்சி அளித் திடும் மிகச் சிறிய ஊதியத்திலும் பெரும்பகுதியை சேமித்து வைத்து, கட்சிக்கு நன்கொடையாக வழங்கி விடுவார். கொல்கத்தாவில்  கட்சிக் கம்யூனில் வாழ்வதை அவர் இப் போதும் தொடர்கிறார்.சமர்தா இனிய பண்புக்குச் சொந்தக்காரர். தோழர்களிடம் மிகவும் நேசத்துடனும், பிரியத்துடனும் பழகக் கூடியவர். அவரது காலத்திய புரட்சி யாளர்கள் பலரைப் போலவே அவரும் திருமணம் செய்துகொள்ளவே இல்லை.தோழர் ஜோதி பாசு, சமர் குறித்து அடிக்கடி அவர் கடவுளின் சொந்தக் காரர்’’ (Gods's own man) என்று கூறு வார். நல்ல மனிதனுக்கு வேண்டிய அனைத்து குணநலன்களும் பெற்ற ஒரு சுயநலமற்றவன் என்று ஆங்கிலத் தில் இதற்குப் பொருளாகும்.தங்களிடமுள்ள அனைத்தையும் கட்சிக்காகத் தியாகம் செய்துவிட்டு, முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் கட்சிக்குப் பணியாற்றிய முந்தைய தலைமுறை கம்யூனிஸ்ட்டுகளில் இன்று உயிருடன் இருக்கும் ஒரே தலைவர் தோழர் சமர் தா மட்டுமே.சமர் முகர்ஜியால் மேற்கொள்ளப் பட்ட மிக உன்னதமான எடுத்துக் காட்டாய் விளங்கக்கூடிய வாழ்க்கை யை முன்மாதிரியாய் எடுத்துக் கொண்டு முன்னேறிட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் மென்மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திட வேண்டும் என்று கட்சித் தோழர்கள் அனை வரின் சார்பாகவும் நாம் அவரை வாழ்த்துகிறோம்.

 - தமிழில்: ச.வீரமணி


No comments: