Wednesday, April 20, 2011

இடதுமுன்னணிக்கு பெருகும் ஆதரவு -பிரகாஷ் காரத்

தற்சமயம் நாட்டில் நடைபெறும் ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களைப் பொறுத்த வரை, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடைபெறும் தேர்தல்கள் நாட்டில் உள்ள இடதுசாரிகளுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதுகிறேன். அவற்றின் வெற்றி நாடு முழுதும் உள்ள இடதுசாரிகள் தேசிய அளவில் ஓர் இடதுசாரி மற்றும் ஜனநாயகப் பாதையில் முன்னேறுவதற்கு உதவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

கொல்கத்தாவில், தேர்தலையொட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள cpimwb.org/vote இணையதளத்திற்கு பிரகாஷ் காரத் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

* தமிழ்நாடு, அஸ்ஸாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுள்ள தேர்தல்கள் குறித்து தங்கள் மதிப்பீடு என்ன?

கேரளம், தமிழ்நாடு, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவுகள் ஏற் கனவே முடிந்துவிட்டன. அனைத்து மாநி லங்களிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட் டணிக் கட்சிகளுக்கு எதிராக மக்கள் மத்தி யில் கசப்புணர்வு வலுவாக இருப்பதை தெளி வாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. தமிழ்நாட் டைப் பொறுத்தவரை அது திமுக-காங்கிரஸ் கூட்டணியாக இருக்கிறது. அஸ்ஸாமில், காங்கிரஸ் கட்சியானது போடோ மக்கள் முன் னணியுடன் கூட்டணி வைத்துக் கொண்டி ருக்கிறது. கேரளாவில், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி. குறிப் பாக, கேரளாவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சியிலிருந்த இடது ஜனநாயக முன்ன ணிக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான போக்கு (யவேi-inஉரஅநெnஉல வசநனே) எதுவும் இல்லை. எனவே மீண்டும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமே அமையும் என்று நாம் எதிர்பார்க்க முடியும். தமிழ்நாட்டில் வாக் குப் பதிவு முடிந்தபின் உள்ள நிலைமைகள், அஇஅதிமுக தலைமையிலான முன்னணி வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அஸ்ஸாமில் சென்ற முறைகூட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திடவில் லை. இந்தத் தடவையும்கூட அதேபோன்று எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக் காது என்றும் தேர்தல் முடிவுக்குப்பின் அமையும் கூட்டணியைச் சார்ந்தே ஆட்சி அமையும் என்றே நினைக்கிறேன்.

* சட்டமன்றத் தேர்தல்களில் இந்தத் தட வை லஞ்சஊழலும் விலைவாசி உயர் வும் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறி யிருப்பதுபோல் தோன்றுகிறது. இதன் தாக்கம் கேரளாவில் எப்படி இருந்தது?

லஞ்சஊழலும் பணவீக்கமும் தேசிய அளவில் மிகப் பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன. மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இவற்றின் விளைவுகளை நன்றாகவே காண முடிந்தது. உண்மையில், இவ்விரண்டு பிரச்சனைகளும் மக்கள் மத்தி யில் கடும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பின்னணியில்தான் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மிகவும் அனு கூலமான முறையில் நிலை கொண்டிருக் கிறது. லஞ்ச ஊழலைப் பொறுத்தவரை, காங் கிரசின் சித்திரம் (iஅயபந), அதிலும் குறிப் பாக மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசாங்கத்தின் மீது மக்களுக் கிருந்த மதிப்பு, பல்வேறு பெரும் லஞ்ச ஊழல் களினால் மிகவும் தாழ்ந்து போய் கிடக்கிறது.

* மேற்கு வங்கத்திலும் இப்பிரச்சனைகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத் தும் என்று கருதுகிறீர்களா?

விலைவாசி உயர்வும் லஞ்ச ஊழலும், மேற்கு வங்கத்திலும் அதன் தாக்கத்தை ஏற் படுத்திடும். ஏனெனில் நாடு முழுதும் மக்கள் ஊழலின் காரணமாக விளைந்துள்ள கேடு கெட்ட விளைவுகளை நன்கு உணர்ந்திருக் கிறார்கள். அதிலும் குறிப்பாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடு சுதந்திரம் பெற்றபின் நடைபெற் றுள்ள ஊழல்களிலேயே பிரம்மாண்டமான ஊழலாகும். உதாரணமாக, தமிழ்நாட்டின் கிரா மங்களில் உள்ள ஆண் - பெண் - குழந்தை கள் என அனைவரும் 2ஜி ஊழல் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்கள். வங்கத்திலும் கூட, லஞ்ச ஊழல் சம்பந்தமாக நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என் பதை அறிந்து வைத்திருப்பார்கள் என்று நிச் சயமாக நான் நம்புகிறேன். இங்குள்ள இடது முன்னணியும் லஞ்ச ஊழல் பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலை மையிலான அரசாங்கம் குறித்தும், அதில் ஓர் அங்கமாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் குறித்தும் வங்க மக்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றே நான் கருது கிறேன்.

* வங்கத்தில் ஆட்சியிலிருந்த ஏழாவது இடது முன்னணி அரசாங்கம் அதிக மாக ஒன்றும் சாதித்திடவில்லை என் றும், குறிப்பாக நந்திகிராமம் போன்ற நிகழ்வுகள் அதன் ஆட்சிமீது களங்கத் தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் குறைகூறப்படுகிறதே, அவ்வாறு குறைகூறுகிறவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மேற்கு வங்க ஏழாவது இடது முன்னணி அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சாதனைக ளை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில், இடது முன்னணி அரசாங்கமானது நிலமற்ற விவசா யிகளுக்கு 20 ஆயிரம் ஏக்கர்கள் நிலங்களை மறுவிநியோகம் செய்திருக்கிறது. விவசாய வளர்ச்சியையும் தொடர்ந்து உறுதியாக மேற் கொண்டு வந்திருக்கிறது. அகில இந்திய மட் டத்தில் விவசாய வளர்ச்சி என்பது தேக்க நிலையை அடைந்திருக்கக்கூடிய அதே சம யத்தில், மேற்கு வங்கத்தில் மட்டும் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. விவசாய உற்பத்தியில் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி விகிதம் என்பது தேசிய சராசரியைவிட பன்மடங்கு அதிகமாகும்.

* மேற்கு வங்கத்தில் முஸ்லிம் சிறுபான் மை இனத்தவரின் வளர்ச்சிக்கு இடது முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள நிலச் சீர்திருத்தங்கள் மாநிலத்தில் உள்ள ஏழை விவசாயக் குடும்பங்கள் மற்றும் நிலமற்ற விவசாயக் குடும்பங்களுக்கும் நிலத்தை விநி யோகம் செய்திருக்கின்றன. இவற்றில் முஸ் லிம் இனத்தவரும் அடங்குவர். வங்கத்தில் இதுவரை விநியோகிக்கப்பட்ட மொத்த நிலங் களில் 18 விழுக்காடு முஸ்லிம் குடும்பங் களுக்குச் சென்றிருக்கிறது. முஸ்லிம் சிறு பான்மை இனத்தவருக்கு வேலைகளில் ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று ரங்க நாத் மிஸ்ரா ஆணையம் அளித்திட்ட பரிந் துரைகளை அமல்படுத்துவதில் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் பெரிய அள வில் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கி றது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட் டில் உள்ள சட்டங்களில் உள்ள கட்டுப்பாடு களை எல்லாம் கணக்கில் கொண்டு நாம் இதனைச் செய்திருக்கிறோம். முஸ்லிம் சிறு பான்மை இனத்தவரில் உள்ள இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு ஒதுக் கீடு அளித்திருக்கிறோம். இதன் மூலம் மாநி லத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 1 கோடியே 72 லட்சம் மக்கள் பயன் அடைந் திருக்கிறார்கள். இவ்வாறு வேறெந்த அரசாங் கமும் - மத்திய அரசாங்கமும் சரி அல்லது வேறெந்த மாநில அரசாங்கமும் சரி - நடவடிக்கை எடுத்திட வில்லை.

* திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒரு முற்போக்கான அரசியல்வாதி என்றும் அவர் வங்கத்தில் மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் ஊடகங்களில் சிலவும் மற்றும் அறிவு ஜீவிகளில் சிலரும் கருதுகிறார்களே, இதனை எவ்வாறு நீங்கள் விளக்கு கிறீர்கள்?

வங்கத்தில் இது தொடர்பாக ஒரு வரலாறு இருக்கிறது. இதற்கு முன்பும்கூட பலதடவை கள், அதிதீவிர இடதுசாரிகள் பிரதானமான ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் கைகோர்த் தது உண்டு. மேற்கு வங்கத்தில் இந்த நிலை மை வருவதற்குப் பிரதானமான காரணம், இங்கே இடதுசாரிகள் மிகவும் வலுவான சக்தியாக இருப்பதேயாகும். வலதுசாரி சக்தி கள், இடதுசாரிகளை முறியடிக்க சூழ்ச்சி செய்யும்போதெல்லாம் அவர்கள் இடது அதி தீவிரவாதிகளுடனும் கைகோர்த்துக் கொள் கிறார்கள். மீண்டும் அதேதான் இப்போதும் நடைபெற்றிருக்கிறது. திரிணாமுல் காங் கிரஸ், மாவோயிஸ்டுகளுடனும், மாவோ யிஸ்ட்டுகள் திரிணாமுல் காங்கிரசுடனும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது அறிவுஜீவிகளில் ஒரு பிரிவினர் மத்தியில் பிரதிபலிக்கிறது.

* மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்த லில் நாட்டின் பிரதான தேசியக் கட்சி களான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றின் பங்களிப்பு என்ன வென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

எங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் மிகவும் வலுவாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் இடதுசாரி எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு சக்திக ளும் ஒன்றாகக் குவிவதைப் பார்க்க முடியும். இதனை வெகு காலமாகவே கேரளாவில் நாம் பார்த்து வருகிறோம். உண்மையில், கேரளா வில், பாஜக-வினர் தங்கள் வாக்குகளை விற் கும் முறை இருந்து வருகிறது. அவர்கள் பொதுவாக தங்கள் வாக்குகளை காங்கிரசுக்கு மாற்றுவதில்லை, மாறாக உண்மையில் தங்கள் வாக்குகளை காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய ஜனநாயகக் முன்னணிக்கு விற் கிறார்கள். இங்கே, மேற்கு வங்கத்திலும் கூட, கிராமப்புறங்களில் விவசாயிகள் வர்க்க ரீதியாக அணிசேர்ந்திருப்பதன் காரணமாக பிற்போக்கு சக்திகளும் முன்னாள் நிலவுடை மையாளர்களும் ஒன்றிணைந்திருக்கிறார் கள். இவர்களில் சிலர் காங்கிரசில் இருக் கிறார்கள், சிலர் பாஜக-வில் இருக்கிறார்கள். தேசிய அளவில் உள்ள பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக இடதுசாரிகள் வருவதை விரும்ப வில்லை. காங்கிரஸ் அல்லாத, பாஜக அல் லாத சக்திகள் இடதுசாரிகள் தலைமையில் அணிசேருவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே இடது முன்னணியைத் தோற்கடிக்க காங்கிரசுடன் கை கோர்ப்பது உசிதமானது என்பதே பாஜக-வினரின் அரசியலாகும். நரேந்திர மோடி இங்கே வந்திருந்தபோது அவர் மம்தா பானர்ஜியை வானளாவப் புகழ்ந் ததிலிருந்து இதனை நாம் பார்க்க முடிந்தது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, இடது முன்னணிக்கு மாற்றாக பாஜக குறிப்பிடத் தக்க பங்கு எதனையும் ஆற்றப் போவதில் லை. எனவே அது திரிணாமுல் - காங்கிரஸ் கூட்டணிக்கு உதவிக் கொண்டிருக்கிறது. இதனை தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி ஆற்றிய உரைகளிலிருந்து பார்த்தோம்.

* கடந்த ஈராண்டுகளில் மேற்கு வங்கத் தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங் களின் பின்னணியில், இடது முன் னணி அமைதியைக் கொண்டுவர எவ் வாறு திட்டமிட்டிருக்கிறது?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சில இடங்களில் இடது முன்னணிக்குப் பின் னடைவு ஏற்பட்டதைக் கண்ட வலதுசாரி எதிர்க்கட்சிகள், இடதுசாரிகளைப் பின்னுக் குத் தள்ளிவிட வாய்ப்பு உண்டு என்று கருதி, வன்முறைகளில் ஈடுபட்டன. மிகவும் ஜன நாயக விரோதமாகவும் காட்டுமிராண்டித்தன மாகவும் வன்முறைச் செயல்களில் ஈடுபட் டனர். இவ்வாறு நடைபெற்ற வன்முறைச் சம் பவங்களில் மார்க்சிஸ்ட்டுகளைக் குறி வைத்து மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வன் முறைச் சம்பவங்கள் குறிப்பிடப்பட வேண் டியவைகளாகும். இந்தத் தேர்தலின்போதும், இந்தக் கும்பல் இடது முன்னணிக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்கலாம். இடது முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றால், பின், மாநிலத்தில் அமைதியை மீள ஏற்படுத்துவ தும் இடதுசாரிகளுக்கு எதிராக வன்முறை நடைபெற்ற இடங்களில் இயல்பு வாழ்க்கை யை மீள ஏற்படுத்துவதும் எளிதாக இருந்திடும்.

* மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணியின் வாய்ப்பு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்? 2009-இல் இருந்த நிலைமையைவிட மாற்றம் இருக்கிறதா?

2009-இல் இருந்த நிலைமையுடன் ஒப் பிடும்போது நிச்சயமாக மாற்றம் இருக்கிறது. மாநிலத்திலும் தேசிய மட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் 2009இல் நடைபெற்ற நிகழ்வுகள் அமைந்திருந்தன. ஆனால், இப்போது மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரசியல் நிலைமைகள் மாறி இருக்கின்றன. நான் முன்பே கூறியதுபோல, மக்களை இன்றைய தினம் கடுமையாகப் பாதித்துள்ளவை விலைவாசி உயர்வு போன்ற பிரதான பிரச்சனைகளாகும். இவ்வாறான விலைவாசி உயர்வுக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரசும் - காங்கிரசும் நேரடியான காரணங்களாகும். இது ஓர் அம்சம். மற்றொன்று, 2009 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் - ஸ்தாபன அம்சங்களி லும், அரசாங்கத்திலும் இருந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டு கடந்த ஈராண்டுகளில் அவை சரி செய்யப்பட்டிருக் கின்றன. எனவே, 2009 மக்களவைத் தேர்தலின்போது இருந்த நிலைமைகள் மாறும். இடது முன் னணி மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக் கை யைப் பெற்று வரவிருக்கும் தேர்தல் முடிவிலும் அது பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன்.

* தேர்தலுக்குப்பின்னர் உள்ள நிலை மைகள் எப்படி இருக்கும்? தேசிய அளவில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்?

ஐந்து மாநிலங்களிலும் நடைபெறும் தேர் தல்களைக் கணக்கில் எடுத்துக் கொண் டோமானால், இவற்றில் மேற்கு வங்கமும் கேரளமும் நாட்டில் உள்ள இடதுசாரிகளுக்கு மிகவும் முக்கியமானவை களாகும். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இடதுசாரிகளின் வெற்றி என்பது தேசிய அளவில் இடது ஜனநாயக மாற்றை முன்னெடுத்துச் செல் வதற்கான போராட்டப் பாதையில் இடதுசாரி களுக்கு உதவிடும். இவ்வாறு மேற்கு வங்கம் மற்றும் கேரள தேர்தல் முடிவுகள் நாட்டில் உள்ள அனைத்து இடதுசாரிகளுக்கும் உத் வேகம் அளிக்கக்கூடிய வகையில் அமைந் திடும் என்று கருதுகிறேன். தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளும்கூட முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஏனெனில் ஐமுகூட்டணி அரசாங்கம் இப்போது பிரதிநிதித்துவப்படுத் தும் நவீன தாராளமய - ஊழல் இடையே யான தொடர்பு மீது நேரடியான சம்மட்டி அடி யாக அது அமைந்திடும். ஊழல் தொடர்பு, தமிழ்நாட்டில் உள்ள திமுக தலைமை யிலான மாநில அரசாங்கத்தில் நேரடியாகவே பிரதிபலித்தது. எனவே, தமிழ்நாட்டு முடிவும் தேசிய அளவில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழில்: ச.வீரமணி

No comments: