Saturday, April 24, 2010

ஏப்ரல் 27 பொது வேலை நிறுத்தம் முழு வெற்றியாக்கிடுவோம்!-பிரகாஷ் காரத்




இடதுசாரிக் கட்சிகள் உட்பட 13 மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் - அதா வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந் திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அஇஅதிமுக, பிஜூஜனதா தளம், தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகியன - நாளும் ஏறும் உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஏப்ரல் 27 அன்று நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத் தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. கடந்த ஆறு மாத காலமாக விலைவாசி உயர்வுக்கு எதிராக நடந்து வரும் இயக்கத் தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக் கையாகும். ஏப்ரல் கடைசி வாரத்தில் நாடாளுமன்ற மக்களவையில், பட்ஜெட் டுக்கான தொகைகளை ஒதுக்குவதற் காகக் கொண்டுவரப்படும் நிதிச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட வேண்டிய தருணத்தில் இவ்வாறான அகில இந்திய எதிர்ப்பு நடவடிக்கையும் வருகிறது. இச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் சமயத்தில், கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் உர விலைகளை வரிகள் மூலம் உயர்த்தி இருப்பது தொடர் பாக அவற்றைத் திரும்பப் பெறக்கோரி வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வருவ தன் மூலம், இப் பதின்மூன்று எதிர்க் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஒருங்கி ணைந்து செயல்படவும் தீர்மானித் திருக்கின்றன.

நாடாளுமன்றத்திற்கு உள்ளே இவ் வாறு எதிர்க்கட்சிகளால் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், கச்சா எண்ணெய் மீதான சுங்கவரி, பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி மற்றும் யூரியா மற்றும் பல்வேறு உரங் களின் விலை உயர்வுகளையும் ரத்து செய் திட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத் தம் நடைபெறவிருக்கிறது.

இடதுசாரிக் கட்சிகள் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மார்ச் 12 அன்று நாடு முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகர்களிலும் தலைநகர் தில்லியி லும் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டங் களை நடத்தின. தில்லியில் நடைபெற்ற பேரணி/ஆர்ப்பாட்டத்தில் ஏப்ரல் 8 அன்று நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறையேக வேண்டும். இதில் 25 லட்சத் திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. இடதுசாரிகளின் அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் நடைபெற்ற இவ்வியக் கத்தில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக் கள் மிகவும் ஆவேசத்துடன் கலந்து கொண்டு நாளும் ஏறிவரும் விலைவா சிக்கு எதிராகத் தங்கள் ஆவேசத்தை வன்மையுடன் காட்டிக் கைதானார்கள். மற்ற எதிர்க்கட்சிகளும் விலைவாசி உயர் வுக்கு எதிராகப் பல்வேறு எதிர்ப்பு நடவ டிக்கைகளை பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக நடத்தி வரு கின்றன.

ஆனால், விலைவாசி உயர்வால் மக் கள் மீது கடுமையாகச் சுமைகளை ஏற் றியுள்ள மத்திய ஐ.மு.கூட்டணி அரசாங் கம் கொஞ்சமும் கவலைப்படவில்லை. மத்திய பட்ஜெட்டின் காரணமாக பெட் ரோல் - டீசல் விலைகளை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி இருப்பதிலிருந்தே, காங் கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் இரக்கமற்ற கொடூரத் தன்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.

மத்திய அரசாங்கம் செய்ததெல்லாம், விலைவாசி உயர்வுக்கு எதிராக விவா திப்பதற்காக முதலமைச்சர்கள் கூட்டத் தைக் கூட்டியதுதான். அந்தக் கூட்ட மானது, விலைவாசியைக் கட்டுப்படுத்து வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ள பத்து முதலமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்குவது என்று முடிவு செய்தது. இரண்டு மாதங்கள் கழித்து, ஏப்ரல் 8 அன்று, முதலமைச்சர்களின் குழு, பிரதமர் மற்றும் பல மத்திய அமைச் சர்களின் பங்கேற்புடன் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் உரைகள், விலைவாசி உயர்வு குறித்து அவர்கள் எந்த அளவிற்கு சொரணையற்று இருக்கிறார்கள் என்ப தைக் காட்டின. இக்கூட்டத்திற்குப்பின் இது தொடர்பாக மூன்று உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர், உணவுப் பொருள்களின் விலைகள் சரிந்துள்ளன என்று அறிவித் தார். ஆயினும், இடதுசாரிக் கட்சிகள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த அன்றைய தினம்கூட, உணவுப் பொருள்களின் விலை உயர்வு தொடர்பான பணவீக்கத்தின் விவரங்கள் (டயவநளவ கபைரசநள கடிச கடிடின iகேடயவiடிn) அறிவிக் கப்பட்டன. அதன்படி, மார்ச் 27 அன்று முடிவடையும் வாரத்திற்கான உணவுப் பொருள்களின் பணவீக்கத்தின் அளவு 17.7 விழுக்காடாக - அதாவது அதன் முதல்வாரத்தின் அளவைக் காட்டிலும் 1 விழுக்காடு கூடுதலாக உயர்ந்திருந்தது. மத்திய அரசாங்கம் விலைவாசி உயர் வைக் குறைத்திட நடவடிக்கைகள் மேற் கொள்ள பிடிவாதமாக மறுத்துவருகிறது என்பதையே இது காட்டுகிறது. உணவுப் பொருள்களின் மீது நடைபெறும் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய அது மறுக்கிறது. இந்திய உணவுக் கார்ப்பரே ஷன் கிடங்குகளில் இந்த ஆண்டு அமோக விளைச்சலின் காரணமாக எப்போதும் கொள்முதல் செய்யப்படும் 200 லட்சம் டன்களுக்குப் பதிலாக, 474.65 லட்சம் டன்கள் கொள்முதல் செய்திருந்தும், அதனை மக்களுக்கு விநியோகிக்க அரசு தயாராக இல்லை. அதுமட்டுமல்லாமல், விலைவாசியைக் கட்டுப்படுத்துகிறோம் என்று கூறி, மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கூடு தல் ஒதுக்கீடுகளை அரிசிக்கு கிலோ 15 ரூபாய் என்ற விலையில் அளிக்க முன்வந்திருக்கிறது. பொது விநியோக முறை மூலமாக இதனை விநியோகிக்க முடியாது என்று நன்கு தெரிந்தே மத்திய அரசு இவ்வாறு செய்திருக்கிறது.

மதச்சார்பற்ற கட்சிகள், நாடாளுமன் றத்தில் வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வரவிருக்கும் முடிவைக் கேள்விப் பட்டபின், காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த முறையிலேயே செயல் பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள், மதவெறி பாஜக-வுடன் கைகோர்த்துக் கொண்ட தாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மதச்சார்பற்ற எதிர்க்கட்சி கள் மீது பாய்ந்திருக்கிறார். இத்தகைய குற்றச்சாட்டை மக்கள் புறந்தள்ளு வார்கள் என்பது நிச்சயம். மக்களைப் பாதித்திருக்கக்கூடிய மிகவும் மோசமான ஒரு பிரச்சனை, விலைவாசி உயர்வாகும். பணவீக்கத்திற்கும், விலைவாசி உயர்வுக் கும் காரணமாகத் திகழும் அரசின் தவ றான கொள்கைகளை எதிர்க்கத் தவறி னால், இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் தங்கள் கடமையிலி ருந்து தவறியவர்களாகிவிடுவார்கள். நாடாளுமன்றத்திற்குள், யார் வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வந்து அதற்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்பதல்ல பிரச்சனை. அரசாங்கம் பெட்ரோல், டீசல் மீது உயர்த்தியுள்ள வரிகளைத் திரும்பப் பெறப் போகிறதா, இல்லையா என்பது தான் பிரச்சனையாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்திற்குள்ளே நடத்திடும் போராட்டம் என்பது அரசாங் கத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக் கத்துடன் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கூறிக் கொள்கி றோம். ஆளுங்கட்சியைத் தனிமைப்படுத் துவதற்கும், அதன் படுபிற்போக்கான கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வ தற்கும் நடத்தப்படும் அரசியல் போராட் டத்தின் ஒரு பகுதியே இது என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துக் கொள் கிறோம்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத் திடவும், பொது விநியோக முறையை வலுப்படுத்திடவும் அரசாங்கத்தை உரிய நடவடிக்கைகள் எடுக்கக்கோரி வலி யுறுத்திடவும், விலைவாசி உயர்வுக்கு எதி ரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவ தைத் தவிர வேறு வழியில்லை. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்ற இடது சாரிக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொது விநியோக முறையை வலுப்படுத்து வதற்காகவும், உணவுப் பாதுகாப்பிற்காக வும் 2009 ஆகஸ்டில் இப்பிரச்சனை களுக்காக தேசிய அளவில் நடத்திய சிறப்பு மாநாட்டிலிருந்தே மிகவும் சுறு சுறுப்பாக இயக்கங்களை முன்னெடுத் துச் சென்றன. இதன் பின்னணியில்தான் மார்ச் 12 பேரணியும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஏப்ரல் 8 சிறைநிரப்பும் போராட்டமும் மகத்தான வகையில் வெற்றி பெற்றன.

இதேபோன்று வரும் ஏப்ரல் 27 அகில இந்திய பொது வேலைநிறுத்தமும் மகத் தான வெற்றி பெற்றிட, கட்சி அணியினர் முழுமையாகக் களத்தில் இறங்கிட வேண்டும். ஏப்ரல் 8 அன்று உருவாகி யுள்ள வேகம் கொஞ்சமும் குறையாது, முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். குறுகிய காலமே இருப்பதால், கட்சி மக் கள் மத்தியில் சென்று, பொது வேலை நிறுத்தத்திற்கான செய்தியை விளக்கிட வேண்டும். மற்ற இடதுசாரிக் கட்சிகளுட னும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்பட்டு ஏப்ரல் 27 எதிர்ப் பியக்கத்தினை காங்கிரஸ் தலைமை யிலான அரசாங்கத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக ஓங்கி ஒலித்திடச் செய்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

No comments: