Sunday, November 11, 2012

‘அவர் கடவுளின் சொந்தக்காரர்’ பிரகாஷ் காரத்




தோழர் சமர் முகர்ஜி நவம்பர் 7 அன்று நூறு வயதைத் தொட்டுள்ளார்.  சமர்தா என அன்புடன் அழைக்கப் படும் அந்தத் தலைவரின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் நானும் பங்கேற்றேன். கொல்கத்தாவில் தில்குஷா தெருவில் வெகுகாலம் கட்சிக் கம்யூனாக விளங்கிய அவரது இல்லத்திற்கு வெளியில் பாராட்டு விழாக் கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இன்றையதினம் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் கட்சி உறுப் பினர்களில் சமர்முகர்ஜியே மிகவும் வயதானவர். ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி நடைபெறுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அதே நவம்பர் 7 அன்று அவர் பிறந்தார்.  20ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளும் அவரது வாழ்வில் குறுக்கிட்டன.  வர லாற்றுச் சிறப்புமிக்க காலத்தில் அவற் றில் சில முக்கியநிகழ்வுகள் இப் போதும் நம்முன் பிரதிபலிக்கின்றன. அவர், தன்னுடைய 15வது  வயதில் ஓர் இளம் மாணவனாக இருக்கும்பொழு தே விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு, 1928இல் நடைபெற்ற ‘‘சைமன் கமிஷனே திரும்பிப்போ’’ இயக்கத்திலும் பங்கேற்றார்.

1930இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத் திலும் கலந்து கொண்டு அதே ஆண்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.  1938 இல் ஹவுரா மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவ ரானார்.1940ல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். இவ்வாறு கம்யூ னிஸ்ட் இயக்கத்தில் அவரது கடின மான, ஆனால் குறிப்பிடத்தக்க பங்க ளிப்பு தொடங்கியது. ஹவுரா மாவட்டத் தில் விவசாயிகள் இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் அவர் ஏற்படுத்தினார். 1943இல் பம்பாயில் நடைபெற்ற முதல் கட்சிக் காங்கிரசில் பிரதிநிதியாகக் கலந்துகொண்டவர் களில்  இன்று உயிருடன் இருப்பவர் அவர் ஒருவர் மட்டுமே. நாடு சுதந்திரம் அடைந்து வங்கம் இரண்டாகப் பிரிக்கப் பட்டபின், கிழக்கு வங்கத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த லட்சக்கணக்கான மக்களின் பிரச்ச னைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அகதிகள் இயக்கத்தைக் கட்டியதில் தோழர் சமர் முகர்ஜி மிகக் குறிப்பிடத்தக்க அளவிற்குச் செயல் பட்டார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 1961ல் வங்காள மாநில செயற் குழு உறுப்பினரானார். அதன் பின்னர் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டத்தில் அவர் மிக முக்கியப் பங்காற்றினார். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. சமர் முகர்ஜி கட்சியின் மத்தியக் குழுவிற்கு 1966இல் தேர்வு செய்யப்பட்டார். அவர் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் 1982இலிருந்து 1998வரை பணியாற்றினார். தோழர் சமர் முகர்ஜியின் மற்று மொரு முக்கிய பரிணாமம், அவர் 1971ல் நாடாளுமன்ற மக்களவைக்கு முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தொடங்கியது. அவர் மக்களவை உறுப்பினராக 1984 வரை தொடர்ந்து பணியாற்றினார். பின்னர் 1993 வரை இருமுறை மாநிலங்களவை உறுப்பின ராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஏ.கே. கோபாலன் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த சமயத்தில் அவர் துணைத் தலைவராக இருந்தார். பின்னர், 1977இலிருந்து 1984வரை மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்குழுவின் தலைவராக வும் செயல்பட்டார். ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்றவாதி என்ற முறையில் அவர் தொழிற்சங்க இயக்கப் பிரச்ச னைகளையும், மக்கள் பிரச்சனை களையும் மிகவும் திறமையுடன் நாடா ளுமன்றப் பணிகளுடன் இணைத் திட்டார். சிஐடியுவின் வளர்ச்சியிலும் சமர் முகர்ஜி முக்கியப் பங்களிப்பினைச் செய்தார். சிஐடியுவின் பொருளாள ராகவும் பின்னர் பொதுச் செயலாள ராகவும் இருந்தார். 1974ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களில் அவரும் ஒருவர். கட்சி அமைப்பாளராக, தொழிற் சங்கத் தலைவராக, நாடாளுமன்ற வாதியாக கட்சி தன்னிடம் ஒப்படைத்த அனைத்துப் பொறுப்புக்களையும் சமர் முகர்ஜி மிகவும் அர்ப்பணிப்பு உணர் வுடனும், உன்னிப்பான  கவனத்துட னும்  ஆற்றினார்.  சமர்தா மிகவும் புடம்போட்டு எடுக் கப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட்டாவார். மிக மிக எளிமையாக வாழ்ந்து கொண்டி ருக்கிறார். அவர் நாடாளுமன்றத் தலை வராகச் செயல்பட்ட சமயத்திலும் கூட, கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத் தில் அவருக்கு அளிக்கப்பட்ட சிறிய அறையிலேயே  (முதலில் அது 4, அசோகா ரோடில் இருந்தது, பின்னர் விண்ட்சார் பிளேசுக்கு மாறியது) எப் போதும் தங்கி  இருந்தார்.

கட்சி அளித் திடும் மிகச் சிறிய ஊதியத்திலும் பெரும்பகுதியை சேமித்து வைத்து, கட்சிக்கு நன்கொடையாக வழங்கி விடுவார். கொல்கத்தாவில்  கட்சிக் கம்யூனில் வாழ்வதை அவர் இப் போதும் தொடர்கிறார்.சமர்தா இனிய பண்புக்குச் சொந்தக்காரர். தோழர்களிடம் மிகவும் நேசத்துடனும், பிரியத்துடனும் பழகக் கூடியவர். அவரது காலத்திய புரட்சி யாளர்கள் பலரைப் போலவே அவரும் திருமணம் செய்துகொள்ளவே இல்லை.தோழர் ஜோதி பாசு, சமர் குறித்து அடிக்கடி அவர் கடவுளின் சொந்தக் காரர்’’ (Gods's own man) என்று கூறு வார். நல்ல மனிதனுக்கு வேண்டிய அனைத்து குணநலன்களும் பெற்ற ஒரு சுயநலமற்றவன் என்று ஆங்கிலத் தில் இதற்குப் பொருளாகும்.தங்களிடமுள்ள அனைத்தையும் கட்சிக்காகத் தியாகம் செய்துவிட்டு, முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் கட்சிக்குப் பணியாற்றிய முந்தைய தலைமுறை கம்யூனிஸ்ட்டுகளில் இன்று உயிருடன் இருக்கும் ஒரே தலைவர் தோழர் சமர் தா மட்டுமே.சமர் முகர்ஜியால் மேற்கொள்ளப் பட்ட மிக உன்னதமான எடுத்துக் காட்டாய் விளங்கக்கூடிய வாழ்க்கை யை முன்மாதிரியாய் எடுத்துக் கொண்டு முன்னேறிட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் மென்மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திட வேண்டும் என்று கட்சித் தோழர்கள் அனை வரின் சார்பாகவும் நாம் அவரை வாழ்த்துகிறோம்.

 - தமிழில்: ச.வீரமணி


Thursday, November 8, 2012

புரட்சியின் தணலை அணைக்க முடியாது



சுகுமால் சென்

சென்ற நூற்றாண்டின் புரட்சி இயக்கத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை களாகும். ஒன்று, ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்என்று அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீடு அவர்களால் வர்ணிக்கப்பட்ட அக்டோபர் புரட்சியின் நாட்கள். மற்றொன்று, 1956 பிப்ரவரி 14 - 25 தேதிகளில் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரஸ். இருபதாம் நூற்றாண்டின் தத்து வார்த்த அல்லது அரசியல் இயக்க வரலாற் றில் இவ்விரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில் லை. மிகவும் எளிய வார்த்தைகளில் சொல்வ தென்றால், முதலாவது நிகழ்வான அக்டோபர் புரட்சி உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உரு வாக்கியது என்றால், இரண்டாவதாகக் கூறப் பட்ட சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20ஆவது காங்கிரஸ் அதனை அழித்தது.

- இவ்வாறுதான் உலகப் புகழ்பெற்ற, சமீ பத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் வரலாற்றாசிரியர் தோழர் எரிக் ஹாப்ஸ்வாம் கூறினார். உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், சமீபகாலங் களில் நடைபெற்ற போராட்டங்கள் உட்பட உழைக்கும் மக்கள் போராட்டங்கள் அனைத் தையும் முழுமையாக ஆய்வு செய்து, அவர் இவ்வாறு கூறினார். உண்மையில், ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜான் ரீடு என்பவரால் 1917 நவம்பரில் ரஷ்ய தொழி லாளர் வர்க்கத்தின் வீரஞ்செறிந்த பேரெழுச்சி அந்தப் பத்து நாட்களில் எப்படி உலகத்தை அது குலுக்கிக் கொண்டிருந்தது என்பதையும், அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியது என் பதையும் தான் கண்ணால் கண்ட விவரங் களைக் கொண்டு பதிவு செய்த ஒரு புத்தகமாகும்.இதேபோன்றுதான், 1881இல் ஆயுதந் தாங்கிய பிரெஞ்சு தொழிலாளர் வர்க்கத்தால் நடத்தப்பட்ட பாரிஸ் கம்யூன் புரட்சியை ஆய்வு செய்த காரல் மார்க்சும் அதனை வெகு வாகப் புகழ்ந்தார். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக பாரிஸ் கம்யூன் புரட்சி இரு மாதங்களுக்கும் மேல் நீடிக்க முடியவில்லை. மார்க்ஸ் அதன் தோல்விகளுக்கான காரணங்களை விளக்கி னார். ஆயினும் அவர், பாட்டாளி வர்க்க சர்வாதி காரம் என்றால் நடைமுறையில் அதன் பொருள் என்ன என்பதை - அதாவது, முத லாளிகளின் வர்க்க ஆட்சி என்பது தொழி லாளர்களின் வர்க்க ஆட்சியால் மாற்றி வைக் கப்பட்டது என்பதைப் - பார்க்க வேண்டும் என்று உலகத்தைக் கேட்டுக் கொண்டார். ஆனால், ரஷ்யப் புரட்சியோ வேறு வகை யானது. அது லெனின் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்பட்ட ரஷ்யத் தொழிலாளர் வர்க்கத்தின் ஆயுதப் புரட்சியாகும். உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம், லெனினது வழிகாட்டுதல்களின் கீழ் ஒரு கட்டுப்பாடும் அர்ப்பணிப்பும் கொண்ட படையினால் கட்டப் பட்டிருந்தது. அது உலகைப் பாதிக்கும் முக்கிய அம்சங்கள் அனைத்தின் மீதும் தலையிடும் ஓர் இயக்கமாக மாறியது. ஏனெனில் அது நாஜி ஜெர்மனியை நார் நாராகக் கிழித்தெறிந்து, போருக்குப்பின் வல்லரசாக (superpower) மாறிய சோவியத் யூனியன் சோசலிசக் குடி யரசுடன் பிணைக்கப்பட்ட ஒன்று. போல்ஷ்விசம் நலிந்த ஆனால் மிகப்பெரிய அளவி லான ஒரு பிற்பட்ட நாட்டை ஒரு வல்லரசு நாடாக மாற்றி அமைத்தது. மற்ற நாடுகளிலும் சோசலிசத்தை அடைவதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதும், காலனி யாதிக்கம் மற்றும் அரைக்காலனியாதிக்கத் திற்கு எதிரான விடுதலைப் போராட்டங்களும் அதன் ஆதரவைச் சார்ந்தும், சில சமயங் களில் உண்மையான பாதுகாப்பையும் அவற்றிற்கு அளித்தன. அதன் பலவீனங்கள் என்னவாக இருந்தபோதிலும், அது இருந்தவரை சோசலிசம் ஒரு கனவு அல்ல நிஜம் என்பது மெய்ப்பிக்கப்பட்டது. ரஷ்யா என்னும் ஒரு நாட்டில் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் சங்கிலியின் கண்ணிகளை உடைத்து சுக்கு நூறாக்குவது என்பது கம்யூனிச இயக்கத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த சமயத் தில் பனிப் போர் வாதிகளின் கம்யூனிச எதிர்ப் புப் பிரச்சாரம் தீவிரமாக இருந்தது.
உலகம் முழுவதுமிருந்த கம்யூனிஸ்ட்டுகளை அவர்கள் மாஸ்கோவின் ஏஜெண்டுகள் என்றெல்லாம் முத்திரை குத்தினார்கள்.1917லிருந்து 1990 வரை - 73 ஆண்டுகள் - சோசலிஸ்ட் ஆட்சிக்குப்பின், சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு 1991இல் தகர்ந்தது. இதனை அடுத்து உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் திகைத்துத் தடுமாறி நின்றன. சோவியத் யூனியனில் சோசலிசத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆய்வு செய்யத் தொடங்கின. ஆனால், இதற்கிடையில் சில நாடுகளில் உள்ள சில கம்யூனிஸ்ட் கட்சிகள் சுக்குநூறாக உடைந்தன அல்லது இரண்டாக உடைந்தன. ஒரு சில மட்டும் தங்களுடைய கட்டமைப்பை உருக்குலையாமல் கட்டிக்காத்தன. தங்களுடைய நடவடிக்கைகளை சோவியத் யூனியனின் வழிகாட்டுதல் அல்லது அறிவுரை எதுவுமின்றி தொடர்ந்து செயல்படத் தொடங்கின. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அந் நாட்கள் மிகவும் நெருக்கடியான காலகட்ட மாகும். ஆனால் இன்றைய தினம், அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளர்களும் முதலாளித்துவ ஆட்சியின் மீதான - அதன் தற்போதைய பாஷையான நவீன தாராளமய உலகமயம் மீதான - தாக்குதல்களை மீண்டும் தொடுத்துள்ளன. இதுநாள் வரை முதலாளித்துவம் தான், தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் உலகின் உள்ள ஏழை மக்கள் மீதும் மிகவும் மூர்க்கத் தனமான முறையில் தாக்குதலைத் தொடுத் திருந்தது. இப்போது அதே வேகத்தில் உலகத் தொழிலாளர் வர்க்கம் திருப்பித் தாக்கத் தொடங்கி இருக்கிறது. சோவியத் யூனியனில் சோசலிசக் கட்ட மைப்பை உருவாக்குவது தோல்வியுற்றதை அடுத்து சோசலிசம் தொடர்பாகப் பாரம்பரிய மாகக் கொண்டிருந்த கருத்துக்கள் மீதே சந்தேகங்கள் எழத் தொடங்கிவிட்டன. சமூக உடைமையுடன் திட்டமிட்ட வகையில் உற்பத்தி, விநியோகம் மற்றும் உற்பத்தி கருவிகள் என்ற அடிப்படையில் அமைந்த பொருளாதாரம் என்பது வேறு. இத்தகைய பொருளாதார அமைப்பினை முதல் உலகப் போருக்கு முன்னர் சோசலிஸ்ட்டுகள் அல்லாத பொரு ளாதாரவாதிகள் கூட ஏற்றுக்கொண்டிருந் தார்கள். இதனை அமல்படுத்துவதில் நடை முறையில் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்க லாம். அவற்றை அதிகாரவர்க்கம் மூலமாக அமல்படுத்தியது அதற்குக் காரணமாகக் கூட இருக்கலாம். ஆயினும் ஒரு குறிப்பிட்ட அள விற்கு அது வேலை செய்தது என்பதில் சந் தேகமில்லை. குறிப்பாக விலைகளை நிர்ண யிப்பதில், சந்தை விலையும், அரசு நிர்ணயித்த விலையும் இணைந்தே வேலை செய்தன. மேலும் சோசலிசத்தைக் கட்டியமைக்கும் சமயத்தில், நுகர்வோருக்கு எது நல்லது என்று சொல்லிக்கொண்டிருந்ததைவிட அவர் களின் விருப்பங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். உண்மையில், மேற்கத்திய நாடுகளிலிருந்த சோசலிஸ்ட் பொருளாதாரவாதிகள் 1930களில் இவை குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். கலப்புப் பொருளாதாரத்தை மக்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள். சோசலிசம் என்பதன் பொருள் பொதுவாக ஒன்று. சோவியத் யூனியனில் கடைப்பிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சோசலிசம் என்பது இதிலிருந்து வேறானது. அவ்வாறு சோவியத் யூனியனில் பின்பற்றப்பட்ட சோசலிசம்தான் 20வது கட்சிக் காங்கிரசுக்குப் பிந்தைய நிகழ்வுகளின் விளைவாக அழிவுற்றது.
சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு ஏன் தோல்வியடைந்தது, ஏன் தகர்ந்தது? காரல் மார்க்ஸ், 1859இல் இதனை முன்னுணரும் வகையில் ஓர் ஆய்வினை முன் வைத் திருக்கிறார்.

‘‘மனிதகுலம் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, சமூக உற்பத்தியில் ஈடுபடும் போது, நிச்சயமான, தங்கள் விருப்பத்திற் கேற்ப அவசியமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அத்தகைய உற்பத்தி உறவுகள் அவர்களுடைய பொருளியல் (material) உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் ஒரு நிலையான கட்டத்திற்குக் கொண்டுசெல்கிறது. வளர்ச்சிப்போக்கில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளியல் உற்பத்தி சக்திகள் ஏற்கனவே இருக்கின்ற உற்பத்தி உறவுகளுடன் முரண்பட முனைகிறது, அல்லது, இதன் சட்டரீதியான விளக்கம் என்னவெனில், சொத்துடைய உறவுகளுடன் முரண்பட முனைகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் வடிவங்களிலிருந்து இத்தகைய உறவுகள் அவர்களுடைய கால் விலங்குகளாக மாறுகின்றன. இந்நிலையில் நாம் சமூ கப் புரட்சி சகாப்தத்திற்குள் நுழைகிறோம்.’’
சமூகப் புரட்சி தொடர்பாக உருவாகியுள்ள சூழ்நிலை குறித்து மார்க்சின் தத்துவார்த்த நிலையினை எவரும் மறுத்திட மாட்டார்கள். மார்க்சின் மேற்கூறிய கூற்று, ரஷ்யப் புரட்சி குறித்த ஆய்வுக்கும் பொருந்துமா என்று ஒரு சிலர் வாதிடலாம். ஆனாலும், மார்க்சிய புரட்சிகர தத்துவத்தை நீர்த்துப்போகச் செய்யக் கூடிய நடவடிக்கைகள் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசுக்குப் பின் - ஸ்டாலின் காலத்திற்குப்பின் நடந்த முதல் காங்கிரசுக்குப்பின் - தொடரப்பட்டு, நடைமுறையில் சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு நிலைகுலைவதற்கான தளத்தைத் தயார் செய்தது. இதன் காரணமாகத்தான் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் தத்துவார்த்தக் கொந்தளிப்பில் சிக்கிக்கொண்டது. அது இன்றளவும் தொடர்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இதுதொடர்பாகவும், வரலாற்று உண்மையினை அடிக்கோடிட்டுக் கூறியிருக்கும் எரிக் ஹாப்ஸ்வாம் அவர் களின் மேற்கோள் குறிப்பிடத்தக்கது.

இது மிகவும் அபூர்வமான ஒன்று என்று சிலர் வாதிடலாம். இதற்கு அவர்கள், புரட்சிக் குப் பின், பிற்போக்கான விவசாயப் பொருளா தாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த சோவியத் யூனியன் மிகவும் முற்போக்கான தொழில்மயத்தை எட்டிய நாடாக உயர வில்லையா என்று கூறலாம். ரஷ்யப் புரட்சி யைப் பொறுத்தவரை இது விவாதத்திற்கான ஒரு அம்சம்தான். ஆயினும், சோவியத் யூனியன் சுக்குநூறாக உடைந்தது என்பதும் உண்மை. இத்தகைய இறுதித் தகர்வுக்கு சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசின் பங்கினை ஹாப்ஸ்வாம் விளக்குகிறார்.
பழைய அமைப்பு முறை தூக்கி எறியப் பட்டு புதிதாக ஒன்று அமைக்கப் படுகையில் அது முந்தையதைவிட சிறந்ததான ஒன்றுக்கு இட்டுச் செல்லும் என்கிற மார்க்சின் 19ஆம் நூற்றாண்டைய நன்னம்பிக்கையை இனி மேலும் நாம் பின்பற்ற முடியாது. ஏனெனில், ‘மனிதகுலம் எப்போதும் தன்னால் தீர்க்க முடியும் என்கிற பிரச்சனைகளையே தீர்வு கண்டிருக்கிறது.ஆனால், ‘மனிதகுலம்அல்லது ஒருவகையில் போல்ஷ்விக்குகள் 1917இல் எதிர்கொண்ட பிரச்சனைகள் அவர்களுடைய காலகட்டத்தில் மட்டும் தீர்வுகாணக்கூடியவை அல்ல, அல்லது முழுமையாகத் தீர்வு காணக்கூடியவை அல்ல.போல்ஷ்விக்குகள் மீது அமெரிக்காவும், இதர மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பனிப் போரில் ஈடுபட்டு அவர்களுக்குப் பல்வகைகளிலும் நெருக்கடிகளைப் கொடுத்ததை எவரும் அலட்சியப்படுத்திட முடியாது. ஆயினும் அவற்றையெல்லாம் வீரத்துடனும் விவேகத்துடனும் எதிர்கொண்டுப் பொடிப் பொடியாக்கி, கலை, அறிவியல், கலாச்சாரம் மற்றும் சமூக சமத்துவத்தில் அளப்பரிய சாதனைகளைப் படைத்ததை காணத் தவறி னோமானால் அது குற்றமாகும்.
சோவியத் கம்யூனிசம் நிலை குலைந்ததனால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கண்டிடலாம் என்று இன்றைய தினம் கூறிட முடியுமா? சோவியத்யூனியன் சோசலிசக் குடியரசு வீழ்ந்தபின், சோசலிசத்தை அமைக்கும் பணி முடிவுக்கு வந்துவிட்டது என்று சிலர் கூறினார்கள். சோவியத் யூனியனில் அல்லாமல் கம்யூனிஸ்ட்டுகளின் கீழ் ஆட்சியில் உள்ள சீனா போன்ற நாடுகளும் கூட சோவியத் யூனியன் முன்பு கடைப்பிடித்ததைப் போன்று, சந்தை சக்திகளின் தயவின்றி, முழுமையாக அரசுக் கட்டுப்பாட்டில் அல்லது கூட்டுறவு அடிப்படையில் பொருளாதார நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை. சோவியத் சோதனை முயற்சி என்பது முதலாளித்துவத்திற்கான மாற்றாகத் திட்ட மிடப்படவில்லை.

ஆனால், அவை மிகவும் பரந்து விரிந்த அளவிலான பிற்பட்ட நாடு ஒன்றில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள், வரலாற்றில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சாதனைகளைப் படைத் தவை களாகும்.
எரிக் ஹாப்ஸ்வாம் தன் சொந்த அனுபவம் ஒன்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். ‘‘1930களில் சோசலிஸ்ட் பொருளாதாரவாதிகளின் மிகவும் பேசப்பட்ட ஆஸ்கார் லாங்கே அமெரிக்காவிலிருந்து, சோசலிசத்தைக் கட்டுவதற்காகத் தன்னுடைய சொந்த நாடான போலந்துக்கு திரும்பிக் கொண்டிருக்கையில், உடல்நலிவுற்று லண்டனில் ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கே அவர் மரணமடைந்துவிட்டார். அவ்வாறு மரணப்படுக்கையில் அவர் இருந்த சமயத்தில் நலம் விசாரிக்க வந்த தன் நண்பர்களி டமும் ஆதரவாளர்களிடமும் தன்னிடமும் அவர் அடிக்கடி ஒன்றைக் கூறுவார். அதனை நான் மீண்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவர், ‘‘1920களில் நான் ரஷ்யாவில் இருந்திருந்தால், சோவியத் தொழிமயமாதல் குறித்து ஒரு வரையறைக்கு உட்பட்டுத்தான் திட்டங்களைப் பரிந்துரைத் திருந்திருப்பேன். நிச்சயமாக, சோவியத் யூனியன் தன்னுடைய முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் செய்ததைப்போன்று, அடிப் படையில் திட்டமிடப்படாத வேகத்துடன், மிகவும் முரட்டுத்தனமான, கண்மூடித்தனமான மாற்றை பரிந்துரைத்திட என்னால் முடிந்திருக்காது. ஆனாலும் அவர்கள் இதனைச் செய்து காட்டியிருக்கிறார்களே. எப்படி இது சாத்தியம்? இதற்கான பதிலை என்னால் காணவே முடியவில்லை,’’ என்றார். அவர்கள் தனிவார்ப்பாலானவர்கள் என்பதை அவர் காணத் தவறிவிட்டார்.

ஆஸ்கார் லாங்கே மரணப் படுக்கையி லிருந்த போது இவ்வாறு வினா எழுப்பினார். இதற்கு யார் பதில் சொல்ல முடியும்? சோவி யத் பாணியிலான சோசலிசத்தை விமர்சிக்கிறவர்கள், இதற்குப் பதிலளிக்க முடியுமா?
1917 நவம்பர் புரட்சியின் தணலை எவ ராலும் தணிக்கஇயலாது. அது என்றென்றும் கனன்றுகொண்டிருக்கும். நம்முன் உள்ள புறச்சூழ்நிலைகளை மிகவும் முறையாகக் கையாளுவோமேயானால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவோமேயானால், நம்பிக்கை யிழப்பதற்கான காரணம் எதுவுமே இல்லை. முந்தைய சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு வீழ்ச்சியடைந்திருந்தால் என்ன? அதனைத் தொடர்ந்து ஏகாதிபத்தியமும் அதன் கீழ் இயங்கும் ஏஜென்சிகளும் பொருளாதார மற்றும் ராணுவத் தாக்கு தல்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்தால் என்ன? அவற்றை நிச்சயமாக நிர்மூலமாக்கி முன்னேறிட முடியும். இவ்வாறு கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னேறுவதற்கு மிகவும் முக்கியமான நிபந்தனை என்னவெனில், மேலே நாம் விவாதித்ததைப்போன்ற அம்சங்களுடன், தத்துவார்த்தத் தெளிவும், உருக்குபோன்று உறுதியும், கட்டுப்பாடும் மிக்க கம்யூனிஸ்ட் கட்சியும், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அதன் தலைவர்களும் உறுப்பினர்களுமே யாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, November 6, 2012

சோசலிசத்திற்கான போராட்டம்



ஏ.கே. பத்மநாபன்

நவம்பர் 7, இருபதாம் நூற்றாண்டில் மனிதகுல முன்னேற்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அளவில் மாபெரும் மாற்றங்களை உருவாக்கிய - மகத்தான புரட்சியின் விளை வாக உலகையே குலுக்கிய’- மாபெரும் நவம் பர் புரட்சியின் 95ஆவது ஆண்டு தினமாகும். சோவியத் ரஷ்யாவில் உழைக்கும் மக்கள் ஜார் மன்னனுக்கு எதிராக நடத்திய புரட்சிகர மான போராட்டங்கள் வெற்றிபெற்றதை அடுத்து உழைக்கும் மக்களின் தலைமையில் புதியதோர் சமுதாயத்தை அமைத்தனர். அனைத்துவிதமான பிற்போக்கு சக்தி களும் ஒன்றாகத் திரண்டு, தொழிலாளர் வர்க் கத்தின் தலைமையில் அமைந்த இப்புதிய அரசை முடிவுக்குக் கொண்டுவர மேற் கொண்ட முயற்சிகள் வரலாற்றின் ஒரு பகுதி யாகும். இவர்கள் தொடர்ந்த முயற்சிகளுக்கு இரண்டாம் உலகப் போரும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. சோவியத் யூனியனின் லட்சக் கணக்கான தொழிலாளர்களும், விவசாயி களும், ஆயுதந் தாங்கிய வீரர்களும், வீராங் கனைகளும் தங்களின் வீரஞ்செறிந்த பல் வேறுவிதமான நடவடிக்கைகளின் மூலமும், அளப்பரிய தியாகத்தின் மூலமும் நாஜிக் களின் பாசிச சக்திகளை முறியடித்து, தங்கள் தாய்நாட்டையும், மனித சமுதாயத்தையும் பாது காத்தனர். இக்கால கட்டத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் சோசலிச நாடுகளாக மாறின. மாபெரும் சீனப் புரட்சியும் நடைபெற்றது. காலனியாதிக்கமும் பல நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக முடிவுக்கு வரத் தொடங்கியது. உலகின் பல நாடுகளிலும் தொழிலாளர் வர்க்க இயக்கங்கள் தங்கள் தளங்களை விரி வாக்கின. வீரஞ்செறிந்த போராட்டங்கள் பல வற்றை நடத்தின. அவற்றின் மூலமாக ஏகாதி பத்திய மற்றும் முதலாளித்துவ சக்திகளுக்கு சவாலாக அமைந்தன. சோவியத் யூனியன் சோசலிச நடவடிக் கைகள் மூலம் அடைந்த முன்னேற்றம்தான் பல முதலாளித்துவ நாடுகளையும் தங்கள் நாடுகளிலும் வேலையில்லாதோருக்கான உதவிகள், சுகாதாரத் திட்டங்கள், ஓய்வூதியம் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை அமல் படுத்திட நிர்ப்பந்தித்தன என்பதையும் அவற் றின் மூலமாக தங்கள் நாடுகளில் கம்யூனிசம் பரவாமல் தடுத்திடமுயற்சித்தன என்பதை யும் எவரும் மறுக்க முடியாது.
இத்தகைய நலத்திட்டங்கள் மூலமாக முதலாளித்துவ அமைப்புமுறையும் நல்லதொரு முறைதான் என்று மக்களுக்குக் காட்டிட அவை முயன்றன. எழுபத்தைந்து ஆண்டுகளுக்குள், ‘நம் பிக்கை நட்சத்திரமாகவிளங்கிய சோவியத் யூனியன் பின்னடைவுகளைச் சந்தித்தது. தொடர்ந்து சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் முறிந்து விழுந்ததை உலகம் கண்டது. இப்பின்னடைவுகளுக்கான பல்வேறு காரணிகள் குறித்து இப்போது நாம் ஆராயப்போவதில்லை. ஆயினும், இப்பின்ன டைவுகள் அல்லது தோல்விகள் என்பவை சோசலிச அமைப்பு முறையின் காரணமாக ஏற்பட்டவை அல்ல, மாறாக சோசலிசக் கொள்கைகளையும் திட்டங்களையும் அமல் படுத்துவதில் ஏற்பட்ட தோல்விகளே இவற் றிற்கான காரணங்களாகும். முதலாளித்துவ அமைப்பு முறைக்கு மாற்று சோசலிசம் மட்டுமே என்பது இன்னமும் தொடர்கிறது. இப்பின்னடைவுகளுக்குப் பிந்தைய, கடந்த இருபத்தோரு ஆண்டுகளில் ஏகாதி பத்திய சக்திகள், மக்கள் மீதான தாக்குதல் களை தொடர்ந்து மேற்கொண்டு வந்ததை நாம் பார்த்தோம். ஏகாதிபத்திய உலகமயமும், நவீன தாராளமய முதலாளித்துவமும் அனைத்துவித மான மனிதசமுதாயத்தின் மீதும் தாக்கு தலைத் தொடுத்தன. முதலாளித்துவ உலகத்திற்கு இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஒருசில பிரிவி னரின் பேராசையே காரணம் என்று கற்பிக் கப்படுகிறது. முதலாளித்துவத்தின் உண்மை யான குரூர முகத்தை மூடி மறைப்பதற்கான முயற்சியே இது. உச்சபட்ச லாபம் என்பதே முதலாளித்துவ முறையின் அடிப்படை. இவ் வாறு தங்கள் லாபத்தை உச்சபட்ச அளவிற்கு எய்திட, உலகின் எந்தப் பகுதிக்குள்ளும் நுழைந்து, அங்குள்ள உழைக்கும் மக்களையும் அங்குள்ள இயற்கை வளங்களையும் கொள் ளையடிப்பதைத் தீவிரப்படுத்துவதற்கும் இது அனைத்து விதமான முயற்சிகளையும் மேற் கொள்ளும்.
ஏற்றத்தாழ்வுகள் ஆழமாகியுள்ளன
சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை, சோசலிசத்திற்கு எதி ராக அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதி யாகவும் தாக்குதல் தொடுத்திட பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. ஆயினும், 2008க்குப் பின் னர் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, முதலாளித்துவத்திற்கு வக் காலத்து வாங்குபவர்களுக்கு, முதலாளித் துவமே, முதலாளித்துவம் ஒன்றே சிறந்த முறை என்று சித்தரிப்பதில் மிகுந்த அள விற்கு சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது, ‘வரலாறு முடிவுக்கு வந்துவிட்டதுஎன்று கூறி அதனைக் கொண்டாடியவர்கள், இப் போது முதலாளித்துவமே சிறந்த முறை என்று உயர்த்திப்பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண் டிருக்கிறார்கள். முதலாளித்துவ உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவது அதிகரித்து வரு வதும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளும் அதி கரித்து வருவதும், குறிப்பாக நமது நாட்டில் இவை அதிகரித்திருப்பதும், முதலாளித்துவ அமைப்பின் குரூர முகத்தை மிகத் தெளி வாகக் காட்டத் துவங்கியுள்ளன. அதிகரித்து வரும் ஏற்றத் தாழ்வுகளால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கோபமும் விரக்தியும் அவர்கள் மத்தியில் ‘‘ஒரு விழுக்காட்டினருக்கு எதி ராக 99 விழுக்காட்டினர்’’ என்னும் முழக் கத்தை எழுப்பச் செய்து, இதனை மிகவும் தெளிவாக்கி யிருக்கிறது. ‘‘வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்’’ என்னும் இயக்கம் நீடித்து நிலைத்து நிற்கவில்லை என்ற போதிலும், முதலாளித்துவ உலகின் எதார்த்த உண்மை களை மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந் ததில் அது வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவில், புதுப்பணக்காரர்களின் எண் ணிக்கையும், பில்லியனர்களின் (சுமார் ஐயா யிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வைத் திருப்பவரை பில்லியனர் என்று கூறலாம்) எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதை வைத்து, இவை நாட்டின் முன்னேற்றத் திற்கும் வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டுக ளாகும் என்று நம் ஆளும் வர்க்கம் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் மத்தியில் ஊட்டச்சத்தின்மை, வறுமை, வேலை யில்லாத் திண்டாட்டம் ஆகியவையும் அதி கரித்திருக்கின்றன. பசி-பஞ்சம்-பட்டினி (hரபேநச) குறித்து சமீபத்தில் வெளியான சர்வே ஒன்று, நாட்டில் 17 விழுக்காட்டினர் மிகவும் வறிய நிலையில் (ரடவசய hரபேசல’) இருப்ப தாகவும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 1600 கலோரி சக்தி அளவிற்குக் கூட உணவு கிடைப்பதில்லை என்றும், எப்படியாவது உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவே அவர்களுக்குக் கிடைக்கிறது என்றும் கூறி யிருக்கிறது. நாட்டில் உள்ளோரில் 15-49 வய துக்கு இடையேயுள்ளவர்களில் 34.2 விழுக் காடு ஆண்களும், 35.6 விழுக்காடு பெண் களும் கிட்டத்தட்ட மிகவும் பஞ்சைப் பராரிகளாகவே இருக்கின்றனர் என்றும் அந்த சர்வே கூறுகிறது.ஒரு பக்கத்தில் இவ்வாறு பில்லியனர் களும், புதுப் பணக்காரர்களும் அதிகரிப்பதும், மறுபக்கத்தில் கோடானு கோடி குழந்தை களும், வயதுவந்தோரும் பட்டினிக் கொடுஞ் சிறைக்குள் தள்ளப்படுவதும் ஆகிய இத்த கைய முரண்பாடான சூழ்நிலைதான் இன் றைய முதலாளித்துவ அமைப்பு முறையின் விளைவாகவும் இருந்து வருகிறது. இத்தகைய நிலைமை இந்தியாவுக்கு மட்டுமானதல்ல, உலகில் உள்ள அனைத்து முதலாளித்துவ நாடுகளின் நிலைமையும் இதுதான். பெரும்பான்மையாகவுள்ள உழைக் கும் மக்களின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டு, ஒருசில முதலீட்டாளர்கள் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்பதை அடிப்படை யாகக் கொண்டுள்ள எந்தவொரு முதலாளித் துவ சமுதாயத்திலும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.
சோசலிச சோவியத் யூனியன் வலுவாக இருந்தவரையில், அமெரிக்கா மற்றும் இதர ஏகாதிபத்திய சக்திகள் உலக விவகாரங்களில் தலையிட்டபோது, அவற்றை எதிர்கொண்டு முறியடிக்கக்கூடிய விதத்தில் சவாலாக இருக்க முடிந்தது. சோவியத் யூனியன் முயற் சிகள் உலகப் போருக்கு எதிராகவும் சமா தானத்திற்காகவும் நடைபெற்ற போராட் டங்களை வலுப்படுத்திட உதவின. அமெரிக் காவின் ராணுவத் தலையீடுகளை வலுவாக எதிர்கொண்டு முறியடிப்பதற்கும், பல நாடு களில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங் களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும் சோவி யத் யூனியன் முன்வந்தது. இன்றைய தினம், அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் உலகம் முழுவதையும் தங்கள் மேலா திக்கத்தின்கீழ் கொண்டுவருவதற்கான முயற் சிகளில் வெறித்தனமாக இறங்கியிருக்கின் றனர். இவர்கள் உலகைத் தங்களின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக மேற் கொள்ளப்படும் தத்துவார்த்த, அரசியல் மற்றும் ராணுவரீதியான அனைத்து முயற்சிகளும் அநேகமாக எவ்விதத் தங்குதடையுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிப் போக்குகள்
இத்தகைய சூழ்நிலையிலும் கூட, லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிப் போக்குகள் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் இருக் கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் கொல்லைப்புறமாகக் கருதப்படும் இந் நாடுகள், ஏகாதிபத்தியவாதிகளும் அவர் களின் தொங்குசதைகளும் தங்கள் மீது பூட் டிய விலங்குகளை உடைத்துத் தூள்தூளாக் கிக் கொண்டு, ஜனநாயக அமைப்புமுறையை உருவாக்கி வளர்ந்து கொண்டிருக்கின்றன. கியூபாவுடன் ஒன்றிணைந்து நின்று, இங் குள்ள பல இளம் ஜனநாயக நாடுகள் அமெ ரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சவாலாக எழுந்துள்ளன. 19ஆம் நூற்றாண்டில் சைமன் பொலிவார் என்பவரால் தொடங்கப்பெற்ற பொலிவாரியன் புரட்சியின் இறுதி இலக்கு சோசலிசமே என்று 2006இல் சாவேஸ் பிர கடனம் செய்தார். அத்தகைய பொலிவாரியன் சோசலிசத்தை அல்லது பொலிவாரியன் மாற்றை உருவாக்கிட அவை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. ஆயினும், முன்பு நிகரகுவா மற்றும் வெனி சுலா ஆகிய நாடுகளில் நாம் பார்த்ததைப் போல, இந்த அரசாங்கங்கள் அமெரிக்க ஏகாதி பத்தியவாதிகளின் நேரடி அச்சுறுத்தலின் கீழ் இருக்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிப்போக்குகள் ஏகாதிபத்திய சக்தி களுக்கு ஒரு பின்னடைவேயாகும். அதே சமயத்தில் சர்வதேச அரங்கத்தில் ஒரு வர வேற்கத்தக்க வளர்ச்சிப் போக்காகும். ஒருதுருவக் கோட்பாடு என்னும் ஏகாதி பத்தியவாதிகளின் ஆதிக்க நடவடிக்கை களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு (Shanghai Cooperation), ãÇ¡° (BRICS-Brazil, Russia, India, China, South Africa) போன்று பிராந் திய ரீதியாக அமைப்புகள் உருவாகி வலுப் பட்டு வருவது, பல்துருவக் கோட்பாட்டை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான வளர்ச் சிப்போக்குகளாகும்.
நவம்பர் புரட்சியின் படிப்பினைகள்
சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த போது, அதைக் கொண்டாடியவர்கள் கூட, இப் போது ஏகாதிபத்திய தாக்குதல்களை எதிர்த்து முறியடிக்கக்கூடிய அளவில் வலுவான மாற்று சக்தி இல்லையே என்று வேதனை யுடன் புலம்புவதைக் கேட்க முடிகிறது. இத்தகைய சூழ்நிலையில்தான், நவம்பர் புரட்சியின் படிப்பினைகள் மிகுந்த முக்கியத் துவம் உடையவைகளாக மாறுகின்றன. முத லாளித்துவத்தால் உழைக்கும் மக்களின் பிரச் சனைகளை எப்போதுமே தீர்த்துவைக்க முடி யாது. அதேபோன்று உலகில் அமைதியைக் கொண்டுவரவும் அதனால் முடியாது. நாம் நம்முடைய கோரிக்கைகளுக்காகவும் பல் வேறு பிரச்சனைகளுக்காகவும் இயக்கங் களையும், போராட்டங்களையும் நாள்தோறும் நடத்துகையில், இந்த அடிப்படை உண் மையை ஒருபோதும் மறந்திடக்கூடாது. மனித சமுதாயத்தின் வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறேயாகும். இத்தகைய போராட்டங்கள் உழைக்கும் மக்கள் திரளினரை வர்க்க அடிப்படையில் ஒன்றி ணைத்து வளர்த்திடும். ஓர் ஒன்றுபட்ட தொழி லாளர் வர்க்கம், ஒரு வர்க்கக் கண்ணோட் டத்தின் அடிப்படையில் மட்டுமே, உழைக் கும் மக்களின் அனைத்துப் பிரிவினரின் போராட்டங்களையும் தலைமையேற்று முன்னெடுத்துச் செல்ல முடியும். இத்தகைய ஒன்றுபட்ட போராட்டங்கள், ஒரு சுரண்டலற்ற சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்க வேண் டும் என்கிற நமது இறுதி அலட்சியத்துடன் முறையாக இணைக்கப்பட வேண்டும். இதுதான், 1970ஆம் ஆண்டு சிஐடியு சங் கத்தின் அமைப்பு மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட, சங்கத்தின் அமைப்புச் சட்டத்தில் பொறித்துள்ளதுபோன்று, இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) இறுதி லட்சியம். அது கீழ்க்கண்டவாறு பிரகடனம் செய்கிறது:‘‘தொழிலாளர் வர்க்கத்தின் மீதான சுரண்டலை அனைத்து உற்பத்தி, விநியோகம் மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் சோசலிசமயப்படுத்துவதன் மூலமும் ஒரு சோசலிச அரசை நிறுவுவதன் மூலமும் மட் டுமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று சிஐடியு நம்புகிறது. எனவே, சிஐடியு சோசலிச சிந்தனைகளை உயர்த்திப்பிடிப் பதன் மூலம் சமூகத்தை அனைத்து விதமான சுரண்டலிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் நிற்கிறது.’’ எனவே, நமது போராட்டம் சோசலிசத் திற்கான போராட்டமே. நமது இறுதி லட் சியத்தை அடையும் வரை ஒன்றுபடுவோம், போராடுவோம், முன்னேறுவோம்.
(தமிழில்: ச.வீரமணி)