Sunday, January 13, 2013

அராஜக அரசியலை முறியடிப்போம்


மேற்கு வங்கத்தில் 2013 ஜனவரி 8 புதனன்று ஜனநாயகம் கொடூரமானமுறையில் வன்புணர்வுக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற, இடது முன்னணி அரசாங்கத்தில் நிலச் சீர்திருத்த அமைச்சராகச் செயல்பட்டு வந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் அப்துர் ரெசாக் முல்லா ஜனவரி 6 அன்று சென்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அரபுல் இஸ்லாம் என்கிற திரிணாமுல் காங்கிரஸ் குண்டர் தலைமையில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட் டார்.

இத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பேரணி கொல்கத்தாவில் செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற்றது. ரெசாக் முல்லா மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாய சங் கத்தின் மாவட்ட மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தார். போகும்வழியில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகத்தைப் பார்க்கச் சென்றபோதுதான் அவ்வாறு கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். உடனடியாக அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். 

திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் உள்ள மாநில அரசு நிர்வாகம், மனிதாபிமானமற்று மிகவும் இழிவான முறையில், அவருக்கு முறையான சிகிச்சை எதுவும் அளிக்காமல் உடனடியாக அவரை டிஸ்சார்ஜ்செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறது. அவர் கொடூரமான முறையில் தாக்கப்படவில்லை என்று காட்டுவதே இதன்பின்னணியில் உள்ள அரசின் நோக்கமாகும். ஆயினும் அந்த மருத்துவமனையில் அவர் காயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கையானது, அவருக்கு இடுப்புக்கு அருகே முதுகெலும் பில் மிகவும் ஆழமான முறிவு இருப்பதைக் காட்டியிருக்கிறது. மிகவும் வஞ்சகமான முறையில், தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய அரபுல் இஸ்லாம், அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தான் காயம் அடைந்ததாகக் கூறிக் கொண்டிருந்திருக்கிறான். ஆயினும் அம்மருத்துவமனை மருத்துவர்கள் அவனுக்குக் காயங்கள் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளார்கள்.இந்தத் தாக்குதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை ஏற்றி வந்த இருபதுக்கும் மேற்பட்ட வாகனங் கள் தாக்கப்பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன.

மூவருக்குத் துப்பாக்கிக் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 27 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். இதனை எழுதிக்கொண்டிருக்கக்கூடிய இத்தருணத்தில் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுத்தவர் கள் மீது நடவடிக்கை எதுவும் எடுப்பதற்குப் பதிலாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் கட்டளைக் கிணங்க மாநில காவல்துறையினர் இத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயம் அடைந்தவர்களையே கைது செய்துள்ளனர். பொய்க் குற்றச்சாட்டுக்களின்கீழ் காயமடைந்தோர் கைது செய்யப்பட்டுள்ள அதே சமயத்தில், இக்குற்றங்களைச் செய்திட்ட குண்டர்களோ மிகவும் சுதந்திரமாக சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர்.அனைத்தையும்விட மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், மாநில அரசின் மூத்த அமைச்சர்கள் இத்தாக்குதலை வெளிப்படையாகவே நியாயப்படுத்தி இருப்பதும், இது திரிணாமுல் காங்கிரசார் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடுத்த தாக்குதல் என்றும் கூற முயற்சித் திருப்பதாகும். அமைதியான முறையில் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் உரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழும், நாட்டின் சட்டங்களின் கீழும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் சட்டங்களை அமல்படுத்துவதை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் உள்ள மாநில அரசாங்கம் நடைமுறையில் அமைதியான முறையில் எதிர்ப்பினைத் தெரி விக்கக்கூடிய உரிமையை மக்களுக்கு மறுக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சி ஆதரவாளர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்திடவும் மாநில நிர்வாகத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. 

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் அதாவது 2011 மே மாதத்திற்குப் பின்னர், 2013 டிசம்பர் 31 வரையிலான காலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் 85 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பாக 848 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 129 வழக்குகள் மிகவும் கொடூரமான முறையில் அவர்கள் மீதான வன்புணர்வுக்குற் றங்களுக்கானதாகும். இவ்வழக்குகள் பலவற்றில், கயவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, முதல்வர் உட்பட திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களையே கேலி செய்து வருகின்றனர். வன்புணர்வு மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் என்பவை திரிணாமுல் காங்கிரசின் அரசியல் அதிகாரத்தைக் காட்டும் கருவியாக மாறி இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஆதரவாளர்கள் 42 ஆயிரத்து 724 பேர், அவர்தம் முறையான குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் மூவாயிரம் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, கொள்ளையடிக் கப்பட்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான 646 அலுவலகங்கள் தாக் கப்பட்டு சூறையாடப் பட்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மார்க்சிஸ்ட் கட்சி சார்பான 222 தொழிற் சங்கங்களையும் வெகுஜன அமைப்புகளின் கட்டடங்களையும் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி இருக்கிறார்கள். கல்வி நிலையங்கள் மீதும் பெரிய அளவில் தாக் குதலைத் தொடுத்துள்ளார்கள். மாணவர் சங்கங்களுக்கான தேர்தல்கள் நடை பெற்ற இடங்களில் எங்கெல்லாம் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர்கள் தோற்றார்களோ அங்கெல்லாம் இந்திய மாணவர்கள் சங்கத்தின் அலுவலகங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். இவ்வாறு 84 அலுவலகங்களை அவர்கள் கைப்பற்றி யிருக்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் முன்னணி ஊழியர்களும் 3336 பேர் பொய்யாகப் புனையப்பட்ட குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.மாநிலம் முழுவதும் திரிணாமுல் குண்டர்கள் பெரிய அளவில் மக்களை அச்சுறுத்திப் பணம் பறிக்கும் வேலை யிலும் இறங்கி யிருக்கின்றனர். சுமார் பத்தாயிரம் பேரிடமிருந்து திரிணாமுல் குண்டர்கள் வலுக்கட்டாயமாக வசூலித்த தொகை சுமார் 28 கோடி ரூபாய்களாகும்.ரெசாக் முல்லா நிலச்சீர்திருத்தத் துறை அமைச்சராக இருந்து வந்ததால் திரிணாமுல் காங்கிரசார் அவர் மீது குறி வைத்திருந்தனர். இடது முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் உச்ச வரம்புக்கு மேலே சட்டவிரோதமாக வைத்திருந்த நிலங்கள் அனைத்தும் நிலப்பிரபுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. ரெசாக் முல்லா நிலச்சீர்திருத்தத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் இதனை மிகவும் உறுதியாக மேற்கொண்டார். 

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு, இவ்வாறு நிலங்களைப் பெற்ற விவ சாயிகளிடமிருந்தும் விவசாயத் தொழிலாளர்களிடமிருந்தும் நிலங்களை மீண்டும் கையகப்படுத்தி நிலப்பிரபுக்களிடமே ஒப்படைத்திருக்கிறார்கள். சுமார் 3500 விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை உழுது பயிரிட அனுமதிக்கப்பட வில்லை. குத்தகைப் பதிவுச் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்டிருந்த 27 ஆயிரத்து 283 பட்டாதாரர்கள் சுமார் பத்தாயிரம் ஏக்கர் அளவுள்ள அவர்களது நிலங் களிலிருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். 2011 மே மாதத்திற்குப்பின்னால் இவர் கள் கொண்டுவந்துள்ள மாற்றம்’ (`parivartan’) என்பது இதுதான்.

திரிணாமுல் காங்கிரசை எதிர்க்கும் எவராக இருந்தாலும் - அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் - அவர் தயவுதாட்சண்யம் எதுவுமின்றி கண் மூடித்தனமாகத் தாக்கப்படுகிறார். ஜனநாயகம் பட்டப்பகலில் படுகொலை செய் யப்படுகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. சிவில் உரிமைகள் மீதான பட்டவர்த்தனமான இத்தகைய தாக்குதல்களையும், மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதப் படுத்தியுள்ள ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் சகித்துக் கொள்ள முடியாது. 1970களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரைப் பாசிச அடக்குமுறை வெறியாட் டங்களை மேற்கு வங்கம் மறந்துவிட வில்லை. இப்போதைய திரிணாமுல் காங் கிரசும் அங்கமாக இருந்த அன்றைய காங் கிரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ஜன நாயகமும், ஜனநாயக உரிமைகளும் கடு மையாகத் தாக்கப்பட்ட சமயத்தில், நாட்டில் இருந்த பல அரசியல் சக்திகள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த எச் சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, இத் தகைய தாக்குதல்கள் ஒரு சிறிய வடு தான் என்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் தான் இது நடைபெறும் என்றும் கூறி நழுவிக் கொண்டார்கள். ஆனால் பின்னர் 1975இல் அவசர நிலைப் பிரகடனம் செய் யப்பட்டு நாடு முழுவதும் இத்தகைய அடக்குமுறைகள் விரிவாக்கப்பட்டு, மக் களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப் பட்ட சமயத்தில் அவர்களின் மாயைகள் தூள்தூளாயின. ஜனநாயகத்தை மீட்டெ டுத்திட நாட்டு மக்கள் நடத்திய போராட் டம்தான் 1977இல் வெற்றி பெற்றது. அத னைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் இடது முன்னணி வெற்றி பெற்றது. ஏழு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.காங்கிரஸ் மேற்கொண்ட அரைப் பாசிச அடக்குமுறையை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி உறுதியோடு எதிர்த்து நின்றது. இப்போராட்டத்தில் 12 ஆயிரத் திற்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல்லா யிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேறின. பல தலைவர்கள் தலைமறைவாக இருந்து செயல்பட்டார்கள். இறுதியில், மேற்கு வங்க மக்கள் நாட்டின் பிறபகுதி மக்க ளுடன் இணைந்து நின்று வெற்றிவாகை சூடினார்கள். இவ்வரலாற்றை மறந்து அடக்குமுறையை ஏவுவோர் நிச்சயமாக இதேபோன்ற கதியையே அடைவார்கள். மக்கள் அவர்களை அரசியல்ரீதியாக முறியடிப்பார்கள் என்பது உறுதி.
மேற்கு வங்க மக்கள் இத்தகைய தாக் குதல்களுக்கு எப்போதும் அடிபணிந்த தில்லை. வன்முறை மற்றும் அராஜக அர சியல் மூலமாக மக்களை அச்சுறுத்திப் பணிய வைத்து வரவிருக்கும் பஞ்சாயத் துத் தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட லாம் என்கிற அவர்களது அரக்கத் தனத்தை மக்கள் ஜனநாயக முறையில் அரசியல் ரீதியாக முறியடிப்பார்கள். நம் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்திடும் அனைவரும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையில் நம்பிக்கை வைத் திருக்கும் அனைவரும் இத்தகைய வன்முறை வெறியாட்ட அரசியலை, மனி தாபிமானமற்ற இழி நடவடிக்கைகளை அமைதியான பார்வையாளர்களாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இத்தகைய வன்முறை வெறி யாட்டங்களுக்கு ஜனநாயகத்தில் இடம் கிடையாது. இது நாட்டை விட்டே துரத்தப்பட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி


Tuesday, January 8, 2013

பணப் பட்டுவாடா திட்டம்- மக்கள் வயிற்றில் அடிக்கும் திட்டம்



மிகவும் ஆரவாரத்துடன் மத்திய அரசாங்கம் புத்தாண்டு முதல் நேரடி பணப்பட்டு வாடாத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலிருந்து முன்னதாக அறிவிப்பினைச் செய்ததை, குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற் றுக் கொண்டிருக்கையில் வந்ததாகக் கூறி, தேர்தல் ஆணையம் கடுமையாக விமர்சித்தி ருந்தது. மேலும், இத்திட்டம் தொடர்பாக இத் திட்டத்துடன் அரசாங்கம் ஒரு முழக்கத்தை யும் அறிவித்திருந்தது. அதாவது, “உங்கள் பணம், உங்கள் கையில்என்று பொருள் படும் ஆப் கா பைசா. ஆப் கே சாத்என்ற முழக்கத்தையும் அறிவித்திருந்தது. இது 2014 பொதுத் தேர்தலை மனதில் கொண்டு, மக்க ளுக்கு லஞ்சம் கொடுப்பதுபோலத் தோன்று வதாக விமர்சனங்கள் வந்தபின், அரசாங்கம் இதனை மாற்றியிருப்பதுபோல் தெரிகிறது. மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட இத்திட்டம், ஆரம்பத்தில் நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 43 மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது, பின்னர் அது 20 மாவட் டங்களாகக் குறைந்து, பின்னர் அதுவும் மத்திய அரசின் விதவைகளுக்கான ஓய்வூதி யங்கள், தலித்/பழங்குடியினர் மற்றும் சிறு பான்மையினருக்கான கல்வி உதவிப் பணம் போன்று தெரிவு செய்யப்பட்ட 26 மத்தியத் திட்டங்களுக்கு மட்டும் என்று கூறப்பட்டி ருக்கிறது. தற்சமயம் இதில் உணவு, உரம் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம் கொண்டுவரப்பட வில்லை. இத்திட்டம் அரசின் மானியங்கள் அளிக்கப்படும் அனைத் துத் திட்டங்களுக்கும் படிப்படியாக விரிவாக் கப்படவுள்ளது. 

இத்திட்டத்தில் உள்ள பலவீனங்கள் மற் றும் எல்லைகள் குறித்தும் இது எப்படி நாட்டின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்குப் போய்ச் சேராது என்பதையும் விவாதிக்க இருக்கும் அதேசமயத்தில், இத்திட்டம் குறித்து இது வரையும் நாடாளுமன்றத்தில் சட்டம் எதுவும் நிறைவேற்றப்படாததால் இது சட்டப்படி செல்லத்தக்க தல்ல என்பதை அடிக்கோடிட் டுக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக “2010ஆம் ஆண்டு தேசிய அடையாள ஆணையமைப்பு சட்டமுன்வடிவு” (““The National Identification Authority of India Bill 2010,,) ஒன்று இந்தியாவில் வசிக்கும் அனைவருக் கும் அடையாள எண்கள் கொடுப்பது தொடர் பாகவும் அவர்கள் அதன்மூலம் அரசாங்கம் அளித்திடும் பயன்களைப் பெற்றுக் கொள்ள வும் வகை செய்வதற்காகக் கொண்டுவரப்பட் டது. ஆனால் இச்சட்டமுன்வடிவு இன்ன மும் நாடாளுமன்றத்தின் முன் நிறைவேற்றப் படாமல் நிலுவையில்தான் உள்ளது. இச்சட்ட முன்வடிவு மாநிலங்களவையில் 2010 டிசம் பர் 3 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, அங்கி ருந்து அது நிதித்துறை நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது, இந்நிலைக்குழு இதன்மீது தன்னுடைய அறிக்கையை 2011 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்திருக்கிறது.

நாடாளுமன்ற நிலைக்குழு இத்திட்டம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு, தன் னுடைய அறிக்கையில் இறுதியாகக் கூறியி ருப்பதாவது: இத்திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், குறிப்பாக அரசாங்கங்களுக்குள் ளேயே முரண்பாடுகளும் ஐயங்களும் எழுப் பப்படும் சூழ்நிலையில், இக்குழு எவ்வித ஐயத்திற்கிடமின்றி இச்சட்டமுன்வடிவை இப்போதுள்ள அதே வடிவத்தில் ஏற்பதற் கில்லை என்கிற தன் முடிவைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்திட்டத்தின் கீழ் தொகுக்கப் பட்டிருக்கும் விவரங்களை அரசாங்கம் விரும் பும் பட்சத்தில் அப்படியே தேசிய மக்கள் தொகை பதிவு அலுவலகத்திற்கு மாற்றிட லாம். இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்றும், தேவையான மாற்றங் களுடன் புதியதொரு சட்டமுன் வடிவை நாடாளுமன்றத்தின் முன் கொண்டு வர வேண்டும் என்றும் அரசாங்கத்தை நிலைக் குழு வலியுறுத்துகிறது.’’

ஆனால் அரசாங்கம் இதுவரை நிலைக் குழு அளித்திட்ட அறிக்கை மீது தன் கருத்தி னைத் தந்திடவில்லை என்பது மட்டுமல்ல, நிலைக்குழு கூறியுள்ளவாறு இச்சட்டமுன் வடிவைக் கைவிட்டு விட்டு, புதியதொரு சட்டமுன்வடிவையும் நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரவில்லை. நாடாளுமன்றத் தில் இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப் படா மல் நிலுவையில் இருந்த போதிலும், அரசாங் கம் தன்னுடைய அதிகாரங்களைப் பயன் படுத்தி சாதாரண மனிதனின் அதிகாரம்எனப் பொருள்படும் ஆதார் எண்களை வெளி யிடவும், இத்திட்டத்தை மேற்கொள்ளவும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருப்பதன் அடிப்படையில் இப்போது இது கொண்டு வரப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் இத்தகைய நிலைப்பாட்டு டன் நாடாளுமன்ற நிலைக்குழு முழுமையாக ஒத்துப்போகவில்லை. இச்சட்டமுன்வடிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற் றும் பணி நிலுவையில் இருக்கும் சமயத்தில், இவ்வாறு அரசாங்கம் முடிவு எடுத்திருப்பது நன்னெறி சாராத (unethical) செயல் என்றும், நாடாளுமன்றத்தின் பிரத்யேக உரிமைகளை மீறும் செயல் என்றும் நிலைக்குழு கூறியிருக் கிறது. 

இவ்வாறு அரசாங்கம் இத்திட்டத்தை அமல்படுத்த முன்வந்திருப்பது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்பதுடன், இதில் உள்ள இயல்பான பலவீனங்களும் மிகவும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ‘‘நாட் டின் மக்கள்தொகையில் தோராயமாக ஐந்து விழுக்காட்டு மக்களின் கைரேகைகள் பல் வேறு காயவடுக்களின் காரணமாகவும், வயது முதிர்ச்சியின் காரணமாகவும் தெளிவற்று இருக்கும்’’ என்று ஹைதராபாத்தை மைய மாகக் கொண்டு செயல்பட்டுவரும் 4ஜி அடையாளத் தீர்வுகள் (4G Identity Solutions) மையம் கூறுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத் தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற தொழிலாளர் களின் கைரேகைகளைக் கொண்டு அவர் களை அடையாளம் காணும் முயற்சி முழு மையாக வெற்றிபெறவில்லை என்பதே நம் அனுபவமுமாகும். 

இரண்டாவதாக, இம்முறை முழுமையாக வெற்றி பெற, நாடு முழுவதும் நம்பகமான கணி னியுடன் இணைக்கப்பட வேண்டும். இந் தியா இன்னமும் இந்நிலைக்கு வரவில்லை. 2012 ஆகஸ்டில், இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் பேசுகை யில், “ஆதார் அடிப்படையிலான அடையா ளம் காணும் தொழில்நுட்ப முறையானது, இன் னமும் முழுமையாக மெய்ப்பிக்கப்பட வில்லைஎன்று கூறினார். 

மூன்றாவதாக, பண மாற்றல்கள் பயனாளி களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட இருக்கின்றன. இந்தியாவில், இன் றைய நிலையில் கிராமப்புறப்பகுதிகளில் சுமார் 32 ஆயிரம் வங்கிக் கிளைகள் இருக் கின்றன. அதாவது நாட்டில் உள்ள ஆறு லட் சம் கிராமங்களில் 20 விழுக்காட்டிற்கும் குறைவான நிலையிலேயே வங்கிக் கிளை கள் உள்ளன. 1992இல் ஆட்சியாளர்கள் நவீன தாராளமய சீர்திருத்தங்களைத் தொடங் கிய பின்னர், கிராமப்புறங்களில் செயல்பட்டு வந்த கிட்டத்தட்ட 26 ஆயிரம் வங்கிக்கிளை கள் மூடப்பட்டு விட்டன. 

நான்காவதாக, இவ்வாறு வங்கிகள் இல்லா நிலையில், கிராமங்களுக்கு வங்கிச் சேவைகளை எடுத்துச் செல்ல வங்கித் தொடர்பாளர்கள்அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது. மக்களுக்கு அளிக்கப்படும் மானிய உதவிகளில் கசிவுகள் மற்றும் லஞ்ச லாவண்யங்கள் எதுவும் இல் லாமல் நேரடியாகச் செல்வதை உத்தரவாதப் படுத்துவதற்காக ஆதார் திட்டம் அறிமுகப் படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது அமல்படுத்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஊழல் மற்றும் கசிவுகள் வேறொரு ரூபத் தில் உருவாகி இருப்பதைப் பார்க்க முடி கிறது. 

ஐந்தாவதாக, ஆதார் திட்டம் என்பது ஒருவரை அடையாளம் காணும் திட்டம். ஆனால், ஒருவர் மானியங்கள் பெறத் தகுதி யுடையவரா என்பது தகுதியின் அடிப்படை யில் (eligibility) தான் அமையவேண்டுமேயொ ழிய, அடையாளத்தின் அடிப்படையில் (idendity) அல்ல, பொது விநியோக முறை உட்பட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, திட்டக் கமிஷனின் மதிப்பீட்டின்படி தகுதி பெறுவோரின் எண்ணிக்கை ஒரே சீராய் இல் லை என்பது மட்டுமல்ல, மாநிலத்திற்கு மாநி லமும் வேறுபடுகிறது. எனவே ஒருவருக்கு அரசின் பயன்கள் கிடைக்காமல் விடப்படுகி றார் என்பதற்கு அவருக்கு அடையாளம் இல் லாததனால் அல்ல, மாறாக வறுமை குறித்த அரசின் தான்தோன்றித்தனமான வரையறை களே காரணங்களாகும். 

பண மாற்றுத் திட்டங்கள் பிரேசில், மெக்சி கோ போன்ற நாடுகளில் வெற்றி பெற்றிருப் பதாக அரசாங்கத்தால் அடிக்கடி கூறப்படு கின்றன. ஆனால், இந்நாடுகளில் ஏற்கனவே இருந்த மானியங்கள் அல்லது திட்டங்களுக் குப் பதிலாக ரொக்க மாற்றுத் திட்டம் கொண்டுவரப்படவில்லை. மாறாக ஏற்க னவே இருந்ததுடன் கூடுதலாக அத்திட்ட மும் மக்களுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தி யாவில், ஏற்கனவே இருக்கும் திட்டங்களை மாற்றியமைத்திடுவதற்காக பணப் பட்டு வாடாத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இது தொடர்பாக 2011 பட்ஜெட்டின்போதே அரசு சூசகமாகத் தெரிவித்துவிட்டது. இத்திட்டத் தின் அடிப்படை நோக்கம், வரவிருக்கும் காலங்களில் அரசாங்கம் சமூகநலத்துறை யில் அளித்து வந்த அனைத்துவிதமான மானியங்களையும், உதவிகளையும் கை கழுவி விடும் என்பதேயாகும். 

பணப் பட்டுவாடாத் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கத்தின் மானியங்களைக் குறைத்து விடும். பொருள்களின் விலைகள் உயரும். ஆனால் மக்கள் தாங்கள் பெறும் ரொக் கத்தின் மூலம் வாங்கும் பொருள்களின் அளவு குறைந்திடும். ஆட்சியாளர்கள் தங்க ளுடைய நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையி லேயே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், நவீன தாராளமய யுகத்தில், ஆட்சியாளர்கள் சமூகநலத் திட் டங்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்க்கத் துணிந்துவிட்டனர். ஏற்கனவே சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் தனி யார் கொள்ளைலாபம் ஈட்டுவதற்கு வகை செய்திடும் விதத்தில், அவற்றைத் தனியாரி டம் கணிசமான அளவிற்குத் தாரைவார்த்து விட்டனர். இப்போது, இந்த பணப்பட்டு வாடாத் திட்டமும் மிகவும் கொடூரமான முறை யில் பெரும்பான்மையாகவுள்ள மக்களின் வயிற்றில் அடிப்பதற்கான திட்டமேயாகும். 

தமிழில்: ச.வீரமணி



Wednesday, January 2, 2013

நிதித்துறை தாராளமயத்தின் ஆபத்து



பிரகாஷ் காரத்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட் டிருப்பது ஆட்சியாளர்கள் தாங்கள் மேற் கொண்டிருந்த கொள்கைகளிலிருந்து வில கிச் செல்வதையே குறிக்கிறது. இந்திரா காந்தி அரசாங்கம் செய்ததை மன்மோகன் சிங் அர சாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்திருக் கிறது. வங்கி தேசியமயமாக்கல் சட்டம் 1969இல் நாட்டில் தனியார் வசம் இருந்த பெரும் வங்கிகள் அனைத்தையும் தேசியமய மாக்கியது. இவ்வங்கிகளில் பெரும்பாலா னவை அன்றையதினம் பெரும் தொழில் அதி பர்களின் கைகளில் இருந்தவை. தற்போது 2012இல் வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்ட முன்வடிவினை நிறைவேற்றியிருப்பதன் மூலம் மீண்டும் வங்கித்துறையில் கார்ப்பரேட் முதலாளிகள் நுழைய வழிவகுத்துத்தரப் பட் டிருக்கிறது. இவ்வாறு சக்கரம் முழுமையாக ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டது. மன்மோகன் சிங் அரசாங்கமானது 2005லிருந்தே பல முறை முயற்சிகள் மேற் கொண்டு, தற்போது இத்தகைய பிற்போக்குத் தனமான நடவடிக்கையை நிறைவேற்றிக் கொண்டுவிட்டது. 

ஐ.மு.கூட்டணி அரசாங் கம் முதன்முறையாக இதனைக் கொண்டுவர முயற்சித்தபோது, அதனால் வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில் அப்போது இடது சாரிக் கட்சிகள் அதனைக் கடுமையாக எதிர்த்தன. வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன் வடிவு இரு முக்கிய குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறது.

முதலாவதாக, இந்தச் சட்டமுன்வடிவின் தொடக்கத்தில் வரை யறுத்திருந்த வரிகளைப் பார்த்தோமானால், இவற்றின் பங்குதாரர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் இருந்த வாக்கு உரிமைகள் மீது இருந்து வந்த 10 விழுக்காடு உயர்மட்ட உச்சவரம்பை, ரத்து செய்திட முன்வந்திருந்தது. 2004 ஜன வரியில் ஆட்சியிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் அந்நிய நேரடி முத லீட்டை 75 விழுக்காடு வரை அனுமதித்து அறிவிக்கை வெளியிட்டிருந்தது. அதனை நிறைவேற்ற வேண்டுமானால், இவ்வாறு திருத்தம் கொண்டுவருவது அவசியமாகும். அவர்கள் அளித்திருந்த உறுதிமொழியை மன் மோகன் சிங் தற்போது மீளவும் உறுதி செய் திருக்கிறார். நடைமுறையில் உள்ள சட்ட மானது 10 விழுக்காடு மட்டுமே வாக்கு உரி மைகளை அளிப்பதால், 74 விழுக்காடு முத லீடு செய்திடும் அந்நிய வங்கிகளுக்கு வங்கி களைக் கபளீகரம் செய்திட அது தடையாக இருந்தது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கி களை அந்நிய வங்கிகள் விழுங்கிட வகை செய்திடும் விதத்தில் வாக்களிப்பதில் இருந்த உயர்மட்ட உச்சவரம்பை இச்சட்டத் திருத்தம் நீக்கி விட்டது. தனியார் வங்கிகள் பல மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அந் நிய மூலதனம் இவ்வங்கிகளில் முதலீடு செய் யப்படுமானால் இவை, தங்களைப் புதுப்பித் துக்கொள்ள உதவிடும் என்றும் அரசு வாதிட லாம். அந்த சமயத்தில் இடதுசாரிக் கட்சிகள் இதனை ஆட்சேபித்ததோடு, அவ்வாறு பல வீனமாகவுள்ள தனியார் வங்கிகளை அரசு அடையாளங்காட்ட வேண்டும் என்றும், அவற்றைப் பொதுத்துறை வங்கிகள் கையகப் படுத்திட ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தன. 2009இல் 14ஆவது மக்களவை கலைக் கப்பட்டு விட்டதால், 2005இல் கொண்டுவரப் பட்ட வங்கி முறைப்படுத்தல் (திருத்தச்) சட்ட முன்வடிவு காலாவதியாகிவிட்டது. அரசாங்கம் மீண்டும் 2011இல் 15ஆவது மக்களவையில் இச்சட்டமுன்வடிவை அறி முகப்படுத்தியது.
பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் யஷ்வந்த் சின்கா தலைமையில் உள்ள நிதித்துறை சார்பான நாடாளுமன்ற நிலைக் குழு பங்குதாரர்கள் வாக்களிக்கும் உரிமை யின் உச்சவரம்பை, முழுமையாக நீக்குவதற் குப் பதிலாக, தற்போதுள்ள 10 விழுக்காட்டி லிருந்து 26 விழுக்காடாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. அரசாங்கமும் அந் தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வெளி நாட்டு வங்கிகளும், வெளி நாட்டு நிதித்துறை நிறுவனங்களும் இவ்வா றான 26 விழுக்காடு வாக்கு உரிமையைப் பயன்படுத்தியும், மேலும் பல்வேறு தில்லு முல்லுகளைச் செய்தும் நம் நாட்டில் உள்ள வங்கிகளையும், நிதித்துறை நிறுவனங்களை யும் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திட முடியும். நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்ட முன் வடிவின் மற்றொரு அம்சம், தனியார் துறை யில் புதிதாக வங்கிகளை அமைத்துக்கொள்ள இது வழிவகை செய்கிறது. அத்தகைய வங்கி களுக்கு உரிமங்கள் அளித்திடவும் அவற்றை முறைப்படுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. கார்ப்ப ரேட் முதலாளிகள் இவ்வாறு வங்கிகள் தொடங்கிட எவ்விதத் தடையும் கிடையாது. 1969இல் வங்கிகள் தேசியமயமாக்கப்படு வதற்கு முன்பு, நாட்டிலிருந்து தனியார் வங்கி களில் பெரும்பாலானவை தொழில் நிறு வனங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத் திருந்தன. யுனைடெட் கமர்சியல் வங்கி, பிர்லா நிறுவனங்களுடனும், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், தாபர் கம்பெனிகளு டனும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா டாடாக்களுடனும் தொடர்புகளை வைத்துக் கொண்டிருந்தன. 

இவ்வாறு தொழில் அதிபர்களின் கட்டுப் பாடுகளில் இருந்த வங்கிகள், இவ்வங்கி களில் பொது மக்களால் சேமிக்கப்பட்ட சேமிப்புத்தொகைகளை தொழில் அதிபர் களின் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத் திக் கொண்டன. வங்கிகளிலிருந்து கடன் உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் என்பவை விவசாயிகளுக்கும், சிறிய நிறுவனத் தொழில் முனைவோருக்கும் முற்றிலுமாக இல்லாமல் இருந்தன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் முக் கிய குறிக்கோள்களில் ஒன்று, பெரும் முத லாளிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே இருந்த கள்ளப்பிணைப்பை உடைத்தெறிவது என்பதாகும். ஏனெனில் இத்தகைய இவர் களின் கள்ளப்பிணைப்பானது நாட்டில் பெரும் துறைகளாக விளங்கிவந்த விவசாயத் துறை மற்றும் சிறிய/நடுத்தரத் தொழில்நிறு வனங்களுக்கு கடன் உதவிகள் செய்வது என்பதை முற்றிலுமாக விலக்கி வைத் திருந்தது. வங்கிகள் தேசியமயமாக்கப் பட்ட பின்னர்தான், பொதுத் துறை வங்கிகள் தங்கள் வங்கி வலைப்பின்னலை விரிவானவை களாக வளர்த்தெடுத்தன.

விவசாயத்துறைக் கும் கடன் உதவி மேற்கொண்டன. முன் னுரிமை அடிப்படையில் பல துறைகளுக்கு நிதி உதவிகள் செய்தன. பொதுத்துறை வங்கி கள் தற்சமயம் 65 ஆயிரம் கிளைகளைக் கொண்டிருக்கின்றன. 1991இல் மொத்தம் இருந்த வங்கிக் கிளைகளில் கிராமப்புறங் களில் 58 விழுக்காடு அளவிற்கு இருந்தன. ஆனால் ஆட்சியாளர்கள் தாராளமயக் கொள் கையைப் பின்பற்றத் தொடங்கியபின் இதில் தொடர்ச்சியாக வீழ்ச்சி ஏற்பட்டு, 2011 மார்ச் மாதத்தில் இவை 40.8 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. மன்மோகன் சிங் அரசாங்கத்தின் நவீன தாராளமய வாதங்கள் அனைத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி எதிர்த்து வந்தது. கார்ப்பரேட் முதலாளிகளால் உருவாக்கப்படும் வங்கிகள் உட்பட தனியார் வங்கிகள் புதிதாக நுழை வதை அது ஏற்பதற்குத் தயங்கியது. வங்கித் துறையில் 74 விழுக்காடு அந்நிய நேரடி முத லீட்டை அனுமதித்திட தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தபோதுகூட, இந்திய ரிசர்வ் வங்கி கீழ்வருமாறு கருத்து தெரிவித் திருந்தது:‘‘வங்கிகளில் கணிசமான அளவிற்குப் பொது மக்களின் சேமிப்பு உள்ள நிலையில், அவற்றை ஒருசிலரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்வது என்பது உடைமையுரிமை குறித்துப் பல்வேறு பிரச்சனைகளை எழுப் பிடும்.’’ (2003-04இல் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த அறிக்கை).ப.சிதம்பரம் ஐ.மு.கூட்டணி அரசாங்கத் தின் நிதி அமைச்சராக முன்பு இருந்த போதும் சரி, இரண்டாவது தடவையாகத் தற் போது இருக்கும்போதும் சரி, வங்கித் துறை யில் நவீன தாராளமய சீர்திருத்தங்களை உந் தித்தள்ள அனைத்துவிதமான நடவடிக் கைகளையும் மேற்கொண்டிருக்கிறார். இந் திய ரிசர்வ் வங்கி தயங்குவது அறிந்து, ப.சிதம் பரம் புதிய தனியார் வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி மேற்பார்வை பார்த்திடும் என்றும், அவ் வாறு திறப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிதான் இறுதி முடிவு எடுத்திடும் என்றும் கூறியிருக்கிறார். பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி, புதிதாக வங்கிகள் திறப்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 2011 ஆகஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ், ஆதித்யா பிர்லா குரூப், மஹிந்திரா & மஹிந்திரா, டாடாஸ் மற்றும் லார்சன்& டூப்ரோ போன்ற எண்ணற்ற கார்ப்பரேட் நிறுவனங் கள் புதிதாக வங்கிகள் திறப்பதற்குத் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தின. இப்போது இச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டதை அடுத்து, புதிய தனியார் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு வந்துவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை. இவற்றில் பல கார்ப்பரேட் நிறுவனங்களால் அமைக்கப்பட விருக்கின்றன. 2008இல் உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பின்னர், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நிலை குலைந்து நொறுங்கிய அதே சமயத்தில், இந்திய வங்கிகள் மட்டும் எவ்விதப் பாதிப்பு களும் இன்றி நிலைத்து நின்றன. அப்போது மன்மோகன் சிங் அரசாங்கம் உந்தித்தள்ள முயற்சித்த நிதித்துறை தாராளமய சீர்திருத் தங்களை இடதுசாரிக் கட்சிகள் நிறைவேற்ற விடாது தடுத்துநிறுத்தி தோல்வியுறச் செய் ததும், இந்திய வங்கிகளைக் கபளீகரம் செய் திட வெளிநாட்டு வங்கிகளை அனுமதிக்க மன்மோகன்சிங் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இடதுசாரிகள் தடுத்து நிறுத்திவிட்டதும்தான் இவற்றிற்கு அடிப் படைக் காரணங்களாகும்.ஆயினும், 2009இல் மக்களவைத் தேர் தல் நடைபெற்ற சமயத்தில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இந்தி யாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, இந்திய வங்கிகள் நிலைகுலையவில்லை என்று பீற் றிக்கொள்வதற்கு மட்டும் தயங்கிடவில்லை. இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்படாத தற்கு, வங்கிகள் அரசாங்கத்தின் உடைமை யாக இருந்தது, இந்திராகாந்தியின் பாரம்பரியம் தொடர்வதுதான் என்றும், அதுவே ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் வெற்றி என்றும் காங் கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கை யில் பீற்றிக்கொண்டிருந்தது. ஆனால் இப் போது அதே பாரம்பரியத்தைக் குழிதோண்டிப் புதைத்திட முன்வந்திருக்கிறது.இடதுசாரிக் கட்சிகள் சில திருத்தங் களை வலியுறுத்தி, சட்டமுன்வடிவுக்கு எதி ராக வாக்களித்துள்ளன. அஇஅதிமுக, தெலுங்கு தேசம் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் மட்டுமே இரு அவைகளிலும் இடது சாரிகளுடன் நின்று வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பாஜக-வின் ஆதரவுடன் சட்டமுன்வடிவை நிறைவேற்றிக்கொள்ள முடிந்துள்ளது. இந்தி யாவில் உள்ள பெரும் முதலாளிகளின் நலன் கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்குச் சேவை செய்திடுவதில் இவ் விரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் எதுவும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இரு கட்சி களுமே நவீன தாராளமய சீர்திருத்தங்களின் ஏஜண்டுகளே, அதற்கு வக்காலத்து வாங்கு பவையே என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக் கப்பட்டிருக்கிறது. பாஜக பெற்றுள்ள ஒரே யொரு சலுகை என்னவெனில், பண்டங் களின் முன்பேர வர்த்தகத்தில் (கடிசறயசன வசயனiபே டிக உடிஅஅடினவைநைள) பங்குகொள்ள வங்கிகளை அனுமதிப்பது என்கிற ஆபத்தான சட்டப் பிரிவை விலக்கிக் கொண்டிருப்பதுதான். ஐ.மு.கூட்டணி அரசாங்கம் வங்கிச் சீர் திருத்தங்களை உந்தித் தள்ளிக்கொண்டிருக் கிறது. இதன் பொருள் என்னவெனில், வங் கித்துறையில் அதிக தனியார்மயம் என்ப தேயாகும். கடந்த இருபதாண்டுகளில், இந் திய ரிசர்வ் வங்கி 1993இல் 10 வங்கிகளுக்கும், அதன்பின்னர் 2 வங்கிகளுக்கும் ஆக மொத் தம் 12 தனியார் வங்கிகளுக்கு உரிமங்கள் வழங்கி இருக்கிறது. தனியார் வங்கிகளை அதிகரித்தல், பொதுத்துறை வங்கிகளில் தனி யார் பங்குகள் வாங்க அனுமதித்தல், வளர்ச் சிப் பணிகள் மற்றும் சமூகப் பொறுப்புகளி லிருந்து வங்கிகளின் நடைமுறைகளை விலக்கி வைத்தல் போன்றவை நவீன தாராள மய சீர்திருத்தங்களின் முத்திரைச்சின்ன மாகும். அமெரிக்க வங்கிகள் மேற்கொண்ட பல்வகை பாணிகள் இந்திய வங்கித் துறை யிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.சுருக்கமாகச் சொல்வதென்றால், 2008இல் மேற்கத்திய நாடுகள் நிதி நெருக் கடிக்கு ஆளாக எவை எவை காரணிகளாக அமைந்தனவோ அதே காரணிகள் நிதித் துறை தாராளமயம் என்ற பெயரில் இந்தியா விலும் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண் டிருக்கின்றன. நவீன தாராளமய சீர்திருத்தங் களின் இதயமாக இருப்பது நிதித்துறை தாராளமயம்தான். சர்வதேச நிதிமூலதனத் தின் தேவைகளுடன் நம் நாட்டின் நிதி நிறு வனங்களும் வங்கிகளும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே இதன் பொருள். பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந் நிய நேரடி முதலீட்டிற்குத் திறந்துவிட்டிருப் பதுடன், காப்பீட்டுத் துறையில் 49 விழுக் காடு அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித் திடுவதற்கான நடவடிக்கை, ஓய்வூதிய நிதியங்களை தனியாரிடம் தாரை வார்த்தல் ஆகிய அனைத்தும் மன்மோகன் சிங் அர சாங்கமானது, சர்வதேச நிதி மூலதனம் மற் றும் பெரும் முதலாளிகளின் உண்மையான சேவகனாக செயல் பட்டுக் கொண்டிருக் கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும் தொழி லாளர் வர்க்க இயக்கமும் ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலை முறியடித் திட முன்னிலும் வலுவான முறையில் எழுந்திட வேண்டும். வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு நிறைவேற்றப் பட்ட அன்று அதற்கெதிராக வங்கி ஊழி யர்கள் நடத்திய வேலை நிறுத்தம் மேலும் விரிவான போராட்டங்களுடன் தொடரப்பட வேண்டும். பிப்ரவரி 20 - 21 தேதிகளில் நடை பெறவுள்ள இரு நாள் பொது வேலைநிறுத்தம் மக்களின் நலன்களை மறுதலித்திடும், நாட் டின் வளங்களை அந்நிய நிதி மூலதனத் திற்குத் தாரைவார்த்திடும் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக வலுவான முறையில் எதிர்ப்பினைக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும். 

தமிழில்: ச.வீரமணி