Friday, November 5, 2010

ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மெகா ஊழல் ஆ.ராசாவை நீக்குக! சீத்தாராம் யெச்சூரி பேட்டி



புதுதில்லி, நவ.4-

2ஜி தொலைபேசி அலைவரி சைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்கெனவே கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுக் களையும், மத்திய தலைமை தணிக் கை அதிகாரி உறுதிப்படுத்தி இருக் கிறார் எனவே அதன் அடிப்படை யில் பிரதமர் செயல்பட வேண்டும், தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவை பதவி யிலிருந்து நீக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., கூறினார்.

புதுதில்லியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டம் நடை பெற்றது. அதில் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

மத்திய அமைச்சர் ஆ. ராசா வின் கீழ் இயங்கும் தொலைத் தொடர்புத் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்திருக்கிறதென்றும், எனவே அமைச்சர் ஆ.ராசாவைப் பதவிநீக் கம் செய்து, முறையான விசாரணை நடத்தி, ஊழலுக்குக் காரணமான வர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், அர சுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட் டக்கூடிய விதத்தில் உரிய நடவடிக் கைகள் எடுத்திட வேண்டும் என் றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தி வந்தோம். இது தொடர் பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்று கடிதங்கள் எழுதியிருக்கி றோம். 2008 பிப்ரவரியில் ஒரு கடித மும், 2008 நவம்பரில் ஒரு கடிதமும் பின்னர் கடைசியாக 2010 மே- யில் ஒரு கடிதமும் எழுதியிருக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் உண்மை என்று மத்திய தலைமைத் தணிக் கை அதிகாரி தற்போது தெரிவித் திருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டின் கார ணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப் பை நாங்கள் கூட குறைத்து மதிப் பிட்டுவிட்டோம். உண்மையில் அதன் மதிப்பு என்பது சுமார் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடிக் கும் அதிகம் என்று தெரிவித்திருக்கி றார். நாட்டில் இவ்வளவு பெரிய மெகா ஊழல் இதற்குமுன் நடை பெற்றதில்லை.

தலைமைத் தணிக்கை அதிகாரி மேலும், 2008 ஜனவரியில் கொடுக் கப்பட்ட 122 உரிமங்களில் 85 உரிமங்கள், மத்திய தொலைத் தொடர்புத்துறை வரையறுத்துள்ள நிபந்தனைகளை திருப்திப்படுத்த வில்லை என்றும் குறிப்பிட்டிருக்கி றார். 72 உரிமங்கள் போதுமான அளவு மூலதனம் இல்லாத கம் பெனிகளுக்குக் கொடுக்கப்பட்டி ருப்பதாகவும், 27 உரிமங்கள் தொலைத்தொடர்புத்துறை வரை யறுத்துள்ள நிபந்தனைகளைத் திருப்திப்படுத்த தவறிவிட்டன என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டிருக்கிற ஊழலின் அளவை ஆராய்ந்தோமானால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது மூன்று விழுக்காடாகும். சுகா தாரத்திற்காக அரசு ஒதுக்கியுள்ள பட்ஜெட் தொகையைவிட எட்டு மடங்கிற்கும் அதிகமாகும். கல்விக் காக ஒதுக்கியுள்ள தொகையைவிட மூன்றரை மடங்காகும். இந்த மிகப் பெரும் மெகா ஊழலைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

பிரதமர் மன்மோகன் சிங், நாட் டில் உள்ள சட்டவிரோத மூலதனம் குறித்து அடிக்கடி கவலைப்படு கிறார். ஆனால் இவரது ஆட்சியில் தான் மெகா ஊழல்கள் மூலம் சட்டவிரோத மூலதனம் நாட் டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி களில் ஊழல், தற்போது மும்பை யில் கார்கில் வீரர்களுக்கு வீடுகள் கட்டித்தந்ததில் ஊழல். சட்ட விரோதமாக கனிம வளங்களைக் கொள்ளையடித்து அயல்நாடு களுக்கு ஏற்றுமதி செய்த ஊழல், எல்லாவற்றையும் விஞ்சும் 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல். இவை அனைத்தும் சட்டவிரோத மூலதன மின்றி வேறென்ன?

எனவே பிரதமர், இந்த மெகா ஊழலுக்கு எதிராக உரிய நடவடிக் கைகள் எடுத்திட வேண்டும். தற் போது 3ஜி அலைவரிசை ஏலத் திற்கு விட்டதுபோல் மீண்டும் 2ஜி அலைவரிசையை ஏலத்திற்கு விட்டு, இழந்த தொகையை, உரிமம் பெற்றவர்களிடமிருந்து வசூலித் திட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அரசுக்கு இழப்பு ஏற் பட அனுமதித்திடக் கூடாது. அத் தொகைகளை உரிமம் எடுத்தவர் கள் தர மறுத்தால், அவர்களுக்கு அளித்த உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த மெகா ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, அவர்கள் ஊழல் செய்ததற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி தெரிவித்திருக்கிறார். அந்த அதிகாரிகள் மீது நடவடிக் கை எடுத்திட வேண்டும்.

இந்த விசாரணைகள் பாரபட்ச மின்றி நடைபெறுவதை உறுதிப் படுத்திட இந்த ஊழல்கள் நடை பெற்ற சமயத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவரும் தற்போதும் அதன் அமைச்சராக இருப்பவருமான ஆ.ராசா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

Friday, October 29, 2010

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூர முகம் - மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது



விக்கி லீக்ஸ்(Wicky Leaks) என்னும் இணைய தளம் வெளிப்படுத்தி இருக்கும் அமெரிக்க அரசின் ரகசிய யுத்த ஆவணங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமுகத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருக்கிறது. ‘உலகை உய்விக்க வந்த உத்தமன்’ என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், மற்ற நாடுகளில் நடைபெறும் ‘மனித உரிமைகள் மீறல்கள்’ தொடர்பாக அடிக்கடி ஆர்ப்பரிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மை சொரூபத்தை அது உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது. ‘விக்கி லீக்ஸ்’ வெளியிட்டிருக்கும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களில் கண்டுள்ள விவரங்களிலிருந்து, இராக்கில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது வெளி உலகிற்குத் தெரிய வந்திருக்கிறது.

இந்த ஆவணங்கள், 2004 முதல் 2009 வரையிலான காலத்தில் இராக்கில் சண்டை நடந்த சமயத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் யுத்த நடவடிக்கைகளைத் பட்டியலிட்டிருக்கின்றன. எவ்வளவு கீழ்த்தரமான முறையில் அமெரிக்க மற்றும் அதற்கு ஆதரவாக நின்ற நாடுகளின் துருப்புக்கள் இராக்கியர்களுக்கு எதிராக மிகக் கொடூரமான முறைகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டன என்பதை இந்த ஆவணங்கள் மிகவும் தெளிவாகக் காட்டியிருக்கின்றன. குறிப்பாக அமெரிக்க ஆதரவு இராக் படைகள் அபு கிராய் சிறைச்சாலையில் நடத்தியுள்ள கொடூரமான அத்துமீறல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

‘விக்கி லீக்ஸ்’ இந்த ஆவணங்களை ‘தி நியுயார்க் டைம்ஸ்’, ‘தி பிரிட்டிஷ் டெய்லி’, ‘தி கார்டியன்’, பிரஞ்சு இதழான ‘லீ மாண்டே’ (Le Monde) மற்றும் ஜெர்மன் சஞ்சிகை ‘டெர் ஸ்பீஜெல்’ (Der Spiegel) ஆகியவற்றிற்குக் கிடைக்குமாறு செய்திருக்கிறது. இதனை அடுத்து இது உலகின் மனச்சாட்சியையே உலுக்கிவிட்டது. இந்தக் கசிவுகள் அமெரிக்க ராணுவ வரலாற்றில் மிகப்பெரும் கசிவுகளாகக் கருதப்படுகின்றன.

‘விக்கி லீக்ஸ்’ ஆவணங்கள் வெளிப் படுத்தியுள்ள கொடூர சித்திரவதைகள், கொலைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் அடிப்படையில் இராக்கில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க ராணுவம் ஒரு முழுமையான புலனாய்வை மேற்கொண்டிட பராக் ஒபாமா கட்டளையிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஐ.நா. ஸ்தாபனத்தின் சித்திரவதைகள் தொடர்பான தலைமைப் புலனாய்வாளர் மான்ஃபிரெட் நோவாக் சித்திரவதைகளுக்கு எதிராக ஐ.நா.கன்வென்ஷனின் நெறிமுறைகள் மீறப்பட்டிருப்பதை இவை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன என்று கூறியிருக்கிறார். எனவே, ஒபாமா நிர்வாகம், இதன்மீது புலனாய்வு செய்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரிட்டிஷ் கூட்டணி அரசாங்கமானது, இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தும் விவரங்கள், உண்மையில் மிகவும் ‘அசாதாரணமானவை’ என்றும் ‘அதிர்ச்சியளிக்கக்கூடியவை’ என்றும் சித்தரித்திருக்கிறது. இங்கிலாந்தின் துணைப் பிரதமரான, நிக் கிளெக், ‘‘டோனி பிளேர் அரசாங்கமானது 2003 மார்ச்சில் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு இராக்கில் நுழைந்தது ‘சட்டவிரோதமான’ செயல்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த ஆவணங்கள் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் விவரங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. இராக்கில் போர் தொடுக்க அமெரிக்கா, அதிகமான அளவில் தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்களைச் சார்ந்திருந்ததாகவும், உலகில் மேற்கொண்ட யுத்தங்கள் எதிலும் இதற்கு முன் அது இவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் ஆவணங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. அமெரிக்காவானது இராக்கிலும் பின்னர் ஆப்கானிஸ்தானத்திலும் நடைபெற்ற சண்டைகளில் தன் நாட்டின் போர்வீரர்களைவிட அதிகமான அளவில் ஒப்பந்தக்காரர்களை ‘அவுட்சோர்சிங்’ முறையில் அமர்த்தி இருந்தது என்பதும் இவ்வாறு அதிர்ச்சியளிக்கும் விவரங்களில் ஒன்றாகும். தன் நாட்டின் போர் வீரர்களைவிட ஒப்பந்தக்காரர்கள் எண்ணிக்கை அதிகம் என்று அது கூறுகிறது. ஆப்கானிஸ்தானத்தில் இன்றைய தினம் வன்முறையைப் பரப்பிக் கொண்டிருப்பதும், அதன் மூலம் தாலிபான்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதும் இத்தகைய ஒப்பந்தக்காரர்கள்தானாம். இதனை அடுத்து இப்போது அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் அதிக அளவு துருப்புக்களைப் பயன்படுத்த இருப்பதையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நவீன நாகரிக உலகில் இவ்வாறு மனித உரிமை மீறல்கள் மற்றும் மிகக் கொடூரமான யுத்தக் குற்றங்களைப் புரிந்துள்ளமைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பதில் சொல்லியேயாக வேண்டும்.
அதிபர் ஒபாமா நம் நாட்டிற்கு விரைவில் வர இருக்கும் இச்சமயத்தில், இந்தியா இப்பிரச்சனைகளை எழுப்பிட வேண்டும். இராக்கில் அமெரிக்க ராணுவப் படையெடுப்புக்கு மறுப்பு தெரிவித்து இந்திய நாடாளுமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டும். (உண்மையில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, இடதுசாரிகள் கண்டனம் (condemn) தெரிவிக்க வேண்டும் என்றுதான் கோரியிருந்தார்கள். ஆயினும் மற்ற கட்சிகள் அதற்கு உடன்படாது, இவ்வாறு ‘மறுப்பு தெரிவித்து’ (disapprove) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.) மேலும் இந்தியா அமெரிக்க அதிபரிடம், மும்பையில் 26/11 நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உள்ள தொடர்புகள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது தொடர்பாகவும் பேசிட வேண்டும். அவன், இரட்டை ஏஜண்டாக இருந்தது - அதாவது பாகிஸ்தானில் அவன் பயங்கரவாதிகளின் முகாம்களில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில், லஸ்கர்-இ-தொய்பா மூலமாக அல்கொய்தா இயக்கத்திற்கும் அமெரிக்க உளவு ஸ்தாபனங்களுக்கும் - வேலை செய்துகொண்டிருந்தான் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. ஹெட்லி, தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து 12 பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டிருக்கிறான். ஹெட்லியின் மூன்று மனைவிமார்கள் அமெரிக்க அரசாங்கத்தை முதலில் 2005இலும் பின்னர் மீண்டும் 2008இலும் ஹெட்லி, லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தான் என்றும், மும்பையில் தாக்குதல் தொடுக்க சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறான் என்றும் எச்சரித்திருந்தார்கள் என்று ‘தி நியுயார்க் டைம்ஸ்’ குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை செய்திருந்தபோதிலும் அவற்றின் மீது அமெரிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்குக் காரணம், இத்தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு பிரதானமாக இருப்பது வெளியுலகத்திற்குத் தெரிய வந்துவிடலாம் என்பதால் அதனைத் தவிர்த்திருக்கலாம் என்று ‘தி நியுயார்க் டைம்ஸ்’ மேலும் குறிப்பிட்டிருக்கிறது.

இப்பிரச்சனை தொடர்பாகவும் ஒபாமா நிர்வாகம் தெளிவுபடுத்திட வேண்டும். இந்தியாவிற்கு எதிராக அதன் மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளில் எவர் ஈடுபட்டாலும் அதனை சகித்துக்கொள்ள மாட்டோம் என்கிற திட்டவட்டமான உறுதிமொழியை இந்தியாவிற்கு அது அளித்திட வேண்டும். ஆயினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் நலன்களுக்கு உகந்தவிதத்தில்தான் செயல்படும் என்பதையே வரலாறு நமக்கு மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறது. எக்காலத்திலும் வேங்கை தன் புள்ளிகளை மாற்றிக்கொள்ளாது.
இராக்கிற்கு எதிராக போர் புரிந்ததற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறிய அனைத்தும் தவறானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டு விட்டன. ஆயினும், அதன் அடிப்படையில், அமெரிக்க ஏகாதிபத்தியம், மீண்டும் ஒருமுறை, தன் கொடூரமான முகத்தை, உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது. அடிப்படை மனித உரிமைகளையும் மனித குல விடுதலையையும் நேசிக்கும் அனைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், அது செய்திட்ட கொலைபாதகச் செயல்களுக்கு அதனைப் பொறுப்பேற்கவும் கோர வேண்டும்.

(தமிழில்: ச. வீரமணி)
 

Monday, September 27, 2010

ஜம்மு-காஷ்மீர் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்



இறுதியாக, செப்டம்பர் 20-21 தேதி களில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு ஜம்மு - காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண் டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நூறு நாட் களுக்கும் மேலாக பாதுகாப்புப் படையின ருக்கும் மக்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 108 இளம் உயிர்கள் பலியானதை அடுத்து இந்தக்குழு சென்றது. ஜூன் 11 அன்று அங்கே கிளர்ச்சி துவங்கிய உடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று கோரினோம். ஆகஸ்ட் 6 அன்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்ற சமயத்திலும் இதனை நாம் வலியுறுத்தினோம். புனித ரம் ஜான் மாதம் துவங்குவதற்கு முன்னரே இத னைச் செய்திடுமாறும் நாம் கேட்டுக் கொண் டோம். அப்போது அரசுத் தரப்பில், அங்கே இயல்பு வாழ்க்கைத் திரும்பிய பின் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வாதிடப்பட்டது. இயல்பு வாழ்க்கைத் திரும்பு வதற்கே இத்தகைய நடவடிக்கைகள் அவ சியம் என்று நாம் திரும்பத் திரும்ப அரசை வலியுறுத்தி வந்தோம். அந்த சமயத்தில் இதனை ஏற்க அரசு மறுத்ததை அடுத்து, அங்கே பதட்ட நிலைமைகள் மேலும் அதிக ரிக்கவும் அதன் விளைவாக எண்ணற்ற அப் பாவி உயிர்கள் பலியாகவும் நேர்ந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதி கள் குழு ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய இரு நகரங்களிலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், மக்களின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்தது. மாநில மக்களின் துன்ப துயரங்களை பிரதிநிதிகள் குழுவும் மிகவும் கவலையுடன் கேட்டது. மக்களுக்குத் தங்களின் தார்மீக ஆதரவைத் தெரிவித்தது. முதலாவதாக, அனைத்து அரசியல் கட்சித் தலைமைகளுக்கும், அனைத்துப் பிரிவு மக்க ளுக்கும் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை யும் அமைதியையும் மீளக் கொண்டுவரக் கூடிய விதத்தில் அனைவரும் ஒன்றுசேரு மாறு பிரதானமாக வேண்டுகோள் விடுத்தது. பிரச்சனைகள் அனைத்தையும் பேச்சுவார்த் தைகள் மூலம் தீர்க்க முன்வருமாறும் கேட்டுக் கொண்டது. இந்த உணர்வின் அடிப்படை யிலேயே பிரதிநிதிகள் குழுவில் சென்ற உறுப் பினர்களில் சிலர் மாநிலத்தில் இயல்பு வாழ்க் கைத் திரும்பவும், மக்கள் மீதான துன்ப துயரங் களைப் போக்கிடவும், அப்பாவி உயிர்கள் பலி யாகாமல் பாதுகாத்திடவும் முன்வர வேண்டும் என்று கோருவதற்காக காஷ்மீரில் இயங்கி வந்த பிரிவினை இயக்க தலைவர்கள் பல ரைச் சந்திக்க அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்கள் அந்த அழைப்பை ஏற்கவில்லை. பின்னர், பிரதிநிதிகள் குழுவினரே அவர்கள் இடத்திற்குச் சென்றனர். இவ்வாறு திடீரென்று எவரும் எதிர்பாராதவிதத்தில் எடுக்கப்பட்ட நட வடிக்கையானது, தற்போது மாநிலத்தில் நில வும் துன்ப துயரங்களைப் போக்குவதற்காக வும், மக்களுக்கு நிவாரணம் அளித்து இயல்பு வாழ்க்கையை மீளக் கொண்டு வருவதற்காக வும், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமை மிகவும் நேர்மையாக நடந்து கொண் டதை காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் கொண்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஓர் அங்கம் என்று ஒரு மனதாக நிறைவேற்றப் பட்ட 1994 தீர்மானத்தின் அடிப்படையிலேயே நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் அணுகுமுறை அமைந்திருந்தது.

ஸ்ரீநகரில் பல்வேறு பிரிவு மக்களுடனும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருப வர்களுடனும் நடத்திய பேச்சு வார்த்தைகளி லிருந்து, அவர்கள் மிகவும் மனம் நொந்து, நம் பிக்கையற்ற நிலையில் இருப்பதை உணர முடிந்தது. உடனடியாக அங்கே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இடது சாரிக் கட்சிகள் சார்பில் ஏற்கனவே அரசுக்கு கோரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் எதுவுமே இதுவரை அமல் படுத்தப்படவில்லை. இது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையையும் அவநம்பிக்கை யையும் ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் மத்தி யில் உள்ள அவநம்பிக்கையைப் போக்கிட வும், அரசின் மீது நம்பிக்கையில்லாமல் மக் கள் இருப்பதையும் போக்கிட வேண்டுமா னால் உடனடியாக அரசு, இடதுசாரிகள் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.

அடுத்து, ஜம்முவில் பிரதிநிதிகள் குழு வைச் சந்தித்தவர்கள், மத்திய அரசின் அணுகுமுறை முழுமையாக ‘‘காஷ்மீரை மையமாக’’ வைத்தே இருப்பதாகவும், ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை அது முழுமை யாகப் புறக்கணித்துவிட்டதாகவும் கூறினார் கள். பிரதிநிதிகள் குழுவிலிருந்து சிலர், புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் முகாம்க ளுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் அளித்த விவரங்கள், காஷ்மீரில் உள்ள பிரச்சனைக ளின் மற்றொரு பக்கத்தைக் காட்டின. பள்ளத் தாக்கிலிருந்து 21 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இவர்களில், பெரும்பாலான குடும்பங்களுக்கு இன்றைய தேதி வரையிலும் நிரந்தரக் குடியிருப்பு என்று எதுவும் இல்லை. மத்திய அரசாலும் மாநில அர சாலும் அறிவிக்கப்பட்ட அனைத்து உறுதி மொழிகளும் பெருமளவில் இன்றளவும் நிறை வேற்றப்படாத நிலையிலேயே உள்ளன. காஷ் மீர் பண்டிட்டுகள் மற்றும் புலம்பெயர்ந்து வந் துள்ள மக்களின் துன்ப துயரங்களும் உடனடி யாகப் போக்கப்பட வேண்டும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல நூறு ஆண்டு களாக, முஸ்லிம்களும் பண்டிட்டுகளும் மிக வும் நல்லிணக்கத்துடன் கூட்டாகவே வாழ்ந்து, நாட்டின் சமய ஒற்றுமைக்கு வலு வான அடிப்படைத் தூண்களாக விளங்கி வந் துள்ளனர். நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந் தியாவிற்கு அடித்தளமாக விளங்கும் இத்த கைய நல்லிணக்கத்தை அழித்திடக் கூடிய வகையில் அரசின் செயலற்றத் தன்மை இருந்து விடக் கூடாது.

எனவே, இப்பிரச்சனைகளைக் களைந் திட அரசு அவசரகதியில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அங்கே இயல்பு வாழ்க் கைத் திரும்புவது என்பது ஜம்மு - காஷ்மீர் மக்களின் துன்ப துயரங்களைப் போக்குவதற் காக மட்டுமல்ல, நாட்டின் நவீன மதச்சார்பற்ற குடியரசை வலுப்படுத்துவதற்கும் வசியமாகும்.

மத்திய அரசும் மாநில அரசும் உருப்படி யான, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூ டிய விதத்தில் நடவடிக்கைகளை எடுத்திட வைப்பதற்கு உதவிடும் வகையில் நாடாளு மன்ற பிரதிநிதிகள் குழு பயணம் பயன்பட வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் சார்பில் முன்வக்கப்பட்ட தீர்மானகரமான நடவடிக் கைகள் இதற்கு அடிப்படையாக அமைந்திட வேண்டும். கடைசியாக, மத்திய அரசு, மத் தியக் குற்றப் புலனாய்வுத் துறையாலோ அல் லது வேறு ஏஜென்சிகளாலோ குற்றம் சாட்டப் பட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு எதி ராக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மேலும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகள் குறித்தும் மறு பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும். அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுடன் சிறை யிலிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி