Showing posts with label movements. Show all posts
Showing posts with label movements. Show all posts

Saturday, February 20, 2010

ஊனமுற்றோரின் உரிமைகளைப் பாதுகாத்திடுவோம் : முரளிதரன்

சொந்தத் தந்தையே ஊனமுற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தன் சொந்த ஏழு வயது மகளையே அடித்துக் கொன்ற கொடுமை பற்றிய ஒரு செய்தி சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாகி யிருந்தது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் திரிபாங்கோட்டூர் என்னு மிடத்தில் இக்கொடுமை நடைபெற்றது.

ஒரு நபர் மனநிலைப் பாதிக்கப்பட் டவர் என்பதாலேயே அவரது உரிமைகள் பறிக்கப்படக்கூடாது. ஆயினும் இது போன்றதொரு கொடுமை கேரளம் போன்ற முற்போக்கான மாநிலத்திலேயே நடைபெற்றிருப்பதுதான் கொடுமையி லும் கொடுமை.

கேரளத்திலேயே இம்மாதிரி கொடு மை எனில் மற்ற மாநிலங்களில் நிலை மைகள் இதைவிட மோசமாகும். அநேக மாக மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஊனமுற்றவர்களுக்குக் கல்வி, சுகா தாரம், குறைந்தபட்ச வாழ்க்கை பாது காப்பு, வாழ்வதற்கான உரிமைகள் மறுக் கப்படுகின்றன. அவர்கள் அரசியல் மற் றும் பொதுவாழ்க்கையில் பங்கேற்க இய லாது. பல்வேறு விதமான சுரண்டலுக் கும், வன்முறைக்கும், கொடுமைக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள். சொந் தக் குடும்பத்தினரே அவர்களைக் கை கழுவி விட்டுவிடுகிறார்கள். அநேகமாக உலகம் முழுவதும் ஊனமுற்றோர் மிகவும் மோசமாகத்தான் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் தொடர்பாக ஒவ்வொரு மொழி யிலும் உள்ள வார்த்தைகளே மோசமாகத் தான் இருக்கும். ஒரு வீட்டில் ஊனமுற் றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் இருந்தால் அந்தக்குடும்பத்தாரே அவ ரைத் தனியே ஒதுக்கி வைப்பதும், சமூ கத்திலிருந்து பிரித்து வைப்பதும் நடை முறையாக இருக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் ஊனமுற்றோருக்கான ஐ.நா.சிறப்புப் பிரதிநிதி லியாண்ட்ரோ டிஸ்பாய், 1993 இல் தன்னுடைய அறிக்கையில், “ஊன முற்றோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை சமூகத்தின் மாண்பினை உயர்த்திப்பிடிக் கக்கூடிய விதத்தில் அமைந்திட வேண் டும். ஊனமுற்றோரும் மனிதர்கள்தான், இன்னும் சரியாகச் சொல்வதென்றால், சாமானிய மனிதர்களை விட சிறப்புக் குரிய விதத்தில் அவர்கள் கருதப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் அடிப்படையிலேயே ஊனமுற் றோர் உரிமைகள் தொடர்பாக ஐ.நா. கன் வென்ஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சமூகத்தில் உள்ள சிறுபான் மையினர், பெண்கள் சமத்துவமின்மை தொடர்பாக பல்வேறு சட்டங்கள் நிறை வேற்றப்பட்டிருந்தாலும், ஊனமுற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக் கென்று அத்தகைய சட்டங்கள் உரு வாக் கப்படவில்லை. சமீபத்தில்தான் அவ் வாறு உருவாக்கப்படவில்லை என்பதே சமூகத்தில் பல தரப்பினராலும் உணரப் பட்டிருக்கிறது.

ஊனம் - வறுமை - சுகாதாரக் குறைவு ஆகியவற்றிற்கிடையே உள்ள உள்ளார்ந்த உறவு முழுமையாக அங்கீக ரிக்கப்படவில்லை. வறுமை, ஊட்டச்சத் தின்மைக்கும் சுகாதாரமின்மைக்கும், பாதுகாப்பற்ற வாழ்க்கைக்கும் இட்டுச் செல்கிறது.

கருவுற்ற தாய்மார்களுக்குப் போதிய ஊட்டச்சத்துடன் கூடிய உணவு அளிக் கப்பட்டால் அவர் நல்ல ஆரோக்கியத்து டன் கூடிய மகவை ஈன்றெடுப்பார். ஆனால் கருவுற்ற தாய்மார்கள் உரிய முறையில் பேணிப் பாதுகாக்கப்படுவ தில்லை. இதுவே ஊனத்துடனும் மன நிலைப் பாதிக்கப்பட்ட நிலையிலும் குழந் தைகள் பிறப்பதற்கு முக்கிய காரணங் களாகும்.

நாட்டில் ஊனமுற்றோருக்காக சில பள்ளிகள் இருந்தாலும் அங்கே போதிய அளவிற்கு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரி யர்கள் நியமிக்கப்படுவதில்லை. தலை நகர் புதுதில்லியில் உள்ள ஊன முற்றோருக்கான பள்ளியிலேயே கடந்த பத்தாண்டுகளாக போதிய ஆசிரியர்கள் கிடையாது. அநேகமாக பல மாநிலங் களில் உள்ள நிலைமையும் இதுதான்.

ஜனநாயக இயக்கங்களை வலுப் படுத்துவதன் மூலம்தான் ஊனமுற்றோர் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். அந்த வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்க ளின் உரிமைகளுக்கான இயக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறது. 2010 பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் கொல்கத்தா வில் மனநிலை பாதிக்கப்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர் சிறப்பு மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு இலட்சத்திற்கும் மேலான உறுப்பினர் களைக் கொண்டுள்ள மேற்கு வங்க மாநில மனநிலைப் பாதிக்கப்பட்டோர் சங்கம் (ஞயளஉாiஅ க்ஷயபேய சுயதலய ஞசயவiயெனோi ளுயஅஅடையni) இச்சிறப்பு மாநாட்டிற்கு ஏற் பாடுகளைச் செய்துள்ளது. மாநாடு சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெறு கிறது. நாடு முழுதுமிருந்தும் முன்னணி ஊழியர்கள் இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

சிறப்பு மாநாட்டை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத் துவக்கி வைக்கிறார். மனநிலை பாதிக்கப்பட் டோர் மற்றும் ஊனமுற்றோருக்கான கல்வி மற்றும் சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம், ஊனமுற்றோர் தொடர்பான ஐ.நா. கன்வென்ஷன் மற்றும் சட்டப் பிரச்சனைகள் குறித்து விவாதங் கள் நடைபெறவிருக்கின்றன. சிறப்பு மாநாட்டின் நிறைவாக எதிர் வரும் காலத்தில் ஊனமுற்றோரைத் திரட்டி, போராடுவதற்காக, கோரிக்கை சாசனம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

-கட்டுரையாளர்: சிபிஎம் மத்தியக்குழு அலுவலகம், ஊனமுற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் முன்னணி ஊழியர்.

தமிழில்: ச.வீரமணி