Showing posts with label Nepal constitution. Show all posts
Showing posts with label Nepal constitution. Show all posts

Sunday, September 27, 2015

நேபாள அரசமைப்புச் சட்டம்: ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை


நேபாள அரசமைப்புச் சட்டம்:
ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை
கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டம் நேபாளத்தில் நிறைவேற்றப் பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். நிலப்பிரபுத்துவ எதேச்சதிகாரத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்காகவும் நேபாள மக்கள் தொடர்ந்து நடத்திவந்த போராட்டத்தின் விளைவாக, இவ்வாறு ஒரு கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அரசு நிறுவப்படும் அளவிற்கு இட்டுச் சென்றிருக்கிறது. இடைக்கால அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப்பின்னர், மிகவும் சிக்கலான அரசியல் நடைமுறைகளுக்குப்பின்னர்,
அரசியல் நிர்ணயசபையானது, மிகவும் தீர்மானகரமான முறையில் (மொத்தம் உள்ள 601 உறுப்பினர்களில் 507 உறுப்பினர்களின் ஆதரவுடன்) இந்த அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. நேபாள மக்கள், நேபாளத்தின் மூன்று பெரிய அரசியல் கட்சிகளாக விளங்கும் - நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் இவ்வாறு குறிப்பிடத்தக்க முறையில் சாதனை புரிந்ததற்காக வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்.
மோடி அரசின் தலையீடு
இந்த அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டிருப்பதை வரவேற்பதில் இந்தியா முதலாவதாக இருந்திருக்க வேண்டும். மாறாக, மோடி அரசாங்கம் ஓர் எதிர்மறை அணுகுமுறையை பின்பற்றி இருக்கிறது. ஒரு தேவையற்ற தலையிடும் நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறது. அரசியல் நிர்ணயசபையில் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபிறகு இரு நாட்களுக்குப் பின், மோடி அரசாங்கம் தன் அயல்துறை செயலாளர் ஜெய்சங்கரை, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து,அரசமைப்புச் சட்டம் முறையாகப் பிரகடனம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருக்கிற செப்டம்பர் 20 அன்று அவ்வாறு நடைபெறாமல் நிறுத்துவதற்காக காத்மண்டுக்கு அனுப்பியது. நேபாளத்தின் இறையாண்மை விஷயங்களில் மிகவும் கேடுகெட்ட முறையில் தலையிடுவதற்கு அது கூறும் காரணம், இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கிற அரசமைப்புச் சட்டம் மாதேஷி மக்களுக்குப் போதுமான அளவிற்கு பங்களிப்பினைச் செய்திடவில்லை என்றும், அதன் விளைவாக மாதேஷி மக்கள் மத்தியில் ஓர் ஆழமான அமைதியின்மை ஏற்பட்டிருக்கிறது என்பதுமாகும். அரசமைப்புச் சட்டம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டதற்குப் பின்னர், இந்திய அயல்துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் மற்றும் வன்முறை குறித்து கவலை தெரிவித்திருக்கிறது. இதற்கு அடுத்து இரு நாட்களில் இந்திய அரசின் சார்பில் இரு அறிக்கைகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் டெராய் மண்டல நிலைமைகள் குறித்து கவலை தெரிவித்திருப்பதுடன், அரசமைப்புச் சட்டத்தைப் பொறுத்து மாதேஷி மக்களின் கவலைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதர் கலந்தாலோசனைகள் செய்வதற்காக அழைக்கப் பட்டிருக்கிறார். நேபாளம் குறித்து, இந்திய ஆட்சியாளர்கள் ஒரு பெரிய அண்ணன் அணுகுமுறை யை அடிக்கடி கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். ஆயினும் அத்தகைய அணுகுமுறை இப்போது மிகவும் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. தங்கள் நாட்டின் சொந்த ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றி தங்கள்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளநேபாளத்திற்கு இருக்கும் இறையாண்மை உரிமையை இரக்கமற்ற முறையில் அது அசட்டை செய்கிறது.
தெற்காசியாவிலேயே மேம்பட்ட சட்டம்
நேபாள அரசமைப்புச் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கிறதை விட மிக விரிவான அளவில் அந்நாட்டின் பிரஜைகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி இருக்கிறது. அமையவுள்ள மக்கள் பிரதிநிதிகள் அவையில் அரசியல் கட்சிகளுக்கு 45 சதவீத இடங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய விதத்தில், தேர்தல் முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. பெண்கள், தலித்துகள், மாதேஷிகள், ஜன்ஜாதிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் அரசமைப்புச் சட்டத் தின் பல்வேறு அமைப்புகளில் இடஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏழு மாநிலங்கள் இருக்கும். நேபாள அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் மற்றும்ஸ்தல அரசாங்கங்கள் என மூன்று மட்டங்களில் அரசாங் கங்கள் அமைக்கப்படும். ஒருசில குறைபாடுகள் இருப் பினும்கூட, தெற்காசியாவில் தற்போதுள்ள ஜனநாயகஅரசமைப்புச் சட்டங்களில் இருப்பதைவிட பல் வேறு அம்சங்களில் நேபாள அரசமைப்புச் சட்டம் மேம்பட்ட தாகும். வரைவு அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளில் ஒன்று, நேபாள அரசை ஒரு மதச்சார்பற்ற அரசு என்றுவரையறுத்திருப்பதாகும். நேபாளத்தில் சில பிரிவினர் இதனைக் கடுமையாக எதிர்த்து வந்தார்கள். மன்னர் ஆதரவு ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சியும் மற்றும் பல்வேறுஇந்துத்துவா குழுக்களும் நேபாளம் முழுவதும், நேபா ளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. அரசியல் நிர்ணயசபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இக்கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.
பாஜகவின் ஆசை
நேபாளத்தை இந்து ராஷ்ட்ரமாக அறிவிக்க வேண்டும் என்று நேபாளத்திற்குள் செயல்பட்டு வரும் சக்தி களுக்கு இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் இந்துத்துவா சக்திகள் அனைத்தும் அனைத்துவிதமான உதவிகளையும் செய்தன. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வைத்தியநாத், நேபாளத்தை இந்து ராஷ்ட்ரமாக அறிவிக்க வேண்டும் என்று நேபாளக் குடியரசுத் தலைவருக்கும், அரசியல் நிர்ணயசபையின் தலைவருக்கும் கடிதங்கள் எழுதி இருந்தார்.முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் என்ற முறையில் 2010 மார்ச்சில் மறைந்த பிரதமர் ஜிபி கொய்ராலாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நேபாளத்திற்குச் சென்றிருந் தார். அந்த சமயத்தில் அவர், “உலகிலேயே நேபாளம் மட்டுமே இந்து ராஜ்ஜியமாக இருந்ததில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொண்டிருந்தோம். நேபாளம் மீண்டும் இந்து அரசாக மாறும் எனில் நாங்கள் மிகவும் மகிழ்வோம்,’’ (ஐஏஎன்எஸ், மார்ச் 22, 2010) என்று பேசியிருந்தார். நேபாளத்தில் இந்து ராஷ்ட்ரம் அமைய வேண் டும் என்று நடைபெற்று வரும் பிரச்சாரங்களில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் இந் துத்துவா அமைப்புகளின் சாதுக்களும் தலைவர்களும் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆத்திரம் கொள்ளும் இந்துத்துவா சக்திகள்
நேபாளம் இந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும், நேபாளம் ஒருமதச்சார்பற்ற குடியரசாகத் திகழும் என்று கூறியிருப்ப தும்தான் இந்தியாவில் இயங்கும் இந்துத்துவா சக்தி களை ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கிறது. பாஜகவும் இதனை வெளிப்படையாகக் காட்ட முடியாவிட்டாலும், இந்தக் கோபத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறது. மோடிஅரசாங்கத்தால் எதிர்மறையான நிலைப்பாடு எடுக்கப் பட்டிருப்பதற்கு அநேகமாக இதுதான் காரணமாகும். நேபாள மக்கள் தொகையில் 50 சதவீதமாக இருக் கும் மாதேஷி மக்கள் மத்தியில் நியாயப்பூர்வமான குறைகள்இருக்கலாம். ஆனால் மோடி அரசாங்கம், அவர்களின் கோரிக்கைகளுக்காக வெளிப்படையாக நிலை எடுத் திருப்பதை, அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டிருக்கிறது என்று கூறுவதைத் தவிர வேறெப்படியும் கூற முடியாது. மாதேஷி கிளர்ச்சிக்கு மோடிஅரசாங்கம் மவுனமாய் ஆதரவு அளித்து வருவ தற்கு பீகார் சட்டமன்றத் தேர்தலும் ஒரு காரணமாகும். பீகாரில் எல்லை மாவட்டங்களில் வாழும்மக்களில் பெரும்பகுதியினர் மாதேஷி மக்களுடன்எல்லைக்கப்பாலும் தொடர்புகளைக் கொண்டிருக் கின்றனர். நேபாளத்துடனான உறவுகளுக்குத் தீங்குபயக்கக்கூடிய விதத்தில், இவ்வாறு மிகவும் குறுகியஅரசியல் லாபத்திற்காக இந்த அரசு, நிலை எடுத்திருக் கிறது. நேபாள அரசாங்கமும், நேபாளத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைமைகளும் மாதேஷி மக்களின்அபிலாசைகளை எப்படி நிறைவேற்றலாம் என்று பரிசீலிக்க முன்வர வேண்டும். அரசமைப்புச் சட்டங் கள் என்பவை விரைப்பானவைகளோ, யாராலும் மாற்றமுடியாதவைகளோ அல்ல. ஜனநாயக நடைமுறை களின்கீழ் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும்.மோடி அரசாங்கத்தின் வெறித்தனமான தலையீடு, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லவிதமான அண்டை உறவுகளைக் கறைப்படுத்துவதற்கே இட்டுச்செல்லும். இந்தியாவின் பெரிய அண்ணன் அணுகுமுறையிடமிருந்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண் டும் என்கிற எச்சரிக்கை செய்தியை தெற்காசியாவில் உள்ள இதர நாடுகளுக்கும் இது அனுப்பி வைத்திருக் கிறது.
செப்டம்பர் 23, 2015
தமிழில் : ச. வீரமணி