Showing posts with label Modi Government. Show all posts
Showing posts with label Modi Government. Show all posts

Wednesday, December 24, 2014

மோடி அரசாங்கத்தின் பிடிவாதம்

நாடாளுமன்றத்தின் தற்போதைய முட்டுக்கட்டைக்கு, மாநிலங்களவைத் தொடர்ந்து நடைபெறாது ஒத்திவைக்கப்பட்டு வருவதற்கு, மிகவும் சச்சரவுக்குரிய பிரச்சனைகள் மீது நாடாளுமன்றத்திற்கு மிகச்சிறிய அளவிற்கு உறுதி அளிக்கக்கூட பிடிவாதமான முறையில் மோடி அரசாங்கம் முன்வராததுதான் அடிப் படையான காரணமாகும்.இரு மிக முக்கியமான பிரச்சனைகள் அவையின் முன் விவாதத்திற்கு வந்துள்ளன. இரண்டு பிரச்சனைகளுமே ஒன்றுடன் மற்றொன்று பின்னிப்பிணைந்தவையாகும்.
முத லாவது, ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் நாட்டில் இயங்கும் அவற்றின் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதச் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ் லிம்கள் மற்றும் கிறித்துவர்களை மிகப்பெரிய அளவில் மத மாற்றம் செய்துள்ள பிரச்சனை. இரண்டாவது, உலகம் முழுதும் கொண்டாடக் கூடிய கிறிஸ்துமஸ் நாளன்று, ஏ.பி. வாஜ்பாயின் பிறந்த நாளை, நல்லாட்சி நாளாக’’க் கொண்டாட வேண்டும் என்று அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பள்ளி களுக்கும் அரசாங்கத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியிருக்கும் பிரச்சனையாகும். மோடி அரசாங்கத்தின் இம்முயற்சி ஆர்எஸ்எஸ்/பாஜகவகையறாக்கள் இந்தியாவை பாகிஸ்தான் போன்றே பார்க்கும் மதவெறிக் கண்ணோட்டத் தின் வெளிப்பாடேயாகும். பாகிஸ்தானில் டிசம்பர் 25 அன்று முகமது அலி ஜின்னா பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே விடுமுறைவிடப்படுகிறது. அங்கே கிறிஸ்துமஸ் என்பது இரண்டாம்பட்சம்தான். முன்பு, வாஜ்பாய் அரசாங்கம் போக்ரான்-2 மூலம் பாகிஸ்தானையும் அணுசக்தி நாடாக உயர்த்துவதற்கான அந்தஸ்தை அளித்தது. அதேபோன்று இந்தத் தடவை மோடி அரசாங்கம் டிசம்பர் 25 தேதியையும் அதேபோன்று மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
உண்மையில், வாஜ்பாயி நடவடிக்கை ஒரு சோகக்கதை யாக முடிந்தது என்றால்,.மோடியின் நடவடிக்கையோ எல்லோராலும் எள்ளி நகையாடக் கூடிய விதத்தில் நகைச்சுவை நாடகமாக மாறிப்போனது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி அரசாங்கம் 56 அங்குலம்’’ அகலமாக இருக்கும் என்று பீற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது எல்லாவற்றிற்கும் அது தன்னை பாகிஸ்தானுடன் இணைத்துப்பார்க் கும் விதத்தில் சுருங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது நாம் இரண்டாவது பிரச்சனை யையும் எடுத்துக் கொள்வோம். டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறையாக அல்ல,அதற்கு மாறாக நல்லாட்சி நாளாக’’ அனுசரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சகத்தின் சார்பில் கட்டளைகள் பிறப்பிக்கப்பட் டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி களை மாநிலங்களவையில் எழுப்பியபோது, மத்திய நிதி அமைச்சர் முதலில் அதன் உண்மைத் தன்மையைக் கேள்விக்கு உட் படுத்தினார்.
ஆனால் ஆதாரங்களைக் காட்டியபோது, இது நவோதயா பள்ளிகளுக்கு மட்டும்தான் என்றும், அந்தப் பள்ளிகளில் பயிலும்மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிப்பவர் கள் (residential schools) என்பதால் மாண வர்களுக்கு விடுமுறையை மறுக்கும் பிரச் சனையே எழவில்லை என்றும் கூறி அரசாங்கம் பின்வாங்கியது. அப்போது,அனைத்துஅகில இந்திய தொழில்கல்வி கவுன்சிலுக்கும் (All India Institute of Technical Education) அரசாங்கத்தின் சார்பில் நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த நாளன்று மாணவர்கள் பங்கேற்கக்கூடிய விதத்தில் பல் வேறு போட்டிகளை நடத்திட வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கும் எழுத்துப்பூர்வமான கடிதத்தை காட்டியபோது, அரசாங்கத் திடமிருந்து பதிலேதும் இல்லை.
மோடி அரசாங்கம் மதச் சிறுபான்மையினருக்கு எதி ரான நிகழ்ச்சிநிரலை மிகவும் வஞ்சகமாக முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொண்டிருப்பதை நாடாளுமன்றத்தில் இன்னமும் முழுமையாகத் தோலுரித்துக் காட்டப்பட வேண்டி இருக்கிறது.மீண்டும் தங்கள் பழைய மதத் திற்கே திரும்புகிறார்கள் என்று பொருள்படக்கூடிய விதத்தில் கர்வபாசி (பாயச எயயீயளi) என்றுபெயரிட்டு,முஸ்லிம்களையும், கிறிஸ்துவர் களையும் மீளவும் இந்துக்களாக மாற்ற மேற் கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் தரப்பில், மீண்டும் ஒருமுறை, தங்களுக்கு இரண்டகமான நோக்கங்கள் எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத் தையோ நாட்டையோ நம்ப வைக்க முடியவில்லை. நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் எதிர்க்கட்சிகள் கோருவது என்ன? அவைக்கு வாருங்கள், நம் அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை வெளிப்படையாகவே மீறக்கூடிய விதத்தில் மிகவும் அரக்கத்தனமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் என்று மெய்ப்பிக்கப் பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியைத் தாருங்கள்,’’என்பதுதான்.
ஆனால் அதற்குப் பதிலாக மத்திய நிதி அமைச்சரோ, எதிர்க்கட்சியினரைப் பார்த்து, அனைத்து மத மாற்றங்களையும் அல்லது வலுக்கட்டாயமாக மீளவும் மதமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதையும் தடை செய்திட புதியதொரு சட்டத்தை ஏற்கத் தயாரா?’’என்று கேட்டு சவாலுக்கு அழைத்துள்ளார். அவ்வாறு புதிய சட்டம் எதுவும் தேவையில்லை, இந்தியஅரசமைப்புச் சட்டத்திலும், இந்திய தண்டனைச் சட்டத்திலும் இவை குறித்து ஏற் கனவே மிகவும் தெளிவாக உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய போது, அரசாங்கத்திடமிருந்து மீளவும் பதிலேதுமில்லை.
புதியதொரு சட்டத்தின் பெயரால் மோடி அரசாங்கம் கோருவது என்ன? நாட்டில் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக மத வெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்கான கேடுகெட்ட கீழ்த்தரமான முயற்சிகளேயன்றி அது வேறு எதுவுமல்ல. புதிய சட்டத்தின்மூலம் இவர்கள் கொண்டு வரும் பாதுகாப்பு ஷரத்துக்கள் நம்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் (25 மற்றும் 26ஆவது பிரிவுகள்) ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கின்றன. மேற்படி இரு பிரிவுகளும், ஒருவர் தன் மனச்சான்றின்படி எந்த மதத்தையும் தழுவிக்கொள்ளவோ, நடைமுறைப் படுத்தவோ மற்றும் பிரச்சாரம் செய்யவோ சுதந்திரம் அளிக்கிறது’’ மற்றும் மத விவகாரங் களை மேலாண்மை செய்யவும் சுதந்திரம் அளிக்கிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153-ஏ பிரிவானது, பல் வேறு மதத்தினருக்கு இடையே மதத்தின் பெயரால் பகைமையை வளர்த்தால் கிரிமினல் குற்ற மாகும் என்று வரையறுத்திருக்கிறது. எனவே,இன்றையதினம் மோடி அரசாங்கம் பேசிக் கொண்டிருக்கும் மத மாற்றங்கள் தொடர்பாகப் புதிய சட்டம் எதுவும் தேவை இல்லை.
ஒவ் வொரு இந்தியனும் தன்னுடைய சாதி, மதம்,பாலினம் எதுவாக இருந்தாலும் தனக்குப் பிடித்தமான மத நம்பிக்கையைத் தேர்ந்தெடுத் துப் பின்பற்றிட சுதந்திரம் அளிக்கப்பட்டிருக் கிறது. இந்த உரிமையை வலுக்கட் டாயமாகப் பறிக்கக்கூடிய விதத்தில் எவரேனும் சட்டத் திற்கு மாறாக நடந்துகொண்டால் அது,இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக் கப்பட வேண்டிய குற்றம்’’ ஆகும். அரசாங்கம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அதிகாரிகளின் வேலை, நாட்டின் அரசமைப்புச் சட்டம் அளித் துள்ள உத்தரவாதங்களை அமல்படுத்துவதும் மற்றும் நாட்டின் சட்டங்களை மீறுவோர்எவராக இருந்தாலும் அவர்களை தண்டிப் பதுமேயாகும்.
மாறாக, ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் அதன்பரிவாரங்கள் அனைத்தும் இன்றைய தினம்மேற்கொண்டுவரும் முயற்சிகள் என்ன?மீண்டும் தங்கள் பழைய மதத்திற்கே திரும்பு கிறார்கள் என்று பொருள்படக்கூடிய விதத்தில் கர் வபாசி (ghar wapasi)என்று பெயரிட்டு, மதவெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய் வதற்கான பிரச்சார வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் தரம் ஜக்ரன் சமிதி என்னும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் அமைப்பு 57 முஸ்லிம் குடும்பங்களை இவ்வாறு மீளவும் மதமாற்றம்செய்திருப்பது தொடர்பாக செய்திகள் ஊடகங் களில் வெளியாகி இவர்களது இத்தகைய முயற்சிகளை வெளி உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
மேற்படி 57 முஸ்லீம் குடும்பங்களும், இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கமொழி பேசுபவர்கள், ஆக்ரா அருகில் மதுநகர் சேரியில் வசிப்பவர்கள். நாட்டில் உள்ள சேரிகளில் வாழும் பலரைப் போன்றே இவர்களுக்கும் அதிகாரப்பூர்வமான அடையாளத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவர்களில் ஒருவரின் கூற்றுப்படி, தரம் ஜக்ரன் சமிதியின் ஊழியர்கள் இவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்த தாகவும்,அங்கே அவர்கள் அனைவருக்கும் ரேசன் கார்டுகள், ஆதார் கார்டுகள் மற்றும்வாக்காளர் அடையாளக் கார்டுகள் அனைத்தும்வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக் கிறார்கள். அவ்வாறு வருகையில் முஸ்லிம்கள்அணிவதுபோல் தொப்பிகளை அணிந்து வருமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட் டிருக்கிறார்கள். முஸ்லிம் குடும்பத்தினர் கூறுவதுபோல் இது உண்மையாக இருக்கும்பட்சத் தில்,இது ஏமாற்று வழிகளில் மதமாற்றம் செய்யமேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என் பதும், இது ஒரு குற்றச்செயல் என்பதும் நன்கு விளங்கும். (இணைய தளம்,டெய்லியோ, டிசம்பர் 10, 2014.) மேலும் இவ்வாறான `மறு மதமாற்றம்பிரச்சாரங்களுக்காக `அபரிமிதமான அளவில் வசூல் வேட்டையில் பல்வேறு ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இறங்கி இருப்பதாகவும் ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. முஸ்லிமை மதமாற்றம் செய்திட ஐந்து லட்ச ரூபாயும்,கிறிஸ்தவர்களுக்கு 2 லட்சம்ரூபாயும் தருவதற்காக இந்த வசூல்வேட்டையாம். முஸ்லிம்களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்துவர்கள் மிகவும் சிறிய அளவி லான சிறுபான்மையினர் என்றும், எனவேதான்அவர்கள் இஸ்லாமுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவுக்கே பிரச்சனை உள்ளவர்கள் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அங்கமாக விளங்கும் பாஜக நாடு தழுவிய அளவில் உறுப்பி னர் சேர்க்கைக்கு நடவடிக்கைகளை எடுத்திருப்பதோடு, விரைவில் இவர்கள் தற்போது உலகில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக விளங்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை முந்திவிடுவோம் என்றுகூறியுள்ள அதேசமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கமோ ஒவ்வோராண்டும் ஒரு லட்சம் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்துயிசத் திற்கு மாற்ற குறியீடு நிர்ணயித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக மதம் மாற்றுவதுஇருக்கட்டும், ஒருவர் தனிப்பட்ட முறையில் கூட, தான் விரும்பினாலும்கூட, இந்து மத நம்பிக்கையான வாழு-வாழவிடு என்னும் மாண்புக்கு ஏற்ப இந்துவாக மாறமுடியாது என்பதை வெறித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவிப்படையினர் கண்டு கொள்ளவில்லை.
அவர்கள் இஸ்லாம் மற்றும்கிறிஸ்துவமதத்தில் இருப்பதைப் போல இந்துமதமும் ஒரு புத்தகம், ஒரே கும்பல், ஒரே மக்கள்திரள்’’ ( என இந்து மதத்தையும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். (எகனாமிக் டைம்ஸ், இடுகைகள், டிசம்பர் 13, 2014)இத்தகைய ஊடகசெய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.நம் நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் முக்கியமான அம்சம் சமூக நல்லிணக்கமாகும். இதற்கு மிகவும் முக்கியமான முன்நிபந்தனையாக இருப்பது மதச்சிறுபான்மையினர் இடையே அதிகரித்து வரும் அச்சத்தைப் போக்குவதாகும். நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும், இந்திய தண்டனைச் சட்டத்தையும் மீறுவோர் தாங்கள் புரியும் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இதற்கான உறுதிமொழி யை பிரதமர் அளித்திட வேண்டும் என்பதுதான்பிரதமரிடம் நாம் கேட்க இருக்கும் கேள்வி களாகும். ஆளும் மோடி அரசாங்கத்தின் அமைச்சர்கள் இடதுசாரிக் கட்சிகளைக்குறைகூறிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் தான் இத்தகைய உறுதிமொழியைத் தர வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகிறார்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள். இது நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய் வதற்காக இடதுசாரிகள் கூறும் சாக்குப்போக்கு என்றும் கூறுகிறார்கள். ஆனால்இதற்கு முற்றிலும் மாறாக முன்பொரு தடவை இதுபோல் இவர்கள்தான் நடந்துகொண் டார்கள்.
மத்திய அமைச்சரவை யிலிருந்த இணை அமைச்சர் ஒருவர் பாஜகவினருக்கு எதிரானவர்களுக்கு எதிராக முற்றிலும் ஏற்கத்தகாதமுறையில், வெறுக்கத்தக்க வார்த்தைகளை உதிர்த்திட்ட சமயத்தில், பிரதமர் இதுபோன்று எதிர்காலத் தில் நடைபெறாது என்று வாக்குறுதி அளித்தார். ஆயினும்,அதன்பிறகும் என்ன நடந்தது?நம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தண்டிக்கக் கூடிய குற்றச் செயல்களில் பாஜக அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால்தான் பிரதமர் இப்போது அவ்வாறு உறுதி மொழிகள் அளித்தால் மட்டும் போதாது அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழியும் தர வேண்டும் என்று கேட்கிறோம்.இவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்திற்கும் பின்னே, மோடி அரசாங்கத் தின் `நச்சுக் கலவை - அதாவதுவளர்ச்சி’’ என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, மறுபக்கத்தில் மதவெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்கான வேலைகளைக் கட்டவிழ்த்து விடுவது - என்பது ஒளிந்துகொண்டி ருக்கிறது. இவர்கள் கூறிவந்த வளர்ச்சி’’ என்கிற மாபெரும் பலூன்கள் எல்லாம் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் வீழ்ச்சி என்கிறஎதார்த்த உண்மையின் காரணமாக ஓட்டைவிழுந்து புஷ்’’ என்று காணாமல் போய்விட் டது.
தொழில்வளர்ச்சி முற்றிலுமாக எதிர்மறை யாகப் போய்க் கொண்டிருக்கிறது. விவசாய நெருக்கடி காரணமாக விளைநிலங்களின் பரப் பளவும் பெரிதும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திடாமல் எவ்விதமான பொருளாதார முன்னேற்றமும் சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநரே அறிகுறிகளைப் பார்த்து வரப்போவதை உரைத் திருக்கிறார். (இவை குறித்து நாம் இப்பகுதியில் முன்பு பலதடவை விளக்கி இருக்கிறோம்.)நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக் கிறது. மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அதிருப்தியை திசைதிருப்பும் நோக்கத்துடன் பல்வேறு வடிவங்களில் மதவெறி சக்திகள்,மதவெறித் தீயை உசுப்பிவிட்டுக் கொண்டிருக் கின்றன. மதமாற்றங்கள் குறித்த தற்போதைய பிரச்சாரங்களும், கிறிஸ்துமஸ் தினத்தை நல்லாட்சி நாளாக’’ அனுசரிக்க வேண்டும்என்ற பிரகடனமும் இவற்றின் அடையாளங் களாகும். ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல்கள்நடைபெறுவதையொட்டி கிறிஸ்தவ சிறுபான் மையினருக்கு எதிராக இதரர்களைக் குறி வைத்து இந்தப் பிரகடனம் செய்யப்பட் டிருக்கிறது. வாக்குவங்கி அரசியலின் மிக மட்டரகமான வடிவத்தை உத்தரப்பிரதேசத் தில் முஸ்லிம்களுக்கு எதிராக காதல் ஜிகாத்’’ என்று கூறி எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்களோ அதேபோன்று இப்போது இந்தப் பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.சிறந்ததொரு வாழ்க்கைக்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தி, அதன் அடிப்படையில் சிறந்ததொரு இந்தியாவை உருவாக்கிட, அரக்கத்தனமான இவர்களது நிகழ்ச்சிநிரல் முறியடிக்கப்பட வேண்டியது அவசியம்.
(டிசம்பர் 17, 2014)
தமிழில்: ச.வீரமணி


Monday, October 27, 2014

மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை(2)

(2)

மோடி அரசாங்கம்: மேற்கொண்டுள்ள  நிகழ்வுகள்
(முன்கூட்டி எச்சரிக்கை செய்கிறார்கள் என்பதன் பொருள் தாக்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்கிறார்கள் என்பதாகும்.)

2014 பொதுத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்திலேயே, இப்பகுதியில் நாம்நரேந்திர மோடி தலைமையிலான பாஜக,  ‘வளர்ச்சிஎன்றும் குஜராத் மாடல்என்றும் பல்வேறு தேர்தல் தாயத்துக்களை அணிந்திருந்த போதிலும், எதார்த்தத்தில் அவை மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தும் பிரச்சாரத்தையே மேற்கொண்டன  என்றும் அவற்றை மூடிமறைக்கும் முகமூடி களாகவே மேற்படி தாயத்துக்களை அவை பயன்படுத்திக் கொண்டன என்றும்  பல தடவைகள், சுட்டிக்காட்டினோம். காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ-2 அரசாங்கத்தின் மீது மக்களிடம் விரிவான முறையில் அமைந்திருந்த வெறுப்பு உட்பட பல்வேறு காரணிகள் இருந்தபோதிலும், அவற்றையெல்லாம்விட அதிகமாக,  ‘இந்து வாக்குவங்கியை மதவெறி அடிப்படையில் ஒருமுகப்படுத்தி, நாணமற்ற முறையில் அது மேற்கொண்ட வாக்கு வங்கிஅரசியல்தான் தேர்தல் ஆதாயங்களுக்கு மிகவும் பிரதான காரணியாகும். எனவேதான், பாஜக இந்த வெற்றிக்குப்பிறகு, (மொத்தம் வாக்களித்தவர்களில் 31 சதவீத அளவிற்குத்தான் மக்கள் அதற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றபோதிலும் கூட) தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தத்துவார்த்த அடிப்படையில்  அவர்களின் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரமாகமாற்றிட  மிகவும் மூர்க்கத்தனமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆர்எஸ்எஸ் என்னும் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம்தான் பாஜக. இந்த அரசாங்கத்தின் முதல் நூறு நாட்கள் முடிவதற்கு முன்பேயே, இவர்கள் தங்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலை மிக வேகமாகக் கட்டவிழ்த்து விடத் துவங்கி விட்டார்கள். தேர்தல் சமயத்தில்  வளர்ச்சி குறித்து அவிழ்த்துவிட்ட வாக்குறுதிகள் எல்லாம் காற்றோடு காற்றாகப் போய்விட்டன. இவர்கள் கூறியதையெல்லாம் நம்பி இவர்களுக்கு வாக்களித்த அப்பாவி மக்களின் நம்பிக்கைகள் எல்லாம் தகர்ந்து தரைமட்டமாகிவிட்டன.  ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடனேயே இந்த அரசாங்கம் டீசல், சமையல் எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருட்களின் விலைகளையும்ரயில் கட்டணங்களையும் செங்குத்தான விதத்தில் உயர்த்திவிட்டது.   இவர்களின் பட்ஜெட் மற்றும்  நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் எவ்விதக் கூச்ச நாச்சமுமின்றி நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை இவர்கள் பின்பற்றுவதை வெளிப்படுத்து கின்றன.  சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதரவுடன் இந்திய கார்ப்பரேட்டுகள் மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அளப்பரிய அளவிற்கு ஆதரவு அளித்த பின்னணியில், இதுபோன்றதொரு நிலைமை ஏற்படுவது இயற்கையாகவே தவிர்க்கமுடியாத ஒன்றுதான். எனவேதான், நாட்டு மக்கள் நலன்களையும்  நாட்டின் இறையாண்மையும் காவு கொடுத்து அந்நிய முதலீடுகளுக்கு அதிக அளவில் வாய்ப்புகளையும், இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் சலுகைகளையும் அளித்து வருகிறார்கள்.
பாஜக தன்னுடைய மதவெறி நிகழ்ச்சி நிரலை அடக்கி வாசிக்கும் என்று கூறி தேர்தல் பிரச்சாரத்தின்போது அதனை ஆதரித்தவர்களில் பலர், புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற ஒருசில வாரங்களுக்குள்ளேயே, தாங்கள் வஞ்சிக்கப் பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து இப்போது அமைதியாகி விட்டார்கள். வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் - அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தல், பொது சிவில் சட்டம், அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுதல் - அனைத்தும் கேபினட் அமைச்சர்களால் பேசப்படும் சங்கதிகளாகிவிட்டன. பாஜக வெற்றியைத் தொடர்ந்து, ‘இந்து ராஷ்ட்ரம்நிறுவப்படுவது தொடங்கிவிட்டது என்று ஒரு கோவா அமைச்சர் பேசியிருக்கிறார்.
நாட்டின் பல பகுதிகளில், வகுப்புவாத பதட்ட நிலைமைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் மூர்க்கத்தனமான முறையில் கலகங்களும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் நடந்திருக்கின்றன. தேர்தலுக்கு முன்பே முசாபர்நகரில் மதவெறித் தீ கொளுந்துவிட்டு எரிந்து பலர் கொல்லப்பட்டதையும், காயங்கள் அடைந்ததையும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேற்றப்பட்டதையும் இப்பகுதியில் முன்பு குறிப்பிட்டிருக்கிறோம்.  2013இல் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், நாடு முழுதும் வகுப்புவாத வன்முறையின் கீழ் 823 நிகழ்வுகள் நடந்துள்ளன என்று உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் மட்டும், 247 வன்முறை வெறியாட்டங்கள் நடந்துள்ளன. இதன் பின்னணியில்தான் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை இடங்களில் பாஜக 71 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 2 இடங்களையும் வென்றுள்ளன. தேர்தலுக்கு முன் சில மாதங்களில் நாடு முழுதும் நடைபெற்ற வகுப்புவாத வன்முறை சம்பவங்களில் இம்மாநிலம் உச்சத்தில் இருந்தது. 2014இல் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் நாடு முழுதும் 149 வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றுள்ளன. சட்டமன்றத் தேர்தல்களை விரைவில் சந்திக்கவிருக்கும் மகாராஷ்ட்ராவிலும், அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் இத்தகைய மோதல்கள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
தில்லியில் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றமே 16க்குப் பின், கடந்த பத்து வாரங்களில், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் வகுப்புவாத தன்மை கொண்ட 605 நிகழ்வுகள் நடந்துள்ளதாக, அதிகாரபூர்வ புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு, தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மிக விரைவில் சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறக்கூடிய 12 சட்டமன்றத் தொகுதிளைச் சுற்றி இந்நிகழ்வுகளில் மூன்றில் இரண்டு பங்கு நடைபெற்றிருக்கிறது என்பது குறித்துக் கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இதேபோன்றே பீகாரிலும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெறவிருக்கும் 10 தொகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியில் அமர்ந்தபிறகு, பாஜகவானது தன்னுடைய அனைத்தும் நன்றாகவே நடக்கிறது’’ என்பதுபோன்ற முழக்கங்களுக்கு விடைகொடுத்துவிட்டு, தங்கள் தேர்தல் ஆதாயங்களை மேலும் அதிகரித்துக்கொள்ளக்கூடிய விதத்தில் ஆர்எஸ்எஸ்-இன் ஆணிவேர்களான மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தும் வேலையில் மிகவும் கூச்சநாச்சமின்றி இறங்கிவிட்டது.
இத்தகைய வகுப்புவாத பதட்டநிலைமைகளைத் தூண்டிவிடக்கூடிய விதத்தில் வேறு சில சமூக மூலக்கூறுகளும்’’ இருக்கின்றன.  முசாபர்நகர் கலவரங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக ஜாட் இனத்தவரை நிறுத்தியதைப் போல, சஹரான்பூர் கலவரங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக சீக்கியர்களை நிறுத்தி இருக்கின்றன. இடைத்தேர்தல்களின்போது பகுஜன் சமாஜ் கட்சி ஒதுங்கி இருந்த சமயத்தில், பாஜக-வானது தலித்துகளின் ஆதரவினைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராம் 1980களின் பிற்பகுதிகளில், முஸ்லீம்களையும் தலித்துகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்துதான் அக்கட்சி மாநில அரசாங்கத்தில் அமர முடிந்தது. தாங்கள் வெற்றி பெற வேண்டுமானால் இந்த ஒற்றுமை தகர்க்கப்பட வேண்டும் என்பதை பாஜக நினைத்தது. குறிப்பாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இதனைச் செய்திட அது முனைந்தது. நாட்டு மக்கள் மத்தியில் நிலவும் சமூக நல்லிணக்கத்தை அழிப்பது நாட்டின் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அளவில் அழிவினை உண்டாக்கும். ஆயினும் ஆர்எஸ்எஸ்/பாஜக, நாட்டில் மக்கள் மத்தியில்  நிலவும் இத்தகைய சமூக நல்லிணக்கத்தினை, மனச்சான்றின் உறுத்தல் எதுவுமின்றி, தங்கள் தேர்தல் மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக அழித்தொழித்திடும் வேலைகளில்  இறங்கி இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கூட்டங்களில் தலைவர்கள் ஆற்றும் உரை கலகத்தைத் தூண்டக்கூடிய விதத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்ற வாரம் இந்தூரில் உரையாற்றிய விசுவ இந்து பரிசத் தலைவர் ஒருவர் முஸ்லீம்கள் 2002 குஜராத்தை மறந்திருக்கலாம், சென்ற ஆண்டு நடந்த முசாபர்நகர் கலவரங்களை நன்கு அறிந்திருப்பார்கள் என்று பேசியிருக்கிறார்.  அனுமானின் வாலில் நீங்கள் தீ வைப்பீர்களானால், இலங்கை எரியும்,’’ என்றும் அவர் தன் பேச்சின்போது மேலும் மிரட்டியிருக்கிறார்.
இவ்வாறு இவர்களின் சமிக்ஞைகள் மிகவும் தெளிவானவை. முன்கூட்டி எச்சரிக்கை செய்கிறார்கள் என்பதன் பொருள் தாக்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்கிறார்கள் என்பதாகும். இவ்வாறு இவர்கள் மேற்கொள்ளும் மதவெறி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட, நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியரும் கிளர்ந்தெழுந்திட வேண்டும். இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் இதுகாறும் பின்னிப்பிணைந்து உருவாக்கப்பட்டுள்ள நம் நாட்டின் பல்வேறு இன, பல்வேறு மத, பல்வேறு சமூக வலைப்பின்னலை பலவீனப்படுத்தி, சிதறடித்திடும். அதனை அனுமதித்திடக் கூடாது. அத்தகைய அவர்களின் முயற்சிகளை நாம் அனைவரும் வலுவானமுறையில் ஒன்றுபட்டு நின்று முறியடித்திடுவோம்.
(ஆகஸ்ட் 11, 2014)



Sunday, October 26, 2014

மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை - சீத்தாராம் யெச்சூரி


இலக்கியா  வாசகர்களுக்கு,
மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை’’ என்னும் புத்தகம் 2014 அக்டோபர் 30 அன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்
சீத்தாராம் யெச்சூரியால் வெளியிடப்படுகிறது. அதில் தோழர் சீத்தாராம் யெச்சூரி பாரதிய ஜனதா கட்சியின் தத்துவார்த்தப் பின்புலம் என்ன என்பதையும், அதன் வகுப்புவாத மற்றும் பாசிச குணத்தையும், தலித்துகள், பெண்கள் மற்றும்  முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக விசிறிவிடும் வகுப்புத் துவேஷத்தையும் ஆணித்தரமான ஆதாரங்களோடும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவற்றின் தமிழாக்கத்தை ஏழு பகுதிகளாக.  வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
தோழமையுடன்
ச. வீரமணி.

(1)
 மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை என்னும் புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பிற்கு சீத்தாராம் யெச்சூரி எழுதிய முன்னுரை.
தமிழ்ப்பதிப்பிற்கான முன்னுரை
மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை’’ என்று ஆங்கிலத்தில் வெளியான  என்னுடைய கட்டுரைகளின் தொகுப்பை, சென்னை பாரதி புத்தகாலயம் தமிழில் கொண்டுவருவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்புத்தகம் ஆங்கிலத்தில் வெளியானதற்குப் பின்னர், ஆர்எஸ்எஸ்/பாஜக படைக் கொட்டிலிலிருந்து புதிய தாக்குதல்கள் வந்துள்ளன. தாங்கள் கூறிவரும் `இந்து சமூகத்தினை ஒருமுகப்படுத்துவதற்காக தங்கள் முயற்சிகளை மேலும் பல வடிவங்களில் கொண்டுசெல்ல முனைந்துள்ளனர்.  
சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் (caste oppression) பாலின ஒடுக்குமுறையையும் (gender oppression) உள்ளடக்கிய ஒன்று. இவற்றை ஆர்எஸ்எஸ் தங்களுடைய இந்து ராஷ்ட்ரத்தை’’ நிறுவிடம் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது.
அதன் சமீபத்திய நிகழ்வுதான் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், பிகானீர் - ஜெய்பூரில் உள்ள அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில், உயர்சாதி ஆசிரியருக்காக வைத்திருந்த மண்பானையிலிருந்து தண்ணீர் குடித்தார்கள் என்று காரணம் காட்டி பதினொரு தலித் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப் பட்டிருப்பதாகும். நம் நாட்டில் சாதிய மற்றும் சமூக ஒடுக்குமுறை இப்போதும் மிகவும் உச்சத்தில் இருப்பதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு ஒரு பக்கத்தில் தலித் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர்  தலித்துகள் இவ்வாறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்பதைக் காட்டும் விதத்தில் மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகங்கள் மூன்றிலும், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பல இதர ஒடுக்கப்பட்ட குழுவினர் மீது ஒடுக்குமுறை ஏவப்படுவதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்றும், மத்தியக் காலத்தில் அயல்நாடு களிலிருந்து  படையெடுத்து வந்த முஸ்லீம்கள்’’தான் காரணம் என்றும்  அந்தப் புத்தகங்களுக்கு அணிந்துரை அளித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (தி இந்துஸ்தான் டைம்ஸ், செப்டம்பர் 22, 2014).
தங்கள் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாஜக மத்திய அரசாங்கத்தில் அமர்ந்திருப்பதால் தைரியம் அடைந்துள்ள ஆர்எஸ்எஸ்  இந்தியாவில் உள்ள அனைத்துக் குழுவினரையும் ஒன்றாக்கி, ஒரே நூலின்கீழ், ஒரே இந்து அடையாளத்தின் கீழ் கொண்டுவந்து, அதனை சட்டப்படி செல்லத்தக்கதாக மாற்றவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி யுள்ளது.  இதற்கு, மாபெரும் நம் நாட்டின் பலநூறு ஆண்டுகால வரலாறு, அவர்கள் விடும் சரடுகளுக்கு ஏற்பதிருத்தி எழுதப் பட்டாக வேண்டியது அவசியமாகும். தற்போதைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, அவர்கள் கருத்தாக்கமான இந்து ராஷ்ட்ரமாகமாற்றி அமைப்பதற்கு, இது அவசியமாகும்.
பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்துவரும் பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பர்யங்கள், பழக்க வழக்கங்கள், மொழிகள் கொண்டவர்களை இந்துயிசம்என்னும் ஒரே குடையின்கீழ் அடைத்திட அவர்கள் முயற்சிக்கிறார்கள். இரண்டாவதாக, ஓர் அயலக எதிரியை (இந்துக்களுக்கு அயலாக உள்ளவரை அதாவது   முஸ்லீம்களை,) உருவாக்க வேண்டியது அவர்களுக்குத் தேவை. தங்கள் குறிக்கோளை எய்துவதற்காக இவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் தன்னுடைய சமீபத்திய நடவடிக்கையாக, “இந்து சுவடிகளின்படி சூத்திரர்கள்எப்போதுமே தீண்டத் தகாதவர்களாக இருந்ததில்லை,’’ என்று கூறியிருக்கிறது.  ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குருமார்கள் அமைப்பில் இரண்டாவது குருமாராக இருக்கும், பையாஜி ஜோஷி, இவ்வாறு கூறியிருக்கிறார்.  மத்தியக் காலத்தில் இஸ்லாமியர்களின் அட்டூ ழியங்கள்தான்’  தீண்டத்தகாதவர்கள், தலித்துகள் மற்றும் இந்திய முஸ்லீம்கள் உருவானதற்குக் காரணம் என்றும் கூறுகிறார்.
இதே தொனியை எதிரொலித்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மற்றொரு மூத்த தலைவர்இஸ்லாமியர் காலம் தொடங்கிய காலத்தில், பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் எதிராக அட்டூழியங்கள் நடைபெற்றதன் விளைவாகத்தான், ஒடுக்கப்பட்ட சாதிகளும், கீழ் சாதிகளும் தோன்றின என்றும் தலித்துகள் என்போர் துருக்கியர், முஸ்லீம்கள் மற்றும் மொகலாயர் சகாப்தத்தில் சிருஷ்டிக்கப்பட்டனர்,’’ என்றும் எழுதி இருக்கிறார்.
இந்திய வரலாற்றை இவ்வாறு திரித்து எழுதும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்று சமீபத்தில் ரகசியக் கூட்டம் ஒன்று நடத்தியதாகவும் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றாசிரியர்கள் பங்கேற்று, தற்போதுள்ள பாடத்திட்டங்களில், இந்துக்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தும் தங்கள் குறிக்கோளை எய்திடுவதற்காக சாதி அல்லது கீழ் சாதி ஆகியவற்றிற்கும் அப்பால் இந்து அடையாளத்தை நிலைநிறுத்தக்கூடிய விதத்தில், மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பாக விவாதித்தார்கள் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட் டிருக்கின்றன. 
சாதிய அமைப்பும் அதனையொட்டி நடைபெற்று வரும் சமூக அட்டூழியங்களும் புராதன இந்து சமூகத்தில் எப்போதுமே நடந்ததில்லை என்பதுபோலவும், முஸ்லீம்கள் படையெடுத்து வந்தபின்னர்தான் சமூகத்தில் இவை உருவாயின என்று கூறுவதும் இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றையும், காலங்காலமாக வாய்மொழி வழியாகக் கூறி வரும் வளமான அனுபவங்களையும்  முழுமையாகத் திரிக்கும் செயலாகும்.
உண்மையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூலவேர்கள்,  `இந்து சட்டத்தின்’ (‘Hindu Code’) மதரீதியான ஒப்புதலுடன் அமைக்கப்பட்டு, அவை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரால் மிகவும் புனிதராகப் போற்றப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மாதவ சதாசிவ கோல்வால்கரால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாகும்.
1939இல் நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’’ (We or Our Nationhood defined (1939) என்று கோல்வால்கர் எழுதிய தன் புத்தகத்தில், கோல்வால்கர் மனுவை உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநருமாவார்’’ என்று போற்றிப் பாராட்டியிருப்பதுடன்,  “அவர்தான் தன்னுடைய மனுதர்மத்தில், உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்நாட்டிலுள்ள `முதலில் பிறந்தபிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத்  தெளிய வேண்டும்,’’  என்றும் கட்டளையிட்டிருக்கிறார். (கோல்வால்கர், 1939, பக். 55-56). 
பிராமணன் தலையிலிருந்து பிறந்தவன், சத்திரியன் (அரசன்) கைகளிலிருந்து பிறந்தவன், வைசியன் தொடைகளிலிருந்து பிறந்தவன், சூத்திரன் கால்களிலிருந்து பிறந்தவன். இதன் பொருள் மக்கள் இவ்வாறு நான்கு மடிப்புகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே, அதாவது இந்து மக்கள் நம் கடவுள்.’’
இப்போது மனுஸ்மிருதி என்ன கூறுகிறது என்று பார்ப்போம். சூத்திரனுக்கு மிகவும் சிறந்த இயற்கையாய் அமைந்த செயல் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதுதான் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. இதைத் தவிர அவன்  வேறு எதைச்செய்தாலும் அவனுக்குப் பலனளிக்காது.`` (123, அத்தியாயம் 10)
பின்னர் மனுஸ்மிருதி சமூகத்தில் சாதியற்றவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் குறிப்பிடப்படுபவர்களை வரையறுப்பதைத் தொடர்கிறார். அவர்களுக்கு சமூகத்தில் எந்த இடமும் எப்போதும் கிடையாது என்று கூறும் அவர் அவர்களது இழி செயல்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறார். சகித்துக் கொள்ள முடியாத சாதியக் கட்டமைப்பு கோல்வால்கரின் நூலிலும் இன்றைய காவிப் படையினரிடத்திலும் எதிரொலிப்பதைக் காணலாம். ஏனெனில் மனுஸ்மிருதியும் `ஆரியர்சமூக அமைப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்றுதான்.
ஆரியர் அல்லாதவர்களுக்குள்ள முரட்டுத்தனம், கொடூரமானவனாக இருத்தல் மற்றும் சடங்குகளைப் புரியும்போது வழக்கமாகத் தோல்வியுறுதல் அனைத்தும் இந்த உலகில் அவர்கள் கறைபட்ட கருப்பையிலிருந்து பிறந்தவர்கள் என்பதைத் தெளிவாய்க் காட்டும். (58, அத்தியாயம் 10).
ஆயினும் தாங்கம் விரும்பும் `இந்து ராஷ்ட்ரம்நிறுவப்படவேண்டுமாயின், அதற்கு ஆரியர்கள் இந்த நிலத்தின் பூர்வகுடியினர்தான் என்றும், அவர்கள் வேறெங்கிருந்தும் வந்தேறியவர்கள் அல்ல என்றும்  மறுக்கவியலாத அளவிற்கு மெய்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
`நம்பிக்கையின் அடிப்படையில்ஆர்எஸ்எஸ் அனைத்து வரலாற்றுச் சான்றுகளையும் தள்ளுபடி செய்துவிடுகிறது. வரலாற்றாசிரியர் ரொமிலா தாபர், ““சமஸ்கிருத வேதத்தின் மொழியியல் சாட்சியமானது ஈரானிலிருந்து ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழி இந்தியாவிற்குள் வந்தது, ஆனால் அது இந்தியா ஆரியர்களின் தாய்நாடு என்னும் கற்பிதத்தினை ஆதரித்திடவில்லை,’’ (செமினார் 400, டிசம்பர் 1992) என்று நிறுவியிருக்கிறார்.
இவ்வாறு ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர், வரலாற்றிற்கு மேல் புராணத்தையும், தத்துவஞானத்திற்கு மேல் மத நம்பிக்கையையும் வைத்து, `நம்பிக்கையின் அடிப்படையில்அனைத்தையும்  ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இத்தகைய கேடுகெட்ட சமூக அமைப்புதான் இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து அநீதிகளை இழைத்து வருகிறது.
2001இல் வெளியான மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, (அதற்குப்பிறகு அதுபோன்றதொரு அறிக்கை  வெளிவரவில்லை)  சமூகத்தின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதத்தினராக இருக்கும், மூன்று உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் (பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள்) அரசியல் பிரதிநிதித்துவத்தில் 66.5 சதவீதத்தை யும், கல்வியில் 43 சதவீதத்தையும், வேலை வாய்ப்பில் 87 சதவீதத்தையும், வணிகத்தில் 97 சதவீதத்தையும், நில எஸ்டேட்டுகளில் 94 சதவீதத்தையும் எவ்விதமான சட்ட ஒதுக்கீடுகளும் இல்லாமலேயே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆனால் அதே சமயத்தில் மக்கள் தொகையின் இதர பகுதியினர் (சூத்திரர்கள்), தலித்துகள் மற்றும் பழங்குடியினர், முஸ்லீம்களுடனும் சேர்ந்து, மொத்த மக்கள் தொகையில் 85 சதவீதமாக இருப்பவர்கள், மீதமுள்ளவற்றை மனிதாபிமானமற்ற சமத்துவ மின்மையுடன் மிகவும் நம்பிக்கை யிழந்த நிலையில் பங்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.’’ என்று கூறியிருக்கிறது.
நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கிட இந்த சமூக நிலைமை தூக்கி எறியப்பட்டாக வேண்டும்.
இந்திய வரலாற்றை மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சி நிரலானது, யார் யார் எல்லாம் இந்துக்கள் கிடையாது என்று அவர்கள் கருதுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மறுக்க வகை செய்வதுடன், இத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத சமூக ஒடுக்குமுறையும் தொடர்ந்து நீடித்திருக்கக்கூடிய விதத்தில் வரையப்பட்டு வருகிறது.
இந்தப் பின்னணியில்தான் இந்நூலை வெளிக் கொணர்கிறோம். இது வகுப்புவாதத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நம் முன்னணி ஊழியர்கள் அனைவருக்கும் ஓர் ஆயுதமாகத் திகழும்.
சீத்தாராம் யெச்சூரி
புதுதில்லி
27-09-2014