People's Democracy Editorial
சமீபத்தில் நடைபெற்ற
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள் ளன. பாஜக இவ்விரண்டு
மாநிலங்களிலும் சொந்தமாக ஆட்சி அமைப்போம் என்று மிகவும் வெறியார்வத்துடன் தேர்தல்
பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதில் தோல்வியுற்று விட்டது. குறிப்பாக
ஜம்மு-காஷ்மீரில் `ஆபரேஷன் 44+’ என்று விளம்பரம் செய்தது. அந்த விளம்பரம் வாக்காளர்கள் மத்தியில் எவ்விதமான
ஆர்வத்தையும் ஏற்படுத்திடவில்லை.
காஷ்மீர் பள்ளத் தாக்கில்
ஓரிடத்தைக்கூட அதனால் பெறமுடியவில்லை. முன்னதாக நடைபெற்ற ஆய்வுகள்கூட, ஜம்மு பிராந்தியத்தில் பாஜகவிற்குக் கூடுதல் இடங்கள்
கிடைத்திருப்பதற்கான காரணம், அது மிகவும்
மோசமான முறையில் கட்ட விழ்த்துவிட்ட மதவெறிப் பிரச்சாரம்தான் என்று
தெரிவிக்கின்றன.
9 சதவீத வாக்கு இழப்பு
மக்களவைத் தேர்தலின்போது
அதுபெற்ற வாக்குகள் சதவீதத்துடன் ஒப்பிடு கையில் தற்போது பாஜக அப்போது பெற்றதைவிட 10 சதவீத வாக்குகளை இழந் திருக்கிறது. பாஜக அல்லாத கட்சிகள், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), முந்தைய ஆளும் கட்சியான தேசிய மாநாடு (என்சி), மற்றும் காங்கிரஸ் கட்சிகூட்டணி சேர்ந்தால் அரசாங் கம்
அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று விடுகின்றன. மாநிலத்தில் மேலும்
மதவெறித் தீ பரவாமல் தடுத்திடவும் அதன்மூலம் பேரழிவுக் குரிய சூழல்கள் உருவாகாமல்
தடுத்திடவும் இதுவழிவகுத்திடும்.
ஆயினும் எவ்விதமான
ஒப்பந்தங்கள் ஏற்படப் போகின்றன என்பது பின்னர்தான் தெரியவரும். தாங் கள் இதனைப்
படித்துக் கொண்டிருக்கை யில்கூட அது வாசகர் களுக்குத் தெரிந்
திருக்கலாம்.ஜார்க்கண்டில் மக்களவைத் தேர்தலின் போது பாஜக பெற்ற வாக்குகளை விடத்
தற்போது 9 சதவீதத்தை அது இழந்திருக்கிறது. அதன் கூட்டணிக்
கட்சி யான அகில ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் சேர்த்து அது பாதி அளவிற்குத் தான்
தாண்ட முடிந்திருக்கிறது. இதுவும்கூட அதனால் நாடு முழுவதும் கிறிஸ்துவஎதிர்ப்புப்
பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட தைத் தொடர்ந்துதான் நடந்திருக்கிறது. டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் தின மாகக் கொண்டாடக் கூடாது, மாறாக வேலை நாளாகச் செயல்பட்டு ஏ.பி.வாஜ்பாய் பிறந்த நாளாக, `நல்லாட்சி தின மாக’ அனுசரித்திட வேண்டும் என்ற பிரச் சாரம் இத்தகைய மதவெறியைக் குறி வைத்துத்தான்
மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு, ஜம்மு மற்றும்
ஜார்க்கண்ட் ஆகிய இரண்டிலும் பாஜக பெற்ற வெற் றிகள், அது மக்களவைத் தேர்தலின்போது பெற்றதுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத் தக்க
அளவிற்கு குறைவானதே என்ற போதிலும், மதவெறித் தீயை விசிறி விட்டதுதான் அடிப்படையாகும்.
இது, மிகவும்மட்டரகமான `வாக்குவங்கி அரசியலாகும்’. இருப்பினும்கூட, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தாங்கள் எதிர்பார்த்ததுபோல
தனிக்கட்சிப் பெரும்பான்மை அரசாங்கங் களை அமைக்கக்கூடிய அளவிற்கு இடங் களைப்
பெறுவதில் தவறிவிட்டன.ஜனநாயக கொடுங்கோன்மைஅதே சமயத்தில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர்
முடிந்துவிட்டது. மக்களவை 16 சட்டமுன்வடிவு களைப் பரிசீலனைக்கு
எடுத்துக்கொண்டது. அவற்றில் 13சட்டமுன்வடிவுகள்
நாடாளுமன்ற நிலைக்குழுவின் நுண் ணாய்வுக்கு உட்படுத்தப்படாமலேயே நிறைவேற்றப்பட்டன.
இந்தக் குழுக்கள் “மினி நாடாளுமன்றங்களாக’’க் கருதப்படுபவைகளாகும். ஏனெனில் இவற்றில் இரு
அவைகளிலிருந்தும் அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித் துவமும்
இருக்கும். அவர்கள் சட்டமுன் வடிவுகள் குறித்து நன்கு அலசி ஆராய்ந்து விவாதம்
செய்வார்கள். இக்குழுக் களுக்கு சட்டமுன்வடிவுகளை அனுப்பமறுத்திருப்பதன் மூலம்
இவர்கள் ஒட்டுமொத்தமாக நாடாளுமன்ற நடைமுறை களையும் நெறிமுறைகளையும் மீறி இருக்
கிறார்கள். பாஜக இவ்வாறு மக்களவையில் தன்னுடைய `ஜனநாயகத்தின் கொடுங் கோன்மை’யை ஏவி
இருக்கிறது.
ஆயினும், மாநிலங்களவையில், பாஜகவிற்குப் பெரும்பான்மை இல்லாததால், ஒரு வாரத்திற்கும் மேலாக கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. மாநிலங்களவையில்
எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக-தான் சீர் குலைவு நடவடிக்கைகளுக்குப்
பொறுப்பாகும். இந்த அமர்வில் மாநிலங்களவை 12 சட்டமுன்வடிவுகளை நிறை வேற்றியது என்பதை அது மறந்துவிட்டது. இப்போதைய கடும்
குளிர் வாட்டிக் கொண்டிருக்கக் கூடியசூழ்நிலையில்கூட, கடைசி நாளன்று தலைநகரில் அதிகாரப்பூர்வமற்ற சேரிக ளில்
வாழ்ந்துவரும் லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றும் நடவடிக்கை யை அது
தடுத்துவிட்டது.
மாநிலங்களவையில்
கொந்தளிப்பான சூழ்நிலை இருந்தபோதிலும்கூட அரசமைப்புச் சட்ட நெருக் கடி
வந்துவிடக்கூடாது என்பதற்காக, `நிதிச்
சட்டமுன்வடிவு’ ஒன்றினையும் அது நிறைவேற்றியதன்மூலம் நாடாளு
மன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடித்தது.
பாஜகவே காரணம்
வெறித்தனமான இந்துத்துவா
நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றி வரும்தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் கள், அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர் களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளிக்க
அரசாங்கம் பிடிவாதமாக மறுத்ததே மாநிலங் களவையில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது.
இவ்வாறு இவர்கள் செய்துவிட்டு எதிர்க்கட்சியினரைப் பார்த்து குறைகூறுவது, “சுடுதண்ணீர்க் குவளை சுட்ட சட்டியைப் பார்த்து
கறுப்புஎன்றதாம்’’ (“மநவவடந உயடடiபே வாந யீடிவ டெயஉம”) என்கிற ஆங்கில முதுமொழிக்கு மிகச்சரி யாகப் பொருந்தும்.முன்னதாக, மத்திய இணை அமைச் சர் ஒருவர், பாஜகவை ஆதரிக்காத மக்களையெல்லாம் தரக்குறைவாகப் பேசியதற்கு, வருத்தம் தெரிவித்து ஓர் அறிக்கை தாக்கல் செய்வதற்காக
பிரதமர் மோடி வலுக்கட்டாயமாக வரவழைக் கப்பட்டார்.
அப்போது அவர் வருத்தம்
எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இறுதியில் அவையில் அத்தகைய கருத்துக்களை
ஏற்கவியலாது என்று முன்கொணரப்பட்ட தீர்மானத்தை, அவர் ஏற்க வேண்டியதாயிற்று. மத்திய இணை அமைச்சரின் அரு வருப்பான கருத்துக்கள்
மீது பிரதமர் மிகச் சிறிய அளவில் தலையிட்டிருந்த போதிலும், ஆர்எஸ்எஸ்/பாஜக உயர்மட்ட அளவிலான தலைவர்கள் நாடு
முழுதும்மதவெறியைத் தூண்டக்கூடிய விதத்தில் அறிக்கைகளை வெளியிடுவது தொடர் கிறது.
கொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ்
தலைவரும், கேரளாவில் பாஜக தலைவரும் தங்கள் மதத்திற்கு `மீண்டும் மதமாற் றம்’ செய்திடும் பிரச்சாரத்தை தொடர்வோம் என்று சபதம் மேற்கொண்டுள் ளார்கள்.
இதன்மூலம் இவர்கள், மாநிலங்களவையில் கடைசி இரு
நாட்கள்சீர்குலைவினையும் உத்தரவாதப்படுத் தினார்கள்.
வித்தியாசமில்லை
ஆர்எஸ்எஸ் தலைவர், பாஜக உட்பட தன் கீழ் இயங்கும் அனைத்து அமைப்புகளுக்கும்
மீண்டும் மதமாற்றம் என்கிற பிரச்சாரத்தை முடுக்கிவிட ஆசிர்வதித்த அதே சமயத்தில், கடந்தசில நூற்றாண்டுகளாக “இந்துக் கள்’’ அமைப்பிலிருந்து சென்றவர்களைத்தான் மீண்டும்
இந்துக்களாகக் கொண்டு வருகிறோம் என்று கூறியிருக்கிறார். இவ்வாறு பேசுவதன்மூலம்
அவர்,இன்றைய மதச் சிறுபான்மையினரைத் தான் “நம்’’மிடமிருந்து “திருடப்பட்டவர் கள்’’ என்று கூறுகிறார். அதே சமயத்தில், நாட்டின்
மற்றொரு மூலையில் பேசிய பாஜகவின் தலைவர் இதேபோன்ற தொனியை வெளிப்படுத்தி, ஆர்எஸ்எஸ்-க்கும் பாஜக-விற்கும் இடையே எந்த வித்தியாசமும்
இல்லை என்பதைக் காட்டிவிட் டார்.
இதன்மூலம் அவர் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத்தான் செயல்படுகிறது
என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளார். மீண்டும் ஒருமுறை, நாடாளுமன் றத்தில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டமுன்வடி வினை
ஆதரித்திட இந்த ஆர்எஸ்எஸ் தலைவர்களால் நாட்டிலுள்ள மதச்சார் பற்ற சக்திகள்
அனைத்திற்கும் சவால் விடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் சென்றவாரம் நாம்
வாதித்ததைப்போல, புதிய சட்டம் அல்லது சட்டமுன்வடிவு எதுவும் இது
தொடர்பாகத் தேவையில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச்
சட்டம் ஆகிய இரண்டுமே இதுகுறித்து மிகவும் தெளிவாக இருக்கின்றன.
வலுக்கட்டாயமாக மதமாற்றம்
செய்யப்படுவது ஒரு கிரிமினல் குற்றம் என்றும், நாட்டில் அமலில் உள்ள சட்டத்தினை மீறும் செயல் என்றும், எனவே அவ்வாறு ஈடுபடுவோர் தண்டிக் கப்பட வேண்டியவர்கள்
என்றும் அவை போதுமான ஷரத்துக்களின்கீழ் நன்கு வரையறுத்திருக்கின்றன. பிரதமர்
மறுத்ததே...அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உறுதிமொழிகளையும், இந்தியத் தண்ட னைச் சட்டத்தையும் மீறுவோர், குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட பாஜக அமைச்சர்களும்
நாடாளுமன்ற உறுப்பினர் களும், அவர்கள்
புரிந்திட்ட குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர் களாவார்கள். இதுகுறித்து
அவையில் எவ்விதமான உறுதிமொழியையும் அளித்திட பிரதமர் மறுத்துவிட்டார்.
இதுதான் மாநிலங்களவை
நடைபெறாத தற்கான காரணமாகும்.ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தேர்தல்கள்
காட்டுவது என்ன? பாஜக பலவிதமான முயற்சிகள் செய்தபின்னரும்
தன்னுடைய குறிக்கோளை எய்த முடியவில்லை என்பதேயாகும். துரதிர்ஷ்டவசமாக நாட்டுக்கும்
நாட்டு மக்களுக்கும் தீங்கு பயக்கக்கூடிய விதத்தில், பாஜகவின் தேர்தல் செயல்பாடுகளும், மாநிலங்களவை அமளியும் ஆர்எஸ்எஸ்-உம் அதன் கீழ் இயங் கும் அனைத்து அமைப்புகளும்
தங்கள்மதவெறி செயல்களை மேலும் தீவிர மாக்குவதற்கும், அதன்மூலம் இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துவதற்கும் ஊக்கத்தை ஏற்படுத்தி
இருக்கின்றன. மோடி அரசாங்கம் நாட்டின் பொரு ளாதார நிலைமையைச் சரிப்படுத்திட
திராணியற்று இருக்கக்கூடிய சூழ்நிலை யில் இத்தகைய மதவெறி நடவடிக்கைகள் மேலும்
அதிகமாகக்கூடும். பொருளா தாரத்தை சரிப்படுத்திடுவோம் என்று தேர்தல்
பிரச்சாரத்தின்போது அது எண்ணற்ற வாக்குறுதிகளை மிகவும் ஆரவாரத்துடன் அள்ளி
வீசியது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக மோடி அரசாங்கம் பொறுப்புக்கு வந்தபின்னர், நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமாகி இருக்கிறது.
மோடி அரசாங்கத்தைத்
தூக்கிப்பிடித்துவந்த இந்தியக் கார்ப்ப ரேட்டுகள் தங்கள் விரக்தியையும்
அதிருப்தியையும் வெளிக்காட்டத் துவங்கி இருக்கிறார்கள். நம் பொருளாதாரத்தின்
அடிப்படைகளின் எதார்த்த உண்மை களைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் ஃபிக்கி(குஐஊஊஐ), சிஐஐ (ஊஐஐ) போன்ற கார்ப்பரேட் சங்கங்களின் தலை வர்கள் பேசத்
தொடங்கி இருக்கிறார்கள்.
அவசரச் சட்ட ஆட்சி....
உள்நாட்டு
கார்ப்பரேட்டுகளையும், சர்வதேச நிதி மூலதனத்தையும்
குஷிப்படுத்துவதற்காக நாட்டு மக்களையும் நாட்டின் வளங்களையும் மேலும் சுரண்டி
அவர்கள் கொள்ளை லாபம்குவிக்கக்கூடிய விதத்தில், நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேலும் தீவிரமாக அமல் படுத்திட
மோடி அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக, மோடிஅரசாங்கம், நாடாளுமன்ற நடைமுறை களையேகூட தூக்கி எறியத்
தயாராகி விட்டது. நாட்டையும் நாட்டின் பொருளா தாரத்தையும் “அவசரச் சட்ட ஆட்சி’’ மூலமாகவே நடத்திடும் வேலையில் இறங்கியிருக்கிறது.
ஐமுகூ அரசாங்கத்தின் கடந்த
பத்தாண்டு காலத்தில் இதே பாஜக-தான் கூரைமீது ஏறி நின்றுகொண்டு, “அவசரச் சட்ட ஆட்சி’’க்கு எதிராகக் கத்தியது. இப் போது மிகவும் வெட்கங்கெட்ட முறையில் தலைகீழாக
மாறியுள்ளது. இவற்றின்மூலம், நம்
மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கும், நம் மக்க ளுக்கும் அச்சுறுத்தல்கள் பல்கிப் பெருகியுள்ளன. இதுநாள்வரை
வெறிபிடித்த மதவெறியும், அரக்கத்தனமான நவீன தாராளமய பொருளாதார
சீர்திருத்தங் களும்தான் கைகோர்த்து வந்தன. இப் போது இவற்றுடன், “அவசரச்சட்ட ஆட்சி’’யை அமல்படுத்தத் தொடங்கி இருப்பதன்மூலம் எதேச்சதிகாரப் போக்குகளும் வளரத்
தொடங்கி இருக் கின்றன. நம் குடியரசின் அடித்தளங்களாக விளங்கும் மதச்சார்பின்மை
மற்றும் ஜனநாயகம் ஆகிய இரண்டிற்கும் மாபெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.இது
முறியடிக்கப்பட வேண்டும். சிறந்த தோர் இந்தியாவை உருவாக்குவதற்கான மக்கள்
போராட்டங்களை வலுப்படுத்திட இது முன் நிபந்தனையாகும்.
(டிசம்பர் 24, 2014)
தமிழில் : ச.வீரமணி