ஏ.கே. பத்மநாபன்
போராட்டக் களங்கள் பல கண்ட 2012 நிறைவடைகிறது.
ஆண்டு துவங்கி இரு மாதங்களுக்குள்ளேயே இந்திய வர லாற்றின் மிகப் பெரியத் தொழிலாளர் வேலை நிறுத்தம் 2012 பிப்ரவரி 28 அன்று நடைபெற்றது. 1991இல் துவங்கப்பட்ட தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான தொடர் கிளர்ச்சிகள், போராட்டங்கள், வேலை நிறுத்தங்களின் தொடர்ச்சியாக இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. 14 ஆவது முறையாக இந்த அகில இந்திய ஒரு நாள் வேலை நிறுத்தம், இந்தியத் தொழிற்சங்க இயக்க வரலாற்றில் முதன் முறையாக அனைத்து மத்தியத் தொழிற் சங்கங்களும் ஒன்றாக நடத்திய வேலை நிறுத்தம். பல்வேறு துறைவாரி சம்மேள னங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு, பத்து கோடி உழைப் பாளி மக்கள் ஆளும் வர்க்க கொள்கை களுக்கு எதிராக தங்களது கண்டனத் தைத் தெரிவித்தனர். இந்தக் கண்டன இயக்கங்கள் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை என்பதே நமது அனுபவம். இது உலகளா விய அனுபவமும் கூட. முதலாளித்துவ பொருளாதார அமைப்பு நெருக்கடியில் சிக்கி, பல அரசாங்கங்களே திவால் நிலையை எட்டியபோதும்கூட, அதன் விளைவுகளை முழுவதும் உழைத்து வாழ்கின்ற மக்கள் மீதே அவை திணித் துள்ளன. இதற்கு எதிராகவே முதலாளித் துவ நாடுகளில் விதிவிலக்கு ஏதுமில்லா மல் தொடர் கிளர்ச்சிகளும், வேலை நிறுத் தங்களும் நடைபெற்றன. தொழிலாளர்கள் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர்.
முதலாளித்துவ நெருக்கடி பாதுகாப் பான முதலீட்டு மையங்களைத் தேட வேண்டிய கட்டாயத்தை, பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தியது. வளர்ந்து வரும் பொருளாதார அமைப்பு கொண்ட நாடுகள் என முத்திரையிடப் பட்ட இந்தியா போன்ற நாடுகள் மீது இந்த முதலீட்டாளர்கள் நேரடியாகவும், மறை முகமாகவும் நிர்ப்பந்தங்கள் செலுத்தினர். இந்திய அரசு மீது தொடுக்கப்பட்ட நிர்ப் பந்தங்களை இந்த ஆண்டில் நாம் ‘பளிச்’ எனக் கண்டோம். மன்மோகன் சிங் அரசு மீது உலக முதலீட்டாளர்களின் கடுமை யான விமர்சனங்கள் இந்திய அரசைக் கண்மூடித்தனமான நிலைக்குக் கொண்டு சென்றது. அடுத்தகட்ட பொரு ளாதாரக் கொள்கைகள் என பெயரிடப் பட்டு புதிய தாக்குதல்கள் வேகப்படுத்தப் பட்டன. செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தத் தாக்குதல்கள் வேகம் அடைந்தன.
இந்தப் பின்னணியில்தான் செப்டம்பர் 4 அன்று அனைத்துத் தொழிற்சங்கங்கள் அகில இந்திய சிறப்பு மாநாட்டை தில்லியில் நடத்தி புதிய போராட்ட நடவடிக்கைக ளுக்குத் திட்டமிட்டன. மண்ணெண் ணெய், சமையல் எரிவாயு உட்பட விலைகளை உயர்த்தும் அரசின் அறிவிப் புகளும் இந்தக் காலத்தில்தான் வெளி வந்தன. செப்டம்பர் 20 அன்று நாடெங்கிலும் கடையடைப்பு, பொது வேலைநிறுத்தம் உட்பட ஸ்தம்பிப்பு நிலை ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு கவலைப்பட வில்லை. தொழிற்சங்க இயக்கம் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு மனதாய் முடிவு செய்தது. தயாரிப்பு மாநாடுகள், பிரச்சார இயக்கங்கள் எனத் துவங்கி, டிசம்பர் 18 அல்லது 19 தேதி களில் சாலை மறியல், ரயில் மறியல், சிறை நிரப்புப் போராட்டங்கள் நடைபெற் றன. பல லட்சம் தொழிலாளர்கள் இந்த ஆவேசப் போராட்டங்களில் பங்கேற்றனர். அனைத்து மாநிலங்களிலும் இந்தப் போராட்டங்கள் முழு வேகத்துடன் நடை பெற்றன. அதன் பிரதிபலிப்பு டிசம்பர் 20 அன்று நாடாளுமன்றத்தின் முன் கண் டோம். தலைநகரில், அண்டை மாநிலங் களிலிருந்து ஆண்களும், பெண்களுமாய் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண் டனர். நாடாளுமன்றத்திற்குள் தாராளமயக் கொள்கை அமலாக்கச் சட்டமுன்வடிவு விவாதிக்கப்படும் நேரத்தில் இந்தியத் தெருக்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு, களம் ஆயிற்று. நவம்பர் - டிசம்பர் மாதங்கள் நாட்டுக் குக் குளிர் காலம்தான். ஆனால், போராட் டத் ‘தீ’ கொழுந்துவிட்டெரிந்த மாதங்க ளாக இவை அமைந்தன. நவம்பர் 6இல் கட்டுமானத் தொழிலாளர்கள் நாடெங் கிலும் வேலைநிறுத்தம் செய்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நவம்பர் 26, 27 தேதிகளில் வரலாறு காணாத ஒரு போராட்டம் தில்லியில் நடந்தது. மத்திய அரசின் 12 சேவைத் திட்டங்களில் வேலைசெய்யும் லட்சக்கணக்கான பெண் ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரம் பெண் ஊழியர்கள் பங்கேற்ற “மகா முற் றுகைப் போராட்டம்” அது. டிசம்பர் 12 அன்று போராட்டப் பாரம்பரியமிக்க அஞ்சல் ஊழியர்கள், வருமானவரித்துறை ஊழியர்கள், மாநிலக் கணக்காய்வுத் தலைவர் அலுவலக (ஹஉஉடிரவேயவே ழுநநேசயட டீககiஉந) ஊழியர்கள் என பல லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டனர். டிசம்பர் 20 அன்று இந்திய வங்கித் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க் கும் சட்டத் திருத்தங்களை மாநிலங் களவை விவாதித்துக்கொண்டிருக்க, வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். வங் கிப் பணிகள் நாடெங்கும் ஸ்தம்பித்தன. இவை ஒருசில எடுத்துக்காட்டுகளே. 2012 முழுவதும் போராட்ட நாட்களாகவே அமைந்தன. மலை உச்சியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் முதல் கடற் கரை மீனவர்கள் வரை உறுதிமிக்க போராட்டங்களை நடத்திய காலம் இது. நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப் பதற்காக நாடாளுமன்றமும் போராட்டக் களமாகியதைக் கண்டோம். ஆண்டு இறுதியில் கணக்குப் பார்க் கிறபோது இது வலிமைமிக்கப் போராட் டங்களின் காலம் என்று கூறினால் அது மிகையல்ல, உண்மை.தாராளமயக் கொள்கைகளுக்கு எதி ராக மட்டுமல்ல, மக்கள் ஒற்றுமையைக் குலைக்கும் வகுப்புவாதம், பல்வகைப் பிளவுவாதப் போக்குகள், பயங்கரவாத நடவடிக்கைகள், வன்முறைகள், ஒடுக் கப்பட்ட மக்கள் பகுதியினரான தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர் மீது கொடூரத் தாக்குதல்கள், இதற்கெல்லாம் மேலாகப் பெண்கள், குழந்தைகள் மீது மனிதத் தன்மை இழந்து நிற்கும் முறையிலான வன்முறை வெறியாட்டங்கள். முதலாளித் துவ நெருக்கடி, பொருளாதாரத்துறையை மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் கொடூரமாகத் தாக்குகிறது. இந்தத் தாக்குதல்களின்போது இவற்றின் உண்மையான கோரமுகங்கள் வெளியில் தெரிகின்றன.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடுகள் எல்லாம் அடிப்படைக் கொள்கைகளை எட்டுகிறபோது வேற் றுமை மறைந்து, ஒன்றுதிரள்வதைக் காண்கிறோம்.தாராளமயக் கொள்கை அமலாக்கத் தில் பிரதான ஆளும் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பக்கம்தான் என் பதைப் பகிரங்கமாகவே அறிவிக்கின்றன. மாநில மக்களின் நலன் காக்கவே செயல் படுகிறோம் எனப் பறைசாற்றும் பல மாநிலக் கட்சிகளும் சந்தர்ப்பவாத சகதி யில் விழுந்து கிடப்பதைக் காண்கிறோம். மக்கள் நலன் காக்கும் அரசியல் பாதை எது என்பதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டிய காலம் இது. வீடு வீடாக இந்த செய்திகள் கொண்டு செல்லப்பட வேண்டும். மாற்றுக் கொள் கைகளை மக்கள் முன் நிறுத்தியாக வேண்டும். இந்தப் பணியில் இந்தியத் தொழிற்சங்க இயக்கத்திற்கு மிகப் பெரிய கடமையுண்டு. அதை நோக்கிப் பயணிப் பதற்கான வாய்ப்புகளைத்தான் அனைத் துத் தொழிற்சங்க கூட்டுமேடை உருவாக் கித் தந்திருக்கிறது.
பல்வகை வேறுபாடுகளுக்கு அப் பால், பிரச்சனைகள் - கோரிக்கைகள் அடிப்படையிலான ஒற்றுமை உருவாகி யுள்ளதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடிப்படை ஜன நாயக உரிமைகளும், சங்கம் சேரும் உரி மையும் கூட மறுக்கப்பட முடியும் என் பதைக் கடந்த மூன்று ஆண்டுகள் நமக் குத் தெளிவுபடுத்தியுள்ளன. இதை உணர்ந்துதான் தொழிற்சங்க இயக்கம் ஒன்றுதிரண்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் எழுப்புவதில் தொழிற்சங்க இயக்கம் முன் னணியில் நின்று செயல்பட வேண்டும். போராடுகிற மக்கள் பகுதியினருக்கு உறு துணையாய் நிற்க வேண்டியது, தொழி லாளி வர்க்கத்தின் கடமை. இந்தப் பின் னணியில்தான் புத்தாண்டில் பிப்ரவரி 20 - 21 தேதிகளில் இதுநாள்வரை கண்டிராத முறையில் 48 மணி நேர பொது வேலை நிறுத்தம் எனும் அறைகூவல் வெளிவந் துள்ளது.
அதே நாளன்று அகில இந்திய விவசா யிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் தங்கள் விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து மறியல் களம் காண்கின்றன.உற்பத்திச் சக்கரங்களை நிறுத்தி வைத்து, இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என ஆட்சியாளர்களுக்கு எச் சரிக்கை செய்யவே இந்த இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம்.
ஒற்றுமையும் போராட்டமும்; அதுவே புத்தாண்டின் நம்பிக்கை ஒளி.
--