மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம் பரம் “மினரல் வாட்டர் வாங்குவதற்கு 15 ரூபா யும், ஐஸ்கிரீம் வாங்குவதற்கு 20 ரூபாயும் செல வளிக்கும் மக்கள், அரிசி விலையோ கோது மையின் விலையோ ஒரு ரூபாய் உயரும் போது அதனை பெரிய பிரச்சனையாக ஆக்கு வது ஏன்?’’ என்று பேசியிருப்பதாக பத்திரி கைகளில் வந்திருப்பதைப் பார்க்கும்போது அவர் வரலாற்றுச் சக்கரத்தின் திரும்பிச் செல்லும் பொத்தானை அழுத்தியிருப்பது போலவே தோன்றுகிறது.
பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண் டிருந்த சமயத்தில், ராணி மேரி அண்டாய் னெட், “மக்களுக்கு ரொட்டி கிடைக்கவில் லை என்றால் என்ன? கேக் வாங்கிச் சாப்பிட வேண்டியதுதானே!’’ என்று கிண்டலடித் தாராம். நேர்மையாகச் சொல்வதென்றால், அவர் இவ்வாறு கூறினாரா என்பதற்கு எவ் விதமான பதிவும் இல்லை. உண்மையில் புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானி ஜீன் ஜேக் கஸ் ரூசோ, 1765இல் எழுதிய தன்னுடைய சுயசரிதையில், இதுபோன்றதொரு வாசகத் தை எழுதியுள்ள சமயத்தில் மேரி அண் டாய்னெட்டுக்கு வயது ஒன்பது மட்டுமே. இதேபோன்ற கூற்றுகள் மற்ற நாடுகளிலும் உண்டு. ரொட்டி, கேக்கிற்குப் பதிலாக அரிசி மற்றும் இறைச்சியை சம்பந்தப்படுத்தி சீன மாமன்னர் ஹூயி கூறியதாக ஒரு கூற்று உண்டு. இவ்வாறு இவர்கள் கூறியதாகக் கூறப்பட்டு இருநூறு ஆண்டுகளுக்குப் பின், இப்போது ப.சிதம்பரம் இவ்வாறு திருவாய் மலர்ந்திருக்கிறார். மினரல் வாட்டர் வாங்குவதற்கும் ஐஸ் கிரீம் வாங்குவதற்கும் செலவழிக்கும் மக்க ளும், தங்கள் ஜீவனத்திற்காக ஒவ்வொரு நாளும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக் கும் மக்களும் ஒன்றல்ல, வெவ்வேறானவர் கள். தேசிய மாதிரி சர்வே அமைப்பு சமீபத் தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் வறுமைக் கோட் டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 60 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். சில மாநிலங்களில் இது மேலும் அதிகமாகும். வறுமை வரையறையை எதார்த்தமான முறையில் எடுத்துக் கொண்டோமானால், நாட்டில் 80 கோடி மக்களுக்கும் அதிக மானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள வர்களாவர். பிரதமரால் அமைக்கப்பட்ட மறைந்த அர்ஜூன் சென்குப்தா தலைமை யிலான ஆணையமானது, நாட்டிலுள்ள மக்க ளில் 77 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்கூட செலவழிக்க இயலாமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற அறிக் கையுடன் மேலே கூறிய அறிக்கை ஒத்துப் போகிறது. இதுதான் உண்மையான இந்தியா. உள்துறை அமைச்சரின் கூற்று, நாட்டில் இரு விதமான இந்தியர்கள் (ஒளிர்கின்ற இந்தியர்களும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் அவதிப்படும் இந்தியர்களும்) இருப்பதையே வெளிப்படுத்துகிறது. எதார்த்தநிலை இவ்வாறிருக்கும் நிலை யில்தான் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் நாளும் அதி கரித்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். பருவமழையைக் கணித்துக் கூறும் துறையினர், இந்த ஆண்டு நாட்டில் பெய்யும் மழைநீரின் அளவு 25 விழுக்காடு குறையும் என்று கூறியிருப்பதைப் பார்க்கும்போது, நிலைமைகள் மேலும் மோசமாகலாம் . குறிப்பாக புரதச்சத்துக்கு அடிப்படையாக உள்ள பருப்பு மற்றும் தானியங்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக் கின்றது. இதன் காரணமாக அனைத்து வித மான பருப்புகளின் விலைகளும் அதிகரித் துக் கொண்டிருக்கின்றன. ரூபாயின் மதிப்பு 20 விழுக்காடு குறைந்திருக்கக் கூடிய நிலையில், இவற்றை இறக்குமதி செய்வதன் மூலம்கூட நிலைமையைச் சமாளிக்க முடியாது என்றே தெரிகிறது. இதன்மூலம் நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் தங்கள் வாழ்நிலையைத்தக்க வைத்துக் கொள்ள மிகவும் கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தினசரி வாழ்வின் அனைத்து அம்சங்களி லுமே நிலைமைகள் மிகவும் மோசமான முறையில் சீரழிந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் சுகாதாரப் பாதுகாப்பிற்கான செல வினங்கள் கடுமையாக அதிகரித்திருப்பதால், ஒவ்வோராண்டும் நான்கு கோடி மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டு வருகிறார்கள் என்று திட்டக் கமிஷனின் உயர்மட்ட வல்லு நர் குழு மதிப்பிட்டிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 விழுக்காட்டிற் கும் குறைவாகவே மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒட்டுமொத்தமாகச் செலவிடு கின்றன என்கிற உண்மையைக் கணக்கில் கொண்டு ஆராய்ந்தோமானால், பொதுச் சுகா தாரச் செலவினங்களுக்கு மிகவும் குறை வாகச் செலவிடும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருவது தெரியவரும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகமாகக் கொடுப்பதால்தான் உணவு தானியங்களின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்கிற உள்துறை அமைச்சரின் வாதமும் ஏற்கத் தக்கதல்ல. விவசாயிகளின் நலனைக் கருத் தில் கொண்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை யை அதிகரிக்க வேண்டியது அவசியம்தான். குறிப்பாக விவசாய நெருக்கடியும் விவசாயி களின் தற்கொலையும் அதிகரிக்கக்கூடிய சூழலில் இது அத்தியாவசியமானதுதான். ஆயினும் இதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையை சாமானிய மக்களின் மீது ஏற்றிடக் கூடாது. மக்களுக்கு அளித்திடும் உணவுப் பொருள்களின் விற்பனை விலைகளுக்கு அரசாங்கம் மானியங்கள் அளித்திடுவது அவ சியத் தேவைகளாகும். இவ்வாறு மானியங் கள் அளிப்பதற்கு அரசிடம் போதுமான வள ஆதாரங்கள் இல்லை என்பதே அரசுத்தரப் பில் வைக்கப்படும் பொதுவான வாதமாக எப்போதும் இருந்து வருகிறது. மக்கள் மீது திணிக்கப்படும் மாபெரும் மோசடி இதுவாகும். சென்ற ஆண்டு, சுமார் 5.26 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக பன் னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளுக்கு அரசாங்கம் வரிச் சலுகைகளை வாரி வழங்கி யிருக்கிறது. தற்சமயம் நிதிப்பற்றாக்குறை 6.9 விழுக்காடு - அதாவது 5.21 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அரசாங்கம் மட்டும் மேலே குறிப்பிட்டவாறு முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை அளிக்காது இருந்திருந் தால், அரசுக்கு இவ்வாறு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது, மாறாக நிதி உபரிதான் ஏற் பட்டிருக்கும். ஆயினும், நிதிப் பற்றாக்குறை யைக் குறைக்கிறோம் என்ற பெயரில் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை மட்டும் கருணையற்ற முறையில் வெட்டிக் குறைத்திட அரசு முன்வந்திருக்கிறது. அர சாங்கம் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளை வளர்ச்சிக்கான “ஊக்கத்தொகை’’ என்று கூறுகிறது. இவ் வாறு அரசாங்கம், ஏழைகளுக்கு அளித்து வந்த மானியங்களை வெட்டி அவர்களின் வயிற்றில் அடித்து, பணக்காரர்களுக்கு மானி யம் அளித்து அவர்களை ஊட்டி வளர்க்கிறது. இத்தகைய அரசின் கொள்கைகள்தான் நாட்டின் இருவிதமான இந்தியர்களை உரு வாக்க இட்டுச் செல்கின்றன. இருவிதமான இந்தியர்களுக்கும் இடையிலான இடை வெளி மேலும் அதிகமாகிட வழிவகுக்கின்றன. பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் இத்தகைய சலுகைகள் ஒழிக்கப்பட்டு, அரசுக்கு வரவேண்டிய வரிகள் முறையாக வசூலிக்கப்பட்டு, அவை பொது முதலீடு களில் செலுத்தப்பட்டால், நாட்டில் கணிச மான அளவிற்கு வேலைவாய்ப்புகள் அதி கரித்திடும் என்பதோடு அதன் தொடர்ச்சி யாக உள்நாட்டுத் தேவைகளும் அதிகரிப்ப தோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச் சியும் அதிகரித்திடும். மாறாக, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்க மானது தொடர்ந்து தாராளமய நிதி சீர்திருத் தங்களை அமல்படுத்துவதன் மூலம் பணக் காரர்களை மேலும் பணக்காரர்களாக்க உத வும் நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. இவை சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலாளிகளைக் கொழுக்க வைத்திட உதவுமேயன்றி, சாமானிய மக்கள் மீது மேலும் கடுமையான முறையில் சுமை களையே ஏற்றிடும். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங் களுக்கும் (வறுமைக்கோட்டிற்கு மேல்/வறுமைக்கோட்டிற்குக் கீழ் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி) ஒவ்வொரு மாதமும் 35 கிலோகிராம் உணவு தானியங்கள் கிலோ கிராம் 2 ரூபாய் என்ற வீதத்தில் அளிப்பதன் மூலமே நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும். இவ்வாறு வழங்குவதற்கு அரசிடம் வள ஆதாரங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. உண்மை என்னவெனில், ஐ.மு. கூட்டணி-2 அரசிடம் இதற்கான அரசியல் உறுதிதான் இல்லை. நாட்டில் உள்ள அவ திப்படும் இந்தியர்களை மேலும் அவதிக் குள்ளாக்கி, ஒளிரும் இந்தியர்களை மேலும் ஒளிரச்செய்வதற்கான கொள்கைகளையே ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்க விரும்பு கிறார்கள். நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் இந் தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில் அர சின் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கு நாடு முழுவதும் வலுவ ான முறையில் மக்கள் இயக்கங்கள் வலுப் படுத்தப்பட வேண்டும். (தமிழில்: ச.வீரமணி) |
Sunday, July 15, 2012
வரலாற்றுச் சக்கரத்தைத் திருப்ப முயலும் ப.சிதம்பரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment