Monday, January 17, 2011
விசித்திரமான வழிகளில் ஐ.மு.கூ. அரசு
ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் மிகவும் விசித்திரமாக இருக்கின்றன. சென்ற வாரம் ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூடிய போது மக்கள் மத்தியில் நிறை யவே எதிர்பார்ப்புகள் இருந்தன. தொடர் ந்து உயர்ந்துவரும் அத்தியாவசியப் பொருட் களின் விலைகளினால் ஏற்பட்டுள்ள மிகவும் கவலைக்கிடமான நிலைமை குறித்து பரிசீலித்திடும் என்றும், இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்க ளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகை யில் உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் வெளிவரலாம் என்றும் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. மாறாக, விலைவாசி உயர்வுக்காகப் பொறுப்பேற்காமல் பழி யை மற்றவர்கள் மீது சாட்டும் வேலையே நடைபெற்றிருக்கிறது. விலைவாசி உயர் வுக்கு எதிராக வலுவான நடவடிக்கை களை கூட்டணி அரசாங்கத்தால் எடுக்க முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் உயர் தலைவராக விளங்கும் பொதுச் செயலாளர் மறைமுகமாய்க் குறிப்பிட்டிருக்கிறார். உடனே, கூட்டணி யில் அங்கம் வகிக்கும் தேசியவாதக் காங் கிரஸ் கட்சியின் தலைவர் (இவர் மத்திய விவசாய அமைச்சருமாவார்) இத்தாலி யில் தொடர்ந்து கூட்டணி அரசாங்கங் கள் வெற்றிகரமாகச் செயல்படுவது குறித்துப் பேசி பதில் தாக்குதல் தொடுத் திருக்கிறார்.
உண்மையில், வேளாண் அமைச்ச கம்தான் உணவு தானியங்கள் பலவற்றின் உற்பத்திக்கும், மக்களுக்கு அவை கிடைப்பதற்கான தேவைகளுக்கும் முடிவெடுப்பதற்கான பொறுப்பை வகிக் கும் அதே சமயத்தில், மத்திய நிதி அமைச்சகமும், வர்த்தக அமைச்சகமும் தங்கள் முடிவுகளின் மூலமும் அவற்றின் விலைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. நிதி அமைச்சகமானது, இந்திய ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து கொண்டு நிதிக் கொள்கை நடவடிக்கைகள் மூல மாக பணப் புழக்கத்தைத் தீர்மானிக்கி றது. வர்த்தகத்துறை அமைச்சகம், உண வுப் பொருட்கள் உள்நாட்டுச் சந்தையில் கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஏற்றுமதி - இறக்குமதிக் கொள் கையைத் தீர்மானிக்கிறது. ஆகவே, பாய்ச் சல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட, மேற்படி மூன்று அமைச்சகங்களும் கலந்து பேசி, அறிவியல் மதிப்பீட்டின் அடிப்படை யில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள் ளக் கூட்டுப் பொறுப்பு உண்டு. இவ்வாறு கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றுவதில் மத்திய அமைச்சரவை பரிதாபகரமான முறை யில் படுதோல்வி அடைந்து விட்டது. எல்லாவற்றையும் விட மோசமான விஷ யம், விலைவாசி உயர்வுக்கான காரணங் களைக் கூறுவதில் கூட அதனால் முடி யாமல் தத்தளித்து தடுமாறிக் கொண்டி ருக்கிறது.
பொருட்களின் வழங்கல் மற் றும் தேவை ஆகியவற்றிற்குமி டையே உள்ள பொருந்தாத்தன்மையே தற்போதைய விலைவாசி உயர்வுக்கான காரணம் என்று முடிவுக்கு வருவது தவறாகும். உதாரணத்திற்கு தில்லியில் வெங்காயத்தின் விலையை எடுத்துக் கொள்வோம். வெங்காயத்தின் விலை விண்ணை எட்டியிருந்தபோதி லும் அதன் உற்பத்தி என்பது கிட்டத்தட்ட இரு மடங்காகும். 2010 டிசம்பர் 20 அன்று தில்லி, ஆசாத்பூர் சந்தைக்கு வெங்காயத் தின் வரத்து 730 டன்களாக இருந்தது, டிசம்பர் 21 அன்று 1144 டன்களாக அதிக ரித்தது. மொத்த விலை கிலோவிற்கு 55 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகக் குறைந்த அதே சமயத்தில் சில்லரை விலை 75 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக அதிகரித் தது. எனவே விலைவாசி உயர்வுக்கும் பொருட்கள் வழங்கல் மற்றும் தேவைக் கும் உள்ள பொருந்தாத்தன்மை மட்டும் அல்ல, அதற்கும் மேலாக வேறு பல காரணங்களும் இருக்கின்றன என்பது தெளிவாகும்.
2010-ன் கடைசி ஒன்பது மாதங்க ளில், காய்கறிகளுக்கான மொத்த விலை வாசிக் குறியீட்டெண் 67 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. சில்லரை விலைகள் அதைவிட அதிக மாகி, கோழிக்கறியின் விலை வெங்கா யத்தின் விலையை விட மலிவு என்று கூறுமளவுக்கு ஆக்கிவிட்டது. பிரெஞ்சுப் புரட்சியின்போது, ‘‘ரொட்டி கிடைக்கா விட்டால் என்ன, ஏன் அவர்கள் கேக் சாப்பிடக் கூடாது’’ என்று கேட்ட மேரி அண்டாய்னெட் இப்போது இருந்தால் மிகவும் சந்தோஷமான நபராக இருந் திருப்பார்.
2010-ல் ஆரம்பத்தில் சர்க்கரைக்கு என்ன நடந்ததோ அதுதான் 20110ன் ஆரம்பத்தில் வெங்காயத்திற்கு நடந்திருக் கிறது. இந்த உணவுப் பொருட்கள் கிடைப் பதில் பற்றாக்குறை ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்தநிலையிலும் ஆட்சி யாளர்கள் இவற்றை ஊக்கத்தொகைகள் (inஉநவேiஎநள)கொடுத்து ஏற்றுமதி செய் தார்கள். விலைவாசிகள் விண்ணை எட்டிய சமயத்தில் ஏற்றுமதிகள் தடை செய்யப்பட்டு, அனைத்து இறக்குமதித் தீர்வைகளும் ரத்து செய்யப்பட்டு இறக் குமதிகள் ஊக்குவிக்கப்பட்டன. ஆயி னும், ஏறிய விலைகள் இன்னமும் இறங் கத் தொடங்கவில்லை. ஏற்றுமதி ஊக்கத் தொகைகளால் பயனடைந்த அதே வர்த்தகர்கள் இப்போது இறக்குமதித் தீர்வைகள் ரத்து செய்யப்பட்டதாலும் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். இவை இந்த அரசாங்கத்தின் விசித்திர மான வழிகளைப் பிரதிபலிக்கவில் லையா? அல்லது இதன் பின்னணியில் இன்னமும் வெளிப்படாத ஊழல்கள் காத்துக்கொண்டிருக்கின்றனவா?
2010-ன் கடைசி ஒன்பது மாதங்க ளில், ஊக வர்த்தகத்தின் காரணமாக வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டக் கூடிய விதத்தில் அனைத்துப் பொருட் களின் விலைகளும் கடுமையாக உயர்ந் தன. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, குறிப்பாக உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு, இந்த ஊக வணிகம்தான் பிரதான காரணம் என்று இன்றைய தினம் சர்வதேச அள வில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனைத் தடை செய்திட வேண்டும் என்று தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகள் கோரி வந்தபோதிலும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் இதனைச் செய்ய மறுத்து வருகிறது.
இவ்வாறு ஊக வர்த்தகத்தைத் தடை செய்யாவிட்டால், மத்திய அரசின் கிடங் குகளில் எலிகளுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் உணவு தானிய இருப்பு களை அனைத்து மாநிலங்களுக்கும் பொது விநியோக முறையில் மக்களுக்கு அளிப்பதற்காக அனுப்பாவிட்டால், பெட் ரோலியப் பொருட்களின் விலைகளை மீண்டும் பழைய நிலைக்குக் குறைக்கா விட்டால், சாமானிய மக்களுக்கு நிவார ணம் என்பது சாத்தியம் இல்லை.
இந்த அரசாங்கத்தின் விசித்திரமான வழிகளை வேறு பகுதிகளிலும் காண முடிகிறது. புதிதாக கூடுதல் பொறுப் பேற்றுக் கொண்டுள்ள டெலிகாம் அமைச் சர், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீட்டில் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய்க் கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருப்ப தாகக் கூறப்பட்டுள்ள மத்திய தலை மைக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் (சிஏஜி) அறிக்கை யையே - முற்றிலுமாக மறுதலித்துள்ளார். அமைச்சர் சொல்வதுபோல், சிஏஜி அறிக்கை ஆதாரமற்றது என்றால், பின் ஏன் ஆ. ராசா அமைச்சரவையிலிருந்து பதவி விலக வேண்டும்? 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெற்ற இரு கம்பெனிகள் தாங்கள் பெற்றதில் ஒரு பகுதியை மட்டும் இரு சர்வதேச டெலி காம் ஆபரேட்டர்களுக்கு அளித்து, அதன் மூலம் தாங்கள் பெற்ற தொகையைவிட பத்திலிருந்து 12 மடங்கு வரை விலை பெற்றிருக்கிறார்கள் என்ற உண்மையை மறைக்க முடியுமா? மொபைல் டெலி போன்கள் பயன்படுத்துவோர் 2001இல் 40 லட்சமாக இருந்தனர். 2008இல் அவர்களின் எண்ணிக்கை 30 கோடி யாக உயர்ந்துள்ளது. ஆனால் 2001இல் விற்ற விலைக்கே 2008இலும் உரிமங் களை விற்க முன்வந்ததிலேயே ஊழல் அடங்கி இருக்கிறது.
கோடிக்கணக்கான மக்களின் வாழ் வாதாரத்தைக் கடுமையாகப் பாதித் துள்ள உணவுப் பொருட்களின் விலை கள் கடுமையாக உயர்ந்திருப்பதைக் குறைத்திட உரிய நடவடிக்கைகளை ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் எடுத்திட வேண்டும். நாட்டின் வளங்களை மிகப் பெரிய அளவில் கொள்ளையடித்திருப்ப வர்களிடமிருந்தும் அவற்றை மீட்டெடுத் திட வேண்டும். மேலும், அரசுக்கு ஏற் பட்டுள்ள இழப்புகளைத் திரும்பப் பெற்று, அவற்றை மக்களுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளுக்குப் பயன்படுத் திக் கொள்ள வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி
Subscribe to:
Posts (Atom)