Thursday, February 18, 2010

மேற்குவங்க அரசின் வரவேற்கத்தக்க நடவடிக்கை

மேற்குவங்க இடது முன்னணி அரசாங் கத்தின் சார்பில் அரசுப் பணிகளில் சமூகரீதி யாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மாநில முதல் வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்திருப் பதை ‘வெறும் தேர்தல் தந்திரம்’ என்று காங் கிரஸ் கட்சி எள்ளிநகையாடியிருப்பது எதிர் பார்த்த ஒன்றுதான். ஆயினும் அதனால் அம் முடிவினை வெளிப்படையாக எதிர்த்திட முடி யவில்லை. ஆயினும் எதிர்பார்த்தபடி, மதவெறி அமைப்புகளின் அரசியல் பிரிவான பாஜக இதனை நேரடியாகவே கண்டித்திருக்கிறது.

நாட்டில் வாழும் மத மற்றும் மொழிச் சிறு பான்மையினரின் நலன்களைக் காத்திடுவதற் காக 2004 அக்டோபர் 23 அன்று அமைக்கப் பட்ட ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் அளித்திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், மேற்கு வங்க அரசு இம்முடிவினை மேற்கொண்டிருக் கிறது. ஆணையத்தின் பரிந்துரைகளில் பல வற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வர வேற்றிருக்கிறது.

ஆணையம் தன் அறிக்கையை பிரதமரி டம் 2007 மே மாதத்திலேயே சமர்ப்பித்திருந்த போதிலும், 2009 டிசம்பரில்தான் அது நாடா ளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அரசு இவ்வாறு காலதாமதம் செய்ததிலிருந்து இப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் தட்டிக் கழிக்கும் மனப்போக்கை நன்கு அறிந்து கொள்ள முடியும். ஐ.மு.கூட்டணி அரசாங்கமானது இப்பரிந் துரைகளின் மீது தான் மேற்கொண்ட நடவடிக் கைகள் அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. பொதுவாக எந்த ஓர் ஆணையம் தன்னுடைய பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நேரத்திலும், அதன்மீது அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக் கை அறிக்கையும் இணைத்தே நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆணை யத்தின் பரிந்துரைகளைப் பொறுத்தவரை வர விருக்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அமர் வில் இது அநேகமாக சரிசெய்யப்படலாம். அப் போது நாடும் நாட்டு மக்களும் ஆணையத் தின் பரிந்துரைகளை அமல்படுத்திட மத்திய அரசு எப்படிச் செயல்பட இருக்கிறது என் பதைத் தெரிந்து கொள்வார்கள்.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையமானது, பிற் படுத்தப்பட்ட வகுப்பாரை அடையாளம் காண் பதற்கான அளவு கோல்கள் பெரும்பான்மை இனத்தினருக்கும், மத மற்றும் மொழிச் சிறு பான்மையினருக்கும் இடையில் எவ்விதப் பாகுபாடுமின்றி ஒரே சீரான முறையில் இருந்திட வேண்டும் என்று பரிந்துரைத்திருக் கிறது. எனவே, இப்போது பெரும்பான்மை இனத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரைத் தீர்மானிப்பதற்கு மேற்கொள்ளப்படும் அதே அளவுகோல்களை அனைத்துச் சிறு பான்மையினருக்கும் எவ்வித வித்தியாசமு மின்றி பிரயோகிக்க வேண்டும் என்றும் அது தெரிவித்திருக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கு அளிக்கப்படும் அளவுகோல் களை ஆய்வு செய்து, அதன்படி மதச்சிறுபான் மையினருக்கு மத்திய-மாநில அரசுகள் 15 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திட வேண் டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. இந்த 15 விழுக்காட்டிலும், 10 விழுக்காடு முஸ்லிம் சிறுபான்மையினருக்கு அளித்திட வேண்டும் என்றும், ஏனெனில் நாட்டில் உள்ள மொத்த சிறுபான்மையினர் மக்கள் தொகையில் அவர்கள் 73 விழுக்காடு இருப்பதால், இவ் வாறு 10 விழுக்காடு ஒதுக்கிட வேண்டும் என் றும் கூறியிருக்கிறது. மீதமுள்ள 5 விழுக் காட்டை இதர சிறுபான்மையினருக்கு அளித் திட வேண்டும் என்றும் ஆணையம் பரிந் துரைத்திருக்கிறது.

இவ்வாறான ஆணையத்தின் பரிந்துரைக ளின் அடிப்படையில்தான் மேற்கு வங்க அரசு தன்னுடைய முடிவினை அறிவித்திருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 16(4)ஆவது பிரிவு, ‘‘மாநிலத்தில் உள்ள பணிகளில் எந்த ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காவது போதுமான அளவு பிரதிநிதித்துவம் இல்லை என்று அரசு கருதுமானால், பணி நியமனத் தில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்ப தற்கு அம்மாநில அரசு ஏதேனும் ஷரத்துக் களை உருவாக்குமானால் அதனை இப்பிரிவு தடுத்திடாது’’ என்று கூறியிருக்கிறது. இந்த 16(4)ஆவது பிரிவினையொட்டியேதான், ஆணை யம் இப்பரிந்துரைகளை அளித்திருக்கிறது.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந் துரைகள் ஏற்கப்படுவதன் மூலம், இட ஒதுக் கீட்டிற்கென்று உச்சநீதிமன்றம் வரையறுத் துள்ள 50 விழுக்காட்டைத் தாண்ட வேண்டி யிருக்கும். தலித்துகள்/பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இட ஒதுக் கீடுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநி லத்தில் உள்ள அவர்களின் மக்கள் தொகைக் கேற்ப நிர்ணயிக்கப்படுகின்றன. சில மாநிலங் களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக் கான 27 விழுக்காடு முழுமையாக பயன்படுத் திக் கொள்ளப்படவில்லை, அத்தகைய மாநி லங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. தற்சமயம் அம்மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 7 விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஏனெனில் மாநில மக்கள் தொகையில் அவர்கள் விழுக்காடு அந்த அளவிற்குத்தான் இருக்கிறது. இப்போது மாநில அரசு மேற்கொண்டுள்ள முடிவின்படி, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த பின் பும், மொத்தத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினரின் இட ஒதுக்கீடு என்பது இந்த 10 விழுக் காட்டையும் சேர்த்து 17 விழுக்காடுகள்தான் வரும்.

ஆணையத்தின் பரிந்துரைகளில் பிற் படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக் கீடுதான் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டி ருக்கிறது. ஏனெனில் வங்கத்தின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் மட்டும் 25 விழுக் காடாகும். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டநாள் புரிதலின்படி, இவ்விட ஒதுக்கீட்டினால் முஸ்லிம்களில் வசதி படைத்தவர்கள் (உசநயஅல டயலநச) பயனடைய மாட்டார்கள். ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள குடும்பத்தினர் இதனை பயன்படுத்த முடியாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்திருக்கிறது.

மேற்கு வங்கத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களையும் சேர்த்துக்கொள்வது என்பது ஒன்றும் புதிதல்ல. தற்சமயம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலில் 16.83 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத் தும், 12 முஸ்லிம் துணைக் குழுக்கள் இருக் கின்றன. மாநில அரசாங்கம் இப்போது மேலும் 37 முஸ்லிம் துணைக் குழுக்களை அடையா ளம் கண்டு, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட் டியலில் சேர்த்திருக்கிறது. முஸ்லிம்களில் வசதிபடைத்தவர்களுக்கு இடஒதுக்கீட்டி லிருந்து விலக்கு அளித்திருக்கிறது. மேலும் முஸ்லிம்களில் உண்மையில் இடஒதுக்கீடு தேவைப்படும் துணைக்குழுக்களைக் கண்ட றிய ஒரு குழுவை மேற்கு வங்க மாநில அரசு அறிவித்திருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் இதர பிற்படுத் தப்பட்டவர்கள் பட்டியலில் ஏற்கனவே சில பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் துணைக்குழுக்கள் இருக்கும் யதார்த்த உண்மையை உதாசீனம் செய்துவிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் இடது முன்னணியும் முஸ்லிம்களை முகஸ்துதி செய்வதாக பாஜக-வானது மீண் டும் ஒருமுறை மதவெறித் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. அவர்களது, முஸ்லிம் சிறு பான்மை மக்களுக்கு எதிரான மதவெறி விஷத் தைக் கக்கும் குணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். உண்மையில், இத்தகைய வெறி பிடித்த மதவெறி அரசியலானது, வாக்கு வங்கி அரசியலின் மிகவும் மட்ட ரகமான வெளிப்பா டாகும். இந்து வாக்கு வங்கியை ஒருமுகப் படுத்துவதற்காக, மதச்சிறுபான்மையினருக்கு எதிராகத் துவேஷத்தைப் பரப்பும் அடிப்படை யில் இதனை பாஜக மேற்கொள்கிறது. மத ரீதி யாக இட ஒதுக்கீடு கூடாது என்று இக்கட்சி வாய் கிழியப் பேசினாலும், தொடர்ந்து இந்து மதத்தின் கீழ் வரும் தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீடுகள் அளிப்பதையும், அவற்றை விரி வாக்கிக்கொண்டே செல்வதையும் வசதியாக மறந்துவிடுகிறது. இதனைத் துல்லியமாகக் குறிப்பிட்டு ரங்கநாத் மிஸ்ரா ஆணையமானது, மக்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையைக் கண்டறிவதற்கான அளவுகோல் ஒரே சீராகவும், மதங்களுக்கு அப்பாற்பட்டும் இருந்திட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

நவீன இந்தியாவினைக் கட்டிஎழுப்பிடும் பணியில் சிறுபான்மை இன மக்களையும் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிக்கும் வகையில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் படுத்த முன்வந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடுப்பதற்கு முன், காங்கிரஸ் கட்சியானது ஏன் அதனை அமல்படுத்தாமல் காலம் தாழ்த் திக் கொண்டே வந்திருக்கிறது என்பதற்கு முதலில் மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

எந்தவொரு நவீன ஜனநாயக அமைப்பின் தரமும், அது மிகவும் சிறுபான்மையினரின் நலன்களையும் எந்த அளவிற்குக் கட்டிக்காக் கிறது என்பதிலிருந்தே அளவிடப்படும். பல் வேறு இன மக்களுக்கிடையே சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிரப்பிடக் கூடிய வகையில் ஆக்கபூர்வமான நடவடிக் கைகளை அது எடுத்திடுவதை வைத்துத் தான் அதன் வல்லமை மதிப்பிடப்படும். இந் தக் கண்ணோட்டத்தில் மேற்கு வங்க அரசின் முடிவானது மிகவும் சரியான ஒன்று. இதனை நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை விரும் புவோரும், நாட்டையும் நாட்டுமக்கள் மீதும் அபரிமிதமான அன்பு வைத்திருப்போரும் விரும்புவார்கள் என்பது திண்ணம்.

தமிழில்: ச.வீரமணி

No comments: