Monday, July 13, 2009

பட்ஜெட்: மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம்!



ஒவ்வொரு பட்ஜெட்டுமே ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் என்பதும், தங்கள் வர்க்க ஆட்சியை ஒரு முகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் அதே சமயத்தில், மிகுந்த அள வில் லாபத்தை அறுவடை செய்வதற்கும் முயற்சிக்கும் என்பதும் இயற்கையே. இப் போது வந்திருக்கிற ஐமுகூஅரசின் முதல் பட் ஜெட்டும் அதைத் துல்லியமாகச் செய்திருக் கிறது. ஆயினும், அது அரசின் முரண்பட்ட தன்மைகளை விளக்கும் விதத்திலும் அமைந் திருக்கிறது. ஒரு பக்கம் சாமானிய மக்களுக் காக (யாரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்களோ அவர்களுக்காக) கவலைப்படுவதுபோல் காட்டிக்கொண்டு, அதே சமயத்தில் பெரு முதலாளிகளின் அடிப்படை அபிலாசை களை நிறைவேற்றக் கூடிய வகையில் நவீன தாராளமய சீர்திருத்தங்களை முன்னெ டுத்துச் செல்லும் வேலையில் இறங்கியிருக் கிறது.

ஏற்கனவேயே, ஐமுகூ அரசாங்கத்தின் கடந்த முதல் நான்காண்டு கால ஆட்சியின் போது, இந்திய பில்லியனர்கள் (ஒரு பில்லி யனர் என்றால் 100 கோடி டாலர்களுக்குச் சொந்தக்காரர்) டாலர் மதிப்பீட்டில் 2004இல் ஒன்பது பேர்களாக இருந்தவர்கள், 2008இல் 53 பேர்களாக உயர்ந்திருக்கிறார்கள். நாட்டின் பணக்கார பத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்கள் 3 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 10 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாயாக - அதாவது மும்மடங்கு - அதிகரித் திருக்கிறது. இதனை மேலும் ஒருமுகப் படுத்தும் வகையிலேதான் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் இதனை அவர்கள் செய்திருக்கிறார்கள். சர்சார்ஜ் ஒழிப்பு, வரு மான வரி உயர்பட்ச வரம்பு அதிகரிப்பு ஆகி யவை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் ஆதா யத்தை பணக்காரர் களுக்குக் கொடுத்திருக் கிறது. மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு நபர், இப்போது ஆண்டு ஒன் றுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வரி கட்டினால் போதும். ஆண்டிற்கு 20 லட்சம் ரூபாய்க்கும் மேலாக வருமானம் ஈட்டிடும் ஒரு நபர், இப்போது அரசுக்கு 53 ஆயிரத் திற்கும் குறைவாக வரி கட்டினால் போதும். இவற்றின் காரணமாக அரசின் வருவாய் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் குறைகிறது. மேலும், அரசு அளித்திட்ட பல்வேறு சலுகைகளின் காரணமாக, சென்ற ஆண்டு மட்டும் 4.18 லட் சம் கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்பட்டிருப்ப தாக, பட்ஜெட் ஆவணங்கள் வெளிப்படுத்து கின்றன. இந்தச் சலுகைகள் இந்த ஆண்டும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. சில்லரை ஆதாய வரி (குசiபேந க்ஷநநேகவை கூயஒ), பண்டங்கள் பரிவர்த்தனை வரி (ஊடிஅஅடினவைநைள கூயஒயவiடிn கூயஒ) போன்றவையும் ஒழிக்கப்பட்டிருக்கின்றன. பண்டங்கள் பரிவர்த்தனை வரி ஒழிப்பின் விளைவாக அத்தியாவசியப் பொருள்கள் ஊக வணிகத்திற்குள்ளாகும் என்பதால், அவற் றின் விலைகள் மேலும் பல மடங்கு உயர்ந் திடும். அமெரிக்க அதிபர் ஒபாமா, ஊக வணி கத்தில் - அதிலும் குறிப்பாக எண்ணெய் வர்த் தகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்று - தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில்தான், இவர்கள் இவ் வாறு வரிகளை ஒழித்திருக்கிறார்கள்.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்திட, பொது - தனியார் - கூட்டுத் துறை - அதாவது பிபிபி (ஞஞஞ - யீரடெiஉ-யீசiஎயவந-யீயசவநேசளாiயீ) என்ற பெயரில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை மேலும் கொழுக்கவைக்கும் ஏற்பாடுகளும் ஆரம்பித்துவிட்டன. இந்திய உள்கட்டமைப்பு நிதி கம்பெனி லிட் (ஐஐகுஊடு - ஐனேயை ஐகேசயளவசரஉவரசந குiயேnஉந ஊடிஅயீயலே) என்கிற நிறுவனம் தற்சமயம் சுமார் 60 சதவீதம், வணிக வங்கிகளின் மூலமாக, பிபிபி திட்டங்க ளுக்கு அளித்திட இருக்கிறது. இவ்வாறு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் இவர்களிடம் முதலீடு செய்திட அரசு திட்டமிட்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அர சாங்கம், தன்னுடைய நிதி நிறுவனங்கள் மூல மாகவே, பிபிபி என்ற பெயரில் தனியாருக்கு கோடிக்கணக்கான ரூபாய் தொகையை எளிய தவணைகளில் அளித்திட இருக் கிறது. இவ்வாறு அரசாங்கத்திடமிருந்து பணத் தை பெற்றபின், அரசாங்கத்துடன் இவர்கள் கூட்டுசேர்ந்து மேலும் கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. முதலாளித் துவ வர்க்கத்தின் சூட்சும வழிகள் எப்படி எப்படி எல்லாம் இருக்கின்றன பாருங்கள்!

இந்தப் பட்ஜெட்டில் அடிப்படைப் பிரச் சனை, உலகப் பொருளாதார மந்தம், அதி கரித்துவரும் வேலை இழப்புகள், மக்களின் வாங்கும் சக்தி வேகமாக வீழ்ச்சியடைந்து வருதல் ஆகியவற்றின் பின்னணியில், நாட் டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புறத்தூண் டுதலை அளிக்கவேண்டிய அதே சமயத்தில், சாமானிய மக்களின் ‘‘உள்ளீடான வளர்ச் சித்’’ (“inஉடரளiஎந பசடிறவா”) தேவைகளையும் நிறைவேற்றுவதாகும். துரதிர்ஷ்டவசமாக, பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவின் அறிக்கையில் தெரிவித்திருப்பதைப்போல, இதில் எதையுமே போதுமான அளவிற்கு மேற்கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. அதிகரிக்கப்பட இருக்கும் மொத்த செலவி னம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 2 சதவீதம்தான். இதனால் எவ்வித உள் ளீடான வளர்ச்சியையும் உருவாக்கிட முடியாது. அதேபோன்று ‘உள்ளீடான வளர்ச்சி’க்காக அறிவிக்கப்பட்டிருக்கின்ற படாடோபமான திட்டங்களுக்கு ஒதுக்கியிருக்கும் தொகை களும் மிகவும் அற்ப அளவானதாகும்.

கணிசமான அளவிற்கு ஆதாயம் அடைந் திருக்கிற ஆளும் வர்க்கங்கள் அவற்றுடன் திருப்தியடைந்திடவில்லை. குறிப்பாக, ஐமுகூ அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதற்கு, இடதுசாரிக் கட்சிகளின் தயவு தேவை யில்லை என்ற சூழ்நிலையில், ஆளும் வர்க் கங்களின் ஆசை பல்கிப் பெருகியிருக்கிறது. பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட அன்று பங்குச்சந் தையில் ஏற்பட்ட சரிவு இதைப் பிரதிபலித் தது. சர்வதேச பங்குச்சந்தையின் நடவடிக் கைகள், நம் நாட்டின் பங்குச் சந்தையையும் பாதிக்கும் என்றபோதிலும், பொருளாதார ஆய் வறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்டது போல, நிதிச்சீர்திருத்தங்கள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகள் பட்ஜெட் டில் பிரதிபலிக்காததே, இத்தகைய சரிவிற் குக் காரணங்கள் என்று கார்ப்பரேட் ஊடகங் கள் மிகவும் விரிவான முறையில் வியாக்கியா னங்கள் செய்தன. இந்த ஆண்டில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுத் துறை நிறுவன பங்குகள் தனியாரிடம் தாரை வார்க்கப்படும் என்று இவை எதிர்பார்த்தன வாம். பட்ஜெட்டில் தனியாருக்குத் தாரை வார்ப்பது தொடர்பாக சொல்லப்பட்டிருந்தபோ திலும், அதன் விவரங்கள் அல்லது அதற்கான வழிவகைகள் எதுவும் கூறப்படவில்லை.

அதேசமயத்தில், நிதி அமைச்சர் மிகப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறை இருப்பது பற்றி எச்சரிக்கை செய்து, எனவே ‘நிதிக் கட்டுப்பாட்டு’க்குத் திரும்புவதே அரசின் நோக்கம் என்று கூறியிருக்கிறார். அரசு, இத்தகைய ‘நிதிக்கட்டுப்பாட்டுக்குத்’ திரும்புவது என்பதன் பொருள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக் குத் தாரை வார்ப்பதுதான் என்று புரிந்து கொள்ள அதிக அறிவு ஒன்றும் தேவையில் லை. அரசாங்கம் இவ்வாறு கூறியிருப்பதில் எவ்விதமான பொது அறிவும் இல்லை, பொரு ளாதார அறிவும் இல்லை. ஒரு விவசாயி, தான் பெற்ற கடனுக்காகத் தன் நிலத்தையே விற்று ஓட்டாண்டியாவதைப்போலத்தான் இது. இப்பாதை நிச்சயம் நாட்டை சீரழித்துவிடும்.

இவற்றையெல்லாம் இந்த அரசு செய் திடுமா அல்லது எப்படி இவற்றை இந்த அரசு செய்யப்போகிறது என்பதெல்லாம், ஆரம்பத் தில் நாம் குறிப்பிட்ட முரண்பாடு எவ்விதத் தில் மாறப்போகிறது என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்பட இருக்கின்றன. இந்திய கார்ப் பரேட் நிறுவனங்கள் தங்கள் லாபம் மேலும் விரிவாகும் வகையில் சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றன. ‘உள்ளீடான வளர்ச்சி’ மற்றும் சாமானியர்களின் நலன்களைக் காவு கொடுத்து ‘ஒளிர்கின்ற இந்தியா’வை வலுப் படுத்த வேண்டும் என்று அவை விரும்பு கின்றன.

முரண்பாடுகள் எப்படி முட்டி மோதப் போகின்ற என்பதுதான் ‘உழல்கின்ற’ இந்தி யாவின் அங்கமாக உள்ள பெரும்பான்மை மக் களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கவிருக்கின்றன. கொள்ளை லாபம் அடிக்க விரும்பும் ஆளும் வர்க்கங்கள் வெற்றி பெறப்போகிறார்களா? அல்லது இவர்களின் கொள்ளை லாபவெறிக்கு எதிராக அணிதிர ளும் கோடிக்கணக்கான மக்களின் வலுவான போராட்டங்கள் வெற்றிபெறப்போகின்றனவா? இவ்வாறு எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வெகுஜனப் போராட்டங்களின் வலுதான், எதிர்கால இந்தியாவையும் கோடிக்கணக் கான மக்களின் வாழ்வையும் தீர்மானிக்க இருக்கின்றன.

தமிழில்: ச.வீரமணி

No comments: