Thursday, January 21, 2016

புல்லைத் தின்னும் கொடுமை


நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிக்கலில் இருக்கிறது. இதனை வெளியாகி இருக்கிற இரு விவரங்களிலிருந்து பார்க்க முடிகிறது. முதலாவது தொழில் உற்பத்தி அட்டவணை(index of industrial production). இது 2015 நவம்பரில் 3.2 சதவீதமாக சுருங்கிவிட்டது. இரண்டாவது, சில்லரை விலைஅட்டவணை (retail price index) இது டிசம்பரில் 5.61 அளவிற்கு அதிகரித்திருக்கிறது. அதிலும் பொருளுற்பத்தித் துறை (manufacturing sector) அட்டவணை, தொழில் உற்பத்தி அட்டவணைக் குள்ளேயே 4.4 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மூலதனப் பொருள்கள் துறை (Capital goods sector)யில் 24 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மூதலீடுஒன்றும் வரவில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஏற்றுமதிகளில் தொடர் சரிவும், தொழில் உற்பத்தியில் மந்தம் ஏற்பட்டிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
ஏற்றுமதிகள், 2014 டிசம்பரிலிருந்து கடந்த 12 மாதங்களாகவே தொடர்ந்து வீழ்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஏற்றுமதிகள் -5 சதவீதம் என்ற அளவில் எதிர் மறை வளர்ச்சியைக் காட்டுகிறது. உற்பத்தியைப் பெருக்கக் கூடிய விதத்தில் உள்நாட்டுத் தேவையும் ஏற்படவில்லை. உலகப் பொருளாதார மந்தம், நம் பொருளா தாரத்திலும், ஏற்றுமதியிலும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சியாளர்கள் படா டோபமாக அறிவித்தஇந்தியாவில் உற்பத்தி செய்க’’ என்கிற கோஷம், இந்தியாவிற்குள் அந்நிய மூல தனத்தைக் கவர்வதையே சார்ந்திருக்கிறது. உலகப்பொருளாதாரம் மந்தமாகவுள்ள இன்றைய நிலையில் அநேகமாக இது சாத்தியமில்லை. பொதுவாக அந்நிய மூலதனம் என்பது ஊக வணிகங்கள், பங்குச் சந்தை வணிகங்கள் மற்றும் கரன்சி சந்தைவணிகங்களுக்கு மட்டும்தான் வந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை இந்தியா பெற்றிருக் கிறது என்று மோடி அரசாங்கம் பீற்றிக் கொண் டிருக்கிறது. மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தசமயத்தில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 சதவீதம் அள விற்கு இருக்கும் என்று தம்பட்டம் அடித்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிதி அமைச்சகத்தின் அரையாண்டு ஆய்வறிக்கை (Mid-Year Review of the finance ministry) மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
ஆயினும் இதுவும் கூட சந்தேகத்திற்குரியவையே. ஏனெனில் எதார்த்த நிலைமைகளின்படி, அது தொழில்துறை உற்பத்தியாக இருந்தாலும் சரி அல்லது வேளாண்துறை உற்பத்தியாக இருந்தாலும் சரி, அந்த அளவிற்கு வளர்ச்சி கிடையாது.2016இலும் உலகப் பொருளாதார மந்தம் தொடரும் நிலையே இருப்பதால், மோடி அரசாங்கம் தன்னுடைய திவாலாகிப்போன கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். இன்றைய சூழ்நிலையில் தேவைப்படுவது என்னவெனில், பொது முதலீட்டை அதிகப்படுத்துவதுதான். ஆனால், இதற்கு அரசாங்கம் பணக்காரர்கள்மீது வரி விதித்து வள ஆதாரங்களைப் பெருக்கிட வேண்டும், தற்பொது பொதுச் செலவினத்தில் வெட்டிச் சுருக்குவதை செய்து கொண்டிருக்கும் கொள்கையை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஆயினும், இந்த அரசாங்கம் வரவிருக்கும் பட்ஜெட்டில் அவ்வாறெல்லாம் செய்வதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
சில்லரைப் பொருள்கள் பணவீக்கம் (retail inflation) கடந்த ஒன்பது மாதங்களாக மிகவும் உச்சத்தில் இருக்கின்றது. உணவுப் பொருள்களின் விலைகள் கூர்மையாக உயர்ந்திருத்தல் இதற்குப் பிரதான காரணமாகும். பருப்பு வகைகளின் விலைகள் 46 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கின்றன. 2015-16ஆம் ஆண்டில் குறுவைப் பயிர்கள் உற்பத்தி (Kharif production of crops) சுமார் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. தொடர்ந்து ஈராண்டுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டதன் விளைவாக இந்த ஆண்டும் வேளாண் உற்பத்தி வளர்ச்சிமிகவும் மங்கியநிலையிலேயே காணப்படுகிறது.
எனவே இந்த ஆண்டும் உணவுப் பொருள்களின் விலைகள் மேலும் உயராது கட்டுக்குள் இருப் பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. வேளாண்மை நெருக்கடி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதாலும், உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்து கொண்டிருப்பதாலும் மக்கள் பொது விநியோக முறையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களையே மிகவும் கட்டாயமாக சார்ந்திருக்கிறார்கள். ஆனால் நாட்டில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தும் முறையானது, ஏழை மக்களை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளி இருக்கிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. இது கிராமப்புறங்களில் 75 சதவீதக் குடும்பங்களுக்கும், நகர்ப்புறங்களில் 50 சதவீதக் குடும்பங்களுக்கும் (மொத்தத்தில் சராசரியாக 67 சதவீத மக்கள்தொகை யினருக்கு) உணவுப்பொருள்களை அளிக்க வகை செய்கிறது. ஆயினும் இந்தச் சட்டம் இன்னமும் நாடு முழுவதும் முழுமையாக அமல்படுத்தப் படவில்லை. 11 மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இன்னமும் இந்தச் சட்டத்தை அமல்படுத்தவில்லை. சில அரசுகள் இதனை ஒரு பகுதியே செய்திருக்கின்றன. பாஜக அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின்னர், மாநில அரசாங்கங்களுக்கு மூன்றுமுறை இச்சட்டத்தை அமல்படுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தை அமல் படுத்த கடைசியாக 2016 ஏப்ரல் 1 வரை காலநீட்டிப்பு செய்யப் பட்டது. இவ்வாறு இந்தச்சட்டம் மிகவும் மந்தமான முறையில் அமல்படுத்தப்படுதல் காரணமாக அல்லது தவறானத் தகுதி அலகு (faulty eligibility criteria) ஏற்படுத்தியிருப்பதன் காரணமாக நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் இச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஒதுக்கீடுகளைக்கூற பெற முடியாமல் விடப்பட்டிருக்கிறார்கள்.
பொது விநியோகமுறை முறையாக அமல் படுத்தப்படாததால் நாட்டிலுள்ள கிராமப்புற மக்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் பண்டல்கண்ட் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதன் பின்னணியில் கிராம மக்கள் பட்டினிக் கொடுமையால் புல்லைத் திங்கக் கூடிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மோடி அரசாங்கம் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முறையாக நாடு முழுவதுக்கும் அமல் படுத்திட அவசரகதியில் நடவடிக்கை எதையும் எடுக்கத் தயாராக இல்லை. கிராமப்புற மக்களின் அவலவாழ்வைப் போக்கிட வேண்டுமானால், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும், வேளாண்மைத்துறைக்கும் பொது முதலீடுகளைக் கணிசமான அளவிற்கு அதிகரித்திட வேண்டும்.
இத்துடன் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டையும் மற்றும் சமூகநலத்திட்டங்கள் பலவற்றிற்கான ஒதுக்கீட்டையும் கணிசமான அளவிற்கு உயர்த்திட வேண்டும்.
- ஜனவரி 13, 2015,
தமிழில்: .வீரமணி


2 comments:

ப.கந்தசாமி said...

என்ன சொல்கிறீர்கள் என்று என் மட மூளைக்குப் புரியவில்லை. நாங்கள் அந்தக்காலத்தில் எங்கள் ஆராய்ச்சி அறிக்கையை இப்படித்தான் எழுதுவோம்.

nerkuppai thumbi said...

சரி. புல்லைத் தின்னும் நிலைக்குத் தள்ளப்பட்ட உத்தர் பிரதேசத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டதா? அங்கு ஆட்சியல் உள்ள மதசார்பற்ற அகிலேஷ் யாதவ் ஆட்சியைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே! எங்கு நாய் குறைத்தாலும் பா ஜ க அரசைத் தான் குறை வேண்டுமா?.