Sunday, January 10, 2016

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாகக் கட்டுவோம்:சீத்தாராம் யெச்சூரி


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாகக் கட்டுவோம்
சீத்தாராம் யெச்சூரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடு பணித்தபடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனம் தொடர்பான சிறப்பு மாநாடு(பிளீனம்) “2015ஆம் ஆண்டின் இறுதிவாக்கில்’’ நடத்தப்பட்டு, அது தன் கடமையை நிறைவேற்றியுள்ளது. கட்சியின் அகில இந்திய மாநாடு பணித்த வேலையை எட்டு மாத காலத்திற்குள்ளாகவே வெற்றிகரமாக நிறைவேற்றி யிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். கட்சியின் மத்தியக்குழு பிளீனத்தை நடத்திட ஓர் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான நடைமுறையையும், கால அட்டவணையையும் தயாரித்திட வேண்டும் என்று தீர் மானித்திருந்தது.
மாநிலக் குழுக்களிடமிருந்து கட்சி ஸ்தாபனத்தின் தற்போதைய நிலை குறித்தும், அதன் செயல்பாடுகளின் விவரங்கள் குறித்தும் விரிவான தகவலையும் கட்சியின் மையத்தால் ஒரு விரிவான வினாப்பட்டியல் மூலமாகக் கோரப்பட்டிருந்தது. மாநிலக் குழுக்களால் அனுப்பி வைக்கப்பட்ட பதில்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பிளீனத்திற்கான வரைவு அறிக்கையும், ஸ்தாபனம் மீதான வரைவுத் தீர்மானமும் தயார் செய்யப்பட்டன. கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னரும், பிளீனம் கூடுவதற்கு முன்னருமான இடைப்பட்ட எட்டு மாத காலத்திற்குள் வரைவு ஆவணங்களைத் தயாரிப்பதற்காக அரசியல் தலைமைக்குழு நான்கு முறைகூடியிருக்கிறது, மத்தியக்குழு மூன்று முறை கூடியிருக்கிறது என்ற உண்மையை ஆராய்ந்தாலே இவ்விரு ஆவணங்கள் எந்த அளவிற்கு செறிவாக வந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
டிசம்பர் 27 அன்று கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியை தொடர்ந்து அன்று மாலை பிளீனத்தின் விவாதங்கள் தொடங்கின. சமீப காலத்தில் நடைபெற்ற பேரணிகளிலேயே டிசம்பர் 27 அன்று நடைபெற்ற பேரணி பிரம்மாண்டமானது என்பதை முதலாளித்துவ ஊடகங்களும் ஒப்புக்கொள்ள வேண்டி யிருந்தது. திரிணாமுல் காங்கிரசார் மேற் கொண்ட அனைத்துத் தாக்குதல்களையும் வீரத்துடன் எதிர்த்தும், அவர்களின் அனைத்து முயற்சிகளையும் தவிடு பொடியாக்கியும் மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டார்கள். இளைஞர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி செல்லவில்லை என்று வர்க்க எதிரிகளும் முதலாளித்துவ ஊடகங்களும் கட்டவிழ்த்து விட்ட பொய்களை யெல்லாம் தகர்த்தெறியும் வண்ணம் மாநிலத் தின் அனைத்து முனைகளிலிருந்தும் இளைஞர்கள் ஆர்வத்துடன் இப்பேரணியில் பங்கேற்றார்கள்.கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, கட்சி ஸ்தாபனத்தின் முக்கியத்துவத்தை எப்போதும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.கட்சி ஸ்தாபனம்தான் கட்சியின் புரிந்துணர் வையும், அதன் அரசியல் நிலைபாட்டையும் பெரும் திரளான மக்களிடம் எடுத்துச் செல் வதில் பிரதானமான ஆயுதமாகும். நன்கு மெரு கூட்டப்பட்ட, திறமையான கட்சி ஸ்தாபன மின்றி, கட்சி மக்களுடன் ஆழமான தொடர் பினை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியாது, அவர்கள் நலன்களின் பாதுகாவலனாகவும் இருக்க முடியாது. மக்களுடன் ஜீவனுள்ள தொடர்புள்ள புரட்சிக் கட்சிஇந்தப் பிளீனம் மிகவும் வெற்றிகரமாக முடிவுற்றிருப்பதானது கட்சி ஸ்தாபனத்திற்கு புத்தெழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கட்சி அணியினர் மத்தியில் நம் குறிக்கோளை வேகமாக எய்திட வேகமாக முன்னேறக்கூடிய விதத்தில் புத்துணர்ச்சியை ஊட்டி இருக்கிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு அடுத்த மூன்றாண்டுகாலத்திற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றித் தந்திருக்கிறது. அதேபோன்று நாம் கடைப் பிடித்துவந்த அரசியல் - நடைமுறை உத்திகளை மறுஆய்வுக்கு உட்படுத்தி புதிய அரசியல் நடைமுறை உத்திகளை வகுத்துத் தந்தி ருக்கிறது. இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவதைப் பிரதானமான பணியாக தந் துள்ளது. ஸ்தாபனம் மீது நடைபெற்ற இந்தப் பிளீனம், கட்சியை வலுப்படுத்துவதற்கும், ஸ்தா பன வல்லமையை நம் குறிக்கோள்களை நிறை வேற்றக்கூடிய விதத்தில் சீரமைப்பதற்கும் கவனம் செலுத்தியது. நடப்புச் சவால்களை எதிர்கொள்வதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய உறுதியை இரட்டிப்பாக்கிக்கொள்வதன் மூலம்மட்டுமே மக்கள் போராட்டங்களை வலுவாகமுன்னெடுத்துச் செல்ல முடியும். இதன் நேரடியான பொருள், நம் கட்சியின் சுயமான வலுவைமிகப்பெரிய அளவில் விரிவாக்க வேண்டும் என்பதேயாகும். இடது ஜனநாயக முன் னணிக்கு ஆதரவாக நாட்டு மக்கள் மத்தியில், அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றியுள்ள அரசியல் - நடைமுறை உத்திகளுக்கு இணங்கவர்க்க சக்திகளின் சேர்மானங்களை மாற்ற வேண்டியது அவசியம். இடது ஜனநாயக முன்னணி என்பது, நாட்டு மக்களை ஒரு முதலாளித்துவக் கட்சிக்குப் பதிலாக பிறிதொருமுதலாளித்துவக் கட்சி என்று தெரிவுசெய்வதற்குப் பதிலாக, ஒரு வர்க்க மாற்றின் அடிப்படையில் அமைந்த மாற்றுக் கொள்கைகளின் கீழ் அணிதிரட்டக்கூடிய விதத்தில் வலுவானதாக இருந்திட வேண்டும். வர்க்க சக்திகளின் சேர்மானத்தை மாற்றி அமைப்பதன் மூலம் இடது ஜனநாயக முன்னணி எதிர் காலத்தில் மக்கள் ஜனநாயக முன்னணியை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடியாக அமைந்திட வேண்டும். சோசலிசத்தை நோக்கி மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூல மாகத்தான் இந்தியப் புரட்சியை முன்னெடுத் துச் செல்ல முடியும். மக்கள் ஜனநாயகப் புரட்சி, மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைமையின்கீழ்தான் நடந்திடும்.கொல்கத்தா பிளீனம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குணாம்சத்தை மார்க் சியம்-லெனினியத்தின் அடிப்படையிலான ஒருபுரட்சிக் கட்சியாக உள்ள அதே சமயத் தில், நாட்டு மக்களுடன் ஜீவனுள்ள தொடர் பினையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, அதாவது வெகுஜனங்களுடன் ஜீவ னுள்ள தொடர்புகளைக் கொண்ட ஒரு புரட் சிக் கட்சியாக, அமைந்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.
ஸ்தாபனத் திறமைகளை வலுப்படுத்துவோம்
நாம் கட்சியின் ஸ்தாபன ஆற்றலைப் பெரியஅளவிற்கு வலுப்படுத்தாவிட்டால், இத்தகைய புரட்சிகரக் குறிக்கோள்களை நிறைவேற்றிட முடியாது. ஆயினும், கடுமையான சவால்கள் நம்முன் உள்ளன. உலக அளவில் ஏற்பட் டுள்ள பொருளாதார நெருக்கடி நம் நாட்டி லும் சமூகத்திலும் ஆழமானமுறையில் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பது தொடர்கிறது. “ஒவ்வொரு நெருக்கடிச் சூழ்நிலையிலும், ஒருவாய்ப்பு இருக்கும்,’’ என்று நம் முன்னோர்கள் நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.
பிளீ னத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன் னேறத் தீர்மானித்திருக்கிறது.முதலாளித்துவத்தின் எவ்வகையான சீர்திருத்தமும், மிகவும் உக்கிரமாகியிருக்கும் சுரண்டலிலிருந்து மக்களை விடுவிக்காது என்பதை உலக முதலாளித்துவ நெருக்கடி காட்டி இருக்கிறது. இத்தகு சூழலில் மக்கள்மீதான அனைத்துவிதமான சுரண்டலிலிருந் தும் அவர்களைப் பாதுகாத்திட, அவர்களின் ஆதரவைத் திரட்டிட, தொழிலாளர் வர்க்கத் தின் அரசியல் கட்சி என்ற முறையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகச்சிறப்பான முறை யில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லமுடியும். சோசலிசத்திற்கான அரசியல் மாற்றுமூலமே மக்களை முதலாளித்துவ நெருக்கடி யிலிருந்து காப்பாற்றிட முடியும். மேலும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவுக் காக, ஒரு மாற்றுக் கொள்கைக் கட்டமைப்பைப் பெற்றிருக்கிறது. அதனடிப்படையில் சிறந்த தோர் இந்தியாவை உருவாக்குவதற்கான வழிவகைகளை மக்களுக்கு அது காட்டிட முடியும். இந்த மாற்று நாட்டின் இளைஞர்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலத்திற்கான தொலை நோக்குப் பார்வையை அளித்திடும். ஆட்சி யாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கைகள் பொருளாதார ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தும் என்பதையும் அதற்கு எதிராகநாம் முன்வைக்கும் மாற்றுக் கொள்கை நாட்டில் கிடைக்கும் அபரிமிதமான வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தரமான கல்வி, நல்ல சுகாதாரம், நிலையான வேலைவாய்ப்பு அளித்திட முடியும் என்பதையும் நம் இளைஞர் களுக்குக் காட்டிடும்.
நம்முடைய நாடு, பல மதங்கள், பல மொழி கள், பல கலாச்சாரங்கள், பல இனங்களைக் கொண்ட மக்களை உள்ளடக்கிய ஒரு நாடா கும். இவர்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல், தங்களுடைய வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரம்என் னும் கொள்கையைத் திணித்து அவர்கள் மத்தி யில் மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூல மாக தற்போது இருந்துவரும் ஒற்றுமையைச் சீர் குலைக்க முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறது. அவற்றிற்கு எதிராக, மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தக்கூடிய ஓர் உறுதியான அரசியல் சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இருந்து வருகிறது. அதேசமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அனைத்துவிதமான அடிப்படை வாதங்களுக்கு எதிராகவும் ஓர் உறுதியான போராட்டத்தையும் நடத்திவருகிறது. பெரும்பான்மை வகுப்புவாதமும், சிறுபான்மை அடிப்படைவாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டில் நிலவும் அனைத்துவிதமான சமூக ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான, பாகுபாடுகளுக்கும் எதிரான போராட்டங்களையும், சாதி அடிப்படையிலான தீண்டாமையை ஒழித்துக்கட்டு வதற்கான இயக்கங்களையும் உக்கிரமாக்கிஇருக்கிறது. நாட்டில் அரசியல் அறநெறி மிக வும் தரம்தாழ்ந்து போய்க்கொண்டிருக்கக் கூடிய சூழலில், பொதுவாழ்வில் நேர்மைக் கும், அரசியலில் தூய்மைக்கும் ஓர் எடுத்துக் காட்டான கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழ்கிறது.
கட்சி ஸ்தாபனத்தை வலுவாகக் கட்டுவதற் காக, பிளீனம் தற்போது முன்வைத்துள்ள கட்ட ளைகளை நிறைவேற்றுவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்தகால வரலாறு நமக்கு ஒரு வாய்ப்பினை வழங்கி இருக்கிறது.
விரிவான முன்னணி
துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு மேற்கொள்ளுதலே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம்’’ என்கிற லெனினிஸ்ட் மேற்கோளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது. இதனைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், நவீன தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட கடந்த இருபதாண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள துல்லியமான மாற்றங்களை ஆய்வு செய்திட மூன்று ஆய்வுக்குழுக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தது.
மேற்படி ஆய்வுக்குழுக்கள் அளித்த முடிவுகளின் அடிப்படையில், கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்கள் - பணக்கார விவசாயிகளின் கூட்டணிக்கு எதிராக விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், விவசாயம் அல்லாத வேலைகளில் ஈடுபட்டுள்ள கிராமப்புறத் தொழிலாளர்கள், கை வினைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் இதர பிரிவினர் அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒரு விரிவான முன்னணியைக் கட்டி வர்க்க மற் றும் வெகுஜனப் போராட்டங்களை வலுப்படுத்திட வேண்டும் என்று பிளீனம் தீர்மானித்திருக்கிறது. அதேபோன்று கேந்திரமான தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை அணிதிரட்டிட வேண்டும் என்றும், ஸ்தாபனரீதியான தொழிற்சாலைகளிலும் மற்றும் முறைசாராத் தொழில்பிரிவுகளிலும் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அணிதிரட்டிட வேண்டும் என்றும், தொழிற் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் மாதர் அமைப்புகள் போன்றவற்றை ஒருங் கிணைத்து பகுதி அடிப்படையிலான (area based) ஸ்தாபனங்களையும் ஏற்படுத்திட வேண்டும் என்றும்,
நகர்ப்புற ஏழைகளையும் அணிதிரட்டிட வேண்டும் என்றும், ஒரே மாதிரியான தொழில்புரிவோர்களுக்கான ஸ்தாபனங்களையும் உருவாக்கிட வேண்டும் என்றும், மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் வேலைகளை வலுப்படுத்திட வேண்டும் என்றும், குறிப்பாக சிந்தனையாளர் மன்றம் போன்றஅமைப்புகளை உருவாக்கி அவர்கள் மத்தி யில் தத்துவார்த்தப் பணிகளையும் மேற் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் மத்தியில் கலாச்சார நடவடிக்கைகளை மேம்படுத்து வதற்கான மேடைகளையும் அமைத்திட வேண் டும் என்றும், அவர்களின் வாழ்விலும் பணியிலும் சம்பந்தப்படக்கூடிய விதத்தில் அவர்களுடைய அறிவியல் உணர்வையும் வளர்த் திட வேண்டும் என்றும், அதேபோன்று குடி யிருப்போர் சங்கங்கள், ஓய்வூதியர் சங்கங்கள் மற்றும் தொழில்ரீதியான அமைப்புகளையும் உருவாக்கிட வேண்டும் என்றும் பிளீனம் கட்டளையிட்டிருக்கிறது.
ஒரு முறையான ஊழியர் கொள்கை
கம்யூனிஸ்ட் கட்சி மேலிருந்து கீழாகக் கட்டப்படுவது. ஏனவே, நாம் ஸ்தாபனத்தை வலுப்படுத்தும் பணியை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கான முயற்சிகளை, கட்சி மையத்திலிருந்தே தொடங்கிட வேண் டும் என்றும், அதிலிருந்து தொடங்கி கட்சியின் அனைத்து மட்டங்களுக்கும் அதனை விரிவுபடுத்தி கட்சியின் தரத்தை மேம் படுத்திட வேண்டும் என்றும் பிளீனம் அடிக் கோடிட்டுக் கூறியிருக்கிறது. இதனை அடைவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், ஒரு முறை யான ஊழியர் கொள்கையை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிளீனம் உயர்த்திப்பிடித்திருக்கிறது.
இளம் தோழர் களை அடையாளம் கண்டு மேம்படுத்துதல், சம்பந்தப்பட்ட கமிட்டிகளின் மதிப்பீட்டின்படி அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து உறுதிப்படுத்துதல், அவர்களை தத்து வார்த்தரீதியாக உறுதிமிக்க தோழர்களாகவும், புரட்சிகரமான மாற்றத்திற்கான போராட்டங்களில் தியாகம் செய்திடக் கூடிய விதத்தில் -கட்சியின் முழுநேர ஊழியர்களாகப் பேணிப்பாதுகாத்தல், கட்சியின் முழுநேர ஊழியர்களுக்கு ஒரு முறையான ஊதியக் கட்ட மைப்பை உத்தரவாதப்படுத்துதல், அவற்றைமுறையாக வழங்குவதையும் உத்தரவாதப் படுத்துதல் ஆகியவற்றையும் பிளீனம் வலியுறுத்தியுள்ளது.செயலூக்கமுடைய முன்னணி ஊழியர் களை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, நிரந்தரமான கட்சிப் பள்ளிகளை அமைப்பதற்கான அவசியத்தையும் பிளீனம்அழுத்தமாகக் கூறியிருக்கிறது.
பாடத் திட்டங்களைத் தயார் செய்து அளித்திட வேண்டும் என்றும், முன்னணி ஊழியர்கள் சுய கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள்படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டிய லையும் அளித்திட வேண்டும் என்றும், அவற் றின் மூலம் அவர்களைப் பெரிய அளவில் மேம்படுத்திட வேண்டும் என்றும், கட்சி ஏடுகள் மற் றும் வெளியீடுகள் தரமானவைகளாக அமைந் திட வேண்டும் என்றும், அவற்றின் உருவம் மற் றும் உள்ளடக்கத்தை மேம்படுத்திட சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிளீனம் அழுத்தம் தந்திருக்கிறது.
சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்
பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் ஒரு கால் என்றால், சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் மற்றொருகாலாகும். `இவ்விருகால்களையும் மாற்றிமாற்றி வைத்து இந்தியாவில் வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி யின் புரிதலாகும்.
எனவே, பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தலித்துகள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு களுக்கு எதிராகவும், போராட்டங்களை உக்கிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அவற்றை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய விதத்தில் கட்சி ஸ்தாபனம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிளீனம் அடிக்கோடிட்டுக் கூறியிருக்கிறது. இவ்வாறு `இரு கால்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் நடக்க வேண்டும், பின்னர் வேகமாக முன்னேற வேண்டும்.
மதவெறியை முறியடித்திடுவோம்
மதவெறி சக்திகளின் தற்போதைய தத்துவார்த்தரீதியான தாக்குதலை எதிர்த்து முறியடிக்கக்கூடிய விதத்தில் ஸ்தாபனத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிளீனம் அடிக்கோடிட்டுக் கூறியிருக்கிறது. இதற்காக நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திடவேண்டும். இதற்காக அறிஞர்கள், அறிவியலாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் இதர பிரிவினர் - என அனைத்துப் பகுதியினரையும் திரட்டிட வேண்டும். ஆசிரியர்களைப் பயன் படுத்தி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பிருந்தும், குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்த்தபின்பும் இப்பணிகளை நாம் ஆற்றிடவேண்டும். மக்கள் மத்தியில் அறிவியல் உணர்வை ஊட்டக்கூடிய விதத்திலும், சமூக மாண்புகளைப் பேணக்கூடிய விதத்திலும் சமூ கக் கலாச்சார நடவடிக்கைகளை நடத்துவதற்கு அமைப்புகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
சுரண்டலுக்கு ஆளாகியுள்ள தலித் துகள் மற்றும் பழங்குடியினர் மத்தியில் மத வெறிக் கருத்துக்கள் ஊடுருவியிருப்பதை முறியடித்திட சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும். முற்போக்கான மற்றும் மதச்சார்பற்ற மாண்புகளை முன் னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் விரி வான அளவில் பண்பாட்டு மேடைகளை அமைத்திட வேண்டும். தொழிற்சங்கங்களும் இதர வெகுஜன ஸ்தாபனங்களும்கூட தங்கள்பகுதிகளில் கலாச்சார மற்றும் சமூக நடவடிக் கைகளில் ஈடுபட வேண்டும். நலவாழ்வு மையங்கள், கல்விப் பயிற்சி மையங்கள், படிப்ப கங்கள், நிவாரணப் பணிகள் போன்ற சமூகசேவை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிட வேண்டும். இவற்றுடன் அறிவியல் இயக்க வேலைகளையும் மற்றும் எழுத்தறிவு இயக்க வேலைகளையும் வலுப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.
இன்றியமையாத உடனடிக் கடமைகள்
கட்சி ஸ்தாபனத்தை வலுவாகக் கட்டுவதற்கு , மக்கள்திரளுடன் நம் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக் கைகளை கட்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மிக வலுவான முறையில் மக்கள் போராட்டங்களை நடத்த முடியும்.இதற்கு, கட்சி முதலாவதாகவும் முக்கியமான தாகவும் மேற்கொள்ள வேண்டிய பணிமக்களுடன் உயிர்த்துடிப்புடன் ஆழமானமுறையில் தொடர்புகளை உத்தரவாதப் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இதன் பொருள், உள்ளூர் கட்சிக் கிளைகளை வலுப்படுத்தி, ஸ்தலப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதோடு மட்டு மல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள சுரண்டப்படும் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கிஜனநாயகப் புரட்சிக்கு அச்சாணியாக விளங் கும் விவசாயப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும் கவனம் செலுத்த வேண் டும்.
அதன்மூலம் தொழிலாளர்-விவசாயிகூட்டணியை வளர்த்து, வலுப்படுத்துவதற் கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண் டும்.கட்சியின் உடனடிக் கவனம், பொரு ளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளின் மீது வர்க்க வெகுஜனப் போராட்டங்களை உரு வாக்குவதாக இருந்திட வேண்டும். அதன்மூலம் கட்சியின் செல்வாக்கை விரிவாக்கிடவேண்டும், மக்களை இடது மற்றும் ஜனநா யக சக்திகளின் பின்னே அணிதிரட்டிட வேண்டும். மக்களுடன் ஜீவனுள்ளமுறையில் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கட்சியை ஒரு புரட்சிக்கட்சியாகக் கட்டக்கூடிய விதத்தில், தரமான கட்சி உறுப்பினர்களை உருவாக்கி, ஸ்தாபனத்திற்குப் புத்துயிரூட்டிட வேண்டும். இளைஞர்கள் கட்சியை நோக்கி ஈர்க்கப்படக்கூடிய விதத்தில் சிறப்பு முயற்சி கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வகுப்பு வாதம், நவீன தாராளமயம் மற்றும் பிற்போக் குச் சித்தாந்தங்களுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்திட வேண்டும்.பிளீனத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஆவ ணங்களின் கண்டுள்ள முடிவுகளை - அதாவது தீர்மானம் மற்றும் அறிக்கையில் கண்டுள்ள முடிவுகளை - ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அமல்படுத்திட வேண்டும்என்றும் இதனை கட்சியின் அரசியல் தலை மைக்குழு மற்றும் மத்தியக்குழுவிலிருந்தே தொடங்கிட வேண்டும் என்றும் பிளீனம் தீர்மானித்திருக்கிறது. விரைவில் சில மாநி லங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், அனைத்து மாநிலக் குழுக்களும், அந்தந்த மாநிலங்களில் உள்ள துல்லியமான நிலைமைகளுக்கேற்ப, பிளீனம் கட்டளையிட்டுள்ள திட்டங்களை ஓராண்டு காலத்திற்குள் நிறைவேற்றிடவும் அவற்றை மறுஆய்வு செய்திடவும் கால நிர்ணயம் செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பிளீனம் நிறைவேற்றியுள்ள முடிவுகளை அமல்படுத்திட உடனடியாக அணிதிரளுமாறு ஒட்டுமொத்த கட்சியையும், கட்சி அணிகளையும், அதன் ஆதரவாளர்களையும், நலம் விரும்பிகளையும் பிளீனம் அறைகூவி அழைத்திருக்கிறது.
நம் நாட்டில் ஒருபுரட்சிகரமான சமூக மாற்றத்தை உத்தரவாதப்படுத்திடும் பொறுப்பை நிறை வேற்றுவதை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னேற இது ஒன்றே வழி.
ஓர் அகில இந்திய வெகுஜனத் தளத்துடன் ஒரு வலுவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி முன்னேறுவோம்!
மக்களுடன் ஜீவனுள்ள தொடர்புகொண்ட ஒரு புரட்சிக் கட்சியை உருவாக்குவோம்!
(தமிழில்: . வீரமணி)



No comments: