Thursday, November 12, 2015

பீகார் தேர்தல் முடிவு பாஜகவிற்கு பெரும் பின்னடைவு



பீகார் தேர்தல் முடிவு பாஜகவிற்கு பெரும் பின்னடைவு
பீகார் தேர்தல் முடிவு பாஜகவிற்கு கடும் தோல்வியினை ஏற்படுத்தி இருக் கிறது. ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, ஆட்சிக்குவந்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள், நாட்டின் அரசியலில் மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்த இருக்கின் றன. பாஜக, மக்களவைத் தேர்தலின்போது மேற்கொண்ட அதே உத்தியை - அதாவது வளர்ச்சி குறித்துப் பேசிக்கொண்டே, மதவெறித் தீயை விசிறிவிடுவது - இப் போதும் பின்பற்றியது. மக்களவைத் தேர்தலின்போது மதவெறித் தீயை மக்களிடம் கொண்டு சென்ற நூற்றுக்கணக் கான ஆர்எஸ்எஸ் ஊழியர்கள், பீகார்தேர்தலின்போதும் இறக்கிவிடப்பட்டார் கள். உச்சகட்டமாக, நரேந்திர மோடியும், அமித்ஷாவும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறியை உமிழ்ந்தார்கள். மோடி பேசியஇடங்களில் எல்லாம், ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் “தலித்துகள், மகா தலித்துகள், பிற்படுத்தப் பட்டோர், பொருளாதார ரீதியாக பிற் படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட 5 சதவீத இடங்களை ஒரு குறிப் பிட்ட இனத்தினருக்குக் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள்,’’ என்று மக்களை எச்சரித்தவண்ணம் இருந்தார்கள்.
இதே கருத்தைத் தாங்கி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களும் செய்தார்கள். பாஜகவின் தலைவர் அமித் ஷா பேசுகையில், பாஜ கவை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகள் என்று பொருள்படும்படி, பாஜகவின் தோல்வி, பாகிஸ்தானில் வெடிகள் வெடித்துக் கொண்டாடப்படும் என்று பிரகடனம் செய்தார். தேர்தல் பிரச் சாரத்தின்போது, “பசுக்களும்’ ’ பயன்படுத்தப்பட்டு, “பசுக்களுக்கு அச்சுறுத்தல்’’ என்று விளம்பரங்கள் செய்யப் பட்டன.பாஜக, மக்களின் மனோநிலை குறித்து, முழுமையாகத் தப்புக்கணக்குப் போட்டுவிட்டது. மத்தியில் ஆட்சி செய்தபாஜக-வின் 18 மாத கால ஆட்சி, “வளர்ச்சி’’ குறித்துப் பேசினாலும், அது முற்றிலும் மாயை என்பதை மக்களுக்குப் புரிய வைத்துவிட்டது. பருப்புகளின் விலைகிலோ ரூ.200க்கும் அதிகமாக உயர்ந்து விட்டன. பாஜக, உயர்சாதியினர், பொரு ளாதார ரீதியில் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகளை ஒன்றிணைப்பதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என கனவுகண்டது. ஆனால் பாஜகவின் கனவை,ஆர்ஜேடி - ஐக்கிய ஜனதா தளத்தின்ஒற்றுமை சுக்கு நூறாக உடைத் தெறிந்துவிட்டது. தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தில் இருந்த சமயத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீட்டுக் கொள்கை மறுபரி சீலனை செய்யப்படும் என்று அறைகூவல் விடுத்தது,
மக்கள் மத்தியில் பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் உயர்சாதியி னரைத் தூக்கிப்பிடிக்கும் இந்துத்துவா கொள்கைதான் என்பதை உறுதிப்படுத்தி விட்டது. இன்றைய சூழ்நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் தேசிய முக்கியத்துவம் பெறுகின்றன. மோடி அரசாங்கம் பத விக்கு வந்ததிலிருந்தே, ஆர்எஸ்எஸ் பரிவாரம் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன்னெ டுத்துச் செல்ல வெறித்தனமாகப் பிரச்சாரம்மேற்கொள்ளப்பட்டு வந்தன. சிறுபான் மையினர் மீதான தாக்குதல்கள், பசுவதைபோன்ற பிரச்சனைகளை வைத்து அவர் களைக் குறிவைத்துத் தாக்குதல், இதன்விளைவாக தாத்ரியில் முகமது இக்லாக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆகிய சம்பவங்கள் தெள்ளத்தெளிவாக்குகின்றன. மதச்சார்பற்ற அறிவு ஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களையும் குறிவைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். இதன் விளைவாகத்தான் பன்சாரே மற்றும் கல்புர்கி கொல்லப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன. மத்திய அமைச்சர வையில் உள்ள அமைச்சர்களிலிருந்து, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் அடிமட்ட ஊதுகுழல்கள் வரை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக அடித்தளத்தை அகற்ற வேண்டும் என்ப திலேயே குறியாக இருந்தார்கள்.
பீகார்தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இத்தகைய மோசமான பிரச்சாரம் அவர்களால் உமிழப் பட்டன. மோடி அரசாங்கத்தின் பதினெட்டு மாத கால ஆட்சியில் சாமானிய மக்களின் வாழ்க்கையில் கடும் தாக்குதல்கள், சமூக நலத்திட்டங்கள் கடுமையாக வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய வலது சாரி பொருளாதார மற்றும் மதவெறி நிகழ்ச்சி நிரலைத்தான், பீகார் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஆறு இடதுசாரிக் கட்சிகள் சட்ட மன்றத் தேர்தலில் ஒன்றுபட்டு நின்று போட்டியிட்டன. பிரதான கூட்டணி களுக்கு இடையே கடும் போட்டி நிலவியபோதிலும், இடதுசாரிகள் சுமார் 4 சதவீதவாக்குகளையும், சிபிஐ(எம்-எல்-லிப ரேசன்) கட்சிமூலம் மூன்று இடங்களையும் பெற முடிந்திருக்கிறது.
இடதுசாரிக் கட்சிகளின் தேர்தல் புரிந்துணர்வு மிகவும் தாமதமாகத்தான் உருப்பெற்றது. தேர்தல்கள்அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 7 அன்றுதான் அனைத்து இடதுசாரிக் கட்சி களின் கூட்டு சிறப்பு மாநாடே நடந்தது. தொகுதி ஒதுக்கீட்டிலும்கூட முழுமை யான அளவில் அனைத்துக்கட்சிகளும் ஒத்துப்போகவில்லை. மாநில அளவில் தீவிரமான அளவில் கூட்டுப் பிரச்சாரமும் நடைபெறவில்லை. இவ்வளவு பலவீனங் கள் இருந்தபோதிலும், இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமை மாநிலத்தில் ஒரு வலு வான இடது ஜனநாயக கூட்டணியை கட்டிஎழுப்பிட முடியும் என்பதைக் காட்டி இருக் கிறது. இதற்கு வரவிருக்கும் காலங்களில் இடதுசாரிக்கட்சிகள் ஒன்றுபட்டு நின்று செயல்பட வேண்டும். பீகார் தேர்தல் வெற்றி, மோடி அரசாங்கத்தின் வலதுசாரிப் பொருளா தாரக் கொள்கைகள், ஆர்எஸ்எஸ்-பாஜககூட்டணியின் மதவெறி நிகழ்ச்சிநிரல், வளர்ந்துகொண்டிருக்கும் எதேச்சதி காரம் ஆகியவற்றிற்கு எதிராக நடைபெற் றுக் கொண்டிருக்கும் அகில இந்தியப் போராட்டங்களுக்கு உதவிடும். வலதுசாரி தாக்குதலின் இம்மூன்று அம்சங்களுக்கு எதிராக வலுவான இயக்கங்கள் மற் றும் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட, மேடை அமைக்கப் பட்டுவிட்டது.
நவம்பர் 10, 2015 தமிழில்: ச. வீரமணி

No comments: