Monday, July 15, 2013

கலாச்சார, பண்பாட்டுக்குச் சவால்



கயாவில், புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் புனித இடத்தைக் குறிவைத்து, நடைபெற்ற சமீபத்திய தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள், நாட்டில் மதவெறிஉணர்வை மக்கள் மத்தியில் கிளப்பிவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் நடைபெற்றிருக்கிறது என் கிற உண்மையை மிகவும் பயங்கரமாக நினை வூட்டியிருக்கிறது. இத்தகைய காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் இதர புல னாய்வு அமைப்புகள் தங்கள் புலனாய்வுகளை மேற்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், இதனைச் சுற்றிப் பல்வேறு ஊகங்களும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

மேற்படி புத்தகயா கோவிலின் கட்டுப்பாட்டை யார் வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக புத்த மதத்தினருக்கும் இந்துக்களுக்கும் இடையே நீண்டகாலமாகவே தகராறு புகைந்து கொண்டிருந்தது. சமீபத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத், புத்தர்களின் ஆதிக்கத் தில் உள்ள மியான்மர் அரசு, முஸ்லிம்கள் மீது அட்டூழியங்கள் புரிந்திட இந்தியா உதவி வருவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். மியான் மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்க மொழி பேசும் முஸ்லிம் சிறுபான்மை யினராவார்கள். மியான்மர் அரசு அவர்களை வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்றுதான் பாவிக் கிறது. வங்கதேசமோ அவர்களை மியான்மரி கள் என்று கூறி நிராகரிக்கிறது. மியான்மரில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற 135 இனக் குழுக்களில் ரோஹிங்கியாக்கள் இடம்பெற வில்லை. மியான்மரில் தொடர்ந்து நடை பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் காரணமாக 2012இல் ஒரு லட்சத்திற்கும் மேற் பட்ட ரோஹிங்கியாக்கள் தங்கள் இருப்பிடங் களிலிருந்து புலம்பெயர்ந்து வேறிடங் களுக்குச் சென்றுள்ளார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் 40 பேர் கொல்லப்பட்டுள் ளார்கள். ஆயிரத்திற்கும் மேலானோர் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக் கிறார்கள். தேசியப் புலனாய்வு அமைப்பில் விசார ணைகளிலிருந்து, 26/11 மும்பை பயங்கர வாதி களின் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அமெரிக்க - பாகிஸ்தானிய டேவிட் ஹெட்லி, கயாவில் உள்ள மகாபோதி கோவில், பயங்கரவாதி களின் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட விருக் கும் இடங்களில் ஒன்று என்று கூறியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதேபோன்று, இந்தியா விலிருந்து செயல்படும் முஜாஹிதீன் இயக் கத்தைச் சேர்ந்தவர்களும் போதி கயா தாங்கள் தாக்குதல்கள் நடத்தப்படவிருக்கும் இடங் களில் ஒன்று என்று கூறியிருக்கிறார்கள். முன்பு ஆஜ்மீர் ஷரீப், மாலேகான் மற்றும் ஹைதராபாத் மெக்கா மசூதி ஆகிய இடங்க ளில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்கு தல்கள் தொடர்பாக நடைபெற்ற புலனாய்வுகள் மூலம் அவற்றில் சில இந்துத்துவாக் குழுக் கள் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆயினும் இது தொடர்பாக அதற்குமுன்பு பல முஸ்லிம் குழுக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, மிகப் பெரிய அளவிற்கு முஸ்லிம் இளைஞர் கள் கைது செய்யப்பட்டனர். (இத்தாக்குதல் களில் முஸ்லிம்கள் பங்கேற்கவில்லை என்று புலனாய்வுகள் முடிவுசெய்த பின்னரும்கூட, இன்னமும் பல முஸ்லிம் இளைஞர்கள் சிறை களிலேயே தொடர்ந்து அல்லலுற்று வருகின் றனர் என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான தாகும்.) 

அதேபோன்று இப்போது நடைபெற் றுள்ள தாக்குதலிலும் இந்துத்துவா குழுக்கள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்று சில காங் கிரஸ் தலைவர்கள் கூறியிருக்கின்றனர்.இவை அனைத்தும் தெளிவாகக் காட்டு வது என்னவெனில், இத்தாக்குதல் தொடர் பாக மிகவும் விரைவாகவும், முழுமையாகவும் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு, இதில் ஈடு பட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதேயாகும். பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவாக இருந்தாலும், அதன் மூலவேர் எங்கிருந்து வந்தபோதிலும், அவை அனைத்தும் தேச விரோதமானவை என்பதும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதும் தெள்ளத் தெளிவானவைகளாகும். முழுமையான விசாரணை முடிந்தபின்னர், குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தண்டிக்கப்படுவதன் மூலம் மதவெறியை விசிறிவிடுவோருக்கு இத் தகைய தண்டனைகள் அச்சத்தை விளை வித்து அவ்வாறு நடந்து கொள்ளாதிருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற் படுத்தும். இதுதொடர்பாக மேலும் தெளிவாக் கப் படவேண்டிய விஷயம் என்னவெனில், நம் முடைய பாதுகாப்பு எந்திரமும் உடனடியாக வும் அவசரமாகவும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
கயாவில் உள்ள புத்தர் கோவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படக் கூடிய இடங்களில் ஒன்றாக இருக்கிறது என்று பீகார் மாநில அரசாங்கத்திற்கு ஏற் கனவே புலனாய்வு அமைப்புகள் மூலம் எச் சரிக்கை செய்யப் பட்டிருந்ததாக ஊடகங் களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டி இருக் கின்றன. ஆயினும், இத்தாக்குதல் தடுக்கப்பட முடியவில்லை. இத்தகைய பலவீனங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சரிசெய்யப்பட்டாக வேண்டும். நாட் டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்பிற்கு இது மிகவும் அவசிய மாகும். அனைத்து விதமான பயங்கரவாதச் செயல்களையும் முறியடித்திடுவதில் சமரசம் ஏதும் செய்து கொள்ளக்கூடாது. இந்தப் பின்னணியில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகச் செயல் படும் பாஜக, 2014 பொதுத் தேர்தல்கள் நெருங் குவதைத் தொடர்ந்து, ‘‘நாம் நம் அடிப்படைக் கொள்கைகளுக்குத் திரும்பவேண்டும்’’ என்று தற்போது அறிவித்துள்ள முடிவினை ஆய்வு செய்திட வேண்டும் என்று கூறியுள் ளது. இதன் பொருள் நாட்டில் மதவெறியைக் கூர்மைப்படுத்துவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்பதே யாகும். அனைத்துவிதமான பயங்கரவாதமும் தழைத்தோங்கிட இது வழிவகுக்கும். வெறி பிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிசஇந்து ராஷ்ட்ரம் நிறுவப்பட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொள்கை மற்றும் நோக்கம் சுதந்திரப்போராட்டக் காலத்தின் போது முறியடிக்கப்பட்டது. சுதந்திர இந்தியா ஒரு நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடி யரசாக மலர்ந்தது. இதனால் கடும் கோபம் கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் தன் பழிவாங்கலை மேற்கொண்டது.ஆர்எஸ்எஸ் இயக்கம் தன் குறிக்கோளை எய்திட மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிடுவதிலேயே குறியாக இருந்ததால் சுதந்திரத்திற்கானப் போராட்டத்தில் அது எவ்விதப் பங்கினையும் ஆற்றிடவில்லை. விடுதலைப் போராட்டத்தின் ஜாம்பவான் களில் ஒருசிலரையாவது தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆர்எஸ்எஸ் சர்தார் பட்டேல் மீது வலைவீசிப் பார்த்தது. ஆனால், மகாத்மா காந்தி படு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இதே சர்தார் பட்டேல்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத் தைத் தடை செய்தார் என்பதை நினைவு கூர்வது அவசியமாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத் தைத் தடை செய்து, சர்தார் பட்டேலால் தயார் செய்யப்பட்டு 1948 பிப்ரவரி 4 அன்று வெளி யிடப்பட்ட அரசின் பத்திரிகைச் செய்தி யானது ‘‘ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஆட்சேபணைக்குரிய மற்றும் கேடுவிளை விக்கக்கூடிய நடவடிக்கைகள் எவ்விதத் தங்குதடையுமின்றி தொடர்ந்து கொண்டிருக் கின்றன. அதனால் கட்டவிழ்த்து விடப்பட் டுள்ள வன்முறை மற்றும் வெறித்தனமான நட வடிக்கைகளுக்கு பலர் பலியாகிவிட்டனர்.

கடைசியாக அதன் வன்முறைக்குப் பலியா னது, மிகவும் மதிக்கத்தக்க காந்திஜியாவார்,’’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கம், தான் இனி வருங் காலங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என்றும் கலாச்சார அமைப்பாகமட்டுமே செயல்படுவோம் என்றும் உறுதியளித்து அரசுடன் வஞ்சகமாக சமரசம் செய்துகொண்டதன் மூலம், தங்கள் இயக்கத்தின் மேலிருந்த தடையை விலக்கிக் கொள்வதில் வெற்றி பெற்றது. எனவே, அதற்கு தன் குறிக்கோளை எய்திட, தற்போதுள்ள நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, தன்னுடைய கொள்கைக்கு இணங்க நடை பெறக்கூடிய ‘‘இந்து ராஷ்ட்ரமாக’’ மாற்றி யமைத்திட, ஓர் அரசியல் அங்கம் தேவைப் பட்டது. ஆரம்பத்தில் 1952இல் அது ஜனசங்க மாக இருந்தது. பின்னர் அது கலைக்கப்பட்டு, ஜனதா கட்சியுடன் ஒன்றிணைந்தது, பின்னர் 1980இல் அதிலிருந்து வெளியேறி பாஜக என்னும் அமைப்பாக மாறியது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குறிக்கோளை எய்திட, அதாவது மதவெறித் தீயை விசிறிவிடு வது போன்று எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட, வரலாற்றைப் பெரிய அளவில் மாற்றி எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது. ஊடகங் களில் வந்த அறிக்கைகளின்படி (இந்துஸ் தான் டைம்ஸ், 2013 ஜூன் 24) பாஜகவின் முன்னாள் தலைவர் ஒருவர், வரலாற்றுப் பாடப் புத்தகங்களின் பாடத்திட்டங்களை மாற்ற இருப்பது குறித்துப் பேசி இருக்கிறார். ‘‘நாங் கள் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது, எவ்வ ளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரை வாக மாற்றி அமைத்திடுவோம்’’ என்று கூறி யிருக்கிறார். அதே நாளன்று அத்வானியும், ‘‘(ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குத் தனி அந்தஸ்து அளிக்கப்படுவது தொடர்பாக இருக்கின்ற) அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை’’ என்று பேசியிருக் கிறார். இப்போதெல்லாம், பாஜக தலைவர்கள் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்கள். இவ்வாறாக, 1998இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கக் காலத்தின்போது பாஜக தன்னுடைய கூட் டணிக் கட்சிகளைத் தாஜா செய்வதற்காகப் பின்னுக்குத் தள்ளியிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படைகளைத் தற்போது மீளவும் முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ்/பாஜகவின் இத்தகைய நிகழ்ச்சிநிரலானது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும், முரணானதாகும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் மக்களின் சமூகக் கலாச்சாரப் பண்புக்கு ஊறுவிளைவிக்கக்கூடியதாகும். எனவே இதனை அனுமதிக்க முடியாது. இந்தியாவின் எதிர்கால நலனை மனதில்கொண்டு, நவீன இந்தியக் குடியரசை வேரறுக்க ஆர்எஸ்எஸ்/பாஜக-வினரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முழுமையாக முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி



No comments: