Sunday, June 30, 2013

உத்தரகாண்ட் துயரம்: பாதுகாப்பான விதிமுறைகளை உருவாக்கிடுக




உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள இயற் கைப் பேரிடர் காரணமாக மனித உயிர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கின்றன. உத்தரகாண்ட் மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கடும் வெள்ளத்தால் இறந்தோர் எண்ணிக்கை சுமார் ஐயாயிரத்தைத் தாண்டும் என்று கூறியுள்ளார். இதுவே குறைந்த மதிப் பீடுதான் என்று பலர் கருதுகிறார்கள். பத்ரிநாத், கேதர்நாத் போன்ற சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்பவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேல் இருக் கும்என்றுஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டி ருக்கிறது. இதில், கேதர்நாத் மிகவும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பேரழிவுகள் நடைபெறும் சமயங்களில் இவை குறித்துத் துல்லியமாக முன்னறிவித்திடக்கூடிய விதத்தில் எவ்வித ஏற்பாடும் இல்லை என்ற போதிலும்கூட, வானிலை மையத்தின் சார்பில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆயினும் இதனைத் தொடர்ந்து மக்களைக் காப்பாற்றக் கூடிய விதத்தில் உருப்படியான தயாரிப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
மத்திய ஐரோப்பாவில் ஏற்பட்ட கடும் வெப்பத்தின் காரணமாக தென் மேற்கு பருவக்காற்றில் ஏற்பட்ட கடும் மாற்றம் தான் இவ்வாறு பேய்மழை பெய்ததற்குக் காரணமாகும். வானிலை மைய அதிகாரிகள் மத்தியத் தரைக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் மழை வட இந்திய மலை மாநிலங்களில் ஜூன் மத்திய வாக்கில் கடும் மழையைக் கொண்டுவரும் என்று கூறியிருந்தார்கள். அவர்கள் கூறியதையொட்டியே கடும் மழை பெய்து, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு எண்ணற்ற ஆறுகளில் வெள்ளப் பெருக்கு இப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுகையில் இவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு அறிவியலை நாம் இன்னமும் கற்றுக்கொள்ளாத நிலையில், இவ்வாறு பேரிடர் நிகழ்வுகள் ஏற்படும்போது மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. மிதவெப்பம் மற்றும் ஈரமான காற்று மலைகளில் மோதும் போது இடி மேகங்களுடன் பேய்மழை உருவாகிறது. சுற்றுச்சூழல் பேய்மழையால் சூறையாடப் படும்போது, இத்தகைய மிகவும் கடுமையான இடி-மின்னல்-மழை ஏற்படுகிறது. மேலும், காடுகளை கண்மூடித்தனமாக அழித்தொழித் திருப்பதால், பசுமையின்மையும் இத்தகைய மழை நீரை கடும் வெள்ளமாக மாற்றி விடுகின்றன. 1998க்குப்பின் மிகப்பெரிய அளவில் இத் தகைய இடி - மின்னல் - பேய்மழை என்பது உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆறு தடவைகள் ஏற்பட்டிருக்கின்றன. காடுகளை அழித்தது, அறிவியல்பூர்வமற்ற முறையில் ஆறுகளில் அணைகளைக் கட்டியது, மணல் மற்றும் கற்களை அளவுக்கு மீறி தோண்டி எடுத்திருப் பது, இத்தகைய பேரழிவுக்குக் காரணங்களா கும்.
நாட்டின் சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் காடுகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து நாம் விவாதங்கள் நடத்திக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், மற்ற மாநிலங்களைப் போலல்லா மல், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓடுகின்ற ஆறுகளைப் பாதுகாத்திட மேற்கொள்ள வே ண்டிய குறைந்தபட்ச சுற்றுச்சுழல் பாதுகாப்பு நட வடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை. இம் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான புனல் மின் திட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டு, ஏற் கனவே ஆற்று நீரோட்டத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து அறிவியல்பூர் வமான ஆய்வு எதுவும் செய்யப்படாமலேயே பல டஜன் அணைகள் கட்டப்பட்டுவிட்டன. ஐ.மு.கூட்டணி-1 ஆட்சிக்காலத்தின்போது அமைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண் மை அதிகாரக்குழுமம் (சூனுஆஹ-சூயவiடியேட னுளையளவநச ஆயயேபநஅநவே ஹரவாடிசவைல), இது தொடர்பாக இதுவரை எவ்வித ஆட்சேபணையும் எழுப் பிடவில்லை, ஆலோசனைகளும் வழங்கி, அவை அமல்படுத்தப்படுகிறதா என்று பரி சீலிக்கவில்லை. இத்துயரார்ந்த சம்பவத்தின் பின்னே மற்றுமொரு முக்கிய அம்சம் அடங்கி இருக் கிறது. இந்துக்களின் புண்ணியத் தலங்கள் எனப்படும் இவ்விரு இடங்களுக்கும் வரக் கூடிய யாத்ரிகர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித் திருக்கிறது. 2003க்கும் 2012க்கும் இடைப் பட்ட ஆண்டுகளில், கேதர்நாத்திற்கு வந் தோர் எண்ணிக்கை 1.7 லட்சத்திலிருந்து 5.75 லட்சமாக வளர்ந்திருக்கிறது. அதே போன்று பத்ரிநாத்திற்கு வந்தோர் எண்ணிக்கை 1.34 லட்சத்திலிருந்து 6 லட்சங்களாக அதிகரித் திருக்கிறது. இதே கால கட்டத்தில் பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கையும் ஐந்து மடங்குகள் அதிகரித்துள்ளன. இவற்றில் 70 விழுக்காடு வாகனங்கள். சுற்றுலாப் பயணி களை ஏற்றி வந்த வாகனங் களாகும்.
மதம்சார் ந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணம் மேற் கொள்வது தொடர்பான விதிகள் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவாலும், திட்டக் கமிஷனாலும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டி ருக்கிறது. ஆயினும், இதுவரை அவ்வாறு ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகள் எது வும் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள் ளப்படவில்லை. நாட்டில் உள்ள மதம்சார்ந்த அனைத்து சுற்றுலா மையங்களையும் முறைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.உண்மையில், பேரழிவு ஏற்பட்ட இடங் களுக்குச் செல்வதன் மூலம் அரசியல் ஆதா யம் தேட சில அரசியல்வாதிகள் இறங்கியிருப் பது துரதிர்ஷ்டவசமானது. நரேந்திர மோடி யின் ஊடக மேலாண்மை எந்திரம் இப்பணி யில் முழுமையாக இறக்கிவிடப்பட்டிருக்கி றது. ஹாலிவுட் ராம்போஅதிசய மனித னைப்போல மோடி, 15 ஆயிரம் பேரை காப்பாற் றியதாக அவரது ஊடகங்கள் அவரை சித்தரித் துக்கொண்டிருக்கின்றன. முக்கிய பிரமுகர் கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைத் தருகிறோம் என்றும், ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறிக் கொண்டு இப்பகுதிகளுக்குச் செல்வது என்பது பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிக்கு குந்தகம்தான் விளைவிக்கும். இந்திய விமா னப் படை, இப்போது ஏற்பட்டுள்ள பேரிடரிலி ருந்து மக்களைக் காப்பாற்ற மிகவும் பாராட்டத் தக்கவிதத்தில் செயல்பட்டு, அவர்களைக் காப்பாற்றி வருகிறது. இந்திய விமானப் படை 45 விமானங்களை இப்பணியில் ஈடுபடுத்தி, சுமார் ஆயிரம் மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்து, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை இதுவரை காப்பாற்றி இருக்கிறது.
திங்களன்று நாட்டிற்கு அளித்த செய்தியின் போது தலைமை விமானப்படை அதிகாரி ‘‘வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு பரிதவிக் கின்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிராம மக் கள் அனை வரையும் காப்பாற்றிக் கரை சேர்க் கும் வரையி லும் எங்கள் ஹெலிகாப்டர்களின் இறக்கைகள் சுற்றிக்கொண்டுதான் இருக் கும்’’ என்றும், ‘‘எனவே மக்கள் யாரும் எவ் வித பீதியும் அடைய வேண்டாம்’’ என்றும் கூறி இருக்கிறார். அதேபோன்று, ராணுவமும், இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை யினரும் விமானப் படையினருக்கு இணை யாக மிகவும் அற்புதமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளின்படி ஹெலி பேடு கள் (hநடiயீயனள) மட்டும் நிறுவப்பட்டிருக்குமா னால், இப்பணிகள் மிகவும் எளிதாக இருந் திருக்கும், மக்களை மிகவும் விரைவாக பாதுகாப்பான இடங்களுக்குக் காப்பாற்றப் பட்டு, கொண்டுவரப்பட்டிருந்திருப்பார்கள். இத்துயர சம்பவத்தில் இறந்த நம் சகோ தரர்களுக்காக நாம் துக்கம் அனுசரிக்கும் அதே சமயத்தில், இறந்தவர்களின் குடும்பத் தாருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரி விக்கும் அதே சமயத்தில், உயிருக்காகப் போ ராடிக்கொண்டிருப்போரைக் காப்பாற்றுவதற்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யக்கூடிய அதே சமயத்தில், அரசாங்கம் தன்னிடமுள்ள அனைத்து விதமான வழி வகைகளையும் பயன்படுத்தி, வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மக்களைக் காப்பா ற்றி, பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும்.
இதற்கு பணம் மற்றும் பொருள்களை நன் கொடையாக அளிப்பதோடு மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள் சுற்றுச்சூழல் மற்றும் காடுக ளை அழிக்கும் வேலைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும். நம்முடைய ஆறுகள் எவ்விதத்திலும் கெட்டுப்போகாத வாறு சுற்றுப்புறத் தூய்மையைப் பேணிப் பாதுகாத்திட வேண்டும். மேலும் மதம்சார்ந்த இடங்களுக்கு சுற்றுலா வருவோர் கடைப் பிடிக்கக்கூடிய விதத்தில் பாதுகாப்பான ஒழுங்கு முறை விதிகளை உருவாக்கிட வேண்டும். இவ்வியற்கைப் பேரழிவில் பாதிக் கப்பட்டோருக்கு உதவுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறைகூவ லுக்கிணங்க நிதி உதவியும், பொருளுதவியும் செய்திட அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழில்: ச.வீரமணி

No comments: