Sunday, October 7, 2012

இடரிலிருந்து தப்பிக்க ஒரு முயற்சி


சென்ற வாரம் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட் டணிக்குள் தீர்க்கமுடியாத அளவிற்குத் தலைவிரித்தாடும் முரண்பாடு முன் னுக்கு வந்தது. ‘‘மக்கள் மத்தியில் மத வெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் மட்டுமே மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவைத் திரட்ட முடியும் என்பதே’’ அந்த முரண்பாடாகும். பாஜகவின் இத் தகைய நிலைப்பாடு காரணமாக, அதன் கூட்டணிக் கட்சிகள் - குறிப்பாக மாநிலக் கட்சிகள் - தங்கள் மாநிலத்தில் உள்ள மதச் சிறுபான்மையினரிட மிருந்து, அதிலும் குறிப்பாக முஸ்லீம் களிடமிருந்து, தனிமைப்படுத்தப்படக் கூடிய ஆபத்து இருப்பதால் - பாஜ கவை தனிமைப்படுத்தத் துவங்கிவிட் டன. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் முதல்வர் ஏற்கனவே தன் மனத் தாங்கலைக் காட்டத் துவங்கிவிட்டார். பாஜக ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடிதான் பிரதமர் என்று பாஜகவில் சித்தரிக்கப்பட்டவுடனேயே அவர்தன் எதிர்ப்பைக் காட்டத் துவங்கிவிட்டார். இம்முரண்பாட்டை மூடி மறைப்பதற் காக, பாஜகவின் முதுபெரும் பந்தயக் குதிரையான எல்.கே. அத்வானி, ஒரு புதிய முகமூடியை -. அதாவது மதச் சார்பின்மையை உயர்த்திப்பிடிப்பதே பாஜகதான் என்னும் முகமூடியை - அணிய முயற்சித்திருக்கிறார். எந்த நபர் ரத யாத்திரை நடத்தி அதன் மூலம் வகுப்புக் கலவரங்களை உருவாக்கி, பாபர் மசூதி இடிக்கப்படும் அளவிற்கு இட்டுச் சென்று, ஏராளமானவர்கள் இறக் கவும், சொல்லொண்ணாத் துன்ப துயரங் களுக்கு ஆளாகவும் காரணகர்த்தாவாக இருந்தாரோ அதே நபர் இப்போது மதச் சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார்.
என்னே முரண்தகை? அத்வானி அக்கூட்டத் தில் பேச வந்தபின், அவர் பேசுவதற் காகத் தயாரிக்கப்பட்டிருந்த உரையி லிருந்து பல முக்கியமான பகுதிகளைப் படிக்காமல் தவிர்த்துவிட்டார். அந்த முக்கிய பகுதிகள் பாஜகவோ அல்லது அத்வானியோ பாஜகவின் இந்துத்வா நிகழ்ச்சிநிரலிலிருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளன. அத்வானி அவற்றை ஏன் வாசிக்கவில்லை என் பதற்கு பாஜகவின் தரப்பில் அதிகாரப் பூர்வமான விளக்கம் எதுவும் இல்லை. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன் மையற்ற பாசிச ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற வேண்டும் என்பதுதான் ஆர் எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. எனவே தயாரிக்கப்பட்டிருந்த உரையை முழுமையாகப் படித்தால் ஆர்எஸ்எஸ்/பாஜக இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் மகிழ்ச்சிகொள்ளலாம். ஆனால் பிற பகுதியினரிடமிருந்து தனி மைப்பட நேரிடும் என்பதற்காகத்தான் அத்வானி அவ்வுரையை முழுமையாகப் படிக்கவில்லை.அவ்வாறு படிக்காத உரைப் பகுதிகள் மூலமாக பாஜக கூற விரும்புவது என்ன? பாஜகவுடன் உள்ள கூட்டணிக் கட்சிகள் ‘‘பாஜகவுடன் சேர்ந்து இருப் பதற்காகக் கொஞ்சமும் பயப்பட வேண் டாம்’’ என்பதேயாகும். இத்தகைய வேண்டுகோள்கள் வெறும் கண்துடைப் பேயாகும். மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் போதுமான அளவிற்கு உறுப்பினர் எண்ணிக்கை தேவை. இதற்கு ‘‘பாஜக தன்னுடைய கொள்கை களை உறுதியுடன் கடைப்பிடிக்கிற அதே சமயத்தில், நடைமுறை உத்தி களில் ஒருவிதமான நெளிவுசுழிவுடன் நடந்துகொள்ள வேண்டிய நிலை உரு வாகி இருக்கிறது.’’ தங்கள் கூட்டணிக் கட்சிகளையும் மக்களையும் ஏமாற் றிடவே இத்தகைய உத்திகள். தங்கள் கட்சியின் உண்மையான கொள்கைகள் என்பவை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலின் கருவாக விளங்கும் ‘‘இந்து ராஷ்ட் ரமே’’யாகும். கூட்டணிக் கட்சிகளையும், மக்க ளையும் ஏமாற்ற வேண்டும் என்பதன் ஒரு பகுதியாகத்தான், உலகின் பல பகு திகளிலும் வன்முறையை உசுப்பிவிட் டுள்ள இஸ்லாம் எதிர்ப்பு திரைப் படத்தை அத்வானியும் கண்டித்து சிறு பான்மை மக்களைத் திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார். குறிப்பாக இந்திய நிலைமையைக் குறிப்பிட்டு அவர் கூறுகிறார்: ‘‘ஒரு மதத்தின் கீழ் நம் பிக்கை வைத்திருப்பவர்களுக்கு எதிராக அவமரியாதையைப் பரப்புவது தவறு. நம் சமூகத்தின் பல்வேறுபட்ட பிரிவினர்க் கிடையே பாகுபாடோ அல்லது அநீதியோ காட்டமாட்டோம் என்று நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அனைத்து சகோதரர்களுக்கும் மீளவும் உறுதிகூறிக் கொள்கிறோம்.’’ பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்ற அடிப் படையின் கீழ், பாபர் மசூதி இடிக்கப்பட இட்டுச்சென்ற ரதயாத்திரையை நடத் திய அதே நபர்தான் இதையும் கூறி யிருக்கிறார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! இவை அனைத்துமே பல மாநிலங் களில் உள்ள தங்கள் கூட்டணிக் கட்சி களையும், மக்களையும் ஏமாற்றி, நடை பெறவிருக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பதற்கான முயற்சிகளே என்பது மிகத் தெளிவாகும். ஆயினும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக முன்நிறுத்தியதன்மூலம் அவர் களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. பாஜக இவ்வாறு தனிமைப்படு வதற்குக் காரணம் என்ன? ஏனெனில் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் கருவியாகும். ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரல் என்பது நவீன மதச் சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசு நிலைக்கு முற்றிலும் எதிரானதாகும்.
பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு மக்களையும், தன்னுடைய கூட்டணிக் கட்சிகளையும் ஏமாற்றுவதற்கான ஒரு முகமூடியேயாகும். இத்தகைய மாக்கியவெல்லியன் முயற்சிகளுடன் மட்டும் அல்லாது பாஜக தற்போது முன்னெப்போதும் இல் லாத அளவிற்கு ஸ்தாபனப் பிரச்சனை களாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கர் நாடக மாநிலத்தில் பாஜகவின் முக்கிய தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தேசியக் கவுன்சில் கூட்டத் தில் கலந்துகொள்ளவில்லை. அதுமட்டு மல்ல பாஜக தலைவருக்கு அவரது தலைமையைப் பழித்துரைத்துக் கடி தமும் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், தன்னைப் போன்ற மக்களுக்கு அவர் அளித்த உறுதிமொழிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட் டிருக்கிறார். இக்கடிதத்தை செய்தியாளர் களிடையே வெளியிட்டு உரையாற்று கையில் அவர் பாஜக தலைவரிடம், ‘‘ஒருபக்கத்தில் நீங்கள் மிகப் பெரிய அளவில் தத்துவம் பேசுகிறீர்கள். ஆனால் நடைமுறையில் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்?’’ என்று கேட் டிருக்கிறார். மத்தியில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதனைக் குறிக் கோளாகக் கொண்டு, ஆட்சியைப் பிடித்தபின் ஆர்எஸ்எஸ் தத்துவங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவே பாஜக இவ்வாறு மதச்சார்பின்மை முகமூடியை அணிந்திட முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது. பாஜகவின் இத்தகைய வேஷங்கள் தோலுரித்துக் காட்டப்பட வேண்டும். இந்தியக் குடி யரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித் தளங்களைப் பாதுகாத்து வலுப்படுத்திட அவை முறியடிக்கப்பட்டாக வேண்டும்.தமிழில்: ச.வீரமணி

No comments: