Sunday, April 29, 2012

பி.சுந்தரய்யா பிறந்தநாள் நூற்றாண்டு - நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவர்: -பிரகாஷ் காரத்


2012 மே 1 அன்று முதல் பி. சுந்தரய்யா பிறந்த நாள் நூற்றாண்டு தொடங்குகிறது. நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவரான பி.சுந் தரய்யாவின் வாழ்வையும் பணியையும் நினைவுகூர்ந்து கொண்டாட இது ஒரு சந்தர்ப்பமாகும். பி.எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்ட பி.சுந் தரய்யா, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு இட்டுச் சென்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு இயக்கங்களின் ஊடே உருவான ஒப்பற்ற தலைவராவார். தன்னு டைய 17 வயதிலேயே விடுதலைப் போராட் டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சுந்தரய்யா, தன்னுடைய அரசியல் பய ணத்தை ஒரு காங்கிரஸ் செயல்வீரராக ஆரம் பித்து, உறுதிமிக்க கம்யூனிஸ்ட்டாக நிறைவு செய்தார். கம்யூனிஸ்ட்டுகளாக மாறிய வீரஞ் செறிந்த விடுதலைப்போராளிகள் பலரைப் போன்று சுந்தரய்யாவும் சாதியமைப்புக்கு எதி ராகக் கிளர்ச்சி செய்தார். சிறுவனாக இருந்த போது அவருடைய முதல் பொது நட வடிக்கை என்பது தன்னுடைய கிராமத்தில் தலித்துகளுக்கு எதிராக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த சாதிய ஒடுக்கு முறை களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து உண்ணா விரதம் மேற்கொண்டதாகும். தென்னிந்தியாவிற்கு விஜயம் செய்த முதல் கம்யூனிஸ்ட்டான அமீர் ஹைதர் கான் மூலம், தோழர் சுந்தரய்யா, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம் மாணவனான சுந்தரய்யாவிடம் புரட்சியாள னுக்கான ஆற்றல் அளப்பரிய அளவில் இருந் ததை அவர் பார்த்தார். அப்போதிருந்து பி.எஸ்-ஸின் அனைவரும் வியக்கத்தக்க புரட்சிகரப் பாதை தொடங்கியது. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கையில், பி.எஸ். கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர் களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டிருப் பதை அறிய முடியும். 24 வயது இருக்கும் போதே 1936-ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினராக மாறினார். நாட்டில் கட்சி மத்தியத்துவப்படுத்தப்பட்ட கட்சியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டபின் அமைக்கப்பட்ட முதல் மத்தியக் குழுவாக அது இருந்தது. தென்னிந்தியாவில் கட்சி யைக் கட்டும் பணி அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ‘‘கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு’’ என்ற நூலில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதியிருப்பது போல, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் பிரிவைத் தெரிவு செய்ததில் பி.சுந் தரய்யா முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார். அவ ருடைய சொந்த மாநிலமான ஆந்திரப் பிர தேசத்தில், கட்சியைக் கட்டுவதற்கு அவர் அல்லும் பகலும் அயராது வேலை செய்தார். அதன் மூலம் தேசிய இயக்கத்திற்குள் ளிருந்த இளம் புரட்சிகர சக்திகளைக் கவர்ந் தார். அவருடைய முன்னோடியான மற்றும் கடின உழைப்பின் காரணமாகத்தான் ஆந் திரப் பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற் கான அடித்தளம் அமைக்கப்பட்டது. பி.எஸ். தமிழ்நாட்டிலும் செயல்பட்ட கம்யூனிஸ்ட்டு களின் முதல் குழுவினருடன் மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டு வந்தார். அந்த சமயத்தில் சென்னை மாகாணம் என்பது ஆந்திரப்பிரதேசத்தின் பகுதிகள் சிலவற்றை யும் உள்ளடக்கியிருந்தது. பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை அமைப்பதில் பி.எஸ். முக்கியமான பங் கினை ஆற்றினார். 1964இல் கட்சி உருவான ஏழாவது அகில இந்திய மாநாட்டில் கட்சி யின் பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய் யப்பட்டார். பன்னிரண்டு ஆண்டு காலம் பி.எஸ். கட்சியின் பொதுச் செயலாளராகச் செயல்பட்டார். அந்த சமயத்தில் அவர் கட்சியை ஒரு மார்க்சிச - லெனினிச அமைப் பாக உருவாக்குவதற்காகத் தன் சக்தி அனைத்தையும் செலவிட்டார். 1967இல் கட்சியின் மத்தியக் குழுவால் நிறைவேற்றப் பட்ட ‘கட்சி ஸ்தாபனத்தின் பணிகள்’ (‘கூயளம டிn ஞயசவல டீசபயnளையவiடிn’) என்கிற புரட்சிகர அமைப்பிற்கான செயல் திட்டத்தில் அவரது முத்திரையைப் பெற்றிருக்கிறது. பி. சுந்தரய்யா, விவசாயப் புரட்சிக்கான போர்த்தந்திரங்களை வளர்த்தெடுப்பதில் பெருமளவில் பங்களிப்பினைச் செய்திருக் கிறார். 1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் நிறு வனத் தலைவர்களில் அவரும் ஒருவர். அப் போது அவர் அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விவசாயத் தொழி லாளர்களை அணிதிரட்டுவதன் முக்கியத்து வத்தையும், நாட்டுப்புறத் தொழிலாளர் வர்க்க மாக அவர்களது பங்கினையும் அங்கீகரித்த முன்னவர்களில் அவரும் ஒருவர். வீரஞ் செறிந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டத் திற்கு அவரது தலைமை காலத்தால் அழி யாதது. ‘‘தெலுங்கானா ஆயுதப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்’’ என்கிற அவரது நூல், வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டம் குறித்த முழுமையான நூலாகும். பின்னர் அவர் விவசாய நிலைமைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், நாட்டுப்புறத்தில் வளர்ந் துள்ள வர்க்கங்கள் குறித்தும் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். எழுபதுகளின் மத்தியவாக்கில், ஆந்திரப் பிரதேச மாநிலத் தில் உள்ள கிராமங்கள் குறித்தும் அங்குள்ள நிலங்கள், நிலவுடைமையாளர்கள் மற்றும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் குறித்தும் ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வினை அவர் மேற் கொண்டார். ஏழை விவசாயிகளையும், விவ சாயத் தொழிலாளர்களையும் விடுதலை செய் யக்கூடிய விவசாயப் புரட்சி இல்லாமல், நம் நாட்டில் ஜனநாயகப் புரட்சி முழுமை அடையாது என்பதில் அவர் முழுமையாக நம்பிக்கை கொண்டிருந்தார். தோழர் பி.எஸ். மார்க்சிச - லெனினிச சித் தாந்தம் மற்றும் கொள்கைகளில் தீவிரமான ஆர்வமுடையவராக இருந்தார். கம்யூனிச இயக்கத்திற்குள்ளிருந்த திருத்தல்வாதத் திற்கு எதிராகப் போராடினார். அதேபோன்று அதற்கு இணையாக ‘அதிதீவிர இடதுசாரி’ திரிபுகளுக்கு எதிராகவும் கடுமையாகப் போராடினார். வீரத் தெலுங்கானா விவசாயிகள் கொரில்லா யுத்தத்தை முன்னின்று நடத்திய போராளி என்பதால் அவரால் நக்சலிச இயக் கத்தின் இடது - அதிதீவிரவாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ வாதத்தை மிக எளி தாக உய்த்துணர முடிந்தது. தோழர் பி. சுந்தரய்யாவின் மற்றுமொரு மாபெரும் குணம், கட்சி மற்றும் இயக்கத்தின் முன்னணி ஊழியர்களை நன்கு பேணி வளர்த்தெடுக்கும் பண்பாகும். அவர் கட்சியின் பல்வேறு நிலைகளில் தலைமைப் பொறுப் பில் இருந்திருக்கிறார். அவர் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், அறிவாற்றல் மிக்க ஊழியர்களை சரியாக அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளை சரியாக மதிப் பிட்டு, அவர்களைத் தெரிவுசெய்தபின், நன்கு பேணி வளர்த்திடுவார். தோழர் பி.எஸ். - ஸின் இத்தகைய உன்னதமான திறமையின் விளை வாகத்தான் எண்ணற்ற கம்யூனிஸ்ட் ஊழியர் கள் வழிவழியாக வார்த்தெடுக்கப்பட்டு செயல் பட்டு வருகிறார்கள். தோழர் பி.எஸ். தலைமுறையில் எண் ணற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைத்து வகையான தியாகம் புரிந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டிருக்கிறார்கள். ஆயி னும், தோழர் சுந்தரய்யாவின் எளிமை, தியாகம் மற்றும் முழு ஈடுபாடு அவர்களின் மத்தி யிலும் அவரைத் தனித்து, கம்பீரமாக நிறுத்தி யது. தோழர் சுந்தரய்யா ஆந்திரப் பிரதேசத் தின் கிராமப் பகுதிகளுக்குள் பல மைல்கள் சைக்கிளிலேயே சென்றிருக்கிறார், தெலுங் கானாவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பல நாட்கள் பல்வேறு சிரமங்களுடன் நடந்து சென்றிருக்கிறார், சிறைக்குள் பல ஆண்டு கள் மிகவும் கட்டுப்பாட்டுடனான வாழ்க்கை யைக் கழித்திருக்கிறார். உடல் உறுதியிலும் கடுஞ்சிரமங்களையும் புன்னகையுடன் ஏற்கும் மனோதிடத்துடனும் அவருக்கு இணையாக வெகு சிலர்தான் இருந்திருக் கிறார்கள். எல்லோரும் அவரை ஒரு முன் மாதிரியாகக் கொள்ளக்கூடிய விதத்தில் கட்சி யில் எவ்வித சுயநலமுமின்றி செயல்பட்டார். இத்தகைய அவரது எளிமை மற்றும் தியாக வாழ்வுதான் ஆந்திராவில் கட்சிக்கு அப்பால் உள்ள பலர் மத்தியிலும் அவரை ஒரு ‘‘கம்யூ னிஸ்ட் ரிஷி’’ என்று அழைக்க வைத்தது. கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு, தோழர் பி.சுந்தரய்யாவின் பிறந்தநாள் நூற்றாண்டை ஓராண்டிற்கு அனுசரிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக் கிறது. இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டங் களை, கட்சியைக் கட்டுவதற்கும் வலுப் படுத்துவதற்குமான ஒரு பிரச்சாரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது குறித்து அரசியல் தலைமைக் குழு விரைவில் அறிவித்திடும். - தமிழில்: ச.வீரமணி

No comments: