Monday, April 23, 2012

கார்ப்பரேட் ஊடகங்களின் கட்டுக்கதைகள் - a commentator


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு தொடர்பாக செய்திகள் வெளியிட்ட சில கார்ப்பரேட் ஊடகங்கள், மாநாடு குறித்து கட்டுக்கதைக ளையும், உண்மைகளைத் திரித்தும், பொய் மூட்டைகளையும் தங்கள் இஷ்டம் போல் கட்டவிழ்த்துவிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, 2008இல் ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதிலிருந்தே பெரும் வர்த் தக நிறுவனங்களின் சில ஊடகங்கள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இவ் வாறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றன. மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இருந்து பாரம்பரியமாக வெளி வரும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு செய்தித்தாள்கள் இதில் முன்னணியில் இருந்தன. மேற்கு வங்கத்தில் ‘ஆனந்த பசார் ’‘பத்தி ரிகா குழுவிலிருந்து வெளிவரும் சில ஊட கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடை பெற்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே, மாநாடு குறித்து, புத்ததேவ் பட்டாச்சார்யா கட்சியின் மத்தியத் தலைமையுடன் மகிழ்ச் சியுடன் இல்லை என்றும், எனவே அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள மறுத்துக் கொண்டிருந்தார் என்றும் எழுதின. மாநாடு தொடங்கிய நாளன்று, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவின் தொலைக்காட்சி மற்றும் செய் தித்தாள் ஊடகங்கள் ‘‘புத்ததேவ் கட்சியின் பொதுச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி யிருப்பதாகவும் அதில் அவர் தன்னை அர சியல் தலைமைக்குழுவிலிருந்தும், மத்தியக் குழுவிலிருந்தும் விடுவித்திடுமாறு கேட்டுக் கொண்டிருப்பதாகவும்’’ வெளியிட்டன. தன் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக தனக்கு மாநாட்டில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டு அவர் எழுதியிருந்த கடிதம் குறித்து கட்சி யின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவித் திருந்த நிலையிலும், மத்தியக்குழுவிலும் அர சியல் தலைமைக் குழுவிலும் அவர் இருக்க மாட்டார் என்கிற ஊகங்களை அவை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தன. கட்சித் தலைமையில் ஆழமான பிரிவுகள் இருப்பதாகச் சித்தரிக்க வேண்டும் என்பதே அத்தகைய பிரச்சாரத்தின் நோக்கமாகும்.கட்சியின் அகில இந்திய மாநாடு என்பது கட்சியின் பிரதானமான கொள்கை மற்றும் நடைமுறை உத்திகள் குறித்து விவாதிக்கப் படும் கட்சியின் ஓர் உயர்மட்ட அமைப்பாகும். கட்சியின் பங்களிப்பு மற்றும் பணிகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் எழுப்பப்படும் விமர்சனரீதியான கருத்துக்களை இத்தகைய ஊடகங்கள் வெளிப்படுத்தலாம் என்றுதான் ஒருவர் எதிர்பார்க்க முடியும். ஆனால் இவை அப்படியெல்லாம் எதுவும் செய்யாமல், மாநாட் டில் அளிக்கப்படும் தகவல்களைத் திரித்தும், பொய்களை உண்மைகளைப்போல் மாற்றியும் வெளியிட்டன. உண்மைகளைக் கண்ட றிந்து, அவற்றைச் சரிபார்த்து, அவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து சரியான முடிவு களுக்கு வர வேண்டும் என்கிற ஊடகவிய லின் அடிப்படைக் கொள்கையைக்கூட, மாநாடு குறித்து செய்திகள் அனுப்பிவந்த செய்தியாளர்களில் சிலர் கண்டுகொள்ளா ததையும் காண முடிந்தது. இவை தொடர்பாக சில உதாரணங்களை நம்மால் சொல்ல முடியும். ஆனந்த பசார் குழு விலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ‘தி டெலிகிராப்’ பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதில் அனைத்துப் பத்திரி கைகளையும் விஞ்சி நின்றது. மாநாடு குறித்து ஏப்ரல் 9 அன்று ஒரே நாளில் இரு கதைகளை முதல் பக்கத்திலேயே அது கட்டவிழ்த்து விட்டது. முதலாவது கதை, மாநாட்டில் தத்து வார்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான வாக்களிப்பு குறித்தாகும். தத்து வார்த்த தீர்மானத்தில் வாக்களிக்காமல் தவிர்த்திட்டார்கள் என்று இரு பிரதிநிதி களின் பெயர்களை அது குறிப்பிட்டிருந்தது. அது குறிப்பிட்ட அவர்களின் பெயர்கள் தவ றானவை. எந்தவிதத்தில் பார்த்தாலும், அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மொத்தம் உள்ள 727 பிரதிநிதிகளில் ஒரு பிரதிநிதி தீர்மானத்திற்கு எதிராக வாக் களித்தார் என்றும், மூன்று பிரதிநிதிகள் தீர் மானத்தின் மீது வாக்களிப்பதிலிருந்து, தங் களைத் தவிர்த்துக் கொண்டார்கள் என்றும் முன்னதாகவே கூறப்பட்டுவிட்டது. இவ் வாறு பிரதிநிதிகள் வாக்களிப்பு எதிர்பாராத ஒன்று அல்ல, அல்லது, இயல்புமீறிய ஒன்று மல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், பிரதிநிதிகள் தங் கள் கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப் பது என்பது இயல்பான ஒன்று. அதேபோன்று கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் முடிவுகள் எதன் மீதும் தாங்கள் விரும்பிய வண்ணம் வாக்களிப் பதற்கான உரிமையும் அவர்களுக்கு உண்டு. அரசியல் தீர்மானத்திலும் கூட, தீர்மானத் திற்கு எதிராக இரு பிரதிநிதிகள் வாக்களித் துள்ளார்கள், இரு பிரதிநிதிகள் வாக்களிக் காமல் தங்களைத் தவிர்த்துக்கொண்டுள் ளார்கள். ஆனால், ‘தி டெலிகிராப்’ மற்றும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடுகள் இவற் றைக் கட்சியில் இரு தலைவர்களுக்கு இடையேயான வேறுபாடுகளின் வெளிப்பாடு போலச் சித்தரிக்கும் இழிசெயல்களில் ஈடு பட்டன. அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப் படும் ஒரு தீர்மானம் எந்தவொரு தனிப்பட்ட தலைவரின் கருத்துக்களையும் பிரதிபலிக் காது, மாறாக அது மத்தியக் குழுவின் கருத் தாகும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் நடை முறையை அறிந்த அனைவருக்கும் நன்கு தெரியும். அது, வரைவு அரசியல் தீர்மானமாக இருந்தாலும் சரி, அல்லது வரைவு தத்து வார்த்தத் தீர்மானமாக இருந்தாலும் சரி - அவை மத்தியக்குழுவில் விவாதிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் ஒரு பொதுவான புரிந்துணர்வின் அடிப்படையில் உருவான வைகளாகும். அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதிகள் மத்தியில் வேறுபாடுகளுக்கான எந்த அடிப் படையையும் காண முடியாததால், சில ஊட கங்கள் இத்தகைய வேறுபாடுகளை உற் பத்தி செய்ய முனைந்தன. ‘தி டெலிகிராப்’ வெளியிட்ட மற்றொரு முதல்பக்க செய்தியின் தலைப்பு, ‘‘பொரு ளாதார மேதை வெளியேறினார்’’ என்பதாகும். பிரபாத் பட்நாயக், ‘‘அகில இந்திய மாநாட்டில் ஆறு நாட்களும் கலந்துகொண்டு அதன் பின் னரே தில்லி செல்வதற்குத் திட்டமிட்டிரு ந்தும்’’ மாநாட்டின் நான்காவது நாளே ‘‘வெறுப்புற்று’’ வெளியேறினார் என்று அந் நாளேடு அதில் குறிப்பிட்டிருந்தது. ஒரு பிரதி நிதி அவரை விமர்சித்ததாகவும் மற்றும் தலை மையின் அணுகுமுறையால் அவர் மனம் நொந்துபோய் விட்டதாகவும் அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டிருந்தது. முன்பு குறிப்பிட்ட தலைப்புச் செய்தியை எழுதிய அதே செய்தி யாளர்தான் இக்கதையையும் முழுமையாகப் புனைந்திருந்தார். தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் நலிவுற்றிருந்ததால் அவரைப் பார்ப் பதற்காக மாநாடு முடிவதற்கு முன்பே செல் வதற்கு, மாநாடு தொடங்குவதற்கு முன்பே, பொதுச் செயலாளரிடம் அனுமதி பெற்றிருந்த தாக, பிரபாத் பட்நாயக் அப்பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றின் மூலம் விளக்க வேண்டியிருந்தது. இவ்வாறு கற்பனைக் கதைகளைக் கட்டி விடுவதில் தானும் எவ்விதத்திலும் சளைத்த தல்ல என்று காட்டக்கூடிய விதத்தில் கேர ளாவிலிருந்து வெளிவரும் முன்னணிப் பத்தி ரிகைகளில் ஒன்றான மலையாள மனோர மாவும் நடந்து கொண்டது. மாநாடு முடிவுற்ற பின்னர் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டு அறி விக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் பட்டியலில் அரசியல் தலைமைக் குழு மூத்த உறுப்பினர் ஒருவர் எப்படியெல் லாம் கீழிறக்கப்பட்டிருக்கிறார் என்று ஆறு பத்தி (column) தலைப்புச் செய்தி ஒன்றை அது வெளியிட்டிருந்தது. அவரது பெயர் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த தாக அது குறிப்பிட்டிருந்தது. அறிவிக்கப் பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கள் பட்டியல், அவர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகச் சேரும் காலத்தை வைத் தும், அவர் கட்சியில் சேர்ந்த காலத்தை வைத் தும் கணக்கிடப்படுகிறது. சென்ற அகில இந்திய மாநாட்டில் எந்தவிதத்தில் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனவோ அதே வரிசை யில்தான் இந்த மாநாட்டிலும் குறிப்பிடப் பட்டது. ஆனால் மலையாள மனோரமா பத்தி ரிகை கட்சியில் கூர்மையான கருத்து வேறு பாடுகள் இருப்பதுபோல் காட்டுவதற்காக இவ்வாறு இழிநடவடிக்கையில் இறங்கி யிருக்கிறது.ஒரு பொதுவான தத்துவார்த்தப் புரிந்து ணர்விற்கு வருவதற்கும், கட்சியின் எதிர் காலத் திசைவழியை அளிப்பதற்கும் அடிப் படையாக விளங்கக்கூடிய, கட்சியின் அர சியல் - நடைமுறை உத்திகளை நிறை வேற்றுவதில் ஓர் உயர்ந்த அளவிலான ஒற்று மையையும், உறுதிப்பாட்டையும் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு வெளிப் படுத்தியது.மாநாட்டின் இத்தகைய வெற்றிகரமான வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ள சில கார்ப் பரேட் ஊடகங்களால் முடியவில்லை போலி ருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பாக எவருக்கும் எவ்விதமான கருத் துக்கள் இருந்தாலும், ஒருவர், மாநாட்டின் நிகழ்வுகளை அளிக்கும்போது, நடந்துள்ள வைகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது பாரபட்சமின்றி அளித்திட வேண்டும் என் பதை ஊடகவியலின் அடிப்படை அம்ச மாகக் கொள்ள வேண்டும். (தமிழில்: ச.வீரமணி)

No comments: