Sunday, February 21, 2010

மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை வெறியாட்டம்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மாவோயிஸ்ட்டுகள், மேற்குவங்கம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ஷில்டா என்னும் இடத்தில் தங்கியிருந்த ஈஸ்ட் பிரான் டியர் ரைபிள்ஸ் என்னும் மத்திய பாதுகாப்புப் படையினர் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு தங்கியிருந்த 36 பேரில் 24 பேரைப் படுகொலை செய்துள்ள னர். 7 பேர் கடும் காயங்கள் அடைந்துள்ளனர். மாவோயிஸ்ட்டுகளின் பிரதான நோக்கம், அப்பகுதி மக்களை அச்சுறுத்துவதும், முகாமி லிருந்த ஆயுதங்களைக் கொள்ளையடிப் பதுமாகும். மாவோயிஸ்ட்டுகள் அங்கிருந்த 40 அதிநவீன ஆயுதங்களைக் கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவமானது, அப் பகுதி யில் வாரச் சந்தை நடைபெறும் நாளொன்றில், பட்டப்பகலில் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலக் காவல்துறைத் தலைவர், “சம் பவ இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்ததால், பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்குவதில் சிரமம் இருந்தது” என்று இது தொடர்பாகக் கூறியிருக்கிறார். இத்தாக்குதலைத் தடுக்க முடியாமல் போன தற்கான காரணங்களைக் கண்டறிய மாநில அரசு ஒரு விசாரணைக்கு ஆணையிட்டிருக் கிறது. இத்தாக்குதலானது, மாவோயிஸ்ட்டுக ளின் வன்முறை வெறியாட்டங்களுக்கு முற் றுப்புள்ளி வைத்திட அரசு நடவடிக்கைகளை மேலும் வலுவாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளின் வெறியாட்டத்தை ஒடுக்கிட, மத்திய பாதுகாப்புப் படையினரு டன், சம்பந்தப்பட்ட மாநிலக் காவல்துறை யினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர், மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநில முதல்வர்களின் கூட்டத்தை பிப்ரவரி 9 அன்று கொல்கத்தா வில் கூட்டியிருந்தார். ஒரு மாநிலத்தில் தாக் குதலைத் தொடுத்துவிட்டு, அடுத்த மாநிலத் திற்குள் நுழைந்துவிடும் உத்தியை மாவோ யிஸ்ட்டுகள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது. சட் டம் - ஒழுங்கு பிரச்சனை என்பது மாநிலப் பட்டியலில் வருவதால், ஒரு மாநிலத்தில் ஏற் பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை விசார ணைக்கு எடுத்துக் கொள்ளும் காவல்துறையி னர், வேறொரு மாநிலத்தில் விசாரணை மேற் கொள்ள வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மாநில அரசின் தெளிவான அனுமதியின்றி, அங்கே விசாரணையைத் தொடர முடியாது. இந்த நிலைமையை, மாவோயிஸ்ட்டுகள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வதைத் தடுத்திடக் கூடிய வகையில், மேலே கூறிய நான்கு மாநில அரசுகளும், மத்திய அரசும் கூட் டாகச் செயல்பட்டாக வேண்டியது அவசியமா கும். ஊடகங்களில் வந்துள்ள தகவல்களிலி ருந்து இப்போது மாவோயிஸ்ட்டுகள் நடத்தி யுள்ள தாக்குதலை அடுத்து, அவர்கள் ஜார் கண்ட்டில் உள்ள அவர்களது மறைவிடங்க ளுக்குத் திரும்பி விட்டார்கள் என்பது தெரிகிறது.

“நீங்கள் வன்முறையைக் கை விட்டால், உங்களுடன் நாங்கள் பேசத் தயார்” பிப்ரவரி 9 கூட்டத்திற்குப் பின், மத்திய உள்துறை அமைச்சர் வெளிப்படையாகவே மாவோ யிஸ்ட்டுகளுக்குத் தெரிவித்திருந்தார்.

என்னுடைய முந்தைய வேண்டுகோள்களை அவர்கள் புறக்கணித்துவிட்டனர். இப்போதும் அவ்வாறே அவர்கள் புறக்கணித்தால் எங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடருவோம் என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார். மாவோ யிஸ்ட்டுகள் இப்போது நடத்தியுள்ள கொடூர மான தாக்குதல், உள்துறை அமைச்சரின் வேண்டுகோளை அவர்கள் மீண்டும் ஒரு முறை உதறித்தள்ளிவிட்டனர் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப் பிற்கு மாபெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது என்று பிரதமரும் திரும்பத் திரும்ப நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும் பொது மேடைகளி லும் கூறி வருகிறார். நாட்டின், நாட்டு மக்க ளின் நலன்களைப் பாதுகாத்திட மாவோ யிஸ்ட்டுகளின் அச்சுறுத்தலை அனைவ ரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டியது இப்போதைய தேவையாகும்.

ஆயினும், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப் பானவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்ல மறுப்பதிலிருந்து, திரிணாமுல் காங் கிரசின் தலைமை, மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக நிற்கும் போக்கு தொடர்கிறது. இந்தத் தாக்குதல்களுக்குத் தாங்கள் பொறுப் பேற்றுக் கொள்வதாகவும், தங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கைகளுக்குத் தாங்கள் அளித்திடும் எதிர்த்தாக்குதல் இது என்று மாவோயிஸ்ட் டுகளின் தலைவர்கள் ஊடகங்கள் வாயிலா கக் கூறிய பிறகும், திரிணாமுல் காங்கிரஸ் நிலை இவ்வாறிருக்கிறது. மேலும், மாவோ யிஸ்ட் தலைவர்கள், திரிணாமுல் காங்கிரசி னை எதிர்த்திட மாட்டார்கள் என்று ஊடகங் களுக்கு வெளிப்படையாகவே கூறியிருக்கி றார்கள்.

ஷில்டா தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்பு, மாவோயிஸ்ட் தலைவர் மேற்கு மிட்னா பூரில், “திரிணாமுல் காங்கிரசாருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள மாட் டோம்” என்று அறிவித்திருக்கிறார். அதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு, மேற்கு மிட்னா பூரிலிருந்து பாதுகாப்புப் படையினர் விலக் கிக்கொள்ளப்பட வேண்டும் என்று திரிணா முல் காங்கிரஸ் கோரியிருந்ததை, மாவோ யிஸ்ட் தலைவர் கிஷன்ஜி வரவேற்றிருக்கி றார். பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்ட்டு களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திரிணாமுல் காங் கிரஸ் வெளிப்படையாகவே கோரி வருவதை அனைவரும் அறிவார்கள். ஏனெனில் 2011 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர் தல் வரை இடதுமுன்னணிக்கு எதிராக மக் களைஅச்சுறுத்திப் பணிய வைத்திட மாவோ யிஸ்ட்டுகளின் வன்முறை நடவடிக்கைகள் தேவை என்று அது கருதுகிறது.

திரிணாமுல் காங்கிரசின் வேண்டுகோ ளுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் சற்றே செவிசாய்த்தார். “கூட்டு நடவடிக்கைகள் சாமானிய மக்களைப் பாதிப்பதாக அவர் (மம்தா) கருதுகிறார். எனவே அவரது கோரிக் கையைப் பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று பிப்ரவரி 9 அன்று ப.சிதம்பரம் கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் அளித்திடும் ஆதரவு மற்றும் உதவி ஆகிய வற்றைக் கொண்டு மாவோயிஸ்ட்டுகள் தங்கள் கொலைபாதக வன்முறை நடவடிக் கைகளைத் தொடர்வார்கள் என்பது ஷில்டா தாக்குதல்களிலிருந்து தெளிவாகியிருக்கி றது. மாவோயிஸ்ட் வன்முறை நாட்டின் உள் நாட்டுப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள மாபெரும் அச்சுறுத்தல் என்று நாட்டின் பிரத மர் வெளிப்படையாகவே நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ள நிலையில், அவரது அமைச்சர வையில் அங்கம் வகிக்கும் ஒரு கேபினட் அமைச்சர், பிரதமரின் கூற்றுக்கு நேரெதிராக வன்முறையில் ஈடுபட்டுவரும் மாவோயிஸ்ட் டுகளுக்கு ஆதரவாக நிற்பது குறித்து காங் கிரஸ் கட்சியும், ஐ.மு.கூட்டணி அரசாங்க மும் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளித்திட வேண்டும்.

மாவோயிஸ்ட்டுகள், திரிணாமுல் காங்கி ரசாருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையோ தண்டனையோ மேற்கொள்ளமாட்டார்கள் என்று தீர்மானித்திருக்கும் அதே சமயத்தில், சென்ற பொதுத் தேர்தலுக்குப்பின் இதுவரை அவர்கள், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் 168 பேரை கொன்றுள்ளார்கள். யாருடைய நலன் களைப் பாதுகாப்பதற்காகத் தாங்கள் இயக்கம் நடத்துகிறோம் என்று மாவோயிஸ்ட்டுகள் கூறுகிறார்களோ, அதே ‘சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த வர்கள்’ தான் இந்த 168 தோழர்களும். மார்க் சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களைக் கொல்வதன் மூலம், சாமானிய மக்களை அச் சுறுத்தி அவர்களை திரிணாமுல் காங்கிரஸ் பக்கம் திருப்பிடலாம் என்பதுதான் மாவோ யிஸ்ட்டுகளின் நோக்கமாகும். மக்கள் உயிர் களைப் பலிகொண்டாவது, தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்கிற இழிவான, அரக்கத் தனமான நிகழ்ச்சிநிரலை திரிணாமுல் காங் கிரஸ் கொண்டிருக்கிறது.

ஜனவரி 15 அன்று, திரிணாமுல் காங் கிரஸ் தலைவி மம்தா ஒரு பொதுக்கூட்டத் தில் பேசுகையில், மாவோயிஸ்ட்டுகளுக்கு ஏழு நாட்கள் அவகாசம் தருவதாகவும், அவர் கள் அதற்குள் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க முன்வர வேண்டும் என்றும் கூறியிருந் தார். “அவ்வாறு அவர்கள் வராவிடில், அமைதி யையும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வும் நான் பாத யாத்திரை செல்வேன்” என்றும் கூறினார். அவ்வாறு பேசி, ஆறு வாரங்கள் சென்ற பின்னரும், எவ்விதப் பாத யாத்திரை யையும் அவர் மேற்கொள்ளவில்லை. சும்மா மக்களை ஏமாற்றுவதற்காக அப்போது அவ் வாறு அவர் பேசியிருக்கிறார் என்பது தெளி வாகி இருக்கிறது. அதே கூட்டத்தில் அவரது பேச்சின் உள்நோக்கத்தையும் அப்போதே அவர் தெளிவுபடுத்திவிட்டார். அதாவது, “தேவைப்பட்டால், மத்திய அரசுடன் நடைபெ றும் அக்கூட்டத்தில், லால்காரிலிருந்து மத் திய - மாநிலக் கூட்டுப் படையினரின் நடவ டிக்கைகளை விலக்கிக் கொள்வது உட்பட உங்கள் கோரிக்கைகள்அனைத்தையும் நிறைவேற்ற நான் என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” என்று கூறினார்.

நாட்டின், நாட்டு மக்களின் நலன்களைக் காத்திட வேண்டுமானால், இத்தகைய கேடு கெட்ட, மனித உயிர்களைப் பற்றிக் கிஞ்சிற் றும் கவலைப்படாத, அரக்கத்தனமான நட வடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடும், நாட் டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், அமைதிக் கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்திடும், இத் தகைய அரசியல் அடாவடித்தனங்களை அனுமதிக்கக்கூடாது. வன்முறை நடவடிக் கைகளால் இயல்பு வாழ்க்கை சிதிலமடைந் துள்ள பகுதிகளில் அமைதியையும், இயல்பு வாழ்க்கையையும் மீண்டும் கொணர, மத்திய பாதுகாப்புப் படையினர் நான்கு மாநில அரசு களின் காவல்துறையினருடன் கூட்டாக இணைந்து மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை மேலும் தீவிரப் படுத்த வேண்டியது அவசியமாகும்.

தமிழில்: ச.வீரமணி

1 comment:

Mathiarasu said...

mr.veramani

why are you trying to hide the atrocities of state on tribal people.
why you forget the violence of your people to get some seats in pseudo democratic elections.Now your party became anti people ,corrupted and autocratic.that is why they are attacking you.why they are not attacking trinamool?because there is no need to attack the people who supports and moreover they are not oppressing people with state power.your people forget long back that this is class society and the state is capitalists dictatorship state.
mathi