Wednesday, July 1, 2009

லால்கார் : இயல்புநிலையை மீட்பதற்கான முயற்சிகள் - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னா பூர் மாவட்டத்தில் லால்கார் மற்றும் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் முற் றுகையை, மத்திய -மாநில அரசுகளின் பாது காப்புப் படையினர் கூட்டாக சேர்ந்து அப் புறப்படுத்தி வருவதை அடுத்து, அங்கே நிலைமை மிகவும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. நந்திகிராமத்தில் ஒரு சிறுபகுதி வெற்றி பெற்ற அளவிற்குக் கூட, லால்காரில் அப்பாவிப் பழங் குடியினத்தவரை, அதிலும் குறிப் பாக, பெண்களையும் குழந்தைகளையும் மனிதக் கேடயங்களாக நிறுத்தி, பாது காப்புப் படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திட மாவோயிஸ்ட்டுகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற வில்லை என்பது தெளிவு. ஜூன் 7 அன்று மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஏழு பேரை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றதை அடுத்து, உண்மையில் அப் பகுதியிலிருந்த பழங்குடியினர் அனைவ ருமே ஊரைக் காலி செய்துவிட்டுச் சென் றுவிட்டார்கள். இவ்வாறு ஊரைவிட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை 30 ஆயி ரத்திற்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட் டிருக்கிறது.

அவ்வாறு மாவோயிஸ்ட்டுகளுக்குப் பயந்து ஊரைவிட்டு வெளியேறிக்கொண் டிருக்கும் பழங்குடியினரிடம் ஊடகவிய லாளர்கள் வினவும்போது அவர்கள், ‘‘போலீ சாரின் தாக்குதல்கள் நடைபெறும் சமயத் தில் அவர்கள் (மாவோயிஸ்ட்டுகள்) பெண் களையும், குழந்தைகளையும் முன்னே நிற்கும்படி கட்டாயப் படுத்துகிறார்கள்,’’ என்றும், ‘‘மாவோயிஸ்ட்டுகள் விரும்பு வதுபோல் போலீசாரின் துப்பாக்கிக் குண்டு களுக்கு இரையாக நாங்கள் விரும்ப வில்லை’’ என்றும் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு மாவோ யிஸ்ட்டுகளால் மிரட் டப்பட்டு, ஊரை விட்டு வெளியேறி நிவா ரண முகாம் களில் அடைக்கலமாகியுள்ள பழங்குடி யினருக்கு மாநில அரசு இலவச அரிசி, காய்கறிகள் மற்றும் தயார் செய்யப் பட்ட உணவுப் பொட்டலங்களை அளித்து உதவி வருகிறது. லால்கார் அரசு மருத்துவ மனையில் சுகாதார வசதிகளை வலுப் படுத்துவதற்காகக் கூடுதலாக பணியா ளர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

மாநிலத்தில் பழங்குடியினர் பகுதி களில் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் வளர்ச்சிப் பணிகளைப் புறக் கணித்ததால்தான் இந்நிலைமை என்று சொல்லப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத் தின்போது, ராகுல் காந்தியும் கூட, மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் பகுதிகள் பல, ஒரிசாவில் பின்தங்கியுள்ள பிராந்தியங் களைவிட மோசமாக இருக்கின்றன என்று கூறியதைப் பார்த்தோம். அப்போதே நாம், உண்மையில் பங்குரா மற்றும் புரூலியா பகுதிகளில் உள்ள பழங்குடியினரின் சமூ கப் பொருளாதார நிலைமைகள், அமேதி மற்றும் ரே பரேலி நிலைமையைவிட மேம் பட்டது என்பதை எடுத்துக்காட்டினோம்.

ஒட்டுமொத்தத்தில் மாநிலத்தில் இடது முன்னணிக்குப் பின்னடைவு ஏற்பட்டி ருந்த போதிலும்கூட, பழங்குடியினருக் கான மக்களவைத் தொகுதிகள் அனைத் தையும் இடதுமுன்னணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை நிலையாகும். பழங்குடியினரின் வாழ்க் கைத்தரத்தை மேம்படுத்திட இன்னும் செய்யவேண்டியது ஏராளமாக இருக்கி றது என்பதில் எந்தக் கருத்து வேறு பாடும் கிடையாது. இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இடது முன்னணி பல புதிய திட்டங்களைத் தீட்டிச் செயல் படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆயினும், மேற்கு மிட்னாபூர் மாவட் டத்தில், வளர்ச்சித் திட்டங்கள் பழங்குடி யினரைப் போய்ச் சேரமுடியாத வகையில் ஒரு பிரத்யேகமான பிரச்சனை இருக்கிறது. மேற்கு வங்கத்தில் பெரும்பாலான வளர்ச் சித் திட்டப்பணிகள் தேர்ந்தெடுக்கப் பட்ட பஞ்சாயத்துக்கள் மூலமாகவே மேற் கொள்ளப்படுகின்றன. லால்கார் பகுதி யில் பல பஞ்சாயத்துக்கள் ஜார்கண்ட் கட்சியின்கீழ் இருந்து வருகின்றன. பல வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்து வதில் இக்கட்சி பிரதான தடையாக இருந்து, மாவோயிஸ்ட்டுகள் நுழைவ தற்கு வசதிசெய்து தந்திருக்கிறது. பின் பூர் (பழங்குடியினர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஜார்கண்ட் கட்சியைச் சேர்ந்தவர்தான். லால்கார் பகுதி இவரது தொகுதிக்கு உட்பட்டுத்தான் வருகிறது. கையறுநிலையிலுள்ள பழங்குடியினரை, அவர்களின் மிக மோசமான பின்தங்கிய நிலைமையிலேயே வைத்திருப்பதில், மாவோயிஸ்ட்டுகளுக்கு ஓர் அரசியல் நோக்கம் உண்டு என்பது தெளிவு. தற் போது மாவோயிஸ்ட்டுகள் அவர்களது ‘விடுதலை செய்யப்பட்ட மண்டலத்’திலி ருந்து அப்புறப்படுத்தப் பட்டிருப்பதை யடுத்து, பழங்குடியினருக்கான வளர்ச் சித் திட்டப்பணிகளின் பயன்கள் அவர் களுக்கு போய்ச்சேரும் என்பதில் ஐய மில்லை.

அடுத்ததாக, மாவோயிஸ்ட்டுகளைத் தடை செய்வது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன் னணியின் அணுகுமுறை குறித்து பல வித வியாக்கியானங்கள் வந்துகொண்டி ருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகளின் வன் முறை இரு விதமான உத்திகளின் மூல மாக எதிர்கொள்ளப்பட வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான நிலைப்பாட்டினை மேற் கொண்டு வந்திருக்கிறது. முதலாவதாக, மக்களின், (அதாவது இப்பகுதியில் பழங் குடியினரின்) வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதில் உள்ள உண்மையான பிரச் சனைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடு பட்டு, மாவோயிஸ்ட்டுகளை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்திடும் முயற்சி களை மேற்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வை அளித்திடும். அதே சமயத்தில், சட்டம் -ஒழுங்கு சீர் குலைக்கப்படுமானால் அல்லது மாவோ யிஸ்ட்டுகளால் தாக்குதல் தொடுக்கப் பட்டு நிர்வாக எந்திரம் முடமாக்கப்படு மானால் அவற்றை உறுதியுடன் எதிர்த்து முறியடித்து, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், அரசு நிர்வாகத்தை அப்பகுதிகளில் நிலைநிறுத்துவதற்கும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப் படும்.

இப்போது, மத்திய அரசு, மாவோயிஸ்ட் இயக் கத்தை சட்டவிரோத நடவடிக்கை கள் (தடுப்புச்) சட்டத்தின் கீழ் தடை செய் யப்பட்டுள்ள இயக்கங்களில் ஒன்றாக சேர்த்திருக்கிறது. ஏற்கனவே தடை செய் யப்பட்டுள்ள இயக்கங்களான மக்கள் யுத் தக் குழு மற்றும் மார்க்சிஸ்ட் ஒருங்கி ணைப்பு மையம் (ஆயசஒளைவ ஊடிடிசனiயேவiடிn ஊநவேசந) ஆகிய இரு குழுக்களும் இணைந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யாக மாறியிருக்கிறது என்று இது தொடர்பாக ஒரு விளக்கமும் அரசால் கூறப்பட்டிருக்கிறது. இம்முடி வானது நாடு முழுவதுக்கும் பொருந்தும். எனவே இது மேற்கு வங்கத்திற்கும் பொருந்தும். ஆயினும், மேற்கு வங்க முதல்வர் சொல்லியிருப்பது போல, ‘‘இது ஒரு மத்தியச் சட்டமாக இருப்பதால் இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இதனை எங்கே, எவருக்கெ திராகப் பிரயோகிப்பது என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்வோம்’’ என்று கூறி யிருக்கிறார்.

மாவோயிஸ்ட்டுகளுக்குத் திரிணா முல் காங்கிரசும், திரிணாமுல் காங்கிர சுக்கு மாவோயிஸ்ட்டுகளும் ஒருவருக் கொருவர் ஆதரவு அளித்து வந்ததற்கு ஏராளமான சான்றுகளை மாவோயிஸ்ட் டுகளின் பேட்டிகளை ஊடகங்கள் ஒளி பரப்பியதன் மூலம் அனைவரும் அறி வோம். இப்போது திரிணாமுல் காங்கிர சும் ஓர் அங்கமாக உள்ள ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசாங்கம், மாவோ யிஸ்ட் இயக்கத்திற்கு தடை விதித்தி ருப்பதன் மூலம், திரிணாமுல் காங்கிர சுக்கு ஓர் இக்கட்டான நிலையை ஏற் படுத்தி இருக்கிறது. மாவோயிஸ்ட்டுகளு டன் தங்களுக்குள்ள உறவை ஒப்புக் கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடி யாமல் திண்டாடும் திரிணாமுல் காங் கிரஸ், மாவோயிஸ்ட் கொலைபாதக நட வடிக்கைகளைத் தங்கள் தேர்தல் ஆதா யத்திற்குப் பயன்படுத்திக் கொண்ட திரி ணாமுல் காங்கிரஸ், இப்போது மாவோ யிஸ்ட் பிரச்சனையில் சிபிஎம் ‘இரட்டை வேடம்’ போடுவதாகக் காட்டுக்கூச்சல் போடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்டுகள் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்துப் பிற் போக்கு சக்திகளுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன் னணிக்கு எதிராக ஒரு மகா கூட்டணி யை ஏற்படுத்திக் கொண்டது என்பதை இப்போது சாமானிய மக்களும் நன்கு புரிந்துகொண்டு வருகிறார்கள். இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் தங்களுடைய சுய தேர்தல் ஆதாயத்திற்காக சாமானிய மக் களை மாவோயிஸ்ட்டுகளின் மிரட்ட லுக்கும் உருட்டலுக்கும் பணிந்து போகு மாறு வைத்துவிட்டது.

மாவோயிஸ்ட்டுகள் உட்பட திரிணா முல் காங்கிரசால் அமைக்கப்பட்ட மகா கூட்டணியுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ள சில ‘அறிவுஜீவிகள்‘, லால் கார் பகுதிக்கு ‘‘அரசாங்கம் பாதுகாப்புப் படையினரை அனுப்பியிருப்பதையும், இயல்பு வாழ்க்கையை அப்பகுதியில் மீட்பதையும் நிறுத்துவதன் மூலம் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்றால், மாவோ யிஸ்ட்டுகளும் பேச்சுவார்த்தைக்குத் தயார்’’ என்று கூறியிருக்கின்றனர். மாவோ யிஸ்ட்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப் படைக்கும்வரை, தங்கள் வன்முறை மற் றும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிடுவதாக உறுதிகூறும்வரை, பேச்சு வார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மாநில அரசு தெளிவுபடத் தெரி வித்துள்ளது. அதேசமயத்தில், பழங்குடி யினருக்கு, பாதுகாப்புப் படையினரால் தொல்லை ஏற்படக் கூடாது என்பதற் காக, பழங்குடியின மக்களை இம்சிக்கக் கூடாது என்று பத்திரிகைக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது. இப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் ஏராளமான கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

தேர்தல் ஆதாயத்திற்காக, பயங்கர வாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ஒட்டுமொத்த சமுதாயத்தையே இடருக் குள்ளாக்கி, சாமானிய மக்களுக்கு சொல் லொண்ணா துயரத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகிக் கொண் டிருக்கிறது.மாவோயிஸ்ட்டுகளால் மக் கள் மீது ஏவப்பட்டுள்ள சவால்களை எதிர்த்து முறியடிப்பதுடன், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இயல்பு வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவதற்கு, இத்தகைய அரசியல் சக்திகளையும் தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழில்: ச.வீரமணி

No comments: