Wednesday, May 14, 2008

‘‘நாங்கள் வளமாக வாழ, நீ பட்டினிகிட’’





லக அளவில் உணவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதற்குப் பிரதான காரணம், இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள் அதிக அளவு உணவு உட்கொள்வதுதான் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும் திட்டமிட்டுத் தொடர்ந்து கூறிவரு வதை, ‘‘வீணான ஆரவாரப் பேச்சு’’ என்று கூறி ஒதுக்கித்தள்ளிவிட முடி யாது. முன்னதாக, அமெரிக்காவின் அயல்துறை அமைச்சர், கண்டலிசா ரைஸ், உணவு நெருக் கடிக்குக் காரணம் இந்தியர்களும் சீனர்களும் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவை அதிகரித்துக் கொண்டதுதான் என்று கூறி இந்தப் பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தார். மேற்கத்திய நாடுகள் உண வுப் பொருள் களிலிருந்து உயிர்-எரி பொருள் (bio-fuel) அதிகமான அள வில் உற்பத்தி செய்வதும், ஏகாதிபத்திய உலகமயத்தின் முக்கிய அம்சமான ஊக வர்த்தகம் என்னும் முன்பேர வர்த்தக முறையும்தான் இந்நெருக்கடிக்கு பிர தானமான காரணங்கள் என்பதை மூடி மறைத்திடவே ஏகாதிபத்தியம் இத்தகு இழிவான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. ஏகாதிபத்தியவாதிகளின் கூற்று கள் எள்ளிநகையாடத்தக்கவையாக இருப் பதோடு மட்டுமல்லாமல், இவர்களின் இத்தகைய இழிவான பிரச்சாரத்திலி ருந்து வளர்முக நாடுகள் வறுமையிலி ருந்தும், போஷாக்கின்மையிலிருந்தும் மீள்வதற்கு எடுத்திடும் முயற்சிகளைக் கூட இவர்கள் எந்த அளவிற்குத் தங்கள் வளமான வாழ்விற்குப் பாதகமான நட வடிக்கைகளாக பார்க்கிறார்கள் என்பதும் நன்கு புலப்படுகிறது. உலகையே தங் கள் காலனியாதிக்கத்தின் மூலமாக கடந்த பல நூற்றாண்டுகளாக கொள்ளையடித்து வந்ததைப்போலவே, எதிர்காலத்திலும் ஏகாதிபத்திய உலக மயத்தின் மூலமாக, தொடர்ந்து கொள்ளையடிக்க வேண்டும் என்கிற சதித் திட்டம் இவர்களின் கூற் றுகளிலிருந்து நன்கு புலனாகிறது.ஆயினும், உலகின் உண்மை நிலை மை என்ன என்பதை முதலில் ஆராய் வோம். அமெரிக்காவின் வேளாண் துறையின் அறிக்கையின்படி, அமெரிக் காவில் ஒவ்வொருவரும் சாப்பிடும் தானியத்தின் அளவு என்பது 1046 கிலோகிராமாகும். ஆனால் இந்தியா வில் இது வெறும் 178 கிலோ கிராம் மட்டுமே.

இவ்வாறு இந்தியர்கள் உட்கொள்வதை விட அமெரிக்கர்கள் ஐந்து மடங்கு அதிக மாக ஒவ்வொரு வரும் உட்கொள்கிறார் கள். அதே போன்று அமெரிக்காவில் ஒவ் வொரு அமெரிக்கனும் உட்கொள்ளும் கோழிக் கறியின் அளவு 45.4 கிலோகிராம், இது ஐரோப்பிய ஒன்றியத்தில் 16.2 கிகி. ஆனால் இந்தியாவில் இது வெறும் 1.9 கிலோகிராம் மட்டுமே. எனவே, யார் அதிகம் சாப்பிடுகிறார்கள்?உலகம் முழுவதும் உணவுப் பொருட் களின் விலை கடுமையாக உயர்ந்தி ருக்கிறது. ஐக்கிய நாடுகள் ஸ்தாப னத்தின் உலக உணவுத் திட்டம் உலகில் தேவைப்படும் நாடுகளுக்கு உணவுப் பொருட்களை அளித்திடும் அமைப்பா கும். இது, இப்போது ஏற்பட்டிருக்கும் உணவு நெருக்கடியை ‘‘அமைதியான சுனாமி’’ என்று குறிப் பிட்டிருக்கிறது. ‘தி எகனாமிஸ்ட்’ ஏடா னது உலகம் முழுவதும் உணவு கோரி கலவரங்கள் வெடிக்கப்போகிறது என்று எச்சரித்திருக்கிறது.

இப்போது பணவீக் கத்தால் ஏற்பட்டிருக்கும் உணவுப் பொருட்களின் அதீத விலை காரணமாக உலகம் முழுவதும் பல நூறு கோடி மக் கள் கடுமையான வறுமை நிலைக்குத் தள் ளப்பட்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு விநியோகித்த அதே அளவிற்கு இந்த ஆண்டும் உணவுப் பொருட்களை விநி யோகித்திட, மேற்படி ஐ.நா. ஸ்தாபனத் தின் உலக உணவுத் திட்டத்திற்கு மேலும் கூடு தலாக 700 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. இந்தியர் களான நம்மைப் பொறுத்தவரை, இதன் பொருள் என்னவெனில், இங் குள்ள ‘‘ஒளிர்கின்ற” இந்தியனுக்கும் ‘‘அவதிப் படுகின்ற’’ இந்தியனுக்கும் இடையே யுள்ள இடைவெளி மேலும் ஆழமாகும் என்பதேயாகும்.

இதன் கடுமையை பல லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே உணரத் தலைப்பட்டுவிட்டார்கள். நாட் டிலுள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந் தைகளும், 78 சதவீதத்திற்கும் அதி கமான கர்ப்பிணிப்பெண்களும் போதிய உணவின்றி போஷாக்கின்மையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில், இந்தியர் களில் 78 சதவீதத்திற்கும் அதிகமான வர்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய்க் கும் குறை வான வருவாயுடன் ஜீவித்து வருகிறார்கள். அரசாங்கத்தின் புள்ளி விவரப்படியே, 1997க்கும் 2005க்கும் இடையிலான ஆண்டுகளில் வறுமை யின் கோரப் பிடியில் சிக்கி 1 லட்சத்து 36 ஆயிரத்து 324 விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு இந்திய னும் உட்கொள்ளும் தானியத்தின் அளவு 1990-91ஆம் ஆண்டில் 468 கிராமாக இருந்தது, இப்போது 2005-06இல் 412 கிராமாகக் குறைந்துள்ளது. அதே போன்று புரதச் சத்து மிகுந்த பருப்பு வகைகள் உட்கொள்வதும் 42 கிராமி லிருந்து 33 கிராமாகக் குறைந்து விட் டது. (இது 1956-57இல் 72 கிராமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.)இந்தியர்கள் அதிக அளவில் உணவு உட்கொள்கிறார்கள் என்று அவர்கள் கூறும் கூற்றை வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும்கூட, இந்தியாவிலிருந்து அதிக அளவில் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியாகிக் கொண்டிருந்து, அது குறைந்திருந் தால்தான், உலக பொரு ளாதாரத்தில் அதன் தாக்கத்தை உணர முடியும். ஆனால் அப்படியெல்லாம் எது வும் இல்லை. உணவுப் பொருள்களை உலக அளவில் ஏற்றுமதி செய்வதில், இந் தியாவின் பங்களிப்பு என்பது வெறும் 1 சதவீதம் மட்டுமே. இதிலும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி என்பது இந்த 1 சதவீதத்தில் வெறும் 11.7 சதவீதமே. எனவே, இந்தியர்களின் உணவு உட் கொள்ளுதலில் மாற்றம் ஏதும் ஏற்பட்டிருந் திருப்பினும், அது, உலக உணவு நெருக் கடிக்கு எவ்விதத்திலும் பங்க ளிப்பினைச் செய்திடாது. ‘‘உலகில் முதலாளித்துவ நாடுகள் உயிர்-எரிபொருளை மிகப் பெரிய அளவில் தயாரிக்க நடவடிக்கை கள் மேற்கொண்டிருப்பதை அடுத்து, உலக அளவில் மாபெரும் உணவு நெருக் கடி ஏற்படும் அபாயம் தவிர்க்க முடியாத தாக மாறிக் கொண்டிருக்கிறது’’ என்று ஒருசில ஆண்டுகளுக்கு முன், பிடல் காஸ்ட்ரோ எச்சரித்திருந்தார். இவ்வாறு பிடல் காஸ்ட்ரோ எச்சரித்த சமயத்தி லேயே, ஜார்ஜ் புஷ் தன்னை ‘‘ஓர் எத்த னால் ஆசாமி’’ என்று ஞானஸ்நானம் செய்து கொண்டு, இவ்வாறு உயிர்-எரிபொருள் உற்பத் தியை ஆதரித்து அறிக்கை வெளியிட் டார். இதற்காக மற்ற நாடுகள் விரும் பாவிட்டாலும் கூட, அமெரிக்க விவசா யிகளுக்கு ஏராளமான தொகை அள்ளித் தர தயாராயிருப்பதாகவும் கூறினார்.

உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சோளம், முழுமையாக உயிர்-எரிப் பொருள் உற்பத்திக்குத் திருப்பிவிடப் பட் டுள்ளது. 2004ஆம் ஆண்டிற்கும் 2005 ஆம் ஆண்டிற்கும் இடையில் இதன் உற் பத்தி 51 மில்லியன் டன்கள் அதிகரித் திருப்பதாகவும், அமெரிக்கா இவற்றை எத்தனால் உற்பத்திக்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்திருக்கிறது. 2010 வாக்கில் தங்கள் நாட்டின் எரிபொருள் உற்பத்தியில் 6 சதவீதம் உயிர்-எரி பொருளாக இருந் திடும் என்று ஐரோ ப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது. ஒரு நபர் ஓராண்டு சோளத்தை முக்கிய உண வாக உட்கொண்டால் அவர் எடுத் துக்கொள்ளும் சோளத்தின் அளவு, ஒரு டாங்க் உயிர்-எரிபொருள் உற்பத்தி செய்யத் தேவைப்படும். இப்போது உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப் பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, உலக அளவில் உணவுதானியங்களின் பரிமாற்றம் ஊக வர்த்தகம் என்கிற முன்பேர வர்த்தகத்தின் கீழ் நடை பெறுவதாகும். அமெரிக்காவில் ஏற்பட் டுள்ள பொருளாதார மந்தத்தின் கார ணமாக, பல நிதி ஜாம்பவான்கள் திவா லாகும் நிலைக்குத் தள்ளப்பட் டிருப்பதும், அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக, உலக ஊக வர்த்தக சூதாடிகள், இவ்வாறு உணவுப் பொருட் களின் பரிமாற்றத் தையும் ஊகவர்த்தகம்/முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்தி வருகிறார்கள். இந்தியாவில் உணவுப் பொருட் களின் பரிமாற்றம் நாளொன்றுக்கு 3 பில்லியன் டாலர் அளவிற்கு நடை பெற் றுக் கொண்டிருக்கிறது. 2007-08ஆம் நிதியாண்டில் நடைபெற்ற வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 40 லட்சத்து 65 ஆயிரத்து 989 கோடி ரூபாய்களாகும். இவ்வாறு இந்த அளவிற்கு ஊக வர்த்தகம் நடை பெறுவதன் மூலம் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. இவர்கள் இவ்வாறு கொள்ளை லாபம் அடிப்பதைக் கட்டுப் படுத்திட, அரசிடம் எவ்விதமான கட்டுப் பாட்டு நிர்வாக எந்திர அமைப்பும் கிடை யாது. உணவுப்பொருள்களின் விலை யைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தேவை யான இருப்பும் அரசு வசம் கிடையாது. மாறாக, உணவுப் பொருட்களின் விலை யை உயர்த்திடத் தேவைப்படும் அள விற்கு, தனியார் வர்த்தக நிறுவனங்கள் போதுமான அளவிற்கு தங்கள் வசம் இருப்பு வைத்திருக்கின்றன. இவ்வாறு வர்த்தகர்கள் அடிக்கும் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், அர சின் வசம் உணவுப் பொருள்கள் போதிய இருப்பு இருந்திட வேண்டும், மக்களுக் கான உணவுப்பொருள் விநியோக முறைக்கும் வலுவான அமைப்பு முறை இருந்தாக வேண்டும். ஆனால் அரசு இத னைச் செய்திடவில்லை. அரசின் இத்த கைய தாராளமயக் கொள்கைகளே விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாகும். எனவேதான், 25 அத்தியாவசியப் பொருட்களை ஊக வர்த்தகம்/முன் பேர வர்த்தகத்திலிருந்து தடை செய்து, மக்க ளுக்கு நிவாரணத்தை அளித்திட வேண் டும் என்று வலியுறுத்துகிறோம். ஏகாதிபத்திய உலகமய நிதி மூல தனத்தைப் பாதுகாப்பதற்காகவே, ஜார்ஜ் புஷ் அண்ட் கம்பெனி உலக மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக, இந்தியர் களும் சீனர்களும் அதிகமாக உட்கொள் ளுவதால்தான் உணவு நெருக்கடி ஏற்பட் டிருப்பதாக நம்மீது குறைசொல்லிக் கொண்டிருக் கின்றன. ஆனால் உணவு நெருக்க டிக்கு உண்மையான காரணம் ஏகா திபத்திய உலகமயம் என்கிற கோர முகம்தான் என்பதை அவ்வளவு எளி தாக மக்களிடமிருந்து மறைத்துவிட முடியாது.

தமிழில்: ச. வீரமணி

No comments: