பாகிஸ்தானுடன் பேச்சுவார்த் தைகள் நடத்துவது தொடர்பாக
மோடி அரசாங்கம் இதுநாள்வரை எடுத்து வந்த நிலைபாட்டிற்கு முற்றிலும் மாறாக, இந்திய
-பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் அயல்துறை செய லாளர்கள் சந்திப்பும்
அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்குச் சென்ற
அயல்விவகாரங்கள் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இஸ்லாமாபாத்திற்கு பயணம் செய்திருப்பதும்
நடந்திருக்கிறது. இது வரவேற்கத்தகுந்த மாற்றம் என்றுகூறக்கூடிய அதே சமயத்தில், பாகிஸ்தானுடனான
இந்தியத் தூதரக உறவுகளில் அதுமுன்னுக்குப்பின் முரணின்றி ஒரு சீரானநிலையினை எடுக்க
முடியாமல் திண்டாடுவதையும், ஏற்ற இறக்கத்தையும் கூட தெளிவாகக் காட்டுகிறது.
மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே,
பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தைகள் தொடர்பாக அது ஒரு மோதல் போக்கைப் பின்பற்றி வந்தது.
2014 ஆகஸ்ட்டில் நடைபெறவிருந்த அயல்துறை செயலாளர்களின் பேச்சு வார்த்தைகளை முறித்துக்
கொண்டது. இதற்கு இந்தியத்தரப்பில் கூறப்பட்ட சாக்குப்போக்கு என்னவெனில், பாகிஸ்தான்அயல்துறை
அமைச்சர் ஜம்மு - காஷ் மீருக்குவருகை தந்த போது ஹூரியத் தலைவர்களையும் சந்திக்கப் போகிறார்
என்பதாகும். அதன்பின்னர் சுமார் ஓராண்டு கால இடைவெளிக்கிடையே, இருநாட்டின் பிரதமர்களும்
ரஷ்யாவில் உஃபா என்னுமிடத்தில் நடைபெற்ற மாநாட்டில் சந்தித்துக் கொண்டார்கள்.
அப்போது அவர்களிருவரும் இரு நாட்டின்
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இரு நாட்டின் எல்லைகளிலும் இருக்கின்ற துணை
ராணுவப் படைத் தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடத்திடத் தீர்மானித்தனர். இவை
சம்பந்தமாக நிகழ்ச்சிநிரல் தயாரிக்கும்போது, இந்தியா பயங்கரவாதம் குறித்து மட்டும்தான்
விவாதிக்க வேண்டும் என்றும் அது மட்டும்தான் நிகழ்ச்சிநிரலில் இடம்பெற வேண்டும் என்றும்
நிர்ப்பந்தித்தது. ஆனால், பாகிஸ்தானோ காஷ்மீர் மற்றும் நிலுவையில் உள்ள இதர அனைத்துபிரச்சனைகள்
குறித்தும் விவாதிக்கக் கூடிய விதத்தில் நிகழ்ச்சிநிரல் தயாரித் திட வேண்டும் என்று
கூறியது. இவ் வாறு இவை சம்பந்தமாக தயாரிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிநிரல் குறித்து, இரு
நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டியதன் விளைவாக, இப்பேச்சுவார்த்தைகளும் நடைபெறாமல்
தோல்வி அடைந்து விட்டன. பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹூரியத் தலைவர்களைச்
சந்திப்பது குறித்து இந்தியா தரப்பில் ஆட்சேபணை எழுப்பப்பட்டது.தலைகீழ் மாற்றம்மோடி
அரசாங்கம் மற்றும் பாஜக இந்தசமயத்தில் பயங்கரவாதம் குறித்துத்தான்முதலில் பேச்சு வார்த்தைகள்
நடத்தப்பட வேண்டும் என்ற நிலையை எடுத்திருந் தது. அதே சமயத்தில், ஜம்மு - காஷ்மீர்
எல்லையில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே, தொடர்ந்து வெடிகுண்டு தாக்கு தல்கள் மற்றும்
துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. ஜம்மு - காஷ்மீருக்
குள்ளும் ஃபிடாயீன் குழு எல்லைக்கு அப்பாலிருந்து தாக்குதல்கள் தொடுப்பது அதிகரித்தன.
பாகிஸ்தான் எல்லைக்கு அப்பாலிருந்து ஊடுருவல்
செய்வதை நிறுத்தாதவரையிலும், பயங்கரவாதம் தொடர்பான பிரச்சனைகளைப் பேச முன் வராத வரையிலும்,
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதில் இந்திய
அரசாங்கம் உறுதியாக இருந்தது. பிரதமர் மோடி இந்த ஆண்டு நவம்பரில்ஸ்ரீநகருக்கு பயணம்
செய்தார். அப்போது ஜம்மு - காஷ்மீர் அரசியல் வட்டாரங்களின் மத்தியில், அவர் பாகிஸ்தானுடனான
உறவுகளை மேம்படுத்துவது குறித்து சிலஅறிவிப்புகளைச் செய்திடுவார் என்ற எதிர்பார்ப்புகள்
இருந்தன. ஆனால் அப்படி எதுவும் நடந்திடவில்லை. எனவே, இப்போது இந்திய அரசாங்கத் தின்
பக்கத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றம்,ஒரு தலைகீழ் மாற்றமாகவே தோன்று கிறது. பாரீசில்
பூமி வெப்பமயமாதல் குறித்து உச்சிமாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தசமயத்தில், இரு நாட்
டின் பிரதமர்களும் தனியே, ஒருசில நிமிடங்கள் பேசியிருக்கின்றனர். அதன் விளை வாக,
2015 டிசம்பர் 6 அன்று பாங்காக்கில் இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல்
மற்றும் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டி னன்ட் ஜெனரல் நசீர் ஜான்ஜூவா
ஆகிய இருவருக்கும் இடையே ரகசியக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இவர்களுடன் இரு நாட்டின்
அயல்துறை செயலாளர்களும் இணைந்து கொண்டுள்ளார்கள். இச் சந்திப்பிற்குப்பின் வெளியாகியுள்ள
அறிக்கையில், “அமைதி மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாதம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் இதர
பிரச்சனைகள் குறித்தும் இரு நாடுகளின் எல்லைக் கோட்டில் அமைதியை ஏற்படுத்துவது குறித்தும்
விவாதங்கள் நடைபெற் றன,’’ என்று கூறப்பட்டுள்ளது. இதனைமேலும் முன்னெடுத்துச் செல்வது
என்றும்கூட அப்போது தீர்மானிக்கப்பட்டது.
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த் தைகளை வாபஸ்
வாங்கி நான்கு மாதங்கள்கடந்த பின்னர், இந்தியா, பயங்கரவாதம் தொடர்பாக மட்டுமல்லாமல்
ஜம்மு - காஷ்மீர் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்தும் விவாதித்திட ஒப்புக் கொண்டிருக்கிறது.
இப்பிரச்சனைகள் அனைத் துமே முன்பு சர் கிரீக் தாவாவின்போதும், சியாச்சின் பனிப்பகுதியில்
படைகளை அனுப்பியபோதும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது விவாதிக்கப் பட்டவைகளேயாகும்.
தனிமைப்பட்டது...மோடி அரசாங்கம், பாகிஸ்தானுடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் நடத்தமாட்டோம்
என்று பிடிவாதமாகவும், எவரும் ஏற்கமுடியாத அளவில் கார ணங்கள் சொல்லிக்கொண்டிருந் ததிலிருந்தும்
இப்போது திடீரென்று தலைகீழாக மாறியிருப்பதற்கு என்ன காரணம்? பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்
தைகளைத் தொடர முட்டுக் கட்டையாக இருப்பது பயங்கரவாதம் என்கிற பிரச்சனை என்று கூறிவந்ததை
உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு, பாகிஸ்தானைத் தனிமைப் படுத்திட இந்தியா முயற்சித்ததில்
தோல்வி கண்டுவிட்டது.
அமெரிக்கா, பாகிஸ் தானுக்கு ராணுவ உதவிகளை
அதிகப் படுத்தி இருக்கிறது. இது இந்தியாவை ஆத்திரப்படுத்தியுள்ள போதிலும், அதனால் அமெரிக்காவிற்கு
எதிராக எதுவும்சொல்ல முடியவில்லை. வாஷிங்டன்னுக்கு நவாஸ் ஷெரிப் சென்றிருந்த போது,
தலிபான் இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்திட பாகிஸ்தானுக்கு இருக்கும் கேந்திரமான
பங்கினை அமெரிக்கா மீண்டும் உறுதி செய்தது. `சார்க்’ நாடுகளுக்குள் கூட, தனிமைப்படுத்தப்
பட்டு விட்டதை இந்தியா உணரத் தலைப் பட்டிருக்கிறது. எல்லைக்கு அப்பாலிருந்து வரும்
பயங்கரவாதத் தாக்குதல்களை நம்பாதுகாப்புப் படையினரால் உறுதியாகஎதிர்த்து முறியடித்திட
முடியும், அதன் மூலம் பாகிஸ்தானை இப்பிரச்சனைமீது பேச வருவதற்குக் கட்டாயப்படுத்திட
முடியும் என்கிற இந்தியாவின் நிலைபாடு மிகவும் பரிதாபகரமான முறையில் தோல்வியைத் தழுவியுள்ளது.
பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திடாமல்,
அதனுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளாமல், பயங்கரவாத வன்முறைப் பிரச்சனையை சமாளித்திட
முடியாது என்பதை இந்திய அரசு இப்போது உணர்ந்திருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் தன்னுடைய
வெறித்தன மான நிலைபாட்டை இந்தியா கைவிட்டி ருக்கிறது.
அமெரிக்காவை மீற முடியவில்லை
சர்வதேச அளவில், பிரதானமாக அமெரிக்காவும்
மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், பாகிஸ்தானுடன் பேச்சு வார்த் தைகளைத் தொடர வேண்டும்
என்று இந்தியாவிற்குத் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வந்தன. அமெரிக்காவுடன் நெருங்கிய
உறவினைக் கொண்டுள்ள மோடி அரசாங்கம், இந்த நிர்ப்பந்தத்தைத் தடுத்திட முடியவில்லை. இறுதியாக,
ஆப்கானிஸ்தானுடனான மோதலில் இந்தியா தனிமைப்படக்கூடிய சூழல்உருவாகி இருப்பதையும்.
இப்பிராந் தியத்தில் உள்ள நாடுகளுடன்
பேச்சு வார்த்தைகள் நடத்துவதில் பாகிஸ்தான் கேந்திரமான பங்கினை வகித்திடும் எதார்த்த
நிலையையும் இந்தியா உணரத் தொடங்கியுள்ளது. சுஷ்மா சுவராஜ் “ஆசியாவின் இதயம்’’ மாநாட்டில்
கலந்து கொள்வது இதனை அங்கீகரித்ததன் விளைவேயாகும். மோடி அரசாங்கம், பாகிஸ்தான் தொடர்பாக
மேற்கொண்டிருந்த கொள்கை படு தோல்வி அடைந்து விட்டதையே இவை அனைத்தும் காட்டுகின்றன.
மோடியின் ஆசிர்வாதத்துடன் பாகிஸ்தானுடன்
மோதல் போக்கை ஏற்படுத்தும் விதத்தில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மிகவும்
மிகைப்படுத்தி தேசியவெறியுடன் உருவாக்கிய வெறித்தன மான கொள்கை இவ்வாறு படுதோல்வி அடைந்துவிட்டது.
இந்திய அரசின் கொள்கையில் இவ் வாறு தலைகீழ்
மாற்றம் ஏற்பட்டிருப்ப துடன், ஆர்எஸ்எஸ் இயக்கத்திலும் பாஜகவிலும் இருக்கின்ற வெறிபிடித்த
தீவிரவாதிகள் மகிழ்ச்சியற்று இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், மோடி அரசாங்கம்,
பாகிஸ்தானுடனான தூதரக உறவில் இவ்வாறு படிப்பினைகளைக் கற்றுக் கொண்டிருக்கும் என்று
நம்பு வோம். சுஷ்மா சுவராஜின் பயணத்தைத் தொடர்ந்து வெளியாகியுள்ள அறிவிப் பினை எவ்விதப்
பின்வாங்கலும் இன்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.
(தமிழில்: ச.
வீரமணி)