Sunday, May 20, 2012

சிறப்புக் குறிக்கோள் திட்டம் யாருக்காக?


பிரதமரும், அவரது அலுவலகமும் கட்டமைப்பு வசதிகள், கனிம வளங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வெளிக்கொணர்தல் முதலிய துறை களில் முதலீடுகளை அதிகப்படுத்துவ தற்காக எஸ்பிவி என்னும் சிறப்புக் குறிக் கோள் வாகனம் (SPV - Special Purpose Vehicle) ஒன்றை அமைத்திடத் திட்டம் தீட்டியிருப்பதாக, தேசிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. நாட்டின் வளர்ச்சிவிகிதம் வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதானது, நாட்டிலுள்ள அறிவுஜீவிகள் மற்றும் தொழிற்துறையினர் மத்தியில் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தியிருப்பதால் இத்தகைய முடிவிற்குப் பிரதமர் வந்திருக் கிறார் என்று தெரிகிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் மத்தியில் எதிர்மறை உணர்வு என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டும். பிரதமரின் உண்மை யான கவலை இதுதான். ஏனெனில், அந் நிய நிறுவன முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இது இட்டுச் செல்லும், அதனைத் தொடர்ந்து நம் நாட்டின் ரூபாய் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைவதற்கும் அது நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தும். ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது, தன்னுடைய நவீன தாராளமயப் பொரு ளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத் துச் செல்வதற்காக, இதன் முதலீட் டாளர்கள் மேலும் மேலும் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் புதிய புதிய வாய்ப்புவசதிகளை உருவாக்கித் தரு வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இதன்மூலம் அந்நிய முதலீடுகள் மேலும் அதிக அளவில் ஈர்க்கப்படலாம் என்றும் அதன் மூலம் வளர்ச்சி விகிதம் முன் னோக்கிச் செல்லும் என்றும் அரசு நம்பு கிறது. பொது(அரசு) -தனியார் கூட்டுச் செயல்பாடு மூலம் இவ்வாறு கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு வசதி களை உருவாக்கித்தரும் வேலைகளில் திட்டக் கமிஷனும் அரசாங்கமும் இறங் கியிருக்கின்றன. பிபிபி (பொது(அரசு)-தனியார் கூட்டுச் செயல்பாடு) என்பது பிரதிபலிப்பது என்ன? இதன் மூலம், மக்கள் நலத் திட் டங்களை நிறைவேற்றுவதற்கும், மக்க ளின் இறையாண்மையைப் பாதுகாப்பதற் கும் தனக்கு எவ்வித அக்கறையும் கிடை யாது என்பதை அரசு சொல்லாமல் சொல்கிறது. பொதுத்துறைத் திட்டங் களில் தனியார் முதலீடு செய்யலாம். ஆனால் பொதுத்துறைச் சொத்துக்க ளைத் தனியார் கொள்ளைகொண்டு போக அனுமதித்திட முடியாது. திட்டக் கமி ஷன், நாட்டின் திட்டமிடுதலுக்கு சவக் குழி தோண்டும் திட்டத்தினை அனுமதித் திட முடியாது. தனியார் கொள்ளைலாபம் ஈட்டுவதற் கான மற்றுமொரு வாய்ப்புவாசலே இந்த எஸ்பிவி என்னும் சிறப்புக் குறிக்கோள் வாகனம் அமைக்கப்படும் திட்டமாகும். சிறப்புக் குறிக்கோள் வாகனம் அமைப்பது தொடர்பாக, அத்திட்டத்தினை நியாயப் படுத்தி, துறைகளுக்கிடையே சுற்றுக்கு விடும் குறிப்பில் (internal note) அரசு கூறி யிருப்பதாக, ஊடகங்கள் வெளியிட்டிருப்ப தாவது: ‘‘இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிவிகிதம் 2011-12ஆம் ஆண்டில் 7 விழுக்காட்டிற்கும் கீழே வீழ்ச்சியடைந் திருக்கும் பின்னணியில், முதலீட்டு விகி தத்தைப் பெருக்கிட வேண்டியது அவ சியத் தேவையாகும். பொருளாதார வல்லு நர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் ஊட கங்கள் இதனை வலியுறுத்திக் கொண் டிருக்கின்றன. கையில் இருக்கும் நிதியை வைத்துக் கொண்டு சமாளிக்கக்கூடிய அதே சமயத்தில், புதிய முதலீடுகளுக் கான வழிகளையும் ஆராய வேண்டி யிருக்கிறது.’’ மின் திட்டங்கள் (குறைந்தபட்சம் 58 மின்திட்டங்கள்) அமைப்பதற்கான தனி யார் முதலீடுகளை, பல்வேறு மத்திய/மாநில/உள்ளாட்சி அமைப்புகளின் துறை களும், அமைச்சகங்களும் விரும்பி ஏற் காத அதே சமயத்தில், பிரதமர் அலுவ லகம் அதனை இத்தகைய எஸ்பிவி என் னும் சிறப்புக் குறிக்கோள் வாகனம் மூலம் மேற்கொள்ளத் திட்டம் தீட்டியிருக்கிறது. இவ்வாறு இந்தச் சிறப்புக் குறிக்கோள் வாகனம் ஒரு மின்திட்டம் உருவாவதில் உள்ள பல்வேறு நிபந்தனைகளையும் சரி செய்திடப் பொறுப்பேற்றுக்கொண்டு, அதனை ஏலத்திற்கு விட (bidding) முன் வந்திருக்கிறது. எஸ்பிவி திட்டங்களை அடையாளங் காணவும், அவற்றிற்கான நிலங்களைக் கையகப்படுத்தவும், அதன் அனைத்துப் பணிகளையும் மேற் கொண்டு இறுதிப்படுத்திடவும், அரசின் பல்வேறு துறைகளிடமிருந்தும் தடை நீக்கச் சான்றுகள் பெற்றிடவும் பின்னர் அவற்றை தனியார் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ஏலத்திற்கு விடவும் பொறுப் பேற்றுக்கொள்ளும். அதுமட்டுமல்ல, குறைந்தவட்டியில் நிதி பெறுவதற்கான ஏற்பாடுகளையும் இந்த எஸ்பிவி அமைப்பே மேற்கொள்ளும். வேறு வார்த்தைகளில் சொல்வதா னால், எஸ்பிவி, தனியார் கார்ப்பரேட் நிறு வனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் செய்து தரும். பிரதமர் அலுவலகக் குறிப்பு இது தொடர்பாக எழுதியுள்ள துறைக ளுக்கிடையிலான குறிப்பில் குறிப்பிட்டி ருப்பதாவது: ‘‘எஸ்பிவி அணுகுமுறை இதுவரை அரசு ஊழியர்கள் மத்தியி லிருந்த மனோபாவத்தையே பெரிய அள வில் மாற்றி அமைக்கிறது. தடைநீக்கச் சான்றுகள் போன்ற பலவற்றைத் தனியார் கள் அரசிடம் பெறுவதற்கு அலையும் பொறுப்பு இனி இல்லை. எனவே இது முதலீட்டாளரின் உணர்வினை ஆக்க பூர்வமான முறையில் மாற்றிடும்.’’ இவ்வாறு இந்த எஸ்பிவி என்ற சிறப் புக் குறிக்கோள் வாகனம் என்னும் முறை யானது, பிபிபி என்னும் பொது-தனியார் கூட்டுச் செயல்பாடு என்பதைவிட, தனி யார் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு அதிக அளவில் துணை புரியும். சர்வதேச நிதி மூலதனம், பிபிபி என் னும் முறையை அரசு மேற்கொள்ள வேண் டும் என்று வலியுறுத்திய சமயத்தில், ஓட்டல்கள் போன்ற நிறுவனங்களை (அவை லாபம் ஈட்டிக்கொடுத்த நிலையிலும்) தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும், அரசாங்கம் மக்களின் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது என்றும் அறிவுறுத்தியது. பின்னர் படிப்படி யாக, கல்வி மற்றும் சுகாதாரத் துறைக ளையும் தனியாரிடம் தந்துவிட வேண்டும் என்று கூறியது. அரசாங்கம், துப்புரவுப் பணிகள் மற்றும் தண்ணீர் விநியோகம் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றது. இப்போது அதிலும் கூட, பிபிபி முறையைக் கொண்டுவந்து, பயன்படுத்துவோர் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டி ருக்கிறது. இவ்வாறு சமூகத்திற்கான திட் டங்கள் எதையும் இனி அரசாங்கம் செய் வதற்கு இல்லை என்கிற நிலைக்கு அர சாங்கம் தள்ளப்பட்டு விட்டது. ஆயினும், இந்தியாவில் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக் கிறது என்கிற பிரதமர் அலுவலகத்தின் வரையறையில் அடிப்படைப் பிழை ஒன்று இருக்கிறது. வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு முதலீடும் மிகவும் மந்தமான அளவில் இருந்ததே காரணம் என்பதே இந்தப் பிழையாகும். எனவே, அரசு இவ்வாறு எஸ்பிவி வழியாகவும், பிபிபி வழியாகவும் அரசாங்கத்தின் உதவி யுடனேயே தனியார் தங்களது மூலதனங் களைப் பெரிய அளவில் முதலீடு செய்திட அரசு வழிவகுத்துக் கொடுக்கிறது. இந்தியப் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி விகிதத்துடன் அமைந்திட வேண்டுமானால், உள்நாட்டுத் தேவை யில் உள்ள மந்தநிலை போக்கப்பட வேண்டும். இதைச் செய்திடாமல், வளர்ச்சி விகிதத்தை உயர்த்திட மூல தனத்தை அதிகரிப்பதில் அர்த்தமேதும் இல்லை. ஏனெனில் இவர்கள் உற்பத்தி செய்வது எதுவாக இருந்தாலும் அதனை வாங்க, சந்தை இருக்க வேண்டும். இதற்கு மக்களின் வாங்கும் சக்தி போதுமான அள விற்கு இருந்திட வேண்டும். இத்தகைய வாங்கும் சக்திதான் நாளும் உயரும் விலைவாசி உயர்வால் கணிசமான அள விற்கு அரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தேசிய மாதிரி சர்வே குடும்பச் செலவி னங்கள் தொடர்பாக மேற்கொண்ட சமீ பத்திய ஆய்வுகள், நாட்டில் 60 விழுக் காட்டுக் குடும்பங்கள் திட்டக் கமிஷன் நிர்ணயித்துள்ள வறுமை வரையறைக்கும் கீழே இருப்பதை உறுதிப்படுத்தி இருக் கின்றன. அதாவது காலஞ்சென்ற அர் ஜூன் சென்குப்தா அறிக்கை மதிப்பிட் டுள்ளபடி, நாட்டில் உள்ள மக்களில் 80 கோடிக்கும் மேற்பட்டோரில் சுமார் 77 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய்கூட செலவழிக்க முடியாமல் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என் பதுடன் இந்த ஆய்வு மிக நெருக்கமாக இருக்கிறது. இத்தகைய பின்னணியில், நமக் குத்தேவை நாட்டின் உள்நாட்டுத் தேவையை அதிகரிப்பது என்பதுதான். அதற்கு நாட்டு மக்களின் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்திட வேண் டும். அதற்கு, மிகப் பெரிய அளவில் பொது முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு, அதன் மூலம் நாட்டில் பெரிதும் தேவையான கட் டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அதிகரிக்கப்படு வதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பு கள் கணிசமான அளவிற்கு அதிகரிக் கப்பட்டு, மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்திடும். இதைச் செய்வதற்கு முன்வராமல், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் தன்னு டைய நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளையே பின்பற்றவும், தனியார் தங்கள் லாப வேட்கையை மேலும் மேலும் அதிகரிக்கும் வண்ணம் தனியார் முதலீடு களை உருவாக்கவுமே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட்டு, மிகப் பெரிய அளவில் பொது முதலீடு உட் செலுத்தப்படாவிட்டால், நாட்டில் ஆட் சியாளர்கள் எதிர்பார்ப்பதுபோல் வளர்ச்சி விகிதமும் அதிகரிக்காது, நாட்டு மக்க ளில் பெரும்பான்மையோரின் வாழ் நிலையும் மேம்படாது. பொது முதலீடுகளை அதிகரிக்கக் கூடிய அளவிற்கு வளங்களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. தற்சமயம், இவ் வளங்கள் பல்வேறு ஊழல்கள் மூலமாகக் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன அல்லது தனியார் கார்ப்பரேட் நிறு வனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள பணக்கார ஒளிரும் இந்தியர்களுக்கு அபரிமிதமான முறையில் வரிச் சலுகை கள் அளிப்பதன் மூலம் அபகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய அரசின் இழிநடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமானால், நம் நாட்டில் வளங்களுக்குப் பஞ்சமே கிடையாது. நாட்டில் வளர்ச்சிவிகிதம் குறைவது தொடர்பாக பிரதமரின் அலுவலகம் உள்ளபடியே கவலை கொண்டிருக்கு மானால், தன்னுடைய நவீன தாராளமயக் கொள்கைகளைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, பொது முதலீடுகளை அதிகரித்திட வேண்டும். நம் பொருளா தாரம் வளர்வதற்கும், நம் மக்களின் வாழ் நிலை உயர்வதற்கும் இது ஒன்றே வழி. ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தைத் இத்தகைய திசைவழியில் திருப்பக் கூடிய வகையில் மக்கள் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். தமிழில்: ச.வீரமணி