தோழர் ஜோதிபாசு இன்று நம்முடன் இல்லை. அவர் மறைவு செய்தி கேட்டு, தன்னியல்பாகத் திரண்ட மக்கள் திரள் உண்மையில் முன்னெப் போதும் இல்லாததாகும். கொல்கத்தா வின் வீதிகளில் வெள்ளம்போல் திரண்ட மனிதக் கடல் மூலமாக வங்கம் மகத்தான தன் தலைவருக்கு மிகவும் உணர்ச்சிகர மான முறையில் தன் அஞ்சலியைச் செலுத்தியுள்ளது. அதேபோல் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாட்டின் மகத்தான தலைவருக்கு தங்கள் புகழஞ்சலியைச் செலுத்தியுள் ளனர்.
தோழர் ஜோதிபாசு, தன் வாழ்நாள் காலத்திலேயே மாபெரும் காவியநாயக னாக (legend) உருவாகிவிட்டார். சுதந்திர இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிக நீண்ட காலம் முதல்வராகப் பணியாற்றியிருக்கிறார். தாம் முதல்வராகப் பொறுப்புக்களைச் சிறப்பான முறையில் செய்திட தன் உடல் நலம் அனுமதிக்க மறுக்கிறது என்று உணர்ந்து, (உண்மையில் நிர்வாகமோ அல்லது மக்களோ அவ்வாறு கருதவில் லை) பதவி விலக அவர் முன்வராமல், முதல்வர் பொறுப்பில் தொடர்ந்திருந் திருந்தாரானால், இந்த 23 ஆண்டுகள் கூட மேலும் பல ஆண்டுகளாக நீடித் திருந்திருக்கும். இதுவும் கூட, நாட்டி லுள்ள முதலாளித்துவ அரசியல் கட்சிக ளின் வரலாற்றில் முன்னெப்போதும் இல் லாத ஒன்றாகும்.
அதேபோல், நாட்டில் மிக நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருப்பவ ரும் தோழர் ஜோதிபாசுதான். 1946 லேயே பிரிக்கப்படாது ஒன்றாக இருந்த வங்க மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு ஏற்றார். மகாத்மா காந்தி உயிருடன் இருந்த அந்தக் காலம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுக ளின் பங்களிப்பு குறித்து மிகப் பெரிய அள வில் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயமாகும். அந்த சமயத்திலேயே அவர் மாபெரும் வெற்றி பெற்றார். அப்பொழுதிலிருந்து 2000இல் நாடாளுமன்ற அரசியலிலி ருந்து அவர் தாமாக சுய ஓய்வு பெறும் வரையில், 1972-77 தவிர மற்ற அனைத் துத் தேர்தல்களிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார். 1972இல் நடைபெற்ற தேர்தல் ஒரு மோசடித் தேர் தல் என்பது இப்போது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இவ்வாறு அவர் தாமாகப் பதவியைத் துறக்காதிருந் திருந்தாரானால் நாட்டில் முதல்வராக வும் சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் பணியாற்றிய காலம் மேலும் கூடுதலாக இருந்திருக்கும்.
இவைமட்டுமல்லாமல், அவரது வல் லமைமிக்க சாதனைகள் பலப்பலவா கும். 1940இல் அவர் இங்கிலாந்திலிருந்து திரும்பும்போதே, ஒரு முழுநேர கம்யூ னிஸ்ட்டாக மாறியிருந்தார். அப்போதி ருந்து கடந்த எழுபதாண்டுகளில் மக்க ளுடன் இணைந்து நின்று நவீன இந் தியாவை உருவாக்குவதில் அவர் வகித்த பங்கு அளப்பரியதாகும். ஆரம்ப காலங் களில் சுதந்திரப் போராட்டத்திற்கான அர சியல் போராட்டங்களினூடே மக்களின் பொருளாதார விடுதலைக்கான போராட் டங்களையும் திறம்பட இணைக்க வேண்டியிருந்தது. மனிதகுல விடுதலை மற்றும் நாட்டின் விடுதலைக்கான போராட் டங்களை இணைப்பதில் அவரது பங்கு மிகவும் சிறப்பானதாகும். தோழர் ஜோதி பாசு தன் வாழ்நாள் முழுதும் இதனை மிகத் திறம்படச் செய்து வந்ததைக் காண முடியும்.
நாட்டில் அந்தக் காலகட்டத்தில், நிலப்பிரபுத்துவ மன்னர் சமஸ்தானங் களை இந்திய யூனியனுடன் இணைப்ப தற்கான போராட்டங்கள் நடந்து கொண் டிருந்தன. இந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் டுகளால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட போராட்டங்கள், நிலச்சீர்திருத்தங்களை யும், ஜமீன்தார்முறை ஒழிப்பையும் பிரதா னமாக முன்வைத்து, வீரஞ்செறிந்த போராட்டங்களாக நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்தன. நாட்டில் பல்வேறு மொழிவாரி தேசிய இனங்களும் தனித் துவ அடையாளத்துடன் வேறுபடுத்திக் காட்டக்கூடிய வகையில், விடுதலைக் கான போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருந்தன. இந்தப் போராட் டங்கள்தான் 1956இல் இறுதியாக மொழி வாரி மாநிலங்கள் அமைய வழிவகுத்தன. மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங் களுக்கான அடிப்படையில்தான் நாட் டில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களும் ஒன்றுபட்டு வாழ முடியும் என்பதை ஜோதிபாசு நன்கு ஊகித்து உணர்ந்திருந் தார். ஜோதிபாசு அவர்களே நாடு பிரி வினைக்குள்ளானால் ஏற்படக்கூடிய வலியினை நன்கு உணர்ந்தவராவார். அவ ரது குடும்பத்தினர் இன்றைய வங்க தேசத்தின் தலைநகரான டாக்காவில் இருந்தனர். பிரிவினையால் விளையும் கடும் வேதனைகளை இதனால் அவர் நன்கு அறிவார். வரலாற்றில் வங்கப் பிரி வினை தவிர்க்க முடியாதது என்கிற தலைமுறையைச் சேர்ந்தவர் அவர். எனவே அதனை அவர் மதித்து ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகத்தான் இப்போது வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் வங்க தேசத்தில் உள்ள பெரிய கட்சிகளின் தூதுக்குழு கொல்கத்தாவிற்கு வந்து, ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியது.
ஜோதிபாசு, நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பினையும் நிர்வாகக் கட்டமைப்பையும் உறுதியுடன் கடைப் பிடித்தார். இது அவரது ஒவ்வொரு செய லிலும் நன்கு வெளிப்பட்டதைக் காண முடியும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத் தில், மதவெறியர்களின் நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானது என்று அவர் அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயிடம் நேரடியாகவே கூறினார். இவ்வளவு கடுமையான வார்த் தைகளை ஏன் பிரயோகிக்கிறீர்கள் என்று வாஜ்பாய், ஜோதிபாசுவிடம் கேட்டபோது, இதைவிடப் பொருத்தமான சொல் ஆங் கில மொழியில் இல்லை என்றே அவ ருக்குப் பதிலளித்தார். அதேபோன்று இந் திரா காந்தி படுகொலை செய்யப்பட் டதை அடுத்து, நாடு முழுதும் சீக்கியர்க ளுக்கு எதிரான கலவரங்கள் வெடித்த சமயத்தில், மேற்கு வங்கத்தில் அவ்வாறு கலவரம் எதுவும் ஏற்படாதவாறு மிகவும் உறுதியாக அதனைச் சமாளித்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்திலும் நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தபோது, மேற்கு வங்கத்தில் அமைதியை நிலை நாட்டியதிலிருந்து நவீன இந்தியாவின் மீதான அவரது உறுதியை உணர முடியும். நாடு முழுதும் பல மாநிலங்களில் மத வெறி சக்திகள் காட்டுமிராண்டித்தன மான செயல்களில் ஈடுபட்ட போதிலும், ஜோதிபாசுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அவர்களைத் தனிமைப்படுத்தி, முறியடித்து மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்தினார்கள்.
அதேபோன்று, இந்தியாவின் அரசி யல் சுதந்திரத்தை, மக்களுக்கான பொரு ளாதார சுதந்திரத்தை - சோசலிசத்தை - அடைவதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் அவர் மிக வும் குறியாக இருந்தார். ஆயினும், இத னை எப்படி எய்துவது என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள்ளேயே தத்துவார்த்தப் போராட்டங்கள் வெடித்தன. கம்யூனிஸ்ட் இயக்கத்திற் குள் ஏற்பட்ட வலது மற்றும் இடது திரிபு களுக்கு எதிராக ஜோதிபாசு மற்ற தோழர் களுடன் இணைந்து நடத்திய போராட் டத்தின் விளைவாக, இறுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப் பட்டது. அது, கட்சியின் குறிக்கோளை அடைவதற்கு நாடாளுமன்றத்திற்கு உள் ளேயும் வெளியேயும் நடத்த வேண்டிய நட வடிக்கைகளையும் போராட்டங்களையும் மிகச் சரியான முறையில் பொருத்தியது. ஜோதிபாசு, மக்களுக்கான போராட்டங் களை முன்னெடுத்துச் செல்வதற்கும், மக்களுக்கு அதிக அளவில் நிவாரணங் களைப் பெற்றுத் தருவதற்கும் நாடாளு மன்ற ஜனநாயகத்தையும், அதன் நிறு வனங்களையும், அதன் அமைப்பு களையும் உபயோகப்படுத்திக் கொள்வ தில் மிகச் சிறந்து விளங்கினார்.
1977இல் முதல்வராக உறுதிமொழி எடுத்தபின் ஜோதிபாசு ஆற்றிய முதல் உரையின்போதே, “இடது முன்னணி அரசாங்கமானது ஆட்சி அதிகாரத்தைப் பெறவில்லை, மாறாக மக்களுக்குச் சேவை செய்வதற்கான அலுவலகத் தையே பெற்றிருக்கிறது” என்று பிரகட னம் செய்தார். அவர் மேலும், தன்னுடைய அரசாங்கமானது தலைமைச் செயலகத் திலிருந்து மட்டும் செயல்படாது, மாறாக மக்கள் மத்தியிலிருந்தே செயல்படும் என்றும் பிரகடனம் செய்தார். அதன் அடிப்படையில்தான் தொழிலாளர், விவ சாயிகள் போராட்டங்கள் நடைபெறும் போது, அதனை ஒடுக்க காவல்துறை யினர் அனுப்பப்பட மாட்டார்கள் என்றும், மக்களுக்கு எதிராக எக்காலத்திலும் காவல்துறையினர் பயன்படுத்தப்படமாட் டார்கள் என்றும் பிரகடனம் செய்தார். இவ் வாறு அவர் அளித்திட்ட உறுதிமொழிகள் அனைத்திற்கும் கடைசி வரையில் அவர் உண்மையாக இருந்தார்.
இத்தகைய புரிதலின் அடிப்படையில் தான், ஜோதிபாசு தலைமையிலான அர சாங்கம் நிலச்சீர்திருத்தங்களைத் தொடங்கியது. இது, வங்கத்தின் கிராமப் புறங்களின் முகத்தோற்றத்தையே மாற்றி அமைத்தது என்று, இன்று பலராலும் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. பஞ்சா யத்து அமைப்புகளுக்கு அதிக அளவி லான அதிகாரங்களை வழங்கியதன் மூலம் மக்களுக்கான உரிமைகளை வழங்கியதில் மட்டுமல்ல, மக்களை ஜன நாயக நடைமுறையில் பங்குபெற வைப் பதிலும் வெற்றி பெற்றார். மேற்கு வங்கத் தில் பஞ்சாயத்து அமைப்புகள் இவ்வாறு ஜனநாயகப்படுத்தப்பட்டு மகத்தான முறையில் வெற்றிபெற்றதை அடுத்து, அதன்பிறகு பத்தாண்டுகள் கழித்துத் தான், ராஜீவ் காந்தி தலைமையிலான மத் திய அரசு, பஞ்சாயத்து ராஜ் அமைப்பு களை நாடு முழுவதுக்கும் கட்டாய மாக்கி, அரசியலமைப்புச் சட்டத்திருத் தம் கொண்டு வந்தது.
மத்திய-மாநில உறவுகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜோதிபாசுவும் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களின் மாநாட்டை 1970 களிலும் 80களிலும் கூட்டியதானது, நாட் டிலுள்ள மாநிலக் கட்சிகளின் அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தியதோடு, மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதியாதாரங்களை அதிகப் படுத்திடவும், அதிகாரங்களைப் பரவ லாக்கிடவும் வழி வகுத்தன. இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்திட, மத்திய- மாநில உறவுகள் முறையாக மாற்றியமைக் கப்பட வேண்டிதற்கான போராட்டம் இன் றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இவ்வாறு மூன்று முக்கிய பிரச்சனை களில் ஜோதிபாசு முன்னணியில் இருந்து நாட்டிற்கு வழிகாட்டியிருக்கிறார் என்பது மட்டுமல்ல, மேலும் பல வகை களிலும் அவர் முன்னணியில் இருந்தி ருக்கிறார். உதாரணமாக, நாட்டிலேயே முதன்முறையாக சுற்றுப்புறச் சூழலுக் காக தனி அமைச்சகத்தை உருவாக் கியது அவர்தான்.
இவை எல்லாவற்றையும்விட, ஜோதி பாசுவின் மகத்தான பண்புக்கூறுகளில் தலையாயது, மக்களை அவரிடம் கவர்ந் தது, அவர் மக்கள் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான். “மக்களிடம் செல்லுங்கள், நாம் என்ன செய்கிறோம் என்பதை மக்களிடம் எப் போதும் விளக்கமாகக் கூறுங்கள்” என்று அடிக்கடி அவர் கட்சியையும், முன்ன ணித் தோழர்களையும் வலியுறுத்திக் கொண்டே இருப்பார். இந்திய அரசியல மைப்புச் சட்டத்தில் மாநில அரசுகளுக் குப் போதிய அதிகாரங்கள் இல்லாததா லேயே, நாம் செய்ய விரும்பும் அனைத் தையும் நம்மால் மக்களுக்கு ஏன் செய்ய முடியவில்லை என்பதை மக்களுக்குப் புரிய வைத்து, அவர்களின் நம்பிக்கை யைப் பெற வேண்டும் என்று கூறுவார். தான் “மேற்கு வங்க சோசலிசக் குடிய ரசு”க்குத் தலைமை தாங்கி ஆட்சிபுரிய வில்லை என்றும், ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் ஒரு ‘மேம் பட்ட நகராட்சி’க்கு உள்ள அதிகாரங் களைவிட பெரிதாக ஒன்றும் தனக்குக் கிடையாது என்றும் அடிக்கடி அவர் கூறு வார். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பின், நம் குறிக்கோள்கள் என்ன என்று அவர்களிடம் கூறுங்கள் என்றும், நமக் குள்ள வரையறையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நம்மால் செயல்பட முடியவில்லை என்பதையும், அவர்களுக்கு விளக்குங்கள் என்றும் கூறுவார். இதன்மூலம் நம் வரையறை களை அவர்கள் புரிந்துகொள்வது மட்டு மல்ல, நாம் நடத்தும் போராட்டத்தில் நம் முடன் இணைந்துகொள்வார்கள் என் றும் கூறுவார். இவ்வாறு அவர் மக்கள் மீது தன் இறுதிமூச்சு வரை நம்பிக்கை வைத் திருந்தார். மக்கள் மத்தியில் அவருக் கிருந்த நம்பகத்தன்மையின் பலம் இது. இதனால்தான் மக்களும் எந்தக் காலத்தி லும் அவரை சந்தேகத்துடன் வினா எழுப் பியதில்லை.
மக்களுக்கு ஜோதிபாசு மீது அளப்பரிய பிரியம் ஏற்படுவதற்கு வேறு பல காரணிக ளும் உண்டு. எவ்விதச் சூழ்நிலையிலும் அச்சத்திற்கு இடம் கொடுக்காத அஞ்சா மைக் குணம் அவரிடம் இருந்தது அவற் றில் ஒன்று. 1967இல் முதல் ஐக்கிய முன் னணி அரசாங்கக் காலத்தின்போது, காவல்துறையினரில் ஒரு பகுதியினர், தங்களுடைய துப்பாக்கி மற்றும் ஆயுதங் களுடன், ஒரு சில கோரிக்கைகளுக்காக சட்டமன்றத்திற்குள் அணிவகுத்து வந் தார்கள். சட்டமன்ற பேரவைத் தலைவ ரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பயத்துடன் ஓடிவிட்டார்கள். ஜோதிபாசு மட்டுமே தன்னுடைய அறையில் அமர்ந்து பணிகளைச் செய்து கொண்டிருந்தார். சில காவல்துறையினர் அவர் மிகவும் அமைதியாகப் பணிகளைச் செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச் சியடைந்தனர். ஜோதிபாசு அவர்களிடம், “நீங்கள் ஏதேனும் செய்ய விரும்பினால் முதலில் உங்கள் சீருடையைக் களைந்து விடுங்கள்” என்றும், “நீங்கள் சட்டமன்றத் திற்குள் உங்களிடமுள்ள ஆயுதங்களைக் கொண்டு எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஆனால் உங்கள் செயல் கள் குறித்து,வெளியே காத்துக் கொண்டி ருக்கும் மக்களுக்குப் பதிலளித்துவிட்டுத் தான் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும் என்பதை மறவாதீர்கள்” என்று எச்சரித் தார். இதன்பிறகு அந்தக் காவல்துறையி னர் பயந்து பின் வாங்கிவிட்டனர்.
மற்றொரு சம்பவம், 1970 மார்ச் 31இல் நடைபெற்றது. ஜோதிபாசு பாட்னா ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கும் சமயத்தில் ஒருவன் அவரைத் துப்பாக்கி யால் சுட்டான். ஆயினும் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர் ஒருவர் - அலி இமாம் என்பவர் - திடீரென்று அவருக்கு முன்னே வந்து அவருக்குக் கைகொடுத்திருக்கி றார். கொலையாளி சுட்ட துப்பாக்கிக் குண்டு அவர்மீது பாய்ந்து அவர் அவ் விடத்திலேயே இறந்துவிட்டார். ஜோதி பாசு சிறிதுகூட அஞ்சவில்லை. அவர் இமாம் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, இமாம் இறப்பினால் அவர் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்குத் தேவையான இழப் பீட்டிற்கு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, எதற்காகப் பாட்னாவிற்கு வந்தாரோ அந் தக் கூட்டத்திற்கு உரையாற்றச் சென்று விட்டார்.
மார்க்சியத்தைக் கற்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் முன்மாதிரி யாகத் திகழ்ந்தார். 2003 ஏப்ரல் 4 அன்று அவர் இறப்புக்குப்பின் தன் உடலை மருத்துவ அறிவியலுக்குத் தானம் அளிக் கையில் கூறிய சொற்களைவிட வேறெது வும் சிறப்பாக அவரை வெளிப்படுத்தாது. அப்போது அவர், “ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் என் இறுதிமூச்சு வரை இந்த மனிதகுலத்திற்குச் சேவை செய்திட உறுதிபூண்டிருக்கிறேன். நான் இறந்த பிறகும் மக்களுக்குச் சேவை செய்திட ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு உள்ள படியே மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
ஜோதிபாசு தன் வாழ்நாள் முழுவதும் காட்டிய வெல்லமுடியாத வீர உணர்வு களை அவர் இறக்கும் தருவாயிலும் நம் மால் நன்கு காணமுடிந்தது. 96 வயதில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப் பட்டபோது, மருத்துவ உலகம், இயற் கையாக, அவரைக் கைவிட்டுவிட்டது. ஆயினும், ஜோதிபாசு அவர்கள் அனை வரையும் ஆச்சரியத் திற்குள்ளாக்கினார். பதினேழு நாட்கள், போராட்டம் தொடர்ந் தது, அவரது உடல், “அவரைக் கைவிட” மறுத்துவிட்டது. “கைவிடு என்று எப்போ தும் கூறாதே” என்கிற அவரது வாழ்வின் உணர்வு கடைசி நிமிடம் வரை நீடித்தது.
ஓர் உருதுக் கவிஞன் கூறுவது போன்று,
“எத்தனை தருணங்கள் உன் வாழ்வில் இருந்தன என்று கேட்காதே
ஒவ்வொரு தருணத்திலும் நீ எப்படி வாழ்ந்தாய் என்று கேள்’’
பீப்பிள்ஸ் டெமாக்ரசி, அவர் விட்டுச் சென்றுள்ள லட்சியத்தை முன்னெடுத் துச் செல்ல தங்கள் உறுதியைப் புதுப் பித்துக் கொண்டு, தன் நெஞ்சார்ந்த அஞ்சலியைத் தன் நிறுவன ஆசிரியருக் குத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழில்:ச.வீரமணி