Thursday, January 3, 2019

126 விமானங்கள் வாங்குவதற்குப் பதிலாக 36 விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? ரபேர் ஒப்பந்தத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி கேள்வி



126 விமானங்கள் வாங்குவதற்குப் பதிலாக 36 விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்?
ரபேர் ஒப்பந்தத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி கேள்வி
புதுதில்லி, ஜன.3-
ரபேல் ஒப்பந்தத்தின்கீழ் 126 விமானங்கள் வாங்குவதற்குப் பதிலாக, 36 விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதன்கிழமையன்று மக்களவையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதனைத் துவக்கி வைத்து ராகுல் காந்தி பேசியதாவது:
இந்த விவாதம் ரபேல் ஒப்பந்தம் தொடர்பானது. ஆனால் அதன்மீதான விவாதத்தை நடத்தவிடாது அஇஅதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, பாஜகவினருக்கு சேவகம் செய்வது, வருத்தமளிக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து அரசாங்கத்திடம்  கேள்வி கேட்பதே என்  வேலையாகும்.
நேற்று பிரதமர் அளித்திட்ட நேர்காணலின் ஒரு பகுதியைப் பார்த்தேன். சுமார் ஒன்றரை மணி நேரம் பல விஷயங்கள் குறித்துப் பதில்களைக் கூறினார்.  அப்போது அவர், “ரபேல் தொடர்பாக யாரும் என்னிடம் எதுவும்  கேட்கவில்லை,” என்று கூறினார். இது உண்மையல்ல என்று இந்த அவையில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஒரு நாடகம் போன்று நடைபெற்ற அந்த நேர்காணலில் பேசிய பிரதமர் அவர்கள், அந்த சமயத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அடிப்படைக் கேள்விகளுக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்று ஒட்டுமொத்த நாடும்  கேட்டுக் கொண்டிருக்கிறது.  இந்தக் கேள்விகளை நாம் பிரதமரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மூன்று முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. முதலாவது, ஒப்பந்தம் தொடர்பான நடைமுறையைப் பொறுத்தது. இரண்டாவது, அதன் விலை நிர்ணயம். மூன்றாவது, இது யாருக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதாகும். இக்கேள்விகளை நாங்கள் தொடக்கத்திலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம் விமானப்படையினரின் சுமார் எட்டு ஆண்டு கால அர்ப்பணிப்புடன் கூடிய வேலைகளின் காரணமாக ரபேல் விமானம் தெரிவு செய்யப்பட்டது. நம் விமானப் படைக்கு 126 விமானங்கள் தேவை. இப்போது நம்முன் எழுந்துள்ள கேள்வி என்னவெனில், விமானப்படைக்குத் தேவையான 126 விமானங்களை 36 என்று மாற்றியது யார்? நாட்டின் பாதுகாப்பின் தேவையுடன் இந்த மாற்றம் செய்யப்பட்டதா? விமானப்படையினர், “எங்களுக்கு 126 விமானங்கள் தேவையில்லை, 36 விமானங்கள் மட்டும் போதும்” என்று கேட்டுக்கொண்டார்களா? இது ஒரு கேள்வி.
நமக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்பட்டதால் 36 விமானங்கள் வாங்கப்பட்டதாக இப்போது சால்ஜாப்புகள் கூறப்படுகின்றன. அப்படி அவசரமாகத் தேவைப்பட்டது என்றால், ஏன் இன்னமும் ஒரு விமானம் கூட இந்தியாவில் தரையிறங்கவில்லை? இது தொடர்பாக நடைபெற்ற ஒட்டுமொத்த நடைமுறையும்,  ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் வேறுபாதையில் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு மீதான அமைச்சரவைக் குழு அதிகாரம் அளித்திட வேண்டும். அப்படி எந்த ஒப்புதலையும் அது அளித்திடவில்லை. எனவே, என்னுடைய அடிப்படைக் கேள்வி, ஏன் முந்தைய 126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம், புதிய 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமாக மாற்றப்பட்டது?
ரபேல் விமானங்கள் ஒவ்வொன்றும் 526 கோடி ரூபாய்க்கு வாங்கப்படுவதற்காக ஐமுகூ அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டிருந்தது என்பதை அனைவரும் அறிவோம். இப்புதிய ஒப்பந்தத்தின்படி ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாயிலிருந்து 1,600 கோடி ரூபாயாக மாறியிருக்கிறது. ஏன் இப்படி விலை உச்சத்திற்குச் சென்றது? நம் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் கடந்த 70 ஆண்டுகளாக விமானங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இது தயாரித்த ஜிநாட் (Gnat) விமானம் மூலமாகத்தான் 1965 யுத்தத்தில் வெற்றி பெற்றோம். சு-30 விமானம், மைரேஜ் விமானம், எம்ஐஜி-27 விமானம் என அனைத்தையும் கட்டியது, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம்தான். இவ்வாறு எச்ஏஎல் மாபெரும் வரலாறு படைத்திருக்கிறது. நாட்டில் விமானத் தொழில்பிரிவில் ஒரு வலுவான எதிர்காலத்தை அது பெற்றிருக்கிறது. அது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைகளை அளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு எச்ஏஎல் நிறுவனம் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு விமானங்கள் உற்பத்தியில் மாபெரும் வெற்றிகளை ஈட்டியிருக்கிறது.
ஆனால், மறுபக்கத்தில் என்ன நிலைமை?  வியாபாரத்தில்  தோல்வியடைந்து சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் இருக்கும் ஒரு நபர்,  பத்து நாட்களுக்கு முன்பு, புதிதாகத் ஒரு கம்பெனியைத் துவங்குகிறார்.  அவரிடம் இந்த ஒப்பந்தம் ஒப்படைக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி, இந்தியப் பிரதமர்தான் இந்த ஒப்பந்தத்தை அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டதாகக் கூறுகிறார். (குறுக்கீடுகள்)
எனவே எனது அடுத்த கேள்வி, “அன்பான பிரதமர் அவர்களே, ஏன் இந்த ஒப்பந்தத்தை உங்களின் இனிய நண்பருக்கு கொடுத்தீர்கள்?” இந்த ஒப்பந்தத்திற்காக அவர், நம் நாட்டின் கருவூலத்திலிருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயைப் பெறுகிறார்.
இங்கே நம் பாதுகாப்பு  அமைச்சர் அஇஅதிமுகவினரின் பின்னால் உட்கார்ந்துகொண்டும், மறைந்துகொண்டுமிருப்பதைப் பார்க்கிறேன். அவர் ஒளிந்துகொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இப்போது அவர் புன்னகைப்பதையும் பார்க்க முடிகிறது.
இதே பாதுகாப்பு அமைச்சர்தான், முன்பு விலைநிர்ணயம் செய்யப்படுவது ரகசியமான ஒன்று என்று கூறியிருந்தார்.
ரபேல் ஒப்பந்தத்தில் ஏராளமான ஓட்டைகள். நேற்று ஒன்றரை மணி நேரம் அவர் அளித்திட்ட நேர்காணலில் ரபேல் ஒப்பந்தம் குறித்து ஐந்து நிமிடங்கள்கூட பேசவில்லை. இப்போது இங்கே அவைக்கு வந்து இது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில்சொல்லக்கூடிய தைர்யம் அவருக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சர், அஇஅதிமுக உறுப்பினர்களின் பின்னே ஒளிந்துகொள்கிறார். பிரதமரோ அவரது அறையில் ஒளிந்துகொள்கிறார்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


காஷ்மீரில் பதற்றநிலைமை நீடிப்பதையே பாஜக விரும்புகிறது
மாநிலங்களவையில் டி.கே. ரெங்கராஜன் பேச்சு
புதுதில்லி, ஜன. 4-
காஷ்மீரில் பதற்றநிலைமை நீடிப்பதையே பாஜக விரும்புகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2018 டிசம்பர் 19 அன்று குடியரசுத்தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டிருப்பதற்கு ஏற்பளிப்பு அளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்மீது டி.கே. ரெங்கராஜன் பேசியதாவது:
இந்தத் தீர்மானம், காலம் கடந்த ஒன்றாக மாறியிருக்கிறது. மத்திய அரசின் கட்டளைக்கிணங்க, ஜம்மு-காஷ்மீர் ஆளுநர், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தைக் கலைத்த நடவடிக்கை, சட்டவிரோதமான ஒன்று என்றும் மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கையே என்றும் நான் கருதுகிறேன். ‘எதிரெதிர் தத்துவங்களை’க் கொண்ட கட்சிகள் ஒரு பொருத்தமான அரசாங்கத்தை அமைத்திட முடியாது என்று தீர்மானிக்கிற வேலை ஆளுநருக்குக் கிடையாது. ஆனால், இந்த அளவுகோலின்படி பார்த்தால், பிடிபி-பாஜக அரசாங்கம் அமைந்திடவும் அங்கே அனுமதித்திருக்கக் கூடாது. ஏனெனில் இவ்விரண்டுமே வெவ்வேறான தத்துவங்களின் அடிப்படையில் செயல்படுபவைகளாகும். ஆனாலும், எப்படியாவது பாஜக, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பியது. எல்லா விஷயங்களிலும் நீங்கள் நுழைவதற்கு விரும்புகிறீர்கள். அங்கிருந்த நிலைமையை நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள்.
ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும்? பெரும்பான்மை இருப்பதாகக் கூறும் அரசியல் கட்சியின் தலைவரிடம் அவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.  அதைத்தான் ஆளுநர் செய்ய முடியும். தயவுசெய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதித்திடுங்கள். இந்த வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் பொம்மை தீர்ப்பு ஏற்கனவே உங்களுக்கு அறிவுரை நல்கியிருக்கிறது. நீங்கள் சட்டமன்றத்தை மதித்திருக்க வேண்டும்.
மோடி அரசாங்கம், இவ்வாறு எதேச்சாதிகார நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், அம்மாநிலத்தில் உள்ள நிலைமையை மேலும் சிக்கலானதாகவும் மோசமானதாகவும் மாற்றியிருக்கிறது. இது தொடர்பாக இந்தப் பக்கத்தையோ அல்லது அந்தப் பக்கத்தையோ குறைகூறுவதில் பொருளேதுமில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டிருப்பது காஷ்மீர் மக்கள்தான். கடந்த மூன்றாண்டுகளில் 300 பேர் இறந்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இது தொடர்பாக எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. எவரும் இதற்குப் பொறுப்பாக்கப்படவில்லை. இத்தகைய நிலைமை, அங்குள்ள மக்களை மேலும் அந்நியப்படுத்துவதற்கே இட்டுச்சென்றிருக்கிறது.
பாஜக, மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி, மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்கிற தங்களுடைய பெரிய அளவிலான அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு உதவுவதற்காக, இதேபோன்று நிலைமை அங்கே நீடிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறது. அங்கே எப்போது தேர்தல் நடத்த இருக்கிறீர்கள்? மக்களவைத் தேர்தலுடனா? அல்லது அதற்கு முன்பா? மாண்புமிகு உள்துறை அமைச்சர் இதுகுறித்து எங்களுக்குக் கூற வேண்டும் என்று விரும்புகிறேன். தயவுசெய்து தேதியைக் கூறுங்கள். கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா என்றும் எங்களுக்குக் கூறுங்கள். கடந்த மூன்றாண்டுகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவை தொடர்பாக பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்படுமா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து உண்மையைக் கூறுங்கள். அங்கே ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு எவரும் அரசியல்ரீதியாகப் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. காஷ்மீர் பிரச்சனைகளைத் தவறாகக் கையாண்டிருப்பது இந்தியாவையே புண்படுத்திக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் பிரச்சனையை நீங்கள் கையாண்ட விதத்திற்கு எங்கள் கட்சி கண்டனம் செய்திருக்கிறது.
இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் கூறினார்.
(ந.நி.)


SHRI T.K. RANGARAJAN (TAMIL NADU): Now, this Resolution has become here a fait accompli. The action of Jammu and Kashmir Governor, dissolving the Legislative Assembly at the behest of the Centre, in my opinion, is an illegal and unconstitutional step. The Governor has no business to decide that parties with 'opposing ideologies' cannot form a suitable Government. But by this yardstick, the PDP-BJP Government has got different ideologies. These different ideologies Government should not have been allowed to be formed after the elections. But somehow or the other, the BJP wanted to capture power. You want to infiltrate in everything. You used that situation. What happened? All that the Governor can do is to ask the leader who is staking claim with a majority support to prove that majority on the floor of the House. You please respect the Supreme Court Judgements. The Bommai Judgement has already given you how to do this job. You have to respect the Assembly. Sir, the Modi Government has, by taking this authoritarian measure, further complicated and worsened the situation in the State. There is no meaning in blaming this side or that side. The real sufferers are the Kashmiri people. Over 300 civilians have died in the last three years. Unfortunately, no enquiry has been conducted into these deaths and no one responsible has been held accountable. This situation has only led to further alienation of the people. Sir, the BJP is interested in the continuation of the situation to aid their larger political agenda of communal polarization in view of the General Elections. Here, I request the Home Minister to tell us when you are going to conduct the elections, with the Parliamentary elections or before that. Please tell us the date. Please tell us whether you are going to conduct an enquiry into the deaths of those who are killed. Innocent people have been killed in the past three years. I want to know whether you would conduct an enquiry with a sitting Supreme Court Judge. Please tell us the fact. There is no political accountability, no responsibility for the mess it has created. The gross mishandling of these issues is hurting India. Our Party is condemning the way you have handled the Kashmir issue. With this, I request you to conduct the enquiry. Please also tell us when you are going to conduct the elections. Thank you. (Ends)


Monday, December 24, 2018

நாகரீகமென்றால் என்ன? - தந்தை பெரியார்


நாகரீகமென்றால் என்ன? - தந்தை பெரியார்

அன்பார்ந்த முகநூல் நண்பர்களுக்கு,
வணக்கம். தீக்கதிர் நாளிதழுக்காக அக்டோபர் புரட்சி குறித்து தந்தை பெரியார் கூறியவற்றை குடிஅரசு இதழ்களில் தேடியபோது, நாகரிகம் குறித்து அவர் ஆற்றிய உரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
என் உள்ளத்தில் திருவள்ளுவர் குறித்தும் தந்தை பெரியார் குறித்தும் என் ஆழ்மனதில் நன்கு பதித்ததில் என் அண்ணனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. பல திருக்குறள்களை அவர் பொருளோடு கூறி என் மனதில் பதிய வைத்தார். அவ்வாறு கூறும்போது, தந்தை பெரியாரையும் ஒரு குறளோடு ஒப்பிட்டார்.
தந்தை பெரியாரிடம் யார் வந்து எது கொடுத்தாலும் அவர் கொடுத்தவரின் மனம் கோணாதவாறு அதை வாங்கி சாப்பிடுவாராம். அதற்கு அவர் ஒரு குறளை ஒப்பிட்டிருப்பார்.
பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என்பதே அந்தக் குறள்.
இது ஒருபுறமிருக்க குடி அரசு இதழ்களை நான் மேய்ந்தபோது. நாகரிகம் என்றால் என்ன என்று ஓர் உரை நிகழ்த்தியிருந்ததைப் பார்க்க முடிந்தது. அதில் தந்தை பெரியார் அவர்கள் அந்தக் குறளை மேற்கோள்காட்டியிருப்பார்.
அதை நான் படித்தபோது நான் அடைந்த இன்பத்தை, முகநூல் நண்பர்களும் அடையட்டும் என்று இங்கே பதிவு செய்திருக்கிறேன்.
தோழமையுடன்
ச. வீரமணி.


நாகரீகமென்றால் என்ன?
தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய நண்பர் கூறினார். நான் எப்பொழுதும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான - முடிவான பதில் சொல்லக் கூடிய சகலகலாவல்லவனென்று எண்ணி விடாதீர்கள். நான் சொல்லும் அபிப்பிராயம் தான் முடிவானதென்றோ, அதுவே முடிந்த ஆராய்ச்சியின் சரியான கருத்து என்றோ, நீங்கள் கருதக் கூடாது.
விவகாரம், நியாயம் என்ற இரண்டு வார்த்தைகளையும் உபயோகப் படுத்தும் விதத்தை சரியாக உணர்ந்து கொள்ளும்படி கோருகிறேன்.
நியாயம் வேறு-விவகாரம் என்பதும் வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக் கத்தையும், தந்திர சூக்ஷிகளையும், பணச் செல்வாக்கையும் பொருத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தி இல்லாத காரணத் தால்-பேசும் திறமை, எடுத்துக்காட்டும் அனுபோகம் ஆகியவை இல்லாத காரணத்தால்-ஒரு விஷயத்தைப் பற்றி வாதித்துத் தோல்வியுற்று விட்டால் அது நியாயம் கண்டு பிடித்தாகிவிடுமா? அது போல் உங்கள் வாய் அடங்கும்படி நான் பதில் சொல்லி விட்டதாலேயே நான் சொன்னது சரி என்று சொல்லிவிட முடியாது. உங்களுக்கு எடுத்துச் சொல்லி மெய்ப்பிக்க முடியாததாலேயே நான் சொன்னது தப்பு என்றும் சொல்லிவிட முடியாது. ஆதலால் எனக்குத் தெரிந்த பதில் சொல்லுகிறேன். அதை ஆராய்ச்சி செய்து பிறகு ஒரு தக்க முடிவுக்கு வாருங்கள்.
இன்றைய தினம் இங்கு பேச எடுத்துக் கொண்ட விஷயம் “இந்தியா வின் தற்கால நாகரீகம்” என்பதாகும். இது ஒரு கூடாத விஷயமல்ல. மிக்க ருசிகரமானதும் விரிந்த பொருள்களைக் கொண்டதுமான நல்ல விஷயத் தையே நீங்கள் இங்கு பேச எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
“நாகரீகம்” என்கின்ற வார்த்தைக்குப் பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் ‘நாகரீகம்’ என்பதற்கு ஒரு தனிப் பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ் குறளில் நாகரீகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோகப்படுத்தப்பட்டி ருக்கிற தாக நான் 10, 20 வருஷங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாக்ஷண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டி ருப்பதாகவும் எனக்கு ஞாபகம். நாகரீகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லா பாவனை களிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கிறதென்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில் தான் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு ஸ்திரிகளும்-தெருக்களில் தெருக் கூட்டு வது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்த காலத்தில் துணிகளைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரீகம். இப்பொழுதோ என்றால் ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரீகமென்று தான் கருதுகிறோம். நாம் இவைகளைப்பற்றி எல்லாம் பேசும் பொழுதும் யோசிக்கும் பொழுதும் எந்தவித பற்றுதலும் இல்லாமல் அதாவது ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டு விட்டு  சுயேச்சையாக சீர்தூக்கிப் பார்த்தால் தான் விஷயங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுது தான் விளங்கும். ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவ சிவா என்று ஜெபிப்பது தான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்த மானங்கள் மேல் சொன்ன விஷயத்தை கேலி செய்கிறது. புருஷன் பெண்ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக் கொண்டா லும், முன்பு கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமையென்று நடந்து வந்த பெண்களைப் பற்றி பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால் இன்றோ புருஷனிடம் மனைவி யானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக் கிரதையாயிருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்த°தும் சம உரிமையும் சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண் களையே நாகரீகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம்.
முன்பு புராணத்தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பேசுவது தான் வித்வத் தன்மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகி பரிகசிக் கத் தக்கதாக ஆகிவிட்டது.
புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கையிருந்ததை சிலாகித்துப் பேசி னோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியக்ஷமாக எதையும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும்-விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுணர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம். நாகரீகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும்-காலப் போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. காலதேச வர்த்தமான-வழக்கத்தையேயொட்டி “நாகரீகம்” காணப்படுகிறது. காலப்போக்கானது எந்த தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும்-புரட்சி ஏற்படவும் செய்கிறது. மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர் கள். எது நாகரீகமென்று கருதுகின்றோமோ அது பெருத்த அஜீர்ணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக்கொண்டு போகத்தான் செய்கின்றது. ஒரு விஷயமானது வாய் சாமர்த்தியத்தினால் செலவாணியாகிவிடும். அது மெய்யோ-பொய்யோ சரியோ-தப்போ எப்படியும் இருக்கலாம். நாம் ஏன் எதற்காக உழைத்துப் பாடுபடவேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆகவேண்டுமா? நாகரீகம் என்பது சதா உழைத்துத் தான் உண்ண வேண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்து மக்கள் சமூகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரீகமாக கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம். இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரீகமாக பாவிக்கப் பட்டி ருந்தது. பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப் படுத்தப்பட்டு அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு இராட்டை சுற்றுவதும்-தக்ளி நூல் நூற்பதும் நாகரீகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம், ஜாதி) பற்றுதலுமில்லாத பொதுமனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது. நாம் ஓர்காலத்தில் தேசம், தேசீயம்-தேசப்பற்று என்பதை நாகரீக மாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளையெல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் மக்கள்அபிமானம் என்று கருதுவதையே பெரிதும் நாகரீக மாகக் கருத முன் வந்துவிட்டோம். ஒருகாலத்தில் நாகரீகமாக கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பாராட்டிக்கொண்டு ஒவ்வொரு வரும் தாங்கள் அதிக மேல் சாதிக்காரனாவதற்குச் சைவ-வைணவப் போக்கைப் பற்றிக் கொண்டு பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தங்கள் மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்திகெட்ட தனமென்றும், முற்போக்குக்கு முரணான தென்றும் கூறி வெகுவாகக் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனித் தத்துவம் நாகரீகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக ஒரு தனித்தனி ஜாதி நன்மையும்-தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப் பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும் ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்கு பொல்லாங்கு என்ப தையும் நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம். தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால் அறிவு ஆராய்ச்சியால் நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக் கிறோம். உதாரணமாக வியாபாரிகளை-மக்கள் சமூகத்தின் நலனைக் கொடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவா தேவிக்காரர்களை-மனித சமூக நாசகர்த்தாக்களென்றும் மத ஆதிக்கங் கொண்ட வர்க்கத்தினர்களையும்-மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக் கின்றோம். நாகரீகம் என்பது பிடிபடாத ஓர் விஷயமென்று முன்பே கூறினேன். நம்நாட்டு பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சீலைகட்டுகிறார் களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கியிருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களை சேர்த்து முடிந்துகொள்ளு கிறார்களென்றும், நாம் சாப்பாட்டுக்கு தினம் ஒரு இலை  எப்படி சிலவு செய்கிறோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப் பட்டு நம்மவர்களை கேட்பவரையும் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களின் செய்கையை சரியாக உணராததினால் சிலதை ஆச்சரியமாக கருத நேரிடுகிறது. நம்மிடையேயுள்ள சாதி அபிமானம் சொந்தகார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலையவேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாதுகாந்தியார் மேனாட்டில் முழங்கால் துண்டோடு-போதிய ஆடை யின்றி போன பெருமையைப் பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானதாகும் சௌகரியத்திற்காவும்- நன்மைக்காவும் அங்கு அதிக ஆடைகளை பந்தோபஸ்துக்காக அணிந்து கொள்ளாமல் பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக குளிரில் விரைத்துபோக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்? புதிய எண்ணங்களும் புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரிய பலனை வீணாக்காது பகுத்தறிவை மேற்போட்டுக்கொண்டு ஜனசமுதாய நன்மையை தேடி பாடு பட முன்வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களும்கூட தங்களுடைய போக்கை மாற்றிக்கொண்டு முயற்சி மெய்வருத்தகூலி தரும் என்றுசொல்லி வருகிறார்கள். ஆகவே தோழர்களே! நீங்கள் தன் நம்பிக்கைகொண்டுமக்களின் விடுதலைக்கு சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படை யாகக்கொண்டு போராட வாருங்கள்.
---