Wednesday, June 24, 2020

தமிழ்ச் சுருக்கெழுத்து-முதுநிலை-2012 பிப்ரவரி









2012 பிப்ரவரி
தலைவர் அவர்களே,
மின் வாரிய நிதிநிலை அறிக்கையின் மீது என் கருத்துக்களைச் சொல்ல விரும்புகின்றேன்.
மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்கள் இ/த்துறையிலேயே அலுவலராகப் பணியாற்றி, இத்துறைக்கான அமைச்சர் பொறுப்பையும் ஏற்று, செயல்பட்டுக் கொண்டு வருகிறார். அவருடைய பதவிக் காலத்தில்// தமிழகத்தில் மின்வெட்டு என்ற அவலநிலையே இருக்கக்கூடாது என்று பொதுமக்கள் மிக அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். இயற்கை சூழ்நிலை காரண///மாக நமக்கு ஏற்படுகிற மின்வெட்டு என்ற அவலநிலையைத் தவிர்க்க, நாம் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோ(1)ம் என்பதை மறந்துவிட முடியாது. நமது மாநிலம் பருவ மழையையே நம்பி இருக்கும் மாநிலம். பருவ மழையால் அடிக்கடி ஏமாற்றப்பட்டு, வருகிற மாநி/லம் நமது மாநிலம். எனவே, இயற்கையின் நுட்பமான, இந்த நிலையை அடிப்படையாக வைத்து, மின்வெட்டு இனி இல்லாத வகையில், மாற்று ஏற்பாடுகளை, நாம் பரிசீ//லனை செய்து, மின் தட்டுப்பாட்டை நிரந்தரமாகவே, போக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கான மாற்று ஏற்பாடுகளைக் குறித்து பல்///வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நாம், அனல் மின் சக்தி மூலம் மின் பற்றாக்குறையைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதே (2) சமயத்தில், அணுசக்தியை எந்த அளவுக்குப் பயன்படுத்தி, நாம் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என்பதையும், ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்/ என்பதும் உண்மை. அதுபோல், சூரிய வெப்பத்தையும் மற்றும் கடல் அலையையும் பயன்படுத்தி அதிலிருந்து, ஆக்க சக்தியை உருவாக்கி, அவற்றின் மூலமாக//வும் எவ்வாறு இந்த நாட்டு மக்களுக்கு நாம் பயன் கிட்டச் செய்ய முடியும் என்பதையும் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எ///ன்பதை அரசின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
அடுத்து, கிராமங்களில் உள்ள தெரு விளக்குகள் இப்போதும் சரியாக எரிவது இல்லை. இப்ப(3)டிப்பட்ட புகார் ஏற்கெனவே, இருந்துதான் ஊராட்சி ஒன்றியங்களின் பொறுப்பிலிருந்து தெரு விளக்குகளைப் பராமரிக்கும் பொறுப்பை மின்வாரியமே ஏற்/றுக் கொண்டது. ஆனால் இப்போதும் இக்குறைபாடு பல இடங்களிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டங்களில் இக்குறை//பாடு, பரவலாகச் சொல்லப்படுவது தற்போது வழக்கமாகி விட்டது. இந்த நிலைக்கு மின்வாரியம் ஆளாகக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்தாகும். ///
அடுத்து, குடிசைகளுக்கு ஒரு விளக்குத் திட்டம் என்பது இந்த அரசின் சிறந்த ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு, (4) மின் வசதியை உருவாக்கித் தரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக எல்லோராலும், பாராட்டப்படுகிற திட்டமாக இது இருந்தாலும், இந்தத் திட்டத்/தில் இருக்கின்ற ஒரு குறைபாட்டையும் நான் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தத் திட்டத்தின் கீழ், இணைப்புக் கோரி போடப்படும், மனு//க்களை வாங்குவதில், பொதுமக்களுக்குப் பெரிதும் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. இதற்கான விண்ணப்ப மனுக்கள், பல்வேறு விலைகளில் தனியார்க///ளால் விற்கப்படுகின்றன. மின்சார வாரியமே, இந்த மனுக்களை அச்சடித்து, குறைந்த விலையில் மின்சாரத் துறையின் மூலமாகவே விற்பனை செய்வது நல்லது. (5)


சென்னை, கேசவன் கூட்டமைப்பிலிருந்து, காஞ்சிபுரம் வருண் கூட்டமைப்பிற்கு எழுதும் கடிதம்.
அன்புடையீர்,
தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்று தகவ/ல் அறிந்தோம்.
நாங்கள் அனுப்பிய நிலத்தடி நீர் இறைக்கும் மோட்டார் பம்ப் செட்டுகளில் நான்கு சரியாக இயங்கவில்லை என்று தெரிவித்திருக்கிறீர்க//ள். நாங்கள் அவை எல்லாவற்றையும் அனுப்பும் முன்பே, இயந்திர வல்லுநர்களைக் கொண்டு, பரிசோதனை செய்து, சரிபார்த்துத்தான் அனுப்பினோம். இதுதான் எ///ங்கள் வழக்கம். எனினும் கோளாறுகள் இருப்பதாகச் சொல்லியிருப்பதால், எங்கள் இயந்திர வல்லுநரை, உடனே அனுப்பி ஆய்வு செய்யச் சொல்கிறோம். கோளா(6)றுகள் இருந்தால், அவற்றைப் பழுதுபார்த்து, அவர் ஆவன செய்வார். இருப்பினும் அவை திருப்திகரமாக இயங்காவிட்டால், அவற்றை நாங்கள் திருப்பி எ/டுத்துக்கொண்டு, அவற்றுக்குப் பதிலாக, வேறு புதிய பம்ப் செட்களை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்களிடம் இப்போது ‘சுகுணா’ பம்ப்செட்கள் விற்ப//னைக்கு உள்ளன. தேவைப்படும்போது நீங்கள் விரும்பினால், அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கெனவே நாங்கள் அனுப்பிய சரக்குகளுக்கான கிரயத்து///க்கு தாங்கள் விரைவில், ஒரு காசோலை அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் மேன்மையான சேவை தொடர்ந்து நீடிக்கும்.
தங்கள் நம்பிக்கையுள்ள, (7)     
       

No comments: