Wednesday, September 5, 2012

மதவெறி தீயை துவக்கத்திலேயே அணைத்திடுவோம்!



வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு முக்கிய தீர்ப்புகளை நீதித்துறை சமீபத் தில் வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றம், மிகவும் கொடூரமான 26/11 மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதலைப் புரிந்திட்ட கயவர்களில் ஒருவரான முகமது அஜ்மல் அமீர் காசப்பின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு, அவனுக்கு உயர்நீதிமன்றம் விதித் திருந்த மரணதண்டனையை உறுதி செய் திருக்கிறது. இக்கோரத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர், 238 பேர் கொடுங் காயங்கள் அடைந்தனர். தீர்ப்பை அளித்திட்ட இரு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, நாட் டிற்கு எதிராக யுத்தம் புரிந்துள்ள காசப் குற்றவாளிதான் என்று முடிவு செய் திருக்கிறது.

மற்றொரு தீர்ப்பினை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. 2002இல் குஜராத் மாநிலத்தில் கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதி ரான இனப்படுகொலை சம்பவங்களில் நரோடா பாட்டியா என்னும் இடத்தில் நடை பெற்ற படுகொலை சம்பவத்தில் 97 முஸ்லிம் இனத்தினர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 32 பேருக்கு தண்டனை வழங்கி யுள்ளது. சதி மற்றும் கொலைக் குற்றங்களுக் காகத் தண்டிக்கப்பட்டுள்ள நபர்களில் நரேந் திர மோடி அரசாங்கத்தின் முன்னாள் அமைச் சர்களில் ஒருவரும், நரோடா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பின ரும் அடங்குவர். பாஜகவின் பிரபலத் தலைவர் களில் ஒருவரான இவர் டெகல்கா தொலைக் காட்சி மறைமுகமாக எடுத்த பேட்டியில் தன் னைத்தானே மகாரானா பிரதாப் என்பவருடன் ஒப்பிட்டுக்கொண்டு, இவ்வாறு முஸ்லிம் மக் களை படுகொலை செய்ததற்குப் பெருமை கொள்வதாகக் பீற்றிக் கொண்டவர் ஆவார்.

இந்த தீர்ப்பானது படுகொலைகள் நடை பெற்று பத்தாண்டுகளுக்குப் பின்னர் வந் திருந்தபோதிலும், இவ்விரு தீர்ப்புகளையும் ஒருங்கே வைத்துப் பார்க்கும்போது, சமீப காலத்தில் நீதித்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக அரிக் கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, நீதித்துறை மீதான நம் பிக்கையை மீளவும் மக்களுக்கு அளித்திருக் கிறது.

நீதித்துறையின் தீர்ப்புகள் இவ்வாறு நம் பிக்கை அளிக்கும் நிலையில் இருக்கக்கூடிய அதே சமயத்தில், நாட்டில் நடைபெற்றுள்ள மற்ற பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகள் மிகவும் கவலை அளிப்பவனவாக உள்ளன. அசாம் மாநிலத்தில் போடோலாண்ட் பகுதிகளில் அரசு அளித்துள்ள அதிகாரபூர்வமான தகவல் களின் அடிப்படையில் சுமார் நூறு பேர் கொல் லப்பட்டிருக்கின்றனர். இரண்டு லட்சத்திற் கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேறி, தற்சமயம் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள 224 நிவாரண முகாம் களில் அடைக்கப் பட்டுள்ளார்கள். சமூக ஆர் வலர்கள் இந்த எண்ணிக்கையை மிகவும் குறைவானவை என்று கருதுகிறார்கள். கடந்த சில வாரங்களில் இப்பகுதிகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நடாளுமன்ற உறுப் பினர்கள் கலவரம் நடந்த பகுதிகளுக்குச் சென்று வந்ததையும் நம் ஏடுகளில் வெளி யிட்டிருக்கிறோம்.

2003இல் போடோலாண்ட் எல்லை சுயாட்சி மாவட்டங்கள் (க்ஷகூஹனு-க்ஷடினடிடயனே கூநசசவைடிசயைட ஹரவடிnடிஅடிரள னுளைவசiஉவள) உருவான பின்னர், பதற்ற நிலைமை அதிகரித்துவிட்டது. (2003இல் அசாமிலிருந்த எட்டு மாவட்டங் களில்) நான்கு மாவட்டங்கள் போடோலாண்ட் எல்லை சுயாட்சி மாவட்டங்களாக உருவாக்கப் பட்டன. இவற்றின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் போடோ இனத்தவ ராவார்கள். முன்னதாக 1993இல் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கம் போடோக்களுக்குத் தனி மாநில உரிமை அளிக்க மறுத்து வந்தது. அம்மாநிலத்தில் அவர்கள் சிறுபான்மையின ராக இருந்ததால் அவ்வாறு அரசாங்கம் மறுத்து வந்தது. அம்மாநில மக்களில் போடோக்கள் தவிர முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினர் கணிசமாக இருக்கின்றனர். போடோலாண்ட் எல்லை சுயாட்சி மாவட்டங்கள் அமைக்கப் பட்ட பிறகு, அம்மாவட்டங்களில் போடோக் கள் ஆதிக்க இனத்தினராக மாறிவிட்டதால், முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாகவும், பழங் குடியினருக்கு எதிரானவர்களாகவும் மாறத் தொடங்கி விட்டார்கள்.

இதன்காரணமாக பதற்றநிலைமை அதி கரிக்கத் தொடங்கிவிட்டது. அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படியே 1996க்கும் 1998க் கும் இடைப்பட்ட காலத்தில் போடோ - பழங் குடியினர் இடையிலான மோதல்களில் மட்டும் 1,213 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல லட்சம் பேர் இன்றும்கூட நிவாரண முகாம் களில் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.

இந்த வன்முறைச் சம்பவங்களும் அவற் றின் காரணமாக மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளும் மிக வும் விரிவான முறையில் கண்டிக்கப்பட் டிருக்கின்றன. ஆயினும், இந்த நிலைமையை மதவெறி சக்திகள் நாடு முழுவதும் மதவெறித் தீயை விசிறி விடப் பயன்படுத்திக் கொண் டிருக்கின்றன.

நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டிப்பதிலும், அமைதியை நிலைநாட்டக் கோரியதிலும், அபூர்வமான முறையில் கட்சி வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு நாடாளு மன்றத்தில் உறுப்பினர்களிடையே கருத் தொற்றுமை ஏற்பட்ட அதே சமயத்தில், பாஜக உறுப்பினர்கள் உடனடியாக எழுந்து, ‘வங்க தேசத்திலிருந்து வந்துள்ள அகதிகள்’ என்ற பூச்சாண்டியை எழுப்பி, இதுதான் அங்கே பதற்றத்திற்கான பிரதான காரணம் என்று கூறி னார்கள். மற்றொரு பக்கத்தில், மும்பையில் ராசா அகாதமி (சுயணய ஹஉயனநஅல) என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அசாமில் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள் என்று ஒரு பிரச்சனையை எழுப்பி, கிளர்ச்சியில் ஈடு பட்டு காவல்துறையினருடன் வன்முறை மோதல் வரை சென்றுள்ளார்கள். நாடு முழு வதும் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கின்ற வடகிழக்கு மாநிலத்தவர் மத்தியில் அச்ச உணர்வு காட்டுத் தீ போல பரவியது. கர் நாடகாவில் அம்மக்கள் அச்சுறுத்தப்பட்டதன் காரணமாக மாநிலத்தை விட்டே பயந்து அவர்களை ஓட வைத்தது. மிகவும் விசித்திர மான முறையில், இவ்வாறு பயந்து ஓடுபவர் களை சுமந்து செல்வதற்காக சிறப்பு ரயில் களே விடப்பட்டன. இதன் பின்னணியில் கர் நாடக மாநில பாஜக அரசாங்கம் கள்ளத்தன மாக உடந்தையாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்து குடியேறியுள்ள முஸ்லிம்கள்தான் உள் ளூர் மக்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரி வாரங்களும் அதன் மதவெறித் துணை அமைப்புகளும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகின்றன.

சட்டவிரோதமாகக் குடியேறுவது தடுக்கப் பட வேண்டியது அவசியமே. இதற்காக இரு நாடுகளின் எல்லையில் வேலியிடப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகு காலமாகவே கோரி வருகிறது. ஆயினும் 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டை ஆராய்ந்தோமானால், வன் முறைச் சம்பவங்கள் நடைபெறும் கோஹ்ரஜ் கர் பகுதியில் முஸ்லிம் மக்கள் தொகை 2001இல் 14.49 விழுக்காடாக இருந்தது, 2011இல் 5.19 விழுக்காடாகக் குறைந்திருக் கிறது என்பதைக் காண முடியும். எனவே ஆர்எஸ்எஸ்/பாஜகவினர் கட்டவிழ்த்துவிடும் மதவெறிப் பிரச்சாரம் கட்டுக்கதையே தவிர வேறல்ல.

மற்றொரு கோணத்திலும் இப் பிரச்ச னையை ஆராயும்போது, அசாம் மாநிலத்தில் அசாம் சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்வது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஹஐருனுகு-ஹடட ஐனேயை ருnவைநன னுநஅடிஉசயவiஉ கசடிவே) என்னும் கட்சி யாகும். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக உள்ள முஸ்லிம்கள் கட்சி என்று வெளிப்படை யாக இது தன்னைக் கூறிக் கொள்கிறது. 2006 தேர்தலுக்குப்பின் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. சட்டமன்றத்தில் போடோ சட்ட மன்ற உறுப்பினர்கள் 11 பேர் இருக்கிறார்கள், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்ன ணிக்கு 10 பேர் இருக்கிறார்கள். எனவே காங் கிரஸ், போடோ இனத்தவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ளது. இதுவும் மாநிலத் தில் வகுப்புத் துவேஷத்தை அதிகரிக்க இட் டுச் சென்றுள்ளது. மாநில அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக இல்லை என்ற உணர்வை முஸ்லிம்கள் மத்தியில் உரு வாக்கியுள்ளது. மேலும், மாநில அரசாங்க மானது வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்துள்ள இந்துக்களுக்கு அகதிகள் அந் தஸ்து அளிக்கத் தயாராக உள்ள அதே சமயத் தில், அவ்வாறு வந்துள்ள முஸ்லிம்களுக்கு அளிக்கத் தயாராக இல்லை. காங்கிரசின் இத்தகைய வகுப்புவாத அணுகுமுறைதான் அதற்கு 128 இடங்கள் கொண்ட சட்டமன்றத் தில் 78 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றிட வழிவகுத்துத்தந்துள்ளது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 இடங் களிலிருந்து 18 இடங்களைப் பெற்று இரண் டாவது பெரிய கட்சியாக வந்திருக்கிறது.

அசாம் நிலைமை மிகவும் ஆழமான முறை யில் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தால் தீர்வுகாணப்பட வேண்டிய அதே சமயத்தில், தற்போது நம்மை மிகவும் சங்கடத்திற்குள் ளாக்கி இருக்கும் விஷயம் என்னவெனில், அசாம் நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு நாடு முழுதும் மதவெறித் தீ விசிறி விடப்படுவதுதான்.

நிலக்கரிச் சுரங்கங்கள் ஊழல் பிரச்சனை யில் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி, நாடாளுமன்றத்தை நடத்த விடாது பாஜக நாடாளுமன்றக்குழு சீர் குலைத்துவரும் உத்தியைக் கடைப்பிடித்து வருகிறது. இது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.

ஆயினும் பாஜகவின் உத்திகளை, நாட் டின் பல பகுதிகளிலும் நடைபெறும் மதக் கல வரங்களுடன் இணைத்துப் பார்க்கையில், நாட்டில் விரைவில் பொதுத் தேர்தலை நடத் திட அது திட்டமிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. மதவெறித் தீயை விசிறிவிட்டு அதன்மூலம் தேர்தல் ஆதாயம் அடைந்துவிட லாம் என்று அது பார்க்கிறது. இவ்வழியில் சில மாநிலங்களில் புதிய மாநிலக் கட்சிகள் கூட அதனுடன் சேர்ந்துகொள்ளக்கூடும்.

இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜன நாயக மாண்புக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய விதத்தில் நாட்டில் மதவெறித் தீ விசிறி விடப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை ஆரம்பத்திலேயே அணைக்க வேண்டியது அவசியமாகும்.

மதவெறித்தீயை விசிறிவிட்டு அதன் மூலம் ஆதாயம் அடையலாம் என்று எண் ணக்கூடிய மதவெறியர்கள் வெற்றி பெற அனு மதித்திடக் கூடாது. இதனைத் தீர்மானகர மான முறையில் மக்கள் நிராகரித்திட வேண் டும். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தடுக் கப்பட வேண்டும். மக்களிடையே நிலவும் வள மான சமூகப் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்க முயலும் சக்திகள் தோற்கடிக்கப் பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: